search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டைட்டானிக்"

    • டைட்டானிக் கப்பலின் மெனு கார்டு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • மதிய உணவு மற்றும் பபே முதல் காலை உணவு வரை பல்வேறு உணவு வகைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

    உலக அளவில் பிரபலமானதாக கருதப்படும் டைட்டானிக் கப்பல் கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை மீது மோதி விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது. இதில் கப்பலில் பயணம் செய்த 1,500-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக தற்போதும் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் டைட்டானிக் கப்பலின் மெனு கார்டு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாசினேட்டிங் என்ற பெயரில் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட 112 ஆண்டுகள் பழமையான அந்த மெனு கார்டில் கப்பலின் முதல் மற்றும் 3-ம் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட மெனு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மதிய உணவு மற்றும் பபே முதல் காலை உணவு வரை பல்வேறு உணவு வகைகள் அதில் இடம்பெற்றுள்ளன. முதல் வகுப்பிற்கான மெனுவில், பில்லட்ஸ் ஆப் பிரில், கார்ண்ட் பீப், காய்கறி வகைகள் மற்றும் பாலாடைகள், வறுக்கப்பட்ட மட்டன் சாப்ஸ், பிசைந்த, வறுத்த மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கு, கஸ்டர்டு புட்டிங், ஆப்பிள் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

    பபே வகையில் பானை இரால், நார்வேஜியன் நெத்திலிகள், ஜூஸ்ட், மத்தி, வறுத்த மாட்டிறைச்சி, பல்வேறு கோழி உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. 3-ம் வகுப்பிற்கான மெனுவில் ஓட்ஸ் கஞ்சி மற்றும் பால், ஜாக்கெட் உருளைக்கிழங்கு, ஹாம் மற்றும் முட்டை, ரொட்டி மற்றும் வெண்ணெய், தேநீர், காலை உணவாக காபி ஆகியவை அடங்கும்.

    இரவு உணவில், அரிசி சூப், ரொட்டி, பழுப்பு குழம்பு, இனிப்பு சோளம், பிளம்ப் புட்டிங், இனிப்பு சாஸ், குளிர் இறைச்சி, பாலாடை கட்டி, சுண்ட வைத்த அத்தி பழங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.


    • டைட்டானிக் கப்பலை காண 5 பேர் கொண்ட குழு பயணித்தது
    • 4 நாட்கள் உலகமே பயணிகளை குறித்து தகவல் எதிர்நோக்கி இருந்தது

    2023 ஜூன் மாதம், ஒஷன்கேட் (OceanGate) நிறுவனத்தை சேர்ந்த டைட்டன் (Titan) எனும் சிறு நீர்மூழ்கி வாகனத்தில் நியூஃபவுண்ட் லேண்ட் (Newfoundland) கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் தரை தட்டி நிற்கும் டைட்டானிக் (Titanic) கப்பலை காண 5 பேர் கொண்ட ஒரு குழு புறப்பட்டது.

    இதில் ஓஷன்கேட் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், இங்கிலாந்தை சேர்ந்த கோடீசுவரர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் பால்-ஹென்றி நார்கியோலெட், பாகிஸ்தான் கோடீசுவரர் ஷஹ்சாதா தாவுத் மற்றும் அவர் மகன் சுலெமான் தாவுத் ஆகிய 5 பேர் பயணித்தனர்.

    ஜூன் 18 அன்று ஆழ்கடலில் இறங்கிய சில மணி நேரங்களில் டைடன் தகவல் தொடர்பை இழந்தது.

    இதையடுத்து பெரிய அளவில் அவர்களை தேடும் பணி தொடங்கியது.

    5 பேர் கதி என்ன என உலகமே அதிர்ச்சியுடன் எதிர்பார்த்த நிலையில் ஜூன் 22 அன்று அந்த நீர்மூழ்கி வாகனத்தில் உள்ளிருந்து ஏற்பட்ட வெடிவிபத்தில் அதன் பாகங்கள் சிதறியிருப்பதாகவும், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

    முன்னேற்பாடுகளுடன் இது போன்ற பயணங்கள் செய்யப்பட வேண்டும் என ஒரு சாரார் ஆதரித்தும், இவை ஆபத்தானவை மட்டுமின்றி தேவையற்றவை என எதிர்த்தும் ஒரு சாரார் கருத்து தெரிவித்தனர்.

    • கேட் வின்ஸ்லெட் அவதார் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • தற்போது இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் படத்தின் கதாநாயகி கேட் வின்ஸ்லெட் தற்போது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் 2 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 16-ஆம் தேதி உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதனை தொடர்ந்து நடிகை கேட் வின்ஸ்லெட், எலன் குராஸ் இயக்கத்தில் 'லீ' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு குரோஷியா நாட்டில் நடைபெற்று வருகிறது. அப்போது கேட் வின்ஸ்லெட் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


    இதனிடையே தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் இந்த வாரம் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    • ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டைட்டானிக்’ படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    • கலையரசன் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார்.

    'மெட்ராஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் கலையரசன். இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரமாகவும் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'குதிரைவால்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இவரின் நடிப்பை பலரும் பாராட்டினர்.

    இதைத் தொடர்ந்து இயக்குனர் ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டைட்டானிக். கலையரசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படதில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். இவர்களுடன் காளி வெங்கட், ஆஷ்னா சவேரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    டைட்டானிக்

    டைட்டானிக்

    'திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட்' சார்பாக சி.வி.குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். மே 6-ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிப்பு வந்த நிலையில் சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில் 'டைட்டானிக்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி ஜூன் 24-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    ×