என் மலர்
சினிமா செய்திகள்
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுடன் பாரதியாரை ஒப்பிட்டு இயக்குனர் அருண்ராஜா காமராஜ் டுவிட் செய்துள்ளார்.
இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்திற்காக இவர் எழுதிய குட்டி ஸ்டோரி பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.
சாதிகள் இல்லையடி பாப்பா #எல்லாசாதியையும்சமமாகபார்க்கும்#மகாகவிகொரோனா#CoronaAlertpic.twitter.com/0Q2cOFhyx1
— Arunraja Kamaraj (@Arunrajakamaraj) March 4, 2020
இந்நிலையில், அருண்ராஜா காமராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிடம் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் அடங்கிய புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். மேலும் “சாதிகள் இல்லையடி பாப்பா.... எல்லா சாதியையும் சமமாக பார்க்கும் மகாகவி கொரோனா” என குறிப்பிட்டிருந்தார்.
சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எட்டுத்திக்கும் பற’ ஆணவக் கொலைக்கு எதிரான படம் என அப்படத்தின் இயக்குனர் கீரா தெரிவித்துள்ளார்.
கீரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "எட்டுத்திக்கும் பற". வர்ணாலயா சினி கிரியேசன், வி5 மீடியா இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் சமுத்திரகனி, முனீஸ்காந்த், சாந்தினி, நித்தீஸ் வீரா, முத்துராமன், சாஜூமோன், சாவந்திகா, சூப்பர் குட் சுப்பிரமணி, சம்பத்ராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எம்.எஸ். ஸ்ரீகாந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிபின் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் குறித்து இயக்குனர் கீரா கூறியதாவது: "எட்டுத்திக்கும் பற" சாதி வெறிக்கு எதிரான படம். குறிப்பாக ஆணவக் கொலையின் கொடூரத்தை, ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்கிறோம். இந்தக் கொடுமைக்கு ஒரு தீர்வையும் படம் சொல்லியிருக்கிறது. 'பற' என்பதைப் பலரும் சாதியத்தின் குறியீடா என்று கேட்கிறார்கள். அது சாதியத்தின் குறியீடு அல்ல. 'பற' என்றால் பறத்தல். விடுதலையின் குறியீடாகவே இந்தத் தலைப்பை வைத்தேன்” என தெரிவித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை ஏப்ரல் 9-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அதே தேதியில் விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாவதால், தியேட்டர் பங்கீட்டில் சிக்கல் ஏற்படும் என்பதற்காக சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தை மே 1-ந் தேதி உழைப்பாளர் தினத்தன்று வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் தனுஷின் ஜகமே தந்திரம், விஷாலின் சக்ரா, ஜெயம் ரவியின் பூமி ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் கடைசி விவசாயி படத்தில் இருந்து இளையராஜா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை படங்களை இயக்கிய மணிகண்டன் அடுத்து இயக்கும் படம் கடைசி விவசாயி. இந்த படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வந்த நிலையில், திடீரென அவர் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் மணிகண்டனுக்கும் இளையராஜாவும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே இளையராஜா இப்படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடமாநிலங்களில் நடக்க இருந்த ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு, கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைத்துள்ளனர். கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் உள்ள படமாக தயாராகி வரும் இதில், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. இரண்டு கட்ட படப்பிடிப்புகளை அங்கு முடித்துள்ளனர். அடுத்தகட்ட படப்பிடிப்பை கொல்கத்தா, புனே உள்ளிட்ட வடமாநில நகரங்களில் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வடமாநில படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு ராமோஜிராவ் திரைப்பட நகரிலேயே தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முடிவுசெய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முழு படப்பிடிப்பையும் அங்கேயே முடித்துவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதற்காக ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரங்குகள் அமைக்கும் பணிகள் நடக்கிறது.
விஜய் நடனமாடும் போது அவரிடம் இருக்கும் எனர்ஜியை பார்த்து வியந்ததாக பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.
விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் சென்னை வந்தார். ஹிருத்திக் ரோஷன் சென்னையில் உள்ள பிரபலமான மால் ஒன்றில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் நடனமாடி உற்சாகமூட்டினார். நடிகர் விஜய்யின் நடனம் குறித்து ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகர் ஹிருத்திக் ரோஷன், “அவர் நடனத்துக்காக ஸ்பெஷல் டயட் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். நடனத்தின்போது அவரிடம் இருக்கும் எனர்ஜியை பார்த்து வியக்கிறேன். நடனமாடுவதற்கு முன் அவர் என்ன உணவுகளை உட்கொள்கிறார் என்று கேட்டு கற்றுக்கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினார்.
யுவராஜ் முனிஷ் இயக்கத்தில், ரக்ஷன், இளயா, ரித்திகா, லதா இசை ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கடலில் கட்டுமரமாய்’ படத்தின் விமர்சனம்.
விவசாயத்திற்குகாக போராடி, விவசாய சங்க தலைவராக இருந்து வருகிறார் நாயகன் ரக்ஷனின் தந்தை பாலு. இவரின் மகன் ரக்ஷன் சென்னையில் சாப்ட்வேர் வேலையில் பணி புரிந்து வருகிறார். இவரது திறமையால் வெளிநாட்டில் இருப்பவர்கள் தமிழ்நாட்டில் பெரிய முதலீடு செய்ய வருகிறார்கள். ரக்ஷன் முன் நின்று புதிய திட்டத்தை ஆரம்பித்து நன்றாக முடித்து கொடுக்கிறார்.
இந்நிலையில், கிராமத்தில் நிலத்தை அபகரிக்கும் முயற்சி நடக்கிறது. இதை நாயகனின் தந்தை பாலு எதிர்க்கிறார். அவர்களுடன் நடக்கும் மோதலில் நாயகனின் தந்தையும், நண்பரும் இறக்கிறார்கள். மனவேதனையடையும் ரக்ஷன், எதனால் இவர்கள் இறந்தார்கள் என்பதை அறிய முயற்சிக்கிறார்.

வெளிநாட்டு முதலீட்டார்கள் மூலம், தான் கொண்டுவந்த திட்டத்தால்தான் தந்தையும், நண்பரும் இறந்தார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார் ரக்ஷன். இறுதியில் ரக்ஷன் விவசாய நிலங்களுக்கு போராட்டினாரா? தான் கொண்டுவந்த திட்டத்தை தொடர்ந்து செயல் படுத்தினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ரக்ஷன், ஆக்ஷன், சென்டிமெண்ட், காதல் காட்சி என அனைத்திலும் நடிப்பு திறனை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். தன்னால்தான் தந்தைக்கு ஏற்பட்ட நிலையை நினைத்து வருந்தும் காட்சியில் கவனிக்க வைத்திருக்கிறார். மற்றொரு நாயகனாக வரும், இளயா, நாயகிகளாக வரும் ரித்திகா, லதா இசை ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். தந்தையாக வரும் கோவை பாலு நடிப்பால் மனதில் பதிகிறார்.

விவசாயத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் யுவராஜ் முனிஷ். 10 பேர் சேர்ந்து ஆரம்பித்த ஜல்லிக்கட்டு போராட்டம் நாளடைவில் ஆயிரக்கணக்காணோர் சேர்ந்து எப்படி வெற்றிகண்டதோ, அதுபோல் ஏன் விவசாயத்துக்காக மக்கள் போராட கூடாது என்பதை இயக்குனர் வலியுறுத்தி இருக்கிறார். அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால் என்ன ஆகும் என்பதை சொல்லவந்ததற்கு பாராட்டுகள். சின்ன சின்ன தவறுகள் இருந்தாலும் வசனங்கள், சொல்ல வந்த கருத்துகள் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஏ.கே.ராம்ஜியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். செந்தில் குமாரின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘கடலில் கட்டுமரமாய்’ விவசாய போராட்டம்.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மசாலா பிக்ஸ், எம்.கே.ஆர்.பி.புரடொக்ஷன்ஸ் இணைந்து வழங்கும் புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி நடிக்கிறார். சமீபத்தில் வெளியான A1 வெற்றிப்படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், மீண்டும் சந்தானத்துடன் இரண்டாம் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்.
இன்னொரு நாயகியாக சுவாதி முப்பலா அறிமுகம் ஆகிறார். இவர் மிஸ் கர்நாடகா 2017 அழகி பட்டம் வென்றவர். இவர்களுடன் சௌகார் ஜானகி, ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு ‘பிஸ்கோத்’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். ரெட்ரோ மாடலில் சந்தானம் இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளது.
வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன. இந்நிலையில் பைக் ரேஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வலிமை திரைப்படம் வருகிற தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ஹூமா குரேஷி, யாமி கவுதம், யோகி பாபு ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி தாணு, 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகரின் படத்தை வெளியிட இருக்கிறார்.
பழசிராஜா, காயங்குளம் கொச்சுன்னி, மாமாங்கம் போன்ற பிரமாண்ட வரலாற்று திரைப்படங்களை தொடர்ந்து மலையாளத்தில் விரைவில் வெளிவர இருக்கும் படம் மரைக்காயர் - அரபிக் கடலின்டே சிம்ஹம்‘.
பிரியதர்ஷன் இயக்கி உள்ள இப்படம் தமிழில், மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் என்ற பெயரில் வெளியாகிறது. பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த சிறைச்சாலை படத்தை 1996-ம் ஆண்டு வெளியிட்ட தாணு, தற்போது இந்தப் படத்தை பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டிருக்கிறார்.

தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட படத்தை சுமார் 300 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார். “சிறைச்சாலை என்னும் பிரமாண்ட படைப்பில் உருவான இந்த கூட்டணி, 25 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நம் மக்களை பிரமிக்க வைக்கும் ஒரு காவிய படைப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்” என்கிறார் தாணு.
இந்தப் படத்தில் மோகன்லாலுடன், அர்ஜுன், பிரபு, அசோக் செல்வன், மஞ்சு வாரியார், கீர்த்தி சுரேஷ், சுஹாசினி, முகேஷ், நெடுமுடிவேணு, சித்திக், சுரேஷ் கிருஷ்ணா நடித்துள்ளனர். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார், ரோனி நபேல் இசை அமைத்துள்ளார். படம் வருகிற 26-ந்தேதி வெளிவருகிறது.
தமிழ், மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கும் மியா ஜார்ஜ், தந்தையை தொடர்ந்து அவரது மகனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
மலையாளத்தில் முன்னணியில் இருக்கும் நடிகை மியா ஜார்ஜ். இவர் தமிழில் அமரகாவியம், ஒரு நாள் கூத்து, இன்று நேற்று நாளை உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வரும் இவர், தற்போது நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.

இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. மலையாளத்தில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு வெளியான சலாம் காஷ்மீர் என்கிற படத்தில் காளிதாஸின் தந்தை ஜெயராமுக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திற்கு பிரபல இயக்குனர் ஒருவர் பாடல் ஒன்றை எழுதி இருக்கிறார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’. இப்படத்தில் வருண் மற்றும் ராஹேய் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். இப்படத்தில் இடம் ‘ஹே லவ் ஜோஷ்வா’ என்ற பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது.
கௌதம் மேனனின் பாடல்கள் எப்போதும் உணர்வுகளை கட்டியிழுக்கும் தனித்தன்மையுடன் ஒரு புதிய அனுபவத்தை தருவதாக இருக்கும். இம்முறை பின்னணி பாடகர் கார்த்திக் முதல் முறையாக இசையமைக்க, பாடல்களில் புது ஆத்மா உருவாகியிருக்கிறது.

பேச்சுவழக்கு மாறாத வரிகளில், காதலை சொல்லும் பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார். இவர் ஏற்கனவே கௌதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தில் சோக்காளி என்ற பாடலை எழுதியிருந்தார்.
ஜோஷ்வா திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். உளவு வகை திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.






