என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானும், முன்னணி நடிகர் தனுஷும் பிரபல நடிகருக்காக ஒன்றிணைய இருக்கிறார்கள்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் தற்போது தனது கவனத்தை ஹாலிவுட் பக்கம் திருப்பி இருக்கிறார். டிராப் சிட்டி என்னும் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். மேலும் கோட் நைட்ஸ் என்ற ஹாலிவுட் ஆல்பத்தையும் தயாரித்துள்ளார்.

    இந்த ஆல்பத்தில் 'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடல் செப்டம்பர் 17-ம் தேதி வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷின் இந்த ஹாலிவுட் பாடலை ஏ.ஆர்.ரகுமான் மற்றும் தனுஷ் இணைந்து 17-ம் தேதி வெளியிடவுள்ளனர். இவர்கள் மட்டுமல்ல, பல்வேறு முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் ஜி.வி.பிரகாஷுக்காக ஒன்றிணைகிறார்கள்.

    ஏ.ஆர்.ரகுமான் - ஜிவி பிரகாஷ் - தனுஷ் 

    இந்தப் பாடல்  ஜிவி.பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது. ஜிவி மற்றும் ஜூலியா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கான ப்ரோக்ராமிங் மற்றும் அரேஞ்மென்ட் (Programming and Arrangement) இரண்டையும் ஜிவி செய்துள்ளார்.
    நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் 4வது சீசனில் மேலும் ஒரு கவர்ச்சி நடிகை கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா அச்சுறுத்தலால் இந்த வருடம் தள்ளி போகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் புரமோ வீடியோ வெளியானது. இது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. யாரெல்லாம் போட்டியாளர்களாக வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது. 

    ரம்யா பாண்டியன், குக்வித் கோமாளி புகழ், நடிகை கிரண், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட ஹீரோயின் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் பெயர்கள் அடிப்பட்டு வருகிறது. இந்நிலையில், றெக்க, மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்த இளம் கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    ஷாலு ஷம்மு

    ஷாலு ஷம்முவிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அழைப்பு வந்ததாகவும், இன்னும் உறுதியாவில்லை என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் யார் யார் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வார்கள் என்ற பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சர்ச்சைகளுக்கு பெயர்போன பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே தனது காதலர் சாம் பாம்பேவை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
    சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை பூனம் பாண்டே. இவர், 2011-ம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். இவ்வாறு சுய விளம்பரத்திற்காக அவ்வப்போது எதாவது சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில், தற்போது ஊரடங்கை மீறியதாக பூனம் பாண்டே கைது செய்யப்பட்டார்.

    பூனம் பாண்டேவுக்கும் அவரது காதலர் சாம் பாம்பேவுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது பூனம் பாண்டே - சாம் பாம்பேவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் பூனம் பாண்டே, ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    கணவருடன் பூனம் பாண்டே

    மேலும் இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 
    மாரடைப்பு காரணமாக நேற்று மரணமடைந்த தொலைக்காட்சி புகழ் நடிகர் வடிவேல் பாலாஜியின் உடல் நுங்கம் பாக்கத்தில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
    தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி. நடிகர் வடிவேல் பாணியில் நகைச்சுவைகள் செய்ததால் வடிவேல் பாலாஜி என்று அழைத்தனர். அது இது எது, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். அதன்பிறகு பட வாய்ப்புகள் வந்தன. கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். 

    இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வடிவேல் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. கை, கால்களும் செயல் இழந்தன. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி வடிவேல் பாலாஜி நேற்று மரணம் அடைந்தார். வடிவேல் பாலாஜிக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். அவரது திடீர் மரணம் சின்னத்திரை நடிகர், நடிகைகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இறுதி ஊர்வலம்

    நடிகர்கள் விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சவுந்தரராஜா, ரோபோ சங்கர், தாடி பாலாஜி சின்னத்திரை நடிகர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். தனுஷ், கார்த்தி உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளத்தில் ஆழந்த இரங்கலை தெரிவித்தார்கள். 

    வடிவேல் பாலாஜியின் இறுதி ஊர்வலம் 3 மணியளவில் தொடங்கியது. சின்னத்திரை நடிகர்கள் உட்பட பலர் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டனர். அவரது உடல் சேத்துப்பட்டில் இருந்து நுங்கம்பாக்கம் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இறுதியாக கண்ணீர் மல்க வடிவேல் பாலாஜியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தின் முன்னோட்டம்.
    கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம், 23 வருடங்களுக்குப் பிறகு தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து காஜல் அகர்வால், பிரியா பவானிசங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத்சிங், நெடுமுடி வேணு, சமுத்திரக்கனி, விவேக், வித்யுத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

    ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இந்த படத்தில் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. தாமரை, விவேக், பா.விஜய் ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர். கலை இயக்குனராக முத்துராஜ் பணியாற்றி உள்ளார்.
    5 மொழிகளில் உருவாகும் ஸ்ரேயாவின் ‘கமனம்’ படத்திற்கு, இளையராஜா இசையமைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தமிழில், மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரௌத்ரம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா. இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

    திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட ஸ்ரேயா, தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவர் கைவசம் விமலின் சண்டக்காரி, அரவிந்த்சாமியின் நரகாசூரன் போன்ற படங்கள் உள்ளன.

    கமனம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஸ்ரேயாவிற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவர் நடிக்கும் ‘கமனம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். சுஜன் ராவ் இயக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராக உள்ளது. 
    பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அக்‌ஷய் குமார், தான் தினமும் மாட்டுக் கோமியத்தை குடிப்பதாக கூறியுள்ளார்.
    டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கு இருந்து எப்படித் தப்பி வருவது என்பதை விளக்கி ஆவணப்படமாக வெளியிட்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சினிமா, அரசியல் பிரபலங்களும் அவ்வப்போது கலந்துகொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கும் முன்னர்கூட நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    தற்போது பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் அதில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியின் டீசர் அண்மையில் வெளியானது. அதில் பியர் கிரில்ஸ் தனக்கு யானை சாணத்தில் டீ போட்டுக் கொடுத்ததாக அக்‌ஷய் குமார் தெரிவித்தார்.

    பியர் கிரில்ஸ், அக்‌ஷய் குமார்


    இந்நிலையில் பியர் கிரில்ஸ், அக்‌ஷய் குமார் மற்றும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி ஆகியோர் சமூக வலைதளத்தில் லைவ் வீடியோ சாட் செய்தனர். அப்போது, யானை சாணத்தில் போட்ட டீயை எப்படித் தான் குடித்தீர்களோ என்று ஹூமா, அக்‌ஷய் குமாரிடம் கேட்டார்.

    அதற்கு அக்‌ஷய் குமார் அளித்த பதில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அவர் கூறியதாவது, நான் தினமும் மாட்டுக் கோமியம் குடிப்பதால், யானை சாண டீ எனக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை என்றார். ஆயுர்வேத காரணங்களுக்காக தான் தினமும் கோமியத்தை குடிப்பதாக அவர் கூறினார்.
    வருமான வரித்துறை வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    வெளிநாட்டு செல்போன் நிறுவனத்திற்கு ரிங் டோன் இசையமைத்து கொடுத்திருந்தார் ஏ.ஆர்.ரகுமான். இங்கிலாந்தின் லிப்ரா என்ற செல்போன் நிறுவனத்துக்கு ரிங் டோன் இசையமைத்து கொடுக்க ஒப்பந்தமாகியிருந்தது. அந்நிறுவனத்திற்கு இசையமைத்ததற்காக ரூ.3.47 கோடி ஊதியம் பெற்ற ஏ.ஆர்.ரகுமான் அதற்கு வரி செலுத்தவில்லை என புகார் எழுந்தது.

    ஏ.ஆர்.ரகுமான்

    ஊதியமாக வாங்கிய 3 கோடியே 47 லட்சம் ரூபாயை அவர் தனது ஏ.ஆர்.ஆர் அறக்கட்டளைக்குச் செலுத்தி, வரி ஏய்ப்பு செய்ததாக ஏ.ஆர்.ரகுமான் மீது வருமானவரித்துறையினர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.  இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    ‘ஜென்டில் மேன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவித்துள்ளார்.
    இயக்குனர் ஷங்கர் அறிமுகமான படம் ‘ஜென்டில் மேன்’. 1993-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மதுபாலா நடித்திருந்தார். 175 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடிய இப்படம் அந்தாண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. தற்போது சுமார் 27 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    வசந்தகால பறவை, சூரியன், ஜென்டில் மேன், காதலன், ரட்சகன், காதல் தேசம் ஆகிய பிரமாண்டமான படங்களை தயாரித்த கே.டி.குஞ்சுமோன் தான், ‘ஜென்டில் மேன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கிறார். ‘ஜென்டில் மேன்-2’ என்ற பெயரில், படம் தயாராகிறது. 

    குஞ்சுமோன்

    இதுபற்றி அவர் கூறியதாவது: “ஜென்டில் மேன்-2’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. முதல் பாகத்தை விட அதிக செலவில் பிரமாண்டமாக இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. நவீன தொழில்நுட்பத்தில், ஹாலிவுட் தரத்தில், மெகா பட்ஜெட்டில் படம் தயாராகும். படத்தில் பங்குபெறும் நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.” என அவர் கூறியுள்ளார்.
    உடல்நலக்குறைவால் வடிவேல் பாலாஜி மரணமடைந்த நிலையில், அவரின் குடும்பத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவிக்கரம் நீட்டி உள்ளார்.
    தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி. நடிகர் வடிவேல் பாணியில் நகைச்சுவைகள் செய்ததால் வடிவேல் பாலாஜி என்று அழைத்தனர். தலைநகரம் வடிவேல் தோற்றத்தில் செய்த நகைச்சுவைகள் பெரிய வரவேற்பை பெற்றன. அது இது எது, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். அதன்பிறகு பட வாய்ப்புகள் வந்தன. கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். 

    இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வடிவேல் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. கை, கால்களும் செயல் இழந்தன. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி வடிவேல் பாலாஜி நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 45. வடிவேல் பாலாஜிக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். அவரது திடீர் மரணம் சின்னத்திரை நடிகர், நடிகைகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

    வடிவேல் பாலாஜி, சிவகார்த்திகேயன்

    வடிவேல் பாலாஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், அவரது இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவை தான் ஏற்று கொள்வதாக கூறி இருக்கிறார். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அது இது எது நிகழ்ச்சியில் வடிவேல் பாலாஜியும், சிவகார்த்திகேயனும் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
    சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. வடிவேலு மாதிரி கெட்டப் போட்டு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்ததால் ‘வடிவேல் பாலாஜி’ என்று அழைக்கப்பட்டார்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேல் பாலாஜிக்கு அவருடைய கை, கால்கள் செயலிழந்தன. இதையடுத்து அவரை அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி வடிவேல் பாலாஜி மரணமடைந்தார். 42 வயதாகும் அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    நடிகர் வடிவேல் பாலாஜியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஜய் சேதுபதி நிதி உதவியும் அளித்தார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத்துக்கு ஆதரவாக நடிகர் விஷால் களமிறங்கி இருக்கிறார்.
    நடிகர் சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் நடிகை கங்கனா ரணாவத் மும்பையைப் பற்றியும், மகாராஷ்டிரா மாநிலம் குறித்தும் அவதூறாகப் பேசி கருத்துத் தெரிவித்தார். இதனால் நடிகை கங்கனா ரணாவத்துக்கும், சிவசேனா கட்சிக்கும் இடையே மோதல் வெடித்தது.

    மும்பை பாந்த்ராவில் உள்ள பாலி ஹில் பகுதியில் உள்ள கங்கனா ரணாவத் வீட்டில் பல்வேறு கட்டிடங்கள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதால், நேற்று மும்பை மாநகராட்சி நிர்வாகம் அவரின் வீட்டை இடித்தது. கங்கனாவும் மும்பை வந்ததால் பெரும் சர்ச்சை உருவானது. தொடர்ச்சியாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே மீது குற்றம் சாட்டியும், சவால் விடுத்தும் வருகிறார் கங்கனா ரணாவத்.

    இந்நிலையில், கங்கனாவுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் விஷால்.

    கங்கனா - விஷால்

    அதில், உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுகள். எது சரி, எது தவறு என்பது பற்றி குரல் கொடுக்க நீங்கள் தயங்கியதே இல்லை.

    இது உங்கள் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. ஆனாலும், அரசின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டும் வலிமையாக இருந்தீர்கள். அது உங்களை மிகப்பெரிய உதாரணமாக்குகிறது.

    1920-களில் பகத்சிங் செய்ததற்கு ஒப்பானது நீங்கள் செய்திருக்கும் காரியம். பிரபலமாக இருந்தால் மட்டுமல்ல, சாதாரண மனிதர் கூட, ஒரு விஷயம் சரியில்லாதபோது அரசாங்கத்துக்கு எதிராகப் பேச இது ஒரு உதாரணமாக இருக்கும்.

    உங்களுக்கு என் வாழ்த்துகள், தலைவணங்குகிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்".

    இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.
    ×