என் மலர்
சினிமா செய்திகள்
ரஜினி, கமல், அஜித், விஜய் நீங்கள் நால்வர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும், பிளீஸ் உதவி செய்யுங்கள் என பிரபல நடிகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக திரையுலகம் முடங்கி உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் வேலை இழந்த திரைப்பட தொழிலாளர்களுக்கு பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. இதுபோல் நடிகர் சங்கத்தில் உள்ள துணை நடிகர்-நடிகைகள், நாடக நடிகர்களுக்கு உதவவும் நிதி வசூலிக்கப்படுகிறது.
இதுவரை ஐசரி கணேஷ் ரூ.10 லட்சம், கார்த்தி ரூ.2 லட்சம், நகைச்சுவை நடிகர் சூரி ரூ.1 லட்சம், நாசர், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் தலா ரூ.50 ஆயிரம், பொன்வண்ணன், சாய்பிரதீப் ஆகியோர் தலா ரூ.25 ஆயிரம், சங்கீதா ரூ.15 ஆயிரம் வழங்கி உள்ளனர். பூச்சி முருகன், கோவை சரளா, சத்யபிரியா, ரோகிணி, லதா, சச்சு, நாகிநீடு, பிரபா ரமேஷ், சேலம் பார்த்திபன் ஆகியோர் தலா ரூ.10 ஆயிரமும் வழங்கி உள்ளனர். இதுவரை ரூ.15 லட்சத்து 65 ஆயிரத்து 100 வசூலாகி உள்ளது.
@rajinikanth @ikamalhaasan @actorvijay @NoushadChennai1pic.twitter.com/g1pKSfGyba
— Kutty Padmini (@KuttyPadhmini) April 4, 2020
இந்நிலையில் பழம்பெரும் நடிகை குட்டி பத்மினி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: "நடிகர் சங்கம் தற்போது கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறது. ரஜினி, கமல், அஜித், விஜய் நீங்கள் நால்வர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன், தயவு செய்து, உங்களால் முடிந்த உதவியை நடிகர் சங்க அறக்கட்டளைக்கு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமானுக்கு முதன் முதலில் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் உடல் நலக்குறைவால் காலமானார்.
பிரபல மலையாள இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் உடல் நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனது வீட்டில் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87. கேரளாவில் பிறந்த அர்ஜுனன் பழனியில் உள்ள ஜீவகாருண்யானந்தா விடுதியில் வளர்ந்தார். அங்கு இசை கற்றுக்கொண்டார். பின்னர் பிரபல இசையமைப்பாளர் ஜி.தேவராஜிடம் உதவியாளராக சேர்ந்தார். அவர் இசையமைத்த பல படங்களுக்கு இவர்தான் ஆர்மோனியம் வாசித்துள்ளார்.
1968-ல் கறுத்த பவுர்ணமி என்ற மலையாள படத்தின் மூலம் அர்ஜுனன் இசையமைப்பாளராக அறிமுகமானார். 200-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி உள்ளார். 500-க்கும் மேற்பட்ட சிறந்த பாடல்கள் இவரது இசையில் வெளிவந்துள்ளன. கேரளாவில் இன்றைக்கும் அவரது பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கின்றன. ஏராளமான மேடை நாடகங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

2017-ம் ஆண்டு பயானகம் என்ற படத்துக்காக கேரள அரசிடம் விருது பெற்றார். ஏ.ஆர்.ரகுமானின் தந்தை இவருடன் இணைந்து பணியாற்றி உள்ளார். ஏ.ஆர்.ரகுமானுக்கு முதன் முதலில் கீ-போர்டு வாசிக்கும் வாய்ப்பை வழங்கியவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜுனன் மறைவுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மலையாள நடிகர்-நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்த சமீரா ரெட்டி குழந்தைகளுடன் பொழுதை போக்கி வருகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா ரெட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்தவர் சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொண்டுவந்தார். திருமணத்திற்கு பிறகு தனது இரண்டு குழந்தைகளுடன் சமீரா ரெட்டி முழு நேரத்தை செலவிட்டு வருகிறார்.
தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது அவர்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார். அந்தவகையில் தற்போது தனது அன்பு குழந்தைகளின் அழகிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கினார். இப்படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றது.
தற்போது விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ். படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இ
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது டிவிட்டர் பக்கத்தில், நான் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளத்தில் இல்லை. டிவிட்டரில் மட்டுமே இருக்கிறேன். மற்றது எல்லாம் போலி கணக்குகள் என்று பதிவு செய்திருக்கிறார்.
ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் யோகி பாபு, பழைய படங்களை பார்த்து ரசித்து வருகிறார்.
தேசிய ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையிலுள்ள வீட்டில் இருக்கிறார் யோகி பாபு.
வீட்டில் இருப்பது குறித்து யோகி பாபு கூறும்போது, வீட்டில் அம்மா, தங்கை, மச்சான், தம்பி ஆகியோருடன் பல வருடங்களுக்கு பிறகு மனம்விட்டு பேசக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தினமும் ஷூட்டிங் என்று மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டே இருந்த நான், இப்போதுதான் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறேன்.
சிவாஜியின் கர்ணன், விசுவின் சம்சாரம் அது மின்சாரம், கீர்த்தி சுரேஷின் நடிகையர் திலகம் உள்பட நிறைய படங்கள் பார்த்தேன். கொரோனா வைரஸ் பரவலால் சினிமா தொழிலாளர்கள் மட்டுமன்றி, நடைபாதை வியாபாரிகள் உள்பட அனைவரும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகள் செய்து வருகிறேன். வீட்டுக்குள் எல்லோரும் சந்தோஷமாக இருந்தாலும், நாட்டில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் கிருமி பரவிக் கொண்டிருக்கிறது. அதற்காக நாம் அனைவரும் தனித்திருப்போம்.
காதலில் விழுந்த அனுபவம் பற்றி ரசிகர் ஒருவர் கேட்டதற்கு பதில் கூறியுள்ளார் பிந்து மாதவி.
சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார் பிந்து மாதவி. அப்போது, காதலில் விழுந்த அனுபவம் பற்றி சொல்லுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்டார். அதை காதல் என சொல்வதா தெரியவில்லை.
ஒருவர் மீது சீக்ரெட் கிரஷ் உள்ளது. அதை யாரிடமும் சொன்னது கிடையாது. உடனே இதற்கு காதல் சாயம் பூசி, நானும் காதலிக்கிறேன் என சொல்லிவிட முடியாது. இது ஒரு ஈர்ப்புதான். அதனால் இதை காதல் என சொல்லிவிட முடியாது. அதேபோல், நான் எந்த கமிட்மென்ட்டுக்கும் ஆளாகவில்லை. எனவே இப்போதைக்கு சிங்கிளாகவே இருக்கிறேன் என்றார் பிந்து மாதவி.
ஊரடங்கு உத்தரவால் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில் தனக்கு பாரம்பரிய பழக்கம் கை கொடுக்கிறது என்று நடிகை ஜெனிபர் கூறியிருக்கிறார்.
சின்னத்திரையில் பிசியாக இருக்கும் நடிகை ஜெனிபர் கூறியதாவது : வீட்டுக்குள் வேலை செய்வது பழக்கப்பட்டதுதான். ஆனால் குடும்பத்தோடு வீட்டை விட்டு வெளியே போகாமல் இருப்பதுதான் புதிய அனுபவம். ஆனாலும் மருந்தே இல்லாத ஒரு நோயில் இருந்து நமக்கு பாதுகாப்பு அவசியம் என்பதால் வீட்டுக்குள்ளேயே இருப்பது கஷ்டமாக தெரியவில்லை.
ஆனால் வெளியே சென்று வரும் போது கை, காலை கழுவிவிட்டு வீட்டுக்குள்ளே வருவது, வெளியில் இருந்து கொண்டு வரும் பொருட்கள் எதுவாக இருந்தாலும் சுத்தம் செய்து வீட்டுக்குள் எடுப்பது, போன்ற பழக்கங்களை ஏற்கனவே என் கணவரிடம் இருந்து நான் கற்றது தான். தினமும் நாங்கள் கடைப்பிடிப்பதுதான்.
எனவே இந்த விழிப்புணர்வு புதிதாக தெரியவில்லை. ஆனால் பல குடும்பங்களில் புரிதல் இல்லாமல் இருக்கும். இப்போது எல்லோரும் ஒன்றாக குடும்பத்துடன் பொழுதை கழிக்கும் போது கொரோனாவால் குடும்பத்துக்குள் அனைவருடனும் நிச்சயம் புாதலும் ஏற்பட்டிருக்கும். இவ்வாறு அவர் கூறினார் .
உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு பிரபல நடிகை ஒருவர் பலியாகி உள்ளார்.
கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது. பிரபல நடிகர்-நடிகைகளும் இந்த வைரசில் சிக்கி பலியாகிறார்கள். ஏற்கனவே ஹாலிவுட் நடிகர்கள் ஆண்ட்ரூ ஜாக், மார்க் ப்ளம், ஜப்பான் நடிகர் கென் ஷிமூரா, அமெரிக்க பாடகர் ஜோ.டிப்பி, இங்கிலாந்து நகைச்சுவை நடிகர் எட்டி லார்ஜ் ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
தற்போது இன்னொரு நடிகையும் பலியாகி இருக்கிறார். அவரது பெயர் பேட்ரிசியா பாஸ்வொர்த். சில தினங்களுக்கு முன்பு இவருக்கு காய்ச்சல் அதிகமானதால் பரிசோதனை செய்தனர். அப்போது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி பேட்ரிசியா பாஸ்வொர்த் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. இவர் பிரபல எழுத்தாளரும் ஆவார்.
பேட்ரிசியா மரணம் அடைந்த தகவலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள அவரது வளர்ப்பு மகள் பியா ஹட்சவ், “கொரோனா வைரஸ் எங்களின் திறமையான வளர்ப்பு தாயின் உயிரை எடுத்துக்கொண்டது. அவர் அன்பானவர், இரக்க குணம் கொண்டவர்” என்று கூறி உள்ளார்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலம் குறித்து நமது பேரக் குழந்தைகளிடம் சொல்லுவோம் என்று ஆண்ட்ரியா கூறியுள்ளார்.
கொரோனா குறித்து நடிகை ஆண்ட்ரியா உருக்கமாக கூறியதாவது: ஒரு நாள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலம் குறித்து நமது பேரக் குழந்தைகளிடம் சொல்லுவோம். நமது வேலைகள், வழக்கமான காலை நடைப்பயிற்சி, நீண்ட தூரப் பயணம், பிடித்த உணவகங்களில் உணவு, திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள், வீட்டுக் கொண்டாட்டங்கள், சுற்றுலா மற்றும் நமது உயிர்கள் என அனைத்துக்கும் அச்சுறுத்தல் இருந்த காலம்.
இந்த பித்துப் பிடிக்கும் சூழலை நாம் எப்படிக் கையாண்டோம் என்பதே அவர்கள் கேட்க விரும்பும் கதையாக இருக்கும். இவ்வளவு குழப்பத்துக்கு நடுவில் தனிமையில், ஒற்றுமையாக நாம் நல்லறிவைத் தேர்ந்தெடுத்தோமா, பொறாமையை விடுத்து பச்சாதாபத்தைத் தேர்ந்தெடுத்தோமா, பேராசையை விடுத்து பெருந்தன்மையைத் தேர்ந்தெடுத்தோமா? இப்போது நாம் இரண்டு விஷயங்கள் செய்யலாம்.
ஒன்று கற்பனையாக அதைச் சொல்லலாம் அல்லது வாழ்ந்து காட்டலாம்.வீட்டிலிருந்தோம், சமூக ஊடகங்களால் சோர்வுற்றோம், சலித்துப் போய் படைப்பாற்றலோடு இருந்தோம், பால்கனிகளில் நின்று, வெளியே சேவை செய்து கொண்டிருப்பவர்களுக்காகப் பாடல் பாடினோம், கை தட்டினோம் என்று நாம் அவர்களுக்குச் சொல்லலாம். ஒரு புதிய நாளைப் பார்க்க நாம் உயிர் பிழைத்தோம் என்ற இந்தக் கதையைக் கெடுக்காதீர்கள்... இப்படிக்கு க்ளைமாக்ஸ் இவ்வாறு அவர் கூறினார்.
மும்பையில் உள்ள தனது 4 மாடி அலுவலகத்தை கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்றுவதற்காக நடிகர் ஷாருக்கான் வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் நிவாரண பணிகளுக்கு நடிகர்-நடிகைகள் நிதி வழங்கி வருகிறார்கள். பிரதமரின் நிவாரண நிதிக்கும் பணம் கொடுக்கிறார்கள். இந்தி நடிகர் ஷாருக்கானும் நிவாரண நிதி திரட்டி வருகிறார். அறக்கட்டளை மூலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் பணியிலும் ஈடுபட்டு உள்ளார். அவர் கூறும்போது, “இந்த இக்கட்டான நேரத்தில் உங்களை சுற்றி இருப்பவர்கள், நாங்கள் தனியாக இல்லை என்பதை உணர வைக்க வேண்டியது முக்கியம். இந்தியர்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்பதை உறுதிப்படுத்துவோம்” என்றார்.

இந்த நிலையில் மும்பையில் தனக்கு சொந்தமாக உள்ள நான்கு மாடிகள் கொண்ட அலுவலகத்தை கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையமாக பயன்படுத்திக்கொள்வதற்கு வழங்குவதாக ஷாருக்கானும், அவரது மனைவி கவுரியும் அறிவித்து உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்கள், முதியோர்கள், குழந்தைகள் தங்கள் அலுவலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மும்பை மாநகராட்சிக்கு இருவரும் தெரிவித்து உள்ளனர். இதற்காக மும்பை மாகராட்சி ஷாருக்கானுக்கும், கவுரிக்கும் டுவிட்டரில் நன்றி தெரிவித்து உள்ளது.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம், தாரா அலிஷா பெர்ரி நடிப்பில் உருவாகி இருக்கும் பிஸ்கோத் படத்தின் முன்னோட்டம்.
மசாலா பிக்ஸ், எம்.கே.ஆர்.பி.புரடொக்ஷன்ஸ் இணைந்து வழங்கும் படம் பிஸ்கோத். ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி நடிக்கிறார். சமீபத்தில் வெளியான A1 வெற்றிப்படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், மீண்டும் சந்தானத்துடன் இரண்டாம் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்.
இன்னொரு நாயகியாக சுவாதி முப்பலா அறிமுகம் ஆகிறார். இவர் மிஸ் கர்நாடகா 2017 அழகி பட்டம் வென்றவர். இவர்களுடன் சௌகார் ஜானகி, ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
கொரோனா விழிப்புணர்வுக்காக ரஜினி, அமிதாப், சிரஞ்சீவி நடித்த குறும்படம் இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கொறோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்களும் இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் குறும்படம் ஒன்றின் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் முன்வந்துள்ளனர் . இந்த குறும்படத்திற்கு ‘ஃபேமிலி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, உடல் நலனைப் பேணுவது, வீட்டில் இருந்து பணிபுரிவது, சமூக விலகல் உள்ளிட்ட விஷயங்களை பற்றி பேசும் இப்படத்தை ப்ரசூன் பாண்டே என்பவர் இயக்கியுள்ளார். இக்குறும்படம் இன்று (06.04.20) இரவு 9 மணி சோனி டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.






