டைட்டானிக் பட கதாநாயகி மருத்துவமனையில் அனுமதி

கேட் வின்ஸ்லெட் அவதார் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.தற்போது இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேட் வின்ஸ்லெட்
கேட் வின்ஸ்லெட்
Published on

உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் படத்தின் கதாநாயகி கேட் வின்ஸ்லெட் தற்போது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் 2 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 16-ஆம் தேதி உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனை தொடர்ந்து நடிகை கேட் வின்ஸ்லெட், எலன் குராஸ் இயக்கத்தில் 'லீ' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு குரோஷியா நாட்டில் நடைபெற்று வருகிறது. அப்போது கேட் வின்ஸ்லெட் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் இந்த வாரம் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com