என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சுஷாந்த் சிங் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவர் தான் ரியாவுக்கு பதில் சிறையில் இருந்திருப்பார் என நடிகை டாப்சி டுவிட் செய்துள்ளார்.
    பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சுஷாந்த் சிங் மரண வழக்கு தற்போது பாலிவுட்டில் போதைப் பொருள் வழக்காக மாறி இருக்கிறது. நடிகை ரியா சக்ரபோர்த்தியின் சகோதரர் சோவிக் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு காரணமாக கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து 3 நாட்கள் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து நேற்று நடிகை ரியாவும் கைது செய்யப்பட்டார்.

    டாப்சியின் டுவிட்டர் பதிவு

    ரியாவின் கைது பற்றி பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை டாப்சி போட்ட டுவிட் சர்ச்சையை கிளப்பி உள்ளது. நடிகை ரியா தான் சுஷாந்துக்கு தெரியாமல் போதைப் பொருளை, தேனீரியில் கலந்து கொடுத்தார் என்ற தகவல்கள் சமீபத்தில் கசிந்திருந்தன. ஆனால், அதனை மறுத்துள்ள நடிகை டாப்சி, இந்நேரம் சுஷாந்த் சிங் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவர் தான் சிறையில் இருந்திருப்பார் என பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார். இதனால் சுஷாந்த்தின் ரசிகர்கள் பலரும் டாப்சியை திட்டி பதிவிட்டு வருகின்றனர்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், அடுத்ததாக நடிக்கும் படத்தை பிரபல பெண் இயக்குனர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    நடிகர் அஜித்தின் 60 வது படம் வலிமை. இப்படத்தை வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. இதனிடையே அஜித்தின் 61 வது படத்தை இயக்கப்போவது யார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

    இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே இறுதிச்சுற்று படத்தை இயக்கி உள்ளார். மேலும் சூர்யாவை வைத்து இவர் இயக்கி இருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் வருகிற அக்டோபர் 30-ந் தேதி ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது. விஜய்யின் ‘பிகில்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம் தான் அஜித்தின் 61-வது படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    சுதா கொங்கரா

    அஜித் இதுவரை இரண்டு முறை பெண் இயக்குனர்கள் இயக்கிய படத்தில் நடித்துள்ளார். அஜித்தின் உயிரோடு உயிராக படத்தை சுஷ்மா அஹுஜாவும், இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தை கவுரி ஷிண்டேவும் இயக்கி இருந்தனர். அஜித்தின் 61வது படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    தன் படத்தை நிராகரித்து விட்டதாக பி.சி. ஸ்ரீராம் டுவிட் செய்த நிலையில், நடிகை கங்கனா ரணாவத் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
    இந்திய சினிமா உலகில் மிகவும் பிரபலமானவர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழில் பல முன்னணி இயக்குனர்கள் படங்களில் பணியாற்றி இருக்கிறார். 

    அவர் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவு மிகவும் வைரலாக பரவியது.  அந்த பதிவில், ‘கங்கனா ரணாவத் கதாநாயகியாக நடிக்கும் படத்தை நான் நிராகரித்து விட்டேன். எனது நிலைப்பாட்டை தயாரிப்பாளர்களுக்கு விளக்கினேன். அவர்களும் புரிந்து கொண்டார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்’ என்று கூறியிருந்தார்.

    கங்கனாவின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், பி.சி.ஸ்ரீராம் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக கங்கனா ரணாவத் கூறியிருப்பதாவது: "உங்களைப் போன்ற லெஜண்டுடன் பணிபுரியும் வாய்ப்பை நான் தவறவிட்டுவிட்டேன் சார். இது முற்றிலும் என்னுடைய இழப்புதான். என்னைப் பற்றி உங்களுக்கு சங்கடமான எண்ணம் ஏற்பட என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் சரியான வழியைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதில் மகிழ்ச்சி. உங்களுக்கு வாழ்த்துகள்" என கங்கனா தெரிவித்துள்ளார்.
    ஹலிதா ஷமீம் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகிய ‘சில்லுக்கருப்பட்டி’ சர்வதேச பட விழாவில் விருது வென்றுள்ளது.
    ஹலிதா ஷமீம் இயக்கத்தில் கடந்தாண்டு இறுதியில் வெளியான படம் ‘சில்லுக்கருப்பட்டி’. இது நகரப் பின்னணியில் நான்கு அழகான குறுங்கதைகளைப் பற்றிக் கூறும் ஆந்தாலஜி வகை திரைப்படமாகும். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

    இத்திரைப்படத்தை டிவைன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரித்திருந்தார். 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா வெளியிட்டார். சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜீன், மணிகண்டன், நிவேதிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். 

    ஹலிதாவின் சமூக வலைதள பதிவு

    இந்நிலையில், இப்படம் டொரண்டோவில் நடைபெறும் தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது. இதனை அப்படத்தின் இயக்குனர் ஹலிதா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். திரைப்பட விழாக்களில் இருந்து இதுபோன்ற விருதுகள் கிடைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

    இப்படம், கடந்தாண்டு சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் சிறந்த திரைப்படத்துக்கான 2-வது பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.
    சிவகார்த்திகேயனின் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
    கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், வரலட்சுமி சரத்குமாரின் டேனி, வைபவ் நடித்த லாக்கப் உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாகின. அடுத்ததாக சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் வருகிற அக்டோபர் 30-ந்தேதி ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். 

    இந்த நிலையில் மேலும் சில படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளன. அந்த வகையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    சிவகார்த்திகேயன்

    டாக்டர் படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். கே.ஜெ.ஆர். ஸ்டுடியோசுடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்சன்ஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா நடித்துள்ளார்.
    பிரபல கிரிமினல் வழக்கறிஞரும், நடிகருமான துரைப்பாண்டியன் காலமானார்.
    ‘மௌனம் பேசியதே’, ‘ரன்’, ‘ஜெமினி’ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் துரைப்பாண்டியன்

    துரைப்பாண்டியன் குற்றவியல் தன்மையுடைய வழக்குகளில் ஆஜராகும் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ஆவார். மேலும் அதிமுக வழக்கறிஞர் பிரிவிலும் இருக்கிறார். 

    நுரையீரல் பிரச்சனை மற்றும் நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த துரைப்பாண்டியன் நெஞ்சுவலி காரணமாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். 

    இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரைப்பாண்டியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
    இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2ம் பாகத்திற்கு என்ன தலைப்பு வைத்திருக்கிறார்கள் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
    சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடிப்பில் 2018ம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த இந்த படம், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில், சந்தோஷ் பி.ஜெயக்குமார் மீண்டும் ஒரு அடல்ட் காமெடி ஹாரர் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இருட்டு அறையில் முரட்டு குத்து 2ம் பாகம் என்று கூறப்பட்டது. இருப்பினும் இது அந்த படத்தின் தொடர்ச்சியாக இருக்காது என்றும் இது வேறு கதை எனவும் இயக்குனர் தெரிவித்து இருந்தார். 

    இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்

    இந்நிலையில், இப்படத்திற்கு ‘இரண்டாம் குத்து’ என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மூலம் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். பிக்பாஸ் டேனியல், சாம்ஸ், ஷாலு ஷம்மு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். 
    இந்த வருஷம் பிக்பாஸ் நிகழ்ச்சி உங்களால் பண்ண முடியாது என்று நடிகர் கமலுக்கு நடிகை மீரா மிதுன் வீடியோ மூலம் சவால் விடுத்துள்ளார்.
    தமிழில் சில படங்களில் நடித்த மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். அதன்பின் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் விஜய், சூர்யா குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருந்தார்.

    தற்போது கமலை பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘கல்யாண வீட்டில் சீப்பை ஒளித்து வைத்து கொண்டால் கல்யாணமே நடக்காது என்பது போல் என்னுடைய ஒரே ஒரு வீடியோ காட்சியை மறைத்துவிட்டால் என்னுடைய தொழிலையே நிறுத்திவிடலாம் என்று கமல்ஹாசன் அவர்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் இதே போல் செய்து கொண்டிருந்தால் நானும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வரும்.

    கமல் - மீரா மிதுன்

    கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது நீங்கள் கொடுத்த தீர்ப்பு மிகவும் தவறு. ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்த போது ஆணாகிய நீங்கள் இன்னொரு ஆணுக்கு ஆதரவாக இருந்ததை ஏற்று கொள்ளவே முடியாது. நீங்கள் என்னுடைய தொழிலை முடக்க முயற்சித்தால் நானும் உங்கள் தொழிலையும் முடக்குவேன். 

    இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியை உங்களால் பண்ணவே முடியாது. நான் குறிப்பிடும் வீடியோ என்னுடைய கைக்கு வரும் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பையும் நடத்த விடமாட்டேன். நீதிமன்றத்தில் தடை வாங்குவேன்’ என்று மீராமிதுன் கூறியிருக்கிறார்.
    அந்த நடிகை என்பதால் படத்தில் இருந்து வெளியேறி விட்டேன் என்று பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருக்கிறார்.
    இந்திய சினிமா உலகில் மிகவும் பிரபலமானவர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழில் பல முன்னணி இயக்குனர்கள் படங்களில் பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில், இவர் அந்த நடிகை என்பதால் படத்தில் இருந்து வெளியேறி விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

    இதுதொடர்பாக அவருடைய பதிவில், ‘கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்கும் படத்தை நான் நிராகரித்து விட்டேன். எனது நிலைப்பாட்டை தயாரிப்பாளர்களுக்கு விளக்கினேன். அவர்களும் புரிந்து கொண்டார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்’ என்று கூறியிருக்கிறார்.

    கங்கனா ரணாவத் - பி.சி.ஸ்ரீராம்

    பிரபல நடிகையான கங்கனா ரணாவத், சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தியில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம், போதை பொருள் புழக்கம் உள்ளது என்றெல்லாம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். மராட்டிய அரசியல்வாதிகளும் மும்பை போலீசாரும் வாரிசு நடிகர்களுக்கு ஆதரவாக இருப்பதாக சாடினார். இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பி வருகிறது.
    பட வாய்ப்பு வந்தால் பிரபலங்கள் டி.சர்ட்டை கழட்டி விடுவார்கள்.. ஜாக்கிரதை என்று பிரபல நடிகை ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    இந்தி தெரியாததால் டெல்லி விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டதாக இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி ஒன்றில் தெரிவித்தது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இந்தி எப்படி இந்த நாட்டின் தாய் மொழியாகும் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் #இந்தி_தெரியாது_போடா என்ற ஹேஷ்டேக்கையும், நான் தமிழ் பேசும் இந்தியன் என்ற ஹேஷ்டேக்கையும் டிரெண்டாக்கி வருகின்றனர். 

    இந்த ஹேஷ்டேக்கில், பலரும் தங்கள் கருத்தையும், விமர்சனங்களையும் முன்வைத்தவண்ணம் உள்ளனர். திரை உலகில் பலர் இந்திக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி, இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் கருணாகரன் ஆகியோர் இந்த டிரெண்டில் இறங்கி உள்ளனர். 

    ஆர்த்தியின் பதிவு

    தற்போது காமெடி நடிகையும், பிக்பாஸ் போட்டியில் கலந்துக் கொண்டவருமான ஆர்த்தி, ‘நம்ம தமிழ் -தாய் மாதிரி நமக்கு உயிர்மூச்சு. பிறருக்கு அவங்க மொழி அப்படிதான்... ஆதி மொழி தமிழிலிருந்து தான் எல்லா மொழியும் பிறந்திருக்கு.. அதனால பழிப்பது தவறு, விரும்பினால் படிப்போம்... இந்தி பட வாய்ப்பு வந்தால் t.Shirt-யை கழட்டிவிடுவார்கள் பிரபலங்கள் ஜாக்கிரதை’ என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் 2 கோடி ரூபாய் கொடுத்து பல ஏக்கர் பரப்பளவில் இருக்கும் வனப்பகுதியை தத்தெடுத்து இருக்கிறார்.
    ஆந்திர மாநிலம் டண்டிகா அருகில் சுமார் 1650 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் காஜிபள்ளி நகர்ப்புற வன மேம்பாட்டுப் பணிகளுக்காக நடிகர் பிரபாஸ் இரண்டு கோடி ரூபாயை வன அலுவர்களிடம் வழங்கினார். ‘பசுமை இந்தியா சவால்’ திட்டத்தின் கீழ் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் உருவாக்கப்பட இருக்கும் சுற்றுச் சூழல் பூங்காவுக்கு பிரபாஸின் தந்தையின் பெயரான யூ.வி.எஸ்.ராஜு அவர்களின் பெயர் சூட்டப்படவுள்ளது.

    பிரபாஸ் தத்தெடுத்திருக்கும் இந்த வனப்பகுதி, ஐதராபாத் அவுட்டர் ரிங் சாலையில், ஐதராபாத்துக்கு 20 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது. இதற்கான அடிக்கல்லை, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.சந்தோஷ்குமார், தெலங்கானா மாநில சட்டம் மற்றும் எண்டோவ்ன்மென்ட் அமைச்சர் இந்திராகரன் ரெட்டி அல்லோலா ஆகியோருடன் பிரபாஸ் நட்டார்.

    நிகழ்ச்சிக்குப் பின்னர் அந்த வனப் பகுதியை, தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கோபுரம் ஒன்றிலிருந்து மூவரும் பார்வையிட்டனர். பின்னர் வனப் பகுதியில் மரக் கன்றுகளும் நட்டனர். இந்த வனப்பகுதியில் ஒரு சிறுபகுதி நகர்ப்புற வனப் பூங்காவாக மாற்றப்படும் எனவும், மூன்று தொகுதிகளாக விரிந்திருக்கும் எஞ்சிய பகுதிகள் அரியவகை மூலிகைகள் மற்றும் தவரங்களைக் கொண்டன என்றும் அவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக இருக்கும் எனவும் வன அலுவலர்கள் தெரிவித்தனர்.

    பிரபாஸ்

    இதுகுறித்து பிரபாஸ் கூறுகையில், தமது நண்பரும் மாநிலங்களவை உறுப்பினருமான, மாண்புமிகு ஜோகினபள்ளி சந்தோஷ்குமாரின் செயல்பாடுகள் இந்த வனப் பகுதியைத் தத்தெடுக்கத் தமக்கு உத்வேகம் அளித்ததாகவும் வருங்காலங்களில் பணிகளின் முன்னேற்றத்தைப் பொருத்துக் கூடுதல் நிதியைத் தவணைமுறையில் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். ஐதராபாத் நகரின் நுரையீரல் பரப்பை அதிகரிக்கும் வண்ணம் வன மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுமாறு வன அலுவலர்களை பிரபாஸ் கேட்டுக்கொண்டார். மாநிலங்களவை உறுப்பினர், அமைச்சர் மற்றும் வன அலுவலர்களுக்கு பிரபாஸ் நன்றி தெரிவித்தார்.
    அறிமுக இயக்குனர் ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், ஜானவிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ஆயிரம் பொற்காசுகள் படத்தின் முன்னோட்டம்.
    ஈரமான ரோஜாவே, அலெக்சாண்டர் உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் கேயார். தயாரிப்பாளராகவும், வினியோகஸ்தராகவும் அனுபவம் கொண்ட கேயார் தனது கேஆர் இன்போடெயின்மெண்ட் சார்பில் அடுத்து வெளியிடும் படம் ஆயிரம் பொற்காசுகள். 

    அறிமுக இயக்குனர் ரவி முருகையா இயக்கத்தில் “மைனா” விதார்த், “பருத்தி வீரன்” சரவணன், ஜானவிகா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கிறது. மேலும் இப்படத்தில் வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், செம்மலர் அன்னம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜோஹன் இசையமைக்க, பானுமுருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

    ஆயிரம் பொற்காசுகள் படக்குழு

    படம் பற்றி கேயார் கூறும்போது ‘இது முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாக கொண்ட கதை. தொடக்கம் முதல் கடைசி காட்சி வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். கழிப்பறை தோண்ட சென்ற இடத்தில் விதார்த், சரவணன் கூட்டணிக்கு ஒரு புதையல் கிடைக்கிறது. அந்த செய்தி ஊர் முழுக்க பரவி ஊரே பங்கு கேட்கிறது. அதன் பிறகு என்ன ஆகிறது என்பதே கதை. கிராமத்து மக்களின் பசுமையான வாழ்வியலையும், அன்றாட நிகழ்வுகளையும் பிண்ணனியாக கொண்டு உருவாகியுள்ளது என்றார்.
    ×