என் மலர்
சினிமா செய்திகள்
ஆயிரம் பேர் இருந்தாலும் கட்டிப்போட்டு சிரிக்க வைப்பார் என்று வடிவேலு பாலாஜி இறப்பிற்கு ரோபோ சங்கர் உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. வடிவேலு மாதிரி கெட்டப் போட்டு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்ததால் ‘வடிவேல் பாலாஜி’ என்று அழைக்கப்பட்டார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேல் பாலாஜிக்கு அவருடைய கை, கால்கள் செயலிழந்தன. இதனிடையே பணவசதி இல்லாத காரணத்தால் அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி வடிவேல் பாலாஜி மரணமடைந்தார். 42 வயதாகும் அவருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். வடிவேல் பாலாஜியின் மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரோபோ சங்கர், வடிவேலு பாலாஜி மரணம் குறித்து வெளியிட்டிருக்கும் வீடியோவில், “என்னுடன் 19 ஆண்டுகள் பயணித்த கலைஞன். சின்னத்திரையில் முக்கியமான கலைஞன். வடிவேல் பாலாஜி மரணமடைந்த செய்தியைக் கேட்டு எனக்கு பேச்சு வரவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் மேடையில் ஒரே ஆளாக அனைவரையும் கட்டிப்போட்டு சிரிக்க வைக்கக் கூடிய ஒரு அற்புதமான கலைஞன். மரணம் இப்படியெல்லாம் வருமா என்பதை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது.

10 நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது என் மனைவி உள்ளிட்ட நண்பர்கள் சென்று நலம் விசாரித்து திரும்ப வந்துவிடுவாய் நண்பா என்று கூறிவிட்டு வந்தார்கள். அடுத்த 10 நாட்களில் இப்படி ஒரு செய்தியைக் கேட்கும் போது என்னால் தாங்க முடியவில்லை. இந்த மாதிரி நேரத்தில் தான் கடவுள் மீது கொஞ்சம் வெறுப்பு வருகிறது. நல்ல கலைஞனுக்குக் கூட இப்படி ஒரு சாவைக் கொடுப்பதா என்று. வடிவேல் பாலாஜியின் ஆன்மா சாந்தியடைய எல்லோரும் பிரார்த்திப்போம்” என்று கூறியுள்ளார்.
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலம் அறிமுகமான மேகா ஆகாஷ் தற்போது பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
சினிமாவில் அறிமுகமான குறைந்த காலத்தில், மிகப்பெரும் வரவேற்பு பெற்று, ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுபவர் மேகா ஆகாஷ். தமிழின் மிக முக்கிய ஆளுமைகளுடன் இணைந்து நடித்திருக்கும் மேகா ஆகாஷ் இளமை பொங்கும் திறமையுடன் தரமான படங்களை தந்து வரும் அசோக் செல்வனின் அடுத்த காமெடி, டிராமா படத்தில் நாயகியாக இணைந்து நடிக்கவிருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இயக்குநர் சுசீந்தரனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அறிமுக இயக்குநர் ஸ்வாதினி எழுதி இயக்குகிறார். கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ஜே.செல்வகுமார் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.

அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இப்படத்தின் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.
நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஊட்டச்சத்து நிபுணராகவும், தமிழ் மகளாகவும் அதை எதிர்க்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
சட்டசபை தேர்தலுக்காக வட இந்தியா பாணியில் ரத யாத்திரை நடத்துவதற்கு தமிழக பாஜக தலைவர் எல். முருகன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் ரத யாத்திரை அனுமதிக்கக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் "கொரோனா நேரத்தில் தமிழ்நாட்டில் ரத யாத்திரை நடந்தால் மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புகள் இருக்கிறது. கொரோனா நேரத்தில் ரத யாத்திரை அனுமதிப்பது நியாயம் கிடையாது. தமிழ் மக்களின் உடல் நலத்தின் மீதும் உயிர் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும், தமிழ் மகளாகவும் ரத யாத்திரை எதிர்க்கிறேன். மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறை மக்களின் உயிர் மீதும் உடல் நலத்தின் இருக்கிறது மீதும் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திவ்யா சத்யராஜ் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். இவர் கொரோனா நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க "மகிழ்மதி" என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலா அரன் இயக்கத்தில் அறிமுக நாயகன் நிஷாந்த் நடிக்கும் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தின் முன்னோட்டம்.
ஹெட் மீடியா ஒர்க்ஸ் சார்பாக விக்னேஷ் செல்வராஜ் தயாரிப்பில் பாலா அரனின் இயக்கத்தில், அறிமுக நாயகன் நிஷாந்த் நடிக்கும் ஒரு டார்க் காமெடி படம்‘பன்றிக்கு நன்றி சொல்லி’. முழுக்க முழுக்க நகைச்சுவையோடு ஜனரஞ்சகமாக தற்கால சூழலுக்கு ஏற்ற வகையில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் பாலா அரன். முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு இப்படத்தை எடுத்துள்ளனர்.
இப்படத்திற்கு விக்னேஷ் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய, சுரேன் விகாஷ் இசை அமைத்திருக்கிறார். படத்தொகுப்பு ராம்-சதீஷ் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் எடிட்டிங்கில் ஆயிரம் பொற்காசுகள் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஓம் பிலிம்ஸ் மற்றும் ஸ்ரீ பிலிம்ஸ் வெளியிடுகிறது.

இத்திரைப்படத்தின் கதைக்களம் தமிழ் திரையுலகில் அரிதான புதையல் வேட்டையை மையமாக கொண்டது. பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சிலையை, தேடிச் செல்லும் பயணமே இப்படத்தின் கதை. பலர் இந்த சிலையை தேடிக் கொண்டிருக்க, அது குறித்த ஒரு முக்கிய குறிப்பு நாயகனை வந்தடைகிறது. இதை தெரிந்து கொண்ட இருவர், நாயகனை துரத்த, சுவராசியமான பல திருப்பங்களுக்கு பின்னர் அவர்கள் அந்த சிலையை கண்டுபிடித்தார்களா, இல்லையா என்பதே இப்படத்தின் கதை.
சமூக வலைதளத்தில் தன்னை பற்றி அவதூறு கருத்துகளை பதிவிட்டவர்களுக்கு நடிகை ரித்திகா சிங் பதிலடி கொடுத்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே வேடம் என்பதால் கனகச்சிதமாக பொருந்தினார். இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம், பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். அடுத்ததாக தமிழில், அருண் விஜய்யின் பாக்சர், அரவிந்த் சாமியின் வணங்காமுடி போன்ற படங்களில் அவர் நடிக்கிறார்.
இதனிடையே நடிகை ரித்திகா சிங், மேக்கப் இன்றி இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில் அவருக்கு முகப்பரு இருப்பதை பார்த்து சிலர் எதிர்மறையான கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை ரித்திகா சிங் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “என் முகத்தில் இருக்கும் பருக்கள் பற்றி யாராவது ஏன் கருத்து தெரிவிக்க வேண்டும். எங்களுக்கு பருக்கள் இருப்பது எங்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறீர்களா? எங்கள் முகத்தில் உள்ள கறைகளை எங்களால் பார்க்க முடியாது என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக, எங்களுக்கு தெரியும்.
ஆனால் நாங்கள் அவற்றைப் புறக்கணித்துவிட்டு, சமூக வலைதளங்களில் உண்மையான நபர்களாக இருக்க பார்க்கிறோம். அது கைதட்டலுக்கு தகுதியானது என்று நான் நினைக்கிறேன். உண்மையிலேயே சில கருத்துக்கள் என்னை மிகவும் புண்படுத்தின. சமூக வலைதளங்களில் எதிர்மறையான கருத்துக்களை பதிவிடுவதை நிறுத்துங்கள்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 45.
நடிகர் வடிவேல் பாலாஜி 15 நாட்களுக்கு முன்னர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இரு கைகளும் வாதத்தினால் முடங்கியதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர் சிகிச்சைக்குப் பின்னர் போதிய வசதியில்லாததால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வடிவேல் பாலாஜி சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
45 வயதான நடிகர் வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவரின் திடீர் மறைவு திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
2020-ம் ஆண்டு எந்த படமும் ஒப்பந்தம் செய்யவில்லை என பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித், இவர் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியில் நிற்கிறது. எஞ்சியுள்ள படப்பிடிப்பை அடுத்த ஆண்டு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அஜித்தின் 61 வது படம் குறித்து அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
அந்தவகையில் சமீபத்தில், பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம் அஜித்தின் 61-வது படத்தை தயாரிக்க உள்ளதாக செய்திகள் வலம்வந்தன.

இந்நிலையில், அதுகுறித்து ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: “சில போலி செய்திகள் பரவி வருகின்றன. அதனால் ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் இதனை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் 2020-ம் ஆண்டு எந்த படமும் ஒப்பந்தம் செய்யவில்லை. நாங்கள் யாரையும் சந்திக்கவில்லை. எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அடுத்த படத்திற்காக காத்திருக்கிறோம்”. எனக் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பல்வேறு வெற்றி படங்களை கொடுத்துள்ள இயக்குனர் சசி, அடுத்ததாக இயக்கும் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு முன் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியாலும், அதன் பின் நடித்த பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்', தாராள பிரபு போன்ற படங்கள் மூலம் பிரபலம் ஆனவர் ஹரீஷ் கல்யாண். வித்யாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளதை உறுதிப்படுத்தி உள்ளார்.

ரோஜாக்கூட்டம், பூ, பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் சசி இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். இதுகுறித்து சமூக வலைதள பக்கத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் கூறியதாவது: ‘உங்களது அடுத்த படத்தில் நடிக்க இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். படப்பிடிப்புக்கான நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கி உள்ளாராம்.
சென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். பின்னர் தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

அந்த விருப்பத்தை நான் சினிமாவோடு விட்டு விடாமல் பெண்களுக்கான உடை வடிவமைப்பாளராக மாறி பேஷன் டிசைன் நிறுவனம் ஒன்று தொடங்கி உள்ளேன். இது எனது கனவு. சில மாதங்கள் முயற்சி செய்து இப்போதுதான் அதனை நிறைவேற்றி உள்ளேன். பேஷன் துறையில் எனக்கு இருக்கும் காதல், மோகத்துக்கு இந்த தொழில் உதாரணமாக இருக்கும். நடிகையாகும் முன்பே பேஷன் துறையில் ஆர்வம் இருந்தது. தொழில் தொடங்கி இருக்கும் சந்தோஷத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.” இவ்வாறு சமந்தா கூறியுள்ளார்.
திருமணமான பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தா, தற்போது தொழிலதிபராக மாறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “எனக்கு ஸ்டைலான ஆடைகளை உடுத்த மிகவும் பிடிக்கும். ரசிகர்கள் ஸ்டைல் நடிகை என்றால் சமந்தாவை சொல்லலாம் என்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே உடை விஷயத்தில் பிரத்யேக முக்கியத்துவம் கொடுக்க காரணம் பேஷன் மீது எனக்கு இருக்கும் இஷ்டம்.

அந்த விருப்பத்தை நான் சினிமாவோடு விட்டு விடாமல் பெண்களுக்கான உடை வடிவமைப்பாளராக மாறி பேஷன் டிசைன் நிறுவனம் ஒன்று தொடங்கி உள்ளேன். இது எனது கனவு. சில மாதங்கள் முயற்சி செய்து இப்போதுதான் அதனை நிறைவேற்றி உள்ளேன். பேஷன் துறையில் எனக்கு இருக்கும் காதல், மோகத்துக்கு இந்த தொழில் உதாரணமாக இருக்கும். நடிகையாகும் முன்பே பேஷன் துறையில் ஆர்வம் இருந்தது. தொழில் தொடங்கி இருக்கும் சந்தோஷத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.” இவ்வாறு சமந்தா கூறியுள்ளார்.
காதலித்தை பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட நடிகர் ஆரவ், திருமண விழாவில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார். தற்போது ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார்.
ஆரவ்வும், நடிகை ராஹியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன்அவர்களது திருமணம் கடந்த செப்டம்பர் 6-ந் தேதி நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இந்நிலையில், திருமணத்தன்று நடைபெற்ற நடன நிகழ்வில் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆரவ் நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த மருத்துவம்தான் கொரோனா தொற்றில் இருந்து நான் மீளக் காரணம் என்று இயக்குனர் வ.கௌதமன் கூறியிருக்கிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.
அதுபோல் நடிகை ஜெனிலியாவும் தனக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், தற்போது அதிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் கூறினார். பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மீண்டிருக்கிறார். நுரையீரல் பிரச்சனை காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் வ.கௌதமன் கொரோனா தொற்றில் இருந்து முழுவதுமாக மீண்டு விட்டேன் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘கொரோன தொற்றுக்காக எழுபது சதவிகிதம் சித்த மருத்துவத்தையும் முப்பது சதவிகித அலோபதி (ஆங்கில) மருத்துவத்தையும் எடுத்துக்கொண்டேன். முழுவதுமாக கொரோனாவிலிருந்து நான் மீள காரணமாக அமைந்தது முதலில் சித்த மருத்துவம்தான். பாசத்திற்குரிய சித்த மருத்துவர்கள் எடுத்துக்கொண்ட சிரத்தைப் போலவே எனது அன்பிற்குரிய அலோபதி மருத்துவ சகோதரர்களும் என் மீது காட்டிய பாசத்தை இந்நேரத்தில் மறக்கவே முடியாது’ என்று கூறினார்.
இயக்குனர் வ.கௌதமன் தமிழில் கனவே கலையாதே, மகிழ்ச்சி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, சாந்தனு, மகேந்திரன், அர்ஜூன் தாஸ், மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, ரம்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக திரையரங்கங்கள் மூடப்பட்டிருப்பதால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.
இந்த நிலையில் தனது ரசிகர்களின் ஏமாற்றத்தை தற்போது ஈடு செய்யும் வகையில் நடிகர் விஜய் திடீர் முடிவு ஒன்றை எடுத்திருக்கிறாராம். மாஸ்டர் திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்திருந்த தனது ரசிகர்களுக்கு வரவிருக்கும் 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று மாஸ்டர் திரைப்படத்தை வெளியிடவும், அதே வருடம் தீபாவளிக்கு ‘தளபதி 65’ படத்தை வெளியிட வேண்டும் என்றும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே ஆண்டில் இரண்டு படங்கள் வெளியாவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், இந்த வருடம் தியேட்டர்கள் திறந்தவுடன் வெளியாகும் முதல் படம் மாஸ்டர் என்று அனைவரும் காத்திருக்கும் நிலையில், விஜய்யின் முடிவு பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






