என் மலர்
சினிமா செய்திகள்
மிஹீகா பஜாஜ் உடனான காதல் குறித்து நடிகர் ராணா டகுபதி சமீபத்திய நேர்காணலில் மனம் திறந்து பேசியுள்ளார்.
ராணா டகுபதி 2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய காதலியைச் சமீபத்தில் உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ராணா டகுபதி. மிஹீகா பஜாஜின் புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு எனக்குச் சம்மதம் சொன்னார் என ராணா குறிப்பிட்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா, டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோவின் நிறுவனர்.
இந்நிலையில் மிஹீகாவுடனான காதல் பற்றி நடிகை லக்ஷ்மி மஞ்சுவுடன் இன்ஸ்டகிராமில் உரையாடினார் ராணா டகுபதி. அவர் கூறியதாவது: திரைத்துறையைச் சேர்ந்தவரைத் தான் திருமணம் செய்யவேண்டும் என நான் நினைக்கவில்லை. மிஹீகாவைச் சந்தித்தேன், அவரைப் பிடித்தது, அவ்வளவுதான். என் காதலியைக் கண்டுகொண்டேன். அவரைச் சந்தித்தபோது அவருடன் நீண்ட நாள் வாழவேண்டும் என எண்ணினேன்.

எல்லாமே வேகமாகவும் எளிமையாகவும் முடிந்துவிட்டது. சரியான நபரைச் சந்திக்கும்போது சரியான விஷயங்கள் நடந்துவிடும். அவரிடம் காதலைச் சொல்ல தொலைபேசியில் அழைத்தபோது நான் எந்த இடத்துக்கு வருகிறேன் என்பதை அவர் புரிந்துகொண்டார். நேரில் சந்தித்தோம். அவ்வளவுதான். என் காதலைச் சொன்னவுடன் அவர் அதிர்ச்சியடைந்தார். ஆனால் மிகவும் சந்தோஷப்பட்டார். கொரோனா அச்சுறுத்தல் நிலவும் விநோதமான சூழலில் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளேன்.
நான் ஏன் ஒரு தெலுங்குப் பெண்ணைத் திருமணம் செய்யவில்லை எனக் கேட்கிறீர்கள். ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் என் வீட்டுக்கு அருகே தான் வசிக்கிறார். சரளமாக இல்லாவிட்டாலும் தெலுங்கு பேசுவார். எங்கள் இருவருடைய உலகமும் ஒன்றானது. என் குடும்பத்தினருடன் அவருக்கு நட்பு உண்டு. மும்பையில் உள்ள அவருடைய நண்பர்களை நான் அறிவேன் என்றார்.
டிக் டாக்கை தடை செய்வதன் மூலம் மக்களின் மனநிலையை மாற்ற முடியாது என கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
டிக் டாக் செயலியினால் பெரும் சர்ச்சையும் உருவாகியுள்ளது. மதரீதியிலான வீடியோக்கள், பெண்களை அவமதிக்கும் வீடியோக்கள் அதிகமாகி வருவதால் இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற குரலும் வலுத்து வருகிறது. மேலும், தடை விதிக்கக் கோரும் வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ‘கோமாளி’ மற்றும் ‘பப்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்த சம்யுக்தா ஹெக்டே தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:”ஒரு தளத்தை தடை செய்வதன் மூலம் அந்த தளத்தில் இருக்கும் மக்களின் மனநிலையை மாற்ற முடியாது.

அந்தத் தளம் இல்லையென்றாலும் அவர்களது கூச்சப்பட வைக்கும் விஷயங்களை பதிவேற்ற மக்கள் வேறொரு தளத்தைக் கண்டெடுப்பார்கள். பின் குறிப்பு: எப்படியும் டிக் டாக்கிற்கு என்ன நடக்கிறது என்பது பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை” இவ்வாறு சம்யுக்தா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
நடிகை ஜோதிகா, வடக்கிலிருந்து வந்தாலும் அதை கச்சிதமாக செய்துள்ளதாக நடிகை ராதிகா டுவிட்டரில் பாராட்டி உள்ளார்.
ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. நேர்மையான வழக்கறிஞர் ஒருவர், தவறாக குற்றம்சாட்டப்பட்ட ஓர் அப்பாவிப் பெண்ணை விடுவிக்கும் முயற்சிகளைப் பற்றி பரபரப்பான நீதிமன்ற விசாரணைக் கதைதான் ‘பொன்மகள் வந்தாள்’.
ஊட்டியில் வசிக்கும் பெட்டிஷன் பெத்துராஜ் என்பவர், 2004-ம் ஆண்டு நடந்த தொடர் கொலைகளில் சம்பந்தப்பட்ட, ஆள் கடத்தல், கொலைக்காக தண்டனை அளிக்கப்பட்ட சைக்கோ ஜோதி என்பவரின் வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதைச் சுற்றி நடக்கும் விறுவிறுப்பான கதை இது.

2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் சினிமாவில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்த, கொரோனா ஊரடங்கு என்பதால் வீடியோ கால் மூலமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜோதிகா. இதில் முழுக்க தமிழில் பேசினார். இந்த வீடியோ வெளியானது.
ஜோதிகாவின் பேட்டி குறித்து ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “நம்பிக்கையுடன், தெளிவாக தமிழைப் பேசும் ஜோதிகாவின் முயற்சியை நான் பாராட்டுகிறேன். எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. வடக்கிலிருந்து இங்கு வந்து இதைக் கச்சிதமாகச் செய்த ஒரே நடிகை. அவருக்குப் பாராட்டுகள்” இவ்வாறு ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் டிரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் நடிகை ரித்திகா சிங்கிற்கு ரசிகர்கள் செல்லப்பெயர் சூட்டி உள்ளனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே வேடம் என்பதால் கனகச்சிதமாக பொருந்தினார். இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம், பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். அடுத்ததாக தமிழில், அருண் விஜய்யின் பாக்சர், அரவிந்த் சாமியின் வணங்காமுடி போன்ற படங்களில் அவர் நடிக்கிறார்.

தமிழில் இவர் நடித்த ‘ஓ மை கடவுளே’ படம், இவருக்கு நிறைய ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது. அந்த படத்தில் வந்த ‘நூடுல்ஸ் மண்ட’ என்ற பெயர், இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது. ரித்திகா சிங்கை “நூடுல்ஸ் மண்ட” என்று செல்லமாக அழைக்கிறார்கள். ரசிகர்களின் அன்பை பார்த்து ரித்திகாசிங் நெகிழ்ந்து போனாராம்.
மும்பையில் சிக்கித்தவித்த 90 தமிழர்களை பிரபல இயக்குனர் ஒருவர் ஐஏஎஸ் அதிகாரி உதவியுடன் மீட்டு சொந்த ஊர் அனுப்பி வைத்துள்ளார்.
சினேகா-பிரசாந்த் நடித்த ‘விரும்புகிறேன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், சுசி கணேசன். இவர் பைவ் ஸ்டார், திருட்டுப்பயலே, கந்தசாமி, திருட்டுப்பயலே-2 போன்ற படங்களையும் இயக்கி உள்ளார். தற்போது மும்பையில் வசித்து வரும் இவர், சில இந்தி படங்களையும் இயக்கி வருகிறார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் இந்த சூழலில், மதுரை மற்றும் விருதுநகரை சேர்ந்த 90 தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் மும்பையில் தவித்து வந்தனர்.

இதுகுறித்து அறிந்த இயக்குனர் சுசி கணேசன் தனக்கு தெரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்பழகன் உதவியுடன், அந்த 90 தமிழர்களும் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏற்பாடு செய்துள்ளார்.
‘ஐ.ஏ.எஸ்.’ என்பது கவர்ச்சியான பதவியல்ல... களமிறங்கி செய்யும் பதவி என்பதை மனதில் ஆழமாக பதிய வைத்த சம்பவம், இது. நன்றிகள் பல அன்பழகன் புரோ என சுசி கணேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் நெற்றிக்கண் படத்தில் இடம்பெறும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடிகை நயன்தாரா டூப் போடாமல் நடித்துள்ளாராம்.
‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் அடுத்ததாக நயன்தாராவை வைத்து ’நெற்றிக்கண்’ என்கிற திரில்லர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க உள்ளார்.
இப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். மேலும் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ’பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக்காகும். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா ஊரடங்கு முடிந்தபின் எஞ்சியுள்ள படப்பிடிப்புகளை நடத்த உள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் சமீபத்திய நேர்காணலில் கூறியதாவது: "நெற்றிக்கண் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவைக்கும் திரில்லர் படம். இப்படத்தில் வரும் சண்டை காட்சிகள் ரசிகர்களை நிச்சயம் கவரும். சண்டை காட்சிகளில் நயன்தாரா டூப் போடாமல் நடித்துள்ளார். இந்த படத்தில் வித்தியாசமான நயன்தாராவை ரசிகர்கள் பார்ப்பார்கள்" என அவர் கூறினார்.
என்னை அறிந்தால் படத்தில் இணைந்து நடித்திருந்த திரிஷாவும், அனுஷ்காவும், தற்போது மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
காதல் படங்கள் எடுப்பதில் கைதேர்ந்தவர் கவுதம் மேனன். குறிப்பாக விண்ணைத்தாண்டி வருவாயா இவரின் மாஸ்டர் பீஸ் என்றே சொல்லலாம். இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனாலும் இன்றளவும் பேசப்படுகிறது. அதன் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தற்போது அதன் ஒரு பகுதியை கார்த்திக் டயல் செய்த எண் என்ற பெயரில் குறும்படமாக எடுத்து வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இதையடுத்து அவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சிம்புவை வைத்து வேறு ஒரு காதல் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அனுஷ்கா நடிக்க உள்ளதாகவும், வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரிஷாவும், அனுஷ்காவும் ஏற்கனவே கவுதம் மேனனின் என்னை அறிந்தால் படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் நடிகையாக இருக்கும் ஹன்சிகா, பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா.
இவர் தற்போது `மஹா' என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். இது அவரது 50-வது படம். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கையில் மதுவுடன் நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள ஹன்சிகாவின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை இலியானாவின் நீச்சல் புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை இலியானா. விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

ஒல்லியான இடுப்புக்கு புகழ்பெற்ற இலியானா திடீர் என்று உடல் எடை அதிகமானார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார்.
இந்நிலையில் நீருக்குள் நீச்சலடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் இலியானா. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்திற்கு பல லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.

இந்நிலையில் நீருக்குள் நீச்சலடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் இலியானா. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்திற்கு பல லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தில் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்ததாக ஆண்ட்ரியா கூறியிருக்கிறார்.
சினிமாத்துறையில் நடிகை என்பதையும் தாண்டி பாடகி, பாடலாசிரியர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் எனப் பல முகங்கள் ஆண்ட்ரியாவுக்கு உண்டு. விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அந்த படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி கூறியதாவது: முழுக்க முழுக்க ரசிகர்களோட எதிர்பார்ப்புக்குத்தான் விஜய் சாரோட நடிச்சேன். இந்தப் படத்துல இருந்து எனக்கு நிறைய அனுபவம் கிடைச்சது. `வெறித்தனம்' பாட்டு அவர்தான் பாடினார்னு தெரியாம இருந்தேன். அது தெரிஞ்சு, `ஏன்மா நீ தமிழ்நாட்டுலதான் இருக்கியா'னு என்னைக் கலாய்ச்சார்.
விஜய் சாரும் நானும் சேர்ந்து பாடின `கூகுள் கூகுள்' செம ஹிட். அதே மாதிரி `மாஸ்டர்'லயும் வாய்ப்பு கிடைக்கும்னு உங்களை மாதிரியே நானும் எதிர்பார்த்தேன். ஆனா, பெண் பாடகியே படத்துல இல்லைனு சொல்லிட்டாங்க’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அந்த படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி கூறியதாவது: முழுக்க முழுக்க ரசிகர்களோட எதிர்பார்ப்புக்குத்தான் விஜய் சாரோட நடிச்சேன். இந்தப் படத்துல இருந்து எனக்கு நிறைய அனுபவம் கிடைச்சது. `வெறித்தனம்' பாட்டு அவர்தான் பாடினார்னு தெரியாம இருந்தேன். அது தெரிஞ்சு, `ஏன்மா நீ தமிழ்நாட்டுலதான் இருக்கியா'னு என்னைக் கலாய்ச்சார்.
விஜய் சாரும் நானும் சேர்ந்து பாடின `கூகுள் கூகுள்' செம ஹிட். அதே மாதிரி `மாஸ்டர்'லயும் வாய்ப்பு கிடைக்கும்னு உங்களை மாதிரியே நானும் எதிர்பார்த்தேன். ஆனா, பெண் பாடகியே படத்துல இல்லைனு சொல்லிட்டாங்க’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஷெரின் வருங்கால கணவர் பற்றி மனம் திறந்த பேசியிருக்கிறார்.
தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர் ஷெரின். இதையடுத்து விசில், உற்சாகம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் ஷெரினிடம் திருமணம் குறித்து கேட்டதற்கு, ''திருமணம் செய்ய, நம் வாழ்வில் யாராவது ஒருவர் இருக்க வேண்டும். அப்படியான ஒருவர் இப்போது என் வாழ்க்கையில் இல்லை. அதுவும் இல்லாம நாம இப்போ ஊரடங்குல இருக்கோம், நான் வீட்டுக்குள்ளே, வர போற என் இளவரசருக்காக காத்துட்டு இருக்கேன்'' என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் ஷெரினிடம் திருமணம் குறித்து கேட்டதற்கு, ''திருமணம் செய்ய, நம் வாழ்வில் யாராவது ஒருவர் இருக்க வேண்டும். அப்படியான ஒருவர் இப்போது என் வாழ்க்கையில் இல்லை. அதுவும் இல்லாம நாம இப்போ ஊரடங்குல இருக்கோம், நான் வீட்டுக்குள்ளே, வர போற என் இளவரசருக்காக காத்துட்டு இருக்கேன்'' என்று கூறியுள்ளார்.
நடைபெற இருக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான அணி மீண்டும் போட்டியிட இருக்கிறது.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது. அதையடுத்து சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமித்தது.
தற்போது, திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை வருகிற செப்டம்பர் 30-ந்தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும். இதுதொடர்பான அறிக்கையை அக்டோபர் 30-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 3 அணிகள் போட்டியிட அறிவிப்புகள் ஏற்கனவே வந்தது. விஷால் தலைமையிலான அணி எந்த கருத்தையும் சொல்லாமல் அமைதி காத்தது.
இந்நிலையில், கடந்தமுறை தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் நம்ம அணியாக வெற்றி பெற்றதை தொடந்து இப்போது நடக்கவிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் அதே அணி சார்ந்தவர்களுடன் களம் இறங்க விஷால் அணி முடிவு எடுத்துள்ளார்கள்.
தற்போது, திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை வருகிற செப்டம்பர் 30-ந்தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும். இதுதொடர்பான அறிக்கையை அக்டோபர் 30-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 3 அணிகள் போட்டியிட அறிவிப்புகள் ஏற்கனவே வந்தது. விஷால் தலைமையிலான அணி எந்த கருத்தையும் சொல்லாமல் அமைதி காத்தது.
இந்நிலையில், கடந்தமுறை தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் நம்ம அணியாக வெற்றி பெற்றதை தொடந்து இப்போது நடக்கவிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் அதே அணி சார்ந்தவர்களுடன் களம் இறங்க விஷால் அணி முடிவு எடுத்துள்ளார்கள்.






