என் மலர்
சினிமா

அமிதாப்பச்சன், ரஜினி
கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் ரஜினி, சிரஞ்சீவி, அமிதாப்பச்சன்
கொரோனா விழிப்புணர்வுக்காக ரஜினி, அமிதாப், சிரஞ்சீவி நடித்த குறும்படம் இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கொறோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்களும் இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் குறும்படம் ஒன்றின் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் முன்வந்துள்ளனர் . இந்த குறும்படத்திற்கு ‘ஃபேமிலி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, உடல் நலனைப் பேணுவது, வீட்டில் இருந்து பணிபுரிவது, சமூக விலகல் உள்ளிட்ட விஷயங்களை பற்றி பேசும் இப்படத்தை ப்ரசூன் பாண்டே என்பவர் இயக்கியுள்ளார். இக்குறும்படம் இன்று (06.04.20) இரவு 9 மணி சோனி டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
Next Story