என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பாலைவனத்தில் சிக்கிய பிருத்விராஜின் வருகைக்காக அவரது மகள் காத்திருப்பதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
    மலையாள சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் பிருத்விராஜ். இவர் தமிழில் கனா கண்டேன், நினைத்தாலே இனிக்கும், சத்தம் போடாதே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நடித்து வரும் ஆடு ஜீவிதம் படப்பிடிப்பிற்காக ஜார்டன் சென்றார். அப்போது கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக, படக்குழுவினர் அங்கேயே சிக்கி கொண்டனர்.  

    சுமார் 70 நாட்களுக்கு மேலாக ஜார்டனில் இருக்கும் பிருத்விராஜ் சீக்கிரமே வீடு திரும்புவது குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவரது மனைவி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். பிருத்விராஜின் மகள், My Father is Coming என எழுதும் வீடியோவை பதிவிட்டு, அவரது வருகை குறித்து தெரிவித்திருக்கிறார் அவர் மனைவி. 

     இந்த பதிவுக்கு கமன்ட் செய்துள்ள பிருத்விராஜ், ''சீக்கிரமே திரும்பி வந்து, என் இளவரசியுடனும், என் ராணியுடனும் இருக்க ஆசைப்படுகிறேன்'' என பதிவிட்டுள்ளார். 
    காளை, காஞ்சனா படங்களில் நடித்த வேதிகா, வெறித்தனமாக ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    சிம்புவுடன் காளை படத்தில் நடித்து பிரபலமானவர் வேதிகா. இப்படத்தை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார். கடந்த வருடம் நடிகர் ராகவா லாரன்ஸின் காஞ்சனா-3 படத்தில் நடித்தார். மேலும் தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 

    இந்நிலையில் நடிகை வேதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வெறித்தனமாக ஆடும் வேதிகாவின் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் சிறப்பாக நடனம் ஆடுவதாக பாராட்டும் தெரிவித்து வருகிறார்கள்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் இந்த அன்புக்கு ரொம்ப கடமை பட்டு இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார். மேலும் இவர் மகாநதி படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புது வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் இன்ஸ்டாவில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 5 மில்லியனை எட்டியுள்ளது.  இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இப்போது நாங்கள் 5 மில்லியன் குடும்பத்தில் இணைந்திருக்கிறோம். நானும் நைக்கும் இந்த அன்புக்கு ரொம்பவே கடமைப்பட்டுள்ளோம்' என பதிவிட்டிருக்கிறார்.
    நாச்சியார் ஹீரோ படத்தில் நடித்த இவானா நான் வேலை இல்லாமல் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
    பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான படம் நாச்சியார். இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் இவானா. இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

    இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் இவானா. கொரோனா ஊரடங்கு நேரத்தில் பிரபலங்கள் பலரும் வீட்டில் இருக்கும் நிலையில் நடிகை இவானா, நான் வேலை இல்லாமல் இருக்கிறேன்... எனது போன் தான் எனக்கு கம்பெனி கொடுக்கிறது என்று கூறியிருக்கிறார்.
    பொன்மகள் வந்தாள் இணையதளத்தில் வெளியிட அது மட்டும் தான் காரணம் என்று படத்தின் நாயகி ஜோதிகா கூறியுள்ளார்.
    ஜே.ஜே. பிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள ’பொன்மகள் வந்தாள்’ படம் வரும்  29-ந் தேதி அமேசான் பிரைம் இணையதளத்தில் வெளியாக இருக்கிறது.

    இணையதளத்தில் நேரடியாக வெளியாவது பற்றி ஜோதிகாவிடம் கேட்டதற்கு, இப்போது இந்த கொரோனா ஊரடங்கால் எல்லோருக்குமே இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. படத்தை ரிலீஸ் செய்யும் அமேசான் பிரைமுக்கு 200 நாடுகளில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். எனவே சின்ன பட்ஜெட் படங்கள், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் போன்றவற்றுக்கு இந்த தளங்கள் ஒரு வரப்பிரசாதம்.

    பொன்மகள் வந்தாள் இணையதளத்தில் வெளியிட கொரோனா மட்டும் தான் காரணம். நிலைமை சரியாகும் வரை காத்திருப்பதைவிட மக்கள் பார்வைக்கு கொண்டுவந்துவிடலாம் என்று முடிவு செய்தோம். 
    கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை பற்றிய செய்திகளுக்கு பிரபல தயாரிப்பாளர் எதுவும் உண்மை இல்லை என்று கூறியிருக்கிறார்.
    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வரும் திரைப்படம் சுல்தான். இதில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். சுல்தான் படத்தின் படப்பிடிப்பு தற்போது கொரோனா  வைரஸ் பிரச்சனை காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

    இந்நிலையில் சுல்தான் திரைப்படம் அடுத்த ஆண்டு சம்மருக்கு வெளியாகவுள்ளதாகவும், இது காஷ்மோரா போல ஃபேன்டஸி திரைப்படம் எனவும், இப்படத்திற்கு முதலில் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், அது மாற்றப்பட்டு, தற்போது விவேக் மெர்வின் இசையமைக்கவுள்ளதாகவும் சமூக வலைத்தளத்தில் கூறப்பட்டது.

     எஸ்.ஆர்.பிரபு


    இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், ''கார்த்தியின் சுல்தான் பற்றி கூறப்படும் இது போன்ற தகவல்கள் எதுவும் உண்மையில்லை'' என பதிவிட்டுள்ளார். 
    பிரபல நடிகர் நாசரின் செயலால் கபடதாரி படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.
    சிபிராஜ் நடிக்கும் கபடதாரி படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்து டப்பிங் உட்பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற இருந்த நேரத்தில் கொரானா ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது.

    தற்போது அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து நிறுத்தப்பட்ட பணிகளை கபடதாரி படக்குழு பரபரப்பாக செய்யத் தொடங்கியது.

    ட்விட்


    சமீபத்தில் நாசர் தனது டப்பிங் பணியை ஆரம்பித்து முடித்து கொடுத்துள்ளார். அதன்பின் கொரானாவால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட இழப்பை தன்னால் முடிந்த அளவுக்கு சரி செய்ய தனது சம்பளத்தில் இருந்து 15% தொகையை விட்டுக் கொடுத்து தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

    நாசரின் இந்த செயலுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
    தெலுங்கு சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சிரஞ்சீவி, சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
    ஊரடங்கால் பல பிரபலங்கள் வீட்டிலேயே தங்களது குடும்பத்தினருடன் செலவழிக்கும் நேரங்களை புகைப்படம் எடுத்து ரசிகர்களுக்காக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியிடுகின்றனர். இந்நிலையில் தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி தனது மனைவியுடன் 1990-ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அப்படியே அதே போன்று தற்போது 2020-ல் அதை ரிகிரியேட் செய்துள்ளார்.

    ரிகிரியேட் செய்த புகைப்படம்


    முப்பது வருடங்களுக்கு முன்பு பிசியாக இருக்கும் நேரத்தில் தனது மனைவியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நீல சட்டை மற்றும் மனைவி சிவப்பு புடவை அணிந்து எதார்த்தமாக எடுக்கப்பட்ட அந்த புகைப்படம். தற்போது அதே நிற உடையில் அதே போசில் மீண்டும் இந்த புகைப்படத்தை ரிகிரியேட் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பல தெலுங்கு திரையுலக நட்சத்திரங்கள் இந்த ஜோடியை வாழ்த்தி உள்ளனர்.
    தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான ரெஜினா கசாண்ட்ரா சமூக வலைத்தளத்தில் வித்தியாசமான முயற்சி ஒன்றை செய்துள்ளார்.
    தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான ரெஜினா கசாண்ட்ரா சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்குபவர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வழக்கமான பதிவுகளை விடுத்து, வித்தியாசமான முயற்சியில் தற்போது களமிறங்கி உள்ளார்.

    ’டிராக் குயின்’ எனப்படும் பெண்களைப் போல் வேடமிடும் கலைஞர்கள் குறித்தான பதிவுதான் அது. ‘டிராக் குயின்’ போல வேடமிட்டு, அவர்களுடன் உரையாடிய வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ளார். இந்தக் கலைஞர்கள் குறித்து அறிந்துகொள்ளவும், இவர்களின் உலகம் பற்றி அறியாத தகவல்களைப் புரிந்துகொள்ளவுமே இந்தப் பதிவு எனக் குறிப்பிட்டுள்ளார்.
    கமல்ஹாசன் குறித்து ஹாலிவுட் நடிகை மெக்கன்ஸி வெஸ்ட்மோர் தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
    ஹாலிவுட் படங்களில் ஒப்பனையாளராக பணியாற்றிய வெஸ்ட்மோர், தசாவதாரம், அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களில் கமல்ஹாசனுடன் பணியாற்றியுள்ளார். வெஸ்ட்மோரின் மகள் மெக்கன்ஸி வெஸ்ட்மோர் நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருகிறார். இவர் தனது டுவிட்டர் பதிவில், எனக்கு கமல்ஹாசனைத் தெரியுமா என்று பலர் கேட்கின்றனர்.

    நான் சிறிய பெண்ணாக இருந்த போது கமல்ஹாசனின் பல கதாபாத்திரங்களுக்கு என் தந்தை மேக்கப் செய்துள்ளார். கடைசியாக அவரை சந்தித்து சில வருடங்களாகிவிட்டன. 2வது புகைப்படத்தில் நானும் எனது அப்பாவும் கமல்ஹாசன் பரிசளித்த இந்திய உடைகளை அணிந்துள்ளோம் என்று கூறியுள்ளார். கமல்ஹாசன் பற்றிய மெக்கன்ஸியின் பதிவுக்கு கமல் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
    கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், அனகா, ஷிரின் நடிப்பில் உருவாகி இருக்கும் டிக்கிலோனா படத்தின் முன்னோட்டம்.
    சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது டிக்கிலோனா. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என காமெடி பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர். 

    டிக்கிலோனா படக்குழு

    சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் இணைந்து தயாரிக்கின்றனர்.
    சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து பார்க்கலாம்.
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சின்னத்திரை படப்பிடிப்பை மீண்டும் துவங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சின்னத்திரையினரின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, கீழ்காணும் நிபந்தனைகளுடன் படப்பிடிப்புகளை நடத்தலாம் என்று அனுமதி அளித்துள்ளார்.

    அரசு விதித்துள்ள நிபந்தனைகள் பின்வருமாறு: 

    * சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அல்லது அரங்கிற்குள் மட்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு இது பொருந்தாது.

    * பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது. எனினும், ஊரகப் பகுதிகளில் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த தடை ஏதும் இல்லை.

    * பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது.

    * படப்பிடிப்பு நடத்தப்படும் அரங்கம் அல்லது வீட்டினை படப்பிடிப்பிற்கு முன்பும், பின்பும் கண்டிப்பாக கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

    * படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர்கள், நடிகைகள் தவிர மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். 

    * நடிகர், நடிகைகளும் படப்பிடிப்பின் இடைவெளியின் பொழுது தவறாமல் முகக்கவசம் அணியவேண்டும்.

    * படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

    * படப்பிடிப்பு நடத்தப்படும் வளாகத்திற்குள் வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். 

    * படப்பிடிப்பிற்கு உபயோகப்படுத்தப்படும் கேமரா, கிரேன் உட்பட அனைத்து சாதனங்களையும் கிருமிநாசினி கொண்டு அவ்வவ்போது சுத்தம் செய்ய வேண்டும்.

    * சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருக்கும் கலைஞர்களையோ அல்லது தொழில்நுட்ப பணியாளர்களையோ படப்பிடிப்பு வளாகங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது. இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.

    * அதிகபட்சமாக நடிகர், நடிகை தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட 20 எண்ணிக்கைகளுக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்தலாம்.

    * சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவரிடமும் முன் அனுமதி பெற வேண்டும்.
    ×