என் மலர்
சினிமா செய்திகள்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் முன்னோட்டம்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.
ஏ.எல்.விஜய் இயக்கிய 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, 'நடிகையர் திலகம்' படம் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றார்.
இதன்பின் இனி தன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் கூறியிருந்தார். அதன்படி கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் பெண்குயின் படத்தில் கர்ப்பிணியாக நடிக்கிறார். அதேபோல் ரஜினி-சிவா கூட்டணியில் உருவாகும் அண்ணாத்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இவருக்கு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் இயக்குனர் பரசுராம் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் வேலை இழந்து தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ நடிகர் சிரஞ்சீவி நிதி திரட்டி வருகிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வருகிறது. இதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். திரையுலகத்தையும் மூடிவிட்டனர். இதனால் துணை நடிகர்-நடிகைகள், திரைப்பட தொழிலாளர்கள் வருமானம் இன்றி கஷ்டப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் அவர்களுக்கு உதவ நடிகர் சங்கமும், பெப்சியும் நிதி திரட்டி வருகிறது. இந்த நிலையில், தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு உதவ நடிகர் சிரஞ்சீவி புதிய அமைப்பை தொடங்கி நிதி திரட்டி வருகிறார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:- “சினிமா துறையில் தினக்கூலிகளாக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உதவ தொண்டு அமைப்பை ஆரம்பித்துள்ளோம். இதன்மூலம் ரூ.3.8 கோடி திரட்டி உள்ளோம். நாகார்ஜுனா ரூ.1 கோடியும், ஜூனியர் என்.டி.ஆர். ரூ.25 லட்சமும், மகேஷ் பாபு ரூ.25 லட்சமும், ராம் சரண் ரூ.30 லட்சமும், ராணா, வெங்கடேஷ் ஆகியோர் ரூ.1 கோடியும் வழங்கி இருக்கிறார்கள். சினிமா துறையை இயக்கும் தொழிலாளர்களுக்கு அனைவரும் உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு கூறியுள்ளார்.
மாலையில் கொஞ்ச நேரம் மதுக்கடைகளை திறந்து வைக்குமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்த பிரபல நடிகருக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து உள்ளது. இதனால் இந்தியா முழுவதும் அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன. மதுக்கடைகளையும் மூடி இருக்கிறார்கள்.
ஊரடங்குக்கு முந்தைய நாளே பலர் மதுபான கடைகளுக்கு சென்று பல நாட்களுக்கு தேவையான மது பாட்டில்களை வாங்கிச் சென்றதை பார்க்க முடிந்தது. அப்படி வாங்காதவர்கள் தவிக்கிறார்கள். இந்த நிலையில் இந்தி திரையுலகின் மூத்த நடிகரான ரிஷி கபூர் மாலையில் கொஞ்ச நேரம் மதுக்கடைகளை திறந்து வைக்கலாம் என்று அரசை வற்புறுத்தி உள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “அரசு, மாலை நேரத்தில் அனைத்து மதுபான கடைகளையும் சிறிது நேரம் திறந்து வைக்கலாம். இதற்காக என்னை தவறாக நினைக்க வேண்டாம். வீட்டில் இருக்கும் மனிதனுக்கு மனச்சோர்வு இருக்கும். போலீசார், மருத்துவர்கள், பொதுமக்களுக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
இதனை டைரக்டர் குணால் கோலி வரவேற்று, “மாலையில் இல்லை என்றால் காலையிலாவது திறந்து வைக்கலாம். அரசுக்கு வருமானம் வரும்” என்று கூறியுள்ளார். ஆனால் பலர் ரிஷி கபூர் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதை பயன்படுத்தி வீட்டின் சுவற்றில் ஓவியங்கள் வரைவதாக நடிகை மகிமா நம்பியார் தெரிவித்துள்ளார்.
குற்றம் 23 படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் மகிமா நம்பியார். புரியாத புதிர், கொடிவீரன், அண்ணனுக்கு ஜே, மகாமுனி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருக்கிறார். இந்த ஓய்வை நடிகர்-நடிகைகள் பலரும் உடற்பயிற்சி, யோகா, புத்தகம் படித்தல், ஆன்-லைன் வகுப்புகளில் சேர்ந்து படிப்பது என்று ஆக்கப்பூர்வமாக செலவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மகிமா, ஓவியராக மாறி இருக்கிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் இருந்துள்ளது. சினிமாவுக்கு வந்து ஓய்வில்லாமல் நடித்ததால் அதில் கவனம் செலுத்த முடியவில்லை. தற்போது ஊரடங்கு விடுமுறையை ஓவியம் வரைய பயன்படுத்துகிறார். தனது வீட்டின் சுவர்களில் ஓவியங்கள் வரையும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகிறது.
அவர் கூறும்போது, “தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதை பயன்படுத்தி ஓவியங்கள் வரைகிறேன். நீங்களும் ஓவியராக மாற ஒரு சுவர், ஒரு பென்சில் பாராட்டுவதற்கு ஒரு அம்மா இருந்தால் போதும்” என்றார்.
ஊரடங்கால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவும் வகையில் பிரபல நடிகை ஒருவர் தினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகிறார்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரி மற்றும் புத்தூர் நகர சபைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு என்பது பிரச்சினையாகவே உள்ளது. ஒரு ஆண்டுக்கும் மேலாக நகரி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தரமான உணவை ரூ.4-க்கு வழங்கி வருகிறார்.
அவர்களுக்காக நிறுவிய உணவு கூடத்தை விரிவாக்கி, தினமும் மேலும் 5 ஆயிரம் பேருக்கு கூடுதலாக உணவு தயாரித்து ‘ரோஜா சாரிடபுள் டிரஸ்ட்’ மூலம் ஊழியர்கள் அனைவருக்கும் வழங்கிட முடிவு செய்து அமல்படுத்தி வருகிறார். என்னால் முடிந்ததை நான் செய்கிறேன். செல்வந்தர்கள் அனைவரும் இப்படிப்பட்ட பேரிடர் நிலையில், ஏழைகளை காக்க உதவி செய்ய வேண்டும் என ரோஜா அழைப்பு விடுத்தார்.
பாகுபலி படத்தை இயக்கிய ராஜமவுலியின் அடுத்த படமான ஆர்ஆர்ஆர்-ல் நடிகர் விஜய் கவுரவ தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகுபலி படத்தை இயக்கி உலகம் முழுவதும் பிரபலமானவர் ராஜமவுலி. சமந்தாவுக்கு முக்கிய படமாக அமைந்த ‘நான் ஈ’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை டைரக்டு செய்துள்ளார். தற்போது ‘ரத்தம் ரணம் ரவுத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்) என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் மற்றும் அஜய் தேவ்கான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரூ.400 கோடி செலவில் தயாராகிறது.

தெலுங்கில் தயாராகும் இந்த படத்தை தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிடுகிறார்கள். விறுவிறுப்பாக நடந்த இதன் படப்பிடிப்பு கொரோனா பரவலை தடுக்க நடக்கும் ஊரடங்கால் தடைபட்டு உள்ளது. இந்த படத்தில் கவுரவ தோற்றத்தில் விஜய்யை நடிக்க வைக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் தமிழ், மலையாளத்தில், இந்த படத்துக்கு வரவேற்பு கிடைக்கும் என்று கருதுகிறார். இதற்காக விஜய்யை அணுகி பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விஜய் நடிப்பாரா? இல்லையா? என்பது உறுதியாகவில்லை.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் நடிகர் விமல், தனது சொந்த ஊரில் கிருமி நாசினி தெளித்தார்.
இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். சிலர் களப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விமல், நேற்று தனது சொந்த ஊரில் கொரோனா தடுப்பு பணியில் தன்னுடைய கிராமத்து இளைஞர்களுடன் களத்தில் இறங்கினார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பைச் சேர்ந்த விமல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு பகுதிக்கும் எப்படி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றதோ, அதே போல் தோளில் ஒரு எந்திரத்தை தூக்கி வைத்துக் கொண்டு இளைஞர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு தெருவாக சென்று கிருமி நாசினி தெளித்தார். இதுமட்டுமின்றி வீடுகளின் முன் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. படத்தில் மட்டுமே நடிக்காமல் நிஜவாழ்வில் தன் கிராமத்தில் கொரோனா களப்பணியில் நடிகர் விமல் இறங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் விஷால், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா நடிப்பில் உருவாகி இருக்கும் சக்ரா படத்தின் முன்னோட்டம்.
விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சக்ரா’. எம்.எஸ்.ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஷால் இப்படத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்துள்ளார்.
கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு நடிகை ஒருவர் உணவளித்து வருகிறார்.
இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். அதுபோல் திரைப்படம் உள்பட பல்வேறு துறை பிரபலங்களும் வீட்டுக்குள்ளேயே இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் கன்னட திரைப்பட நடிகை சம்யுக்தா ஒரநாடு, ஊரடங்கால் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் தெருநாய்களுக்கு உணவளித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த ஒரு வாரமாக நாய்கள் உணவு இல்லாமல் போராடி வருவதைக் கண்டு மனம் உடைகிறது. நான் உள்பட சிலர் சேர்ந்து தெருநாய்களை கண்டறிந்து உணவளித்து வருகிறோம். இதற்கு உதவியாக இருக்கும் பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி சூர்யாவுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த ஒரு வாரமாக நாய்கள் உணவு இல்லாமல் போராடி வருவதைக் கண்டு மனம் உடைகிறது. நான் உள்பட சிலர் சேர்ந்து தெருநாய்களை கண்டறிந்து உணவளித்து வருகிறோம். இதற்கு உதவியாக இருக்கும் பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி சூர்யாவுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் குருட்டு தைரியத்தில் வெளியே சுற்றுவதாக நடிகை காயத்ரி ரகுராம் சாடியுள்ளார்.
நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு வீடியோவில் பேசியிருப்பதாவது:- கொரோனா பாதிப்பை தடுக்க பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். சுடு தண்ணீர் குடித்தால் நல்லது என்கிறார்கள். இப்போது நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளது. ஆனால் இந்த நேரத்திலும் நிறைய இளைஞர்கள் தங்களுக்கு எதுவும் ஆகாது என்ற குருட்டு தைரியத்தில் வெளியே போகிறார்கள். அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு அதன்மூலம் தங்கள் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் பரவும் என்பதை அவர்கள் அறியவில்லை.

நிறைய பேர் வெளிநாட்டில் இருந்து நமது நாட்டுக்கு வந்து இருப்பார்கள். அவர்கள் மீது வைரஸ் தொற்று இருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளனர். காய்கறி கடைகளில் ஒரு மீட்டர் தொலைவை கடைபிடித்தால்தான் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கும். விஜய், அஜித்குமார் ரசிகர்களுக்கு நான் சொல்வது அவர்கள் சொன்ன வழிமுறையை பின்பற்றுங்கள். யாருக்காவது அறிகுறி இருந்தால் அடுத்த வாரம்தான் தெரியும், அதையும் கடந்தால் பெரிய பாதிப்பு இருக்காது. இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறினார்.
கேரளாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கஷ்டப்படும் திருநங்கைகளுக்கு நடிகை மஞ்சு வாரியர் உதவியுள்ளார்.
கொரோனாவால் இந்திய திரையுலகம் முடங்கி உள்ளது. வேலை இழந்த திரைப்பட தொழிலாளர்களுக்கும் துணை நடிகர்-நடிகைகளுக்கும் உதவ, தமிழ் நடிகர்கள் பெப்சி அமைப்புக்கும், நடிகர் சங்கத்துக்கும் நிதி வழங்கி வருகிறார்கள். தெலுங்கு நடிகர்கள், முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு பல கோடிகளை வழங்கி உள்ளனர்.
தனுஷ் ஜோடியாக ‘அசுரன்’ படம் மூலம், தமிழ் பட உலக்குக்கு அறிமுகமான பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர், ஏற்கனவே மலையாள சினிமா தொழிலாளர்களுக்கு உதவ ரூ.5 லட்சம் வழங்கி இருந்தார். தற்போது கேரளாவில் ஊரடங்கால் கஷ்டப்படும் திருநங்கைகளுக்கு வீட்டுக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார்.

இதனை கொச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் திருநங்கைகளுக்கான திவ்யா என்ற அமைப்பின் தலைவரும், மேக்கப் கலைஞருமான ரெஞ்சு ரெஞ்சிமர் தெரிவித்துள்ளார். மஞ்சு வாரியருக்கு போனில் திருநங்கைகள் கஷ்டப்படுவது பற்றி சொன்னதும் உடனடியாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தார் என்று முகநூலில் அவர் கூறியுள்ளார்.






