என் மலர்
சினிமா செய்திகள்
ஆர்யா நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகம் ராஜ்கோட் என்ற இடத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
சுந்தர்.சி இயக்கிய அரண்மனை திரைப்படம் 2 பாகங்கள் வந்துள்ளன. இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராக உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர்.சி தான் இந்த படத்தையும் இயக்க உள்ளார்.
அவ்னி மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் ‘அரண்மனை 3’ படப்பிடிப்பு குஜராத் அருகே ராஜ்கோட் என்ற இடத்தில் வான்கெனர் பேலஸ் எனப்படும் பிரமாண்டமான அரண்மனையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 30 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர்.

இதில் ஆர்யா, சுந்தர்.சி, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகிபாபு, சம்பத் குமார், நந்தினி, விச்சு, மனோபாலா, சாக்சி அகர்வால் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ஞானி பாலா இயக்கத்தில் பிரித்திப், பூர்னிஷா, ஜனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஒபாமா உங்களுக்காக’ படத்தின் முன்னோட்டம்.
ஞானி பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஒபாமா உங்களுக்காக’. பிரித்திப் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பூர்னிஷா நடித்துள்ளார். விஜய் சேதுபது சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார். ஜெயசீலன் தயாரித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார்.

படம் குறித்து இயக்குனர் ஞானி பாலா கூறியதாவது:- “ஒபாமா என்றால் அமெரிக்க முன்னாள் அதிபர் என்று பலரும் நினைக்கலாம். ‘ஒ’ என்பது கதாநாயகனின் ‘இனிஷியல்.’ ‘பாமா’ என்பது கதாநாயகியின் பெயர். இதுதான், ‘ஒபாமா.’ இன்றைய அரசியல் நிலவரத்தை நகைச்சுவையாக சொல்லும் படம், இது. நீண்ட இடைவெளிக்குப்பின், நகைச்சுவையில் ஜனகராஜ் கலக்கி இருக்கிறார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் திதி நிகழ்வில் நடிகர் அஜித் பங்கேற்றார்.
கடந்த 2018-ம் ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார். அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாள் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை சி.ஐ.டி. நகரில் ஸ்ரீதேவிக்கு திதி கொடுக்கும் நிகழ்வு நடந்தது. இதில் போனி கபூரின் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் அஜித்தும் கலந்து கொண்டார்.

ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தில் அஜித் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். கடந்தாண்டு அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்திருந்தார். தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தையும் போனி கபூர் தயாரித்து வருகிறார். வலிமை படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆதித்யா வர்மா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான துருவ் விக்ரமின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரமின் மகன் துருவ் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான இப்படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தற்போது அடுத்த படத்துக்கு தயாராகி வரும் துருவ் விக்ரம், பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், துருவ் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இயக்கிய பரியேறும் பெருமாள் படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, தற்போது தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4-வது குஞ்சலி மரைக்காரரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் சரித்திர படத்தில் கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.
16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்கார் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படம் தயாராகிறது. இதில் குஞ்சலி மரைக்கார் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார்.
ரூ.100 கோடி செலவில் தயாராகியுள்ள இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை மார்ச் மாதம் 26-ந்தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஆர்ச்சா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேரளத்து பாரம்பரிய உடையுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சிரிப்பு தான் தனது பலம் என சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் சமந்தா. திருமணத்துக்கு பிறகும் பட வாய்ப்புகள் குறையவில்லை. அவர் அளித்த பேட்டி வருமாறு:- நான் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பேன். அதுதான் எனது பலம். ஒவ்வொரு படமும் ஒரு புதிய பாடத்தை கற்றுக்கொடுக்கும். சினிமாவை ஒரு தொழிலாகவோ, வெற்றி தோல்வியை வைத்தோ பார்க்க மாட்டேன். நான் நடித்த பல படங்கள் வெற்றி பெற்று இருக்கிறது. அதை பார்த்து பெருமை கொள்ளவில்லை.
ஆனால் நடிகர் சூர்யாவுடன் நடித்தபோது மட்டும் பெருமைப்பட்டேன். கல்லூரியில் படித்த காலத்தில் நான் சூர்யாவின் பெரிய ரசிகை. அவரோடு நடித்தது பெருமையான விஷயம். சவால்கள் எனக்கு பிடிக்கும். ஆரம்பத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு மட்டுமே நான் பொருந்துவேன் என்று முத்திரை குத்தினர்.

அந்த இமேஜை உடைக்க வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து உழைத்தேன். அந்த முயற்சியும், உழைப்பும் இவ்வளவு தூரத்துக்கு கொண்டு வந்து இருக்கிறது. பணத்தை குறிக்கோளாக வைத்து நடிக்கவில்லை. எனது கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று நினைத்தே வேலை செய்தேன். சினிமா துறையில் கதாநாயகிகளாக கொஞ்ச காலம்தான் நீடிக்க முடியும். ஆனால் நான் 10 வருடங்களாக நிலைத்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.”
இவ்வாறு சமந்தா கூறினார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியது குறித்து கேலி செய்யும் வகையில் டிக்டாக் செய்த நடிகைக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழில், சிம்பு நடித்த 'காதல் அழிவதில்லை' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சார்மி. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தற்போது, பிரபல தெலுங்கு இயக்குனர் புரி ஜெகநாத்துடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் இவர் தயாரித்த, ஐ ஸ்மார்ட் சங்கர் என்ற படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டானது.
இந்நிலையில் அவர் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி கேலி செய்யும் விதமாக டிக்டாக் செய்து ஒரு வீடியோவை தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அதில், வாழ்த்துக்கள் நண்பர்களே... ஏன்னு தெரியுமா? டெல்லிக்கும் தெலங்கானாவுக்கும் கொரோனா வைரஸ் வந்துடுச்சாம். அதைதான் கேள்விப்பட்டேன். அதற்காக வாழ்த்துகள் நண்பர்களே' என்று பெரிதாகச் சிரித்தபடி தெரிவித்திருந்தார்.
What An Insensitive Video By #CharmmeKaur 🤦😡@Charmmeofficial#COVID19#Covid_19#CoronaOutbreak#CoronaVirus#Hyderabad#Telangana#Indiapic.twitter.com/vRRPJRbOvD
— Hi Hyderabad (@HiHyderabad) March 2, 2020
இந்த வீடியோ வைரலானது. பல ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். 'சீரியசான விஷயத்துக்கு இப்படியா சிறு பிள்ளைத்தனமாக வீடியோ போடுவீங்க?' என்று திட்டி இருந்தனர். இதையடுத்து அந்த வீடியோவை நீக்கிய சார்மி ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
ஹரி இயக்கத்தில் உருவாக இருக்கும் அருவா படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் கடந்த வருடம் என்.ஜி.கே., காப்பான் படங்கள் வந்தன. தற்போது சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் ஹரி இயக்கத்தில் நடிப்பதாக அறிவிப்பு வந்துள்ளது.
இந்த படத்துக்கு அருவா என்று பெயர் வைத்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் ஆறு, வேல் மற்றும் சிங்கம் படத்தின் மூன்று பாகங்கள் வந்தன. அனைத்தும் அதிரடி கதைகளாக இருந்தன. புதிய படத்துக்கு அருவா என்று பெயர் வைத்து இருப்பதால் இந்த படத்திலும் சண்டை காட்சிகள் மிகுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேசி வருகின்றனர். ராஷ்மிகா தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அருவா படத்தின் கதை சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதில் படத்தில் சூர்யா அண்ணன், தம்பி என்று இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், இருவருக்கும் நடக்கும் மோதலே படம் என்றும், கிராமத்து பின்னணியில் படத்தை எடுக்கின்றனர் எனவும் தகவல் இடம்பெற்று உள்ளது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதத்தினரும் வழிபடும் வகையில் ஒரு கோவிலை கட்ட உள்ளதாக ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
நடிகராகவும் இயக்குனராகவும் தனி முத்திரை பதித்துள்ள ராகவா லாரன்ஸ் சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற குழந்தைகள் வசிக்க இல்லம் நடத்துகிறார். அவர்களுக்கு கல்வி உதவிகளும் வழங்குகிறார். ஏழைகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவியும் அளிக்கிறார். திருநங்கைகளுக்கு வீடு கட்டி கொடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளார்.
இந்த நிலையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். மத வேறுபாடுகளை கடந்து மனிதம் தான் பெரிது என்பதை உணர்த்தும் வகையில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் ஆகிய மூன்று மதத்தினரும் வந்து வழிபடும் வகையில் ஓரு ஆலயம் அமைக்க இருப்பதாக அறிவித்து உள்ளார்.

மதங்களாலும், சாதிகளாலும் மக்கள் பிரிக்கப்படுகிறார்கள். அதனால்தான் இந்த முயற்சி. நெருப்பிற்கும், பசிக்கும் சாதி மதம் தெரியாது. அனைவரும் சமமாக உணவருந்த அந்த ஆலயத்தில் அன்னதான கூடம் அமைக்கப்பட்டு, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா நடிப்பில் உருவாகி வரும் சூர்ப்பனகை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கதாநாயகிகள் தங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். நயன்தாரா தன்னை முதன்மைபடுத்தும் பல படங்களில் நடித்துள்ளார். திரிஷா, தமன்னா, சமந்தா, அனுஷ்கா உள்ளிட்ட பல நடிகைகள் தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வுசெய்து நடிக்கிறார்கள்.
இந்த வரிசையில் ரெஜினாவும் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு சூர்ப்பனகை என்று பெயர் வைத்துள்ளனர். இதில் மன்சூர் அலிகான், கிஷோர், அர்ச்சனா கவுடா உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை கார்த்திக் ராஜு இயக்கி இருக்கிறார். சரித்திர காலத்து கதையம்சத்தில் திகில் படமாக தயாராகி உள்ளது.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி நேற்று வெளியிட்டார். அதில் ரெஜினாவின் தோற்றம் மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி உள்ளனர். பழங்காலத்தில் தவறு செய்பவர்களை கழுவேற்றி தண்டிக்கும் பழக்கம் இருந்தது. அந்த சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது.
மனதில் காதல் வைத்துள்ள வில்லத்தனமான கதாபாத்திரத்தில் ரெஜினா நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படத்தை திரைக்கு கொண்டு வருகிறார்கள்.
அறிமுக இயக்குனர் சுனிஷ் குமார் இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.
லேஷி கேட் புரொடக்ஷன்ஸ் சார்பில் அனூப் காலித் தயாரித்திருக்கும் படம் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’. சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் விவியா சன்த், அடில் இப்ராஹிம், அனுமோகன், பிரமிள் சித்தார்த் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் தயாரிப்பாளர் அனூப் காலித் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கைலாஷ் மேனன் இசையமைக்கும் இப்படத்திற்கு சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் (தூத்துக்குடி) கதை எழுத, சுனிஷ் குமார் இயக்கி இருக்கிறார். ராஜீவ் மேனனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய இவர் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் இப்படம் உருவாகி இருக்கிறது.

வெவ்வேறு துறையில் சிறந்து விளங்கும் நான்கு பேர் பெரிய திருட்டு செய்து வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறார்கள். அதன்படி நான்கு பேரும் 6 மணி நேரத்தில் ஒரு திருட்டை முடிக்க திட்டமிடுகிறார்கள். ஆனால், அங்கு எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது. அந்த சம்பவம் என்ன? திருட சென்றவர்களின் நிலைமை என்ன ஆனது? என்பதை பல திருப்பங்களுடன் உருவாக்கி இருக்கிறார்கள். இப்படம் பரத்துக்கு பெயர் சொல்லும் படமாக அமையும் என்றும், தமிழைப் போல் மலையாளத்திலும் நடிப்பால் தடம் பதிப்பார் என்றும் இயக்குனர் சுனிஷ் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் ரகுல் பிரீத் சிங், சம்பளத்தை குறைத்தும் பட வாய்ப்புகள் வரவில்லை என தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ரகுல் பிரீத் சிங்குக்கு இப்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. இதுகுறித்து அவர் கூறியதாவது: “நான் படங்களில் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து தவறு செய்து விட்டேன். அந்த தவறு இப்போதுதான் புரிகிறது. தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு பிரச்சினை கொடுத்தது இல்லை. சம்பள விஷயத்தில் கூட விட்டு கொடுத்தேன். யாருடனும் தகராறு செய்தது இல்லை. படப்பிடிப்புக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து விடுவேன்.
இவ்வளவு இறங்கியும் கூட வாய்ப்புகள் வரவில்லை என்றால் அதற்கு காரணம் நான் கவர்ச்சியாக நடித்ததுதான். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்காமல் தொடர்ந்து கவர்ச்சியாகவே நடித்து விட்டேன். அதனால் தான் படங்கள் குறைந்துவிட்டன. இப்போது சைவமாக மாறி விட்டேன்.

திடீரென்று சைவத்துக்கு மாற முடிவு செய்து அதை கடுமையாக கடைபிடித்து வருகிறேன். மும்பையில் படப்பிடிப்பு என்றால் எனது வீட்டில் இருந்து வரும் சைவ உணவை சாப்பிடுகிறேன். பழங்கள் பழச்சாறுகள் சாப்பிடுகிறேன். இந்தியாவில் எங்கு இருந்தாலும் சைவ உணவு கிடைத்து விடும். ஆனால் வெளிநாடுகளில் உடனடியாக சைவ உணவு கிடைப்பது இல்லை. எனது குழுவில் யாருக்கு சைவ உணவு கிடைத்தாலும் அதை எனக்கும் கொடுத்து பசியை தீர்த்து விடுகிறார்கள்.” இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.






