என் மலர்
சினிமா செய்திகள்
போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘கன்னி மாடம்’ படத்துக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
‘ஈரநிலம்’ படத்தில் அறிமுகமாகி 60-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்திருப்பவர், போஸ் வெங்கட். இவர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘கன்னி மாடம்’ படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சாதி மற்றும் ஆணவக்கொலைகளை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ‘கன்னி மாடம்’ படம் டொரண்டோவில் நடைபெற உள்ள தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்படுள்ளது. இதனை கன்னிமாடம் படக்குழு உறுதிப்படுத்தி உள்ளது. தமிழ் சர்வதேச திரைப்பட விழா செப்டம்பர் 11 முதல் 13 வரை டொரண்டோவில் நடைபெறவுள்ளது. போஸ் வெங்கட் இயக்கிய முதல் படத்துக்கே சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை சஞ்சனா கல்ராணியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் 15 முன்னணி நடிகர்கள், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்துவதாகவும், பலருக்கு போதை பொருள் விற்பனை செய்யும் மாபியா கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் புகார் தெரிவித்தார்.
இது தொடர்பாக 2 நாட்கள் இந்திரஜித் லிங்கேஷிடம் மத்திய குற்றப்பிரிவு விசாரணை நடத்தியதை தொடர்ந்து கன்னட திரை உலகின் பிரபல நடிகை ராகிணி திவேதியின் நண்பரும், அரசு ஊழியருமான ரவி சங்கரை கைது செய்தனர். இதையடுத்து நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு நேரில் ஆஜராகும்படி போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், 2 பேரும் ஆஜராகவில்லை. இதையடுத்து கடந்த 4-ந்தேதி ராகினி திவேதியை அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், பெங்களுருவில் உள்ள நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். கன்னட திரையுலகில் அடுத்தடுத்து நடிகைகள் போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகை ராகினி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான நடிகை சஞ்சனா கல்ராணி பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஆலோசனை நடந்தப்படுவதாக கூறப்படுகிறது.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் கடந்த 5 -ந் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13-ந் தேதி அன்று இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர்காக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அவரது மகன் எஸ்.பி.பி. சரணும் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.

எஸ்.பி.பி. சரண் நேற்று மாலை வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: “ஒரு நல்ல செய்திக்காகக் காத்திருந்தோம். செயற்கை சுவாச உதவியை நீக்கும் அளவுக்கு அப்பாவின் நுரையீரல் செயல்பாடு முன்னேறும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்பா அந்த நிலைக்கு இன்னும் செல்ல வில்லை.
ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், அப்பாவுக்கு கொரோனா தொற்று இல்லை. இதற்கு முன், அப்பாவுக்குத் தொற்று இருக்கிறது, இல்லை என்பது முக்கியம் இல்லை என்று சொல்லியிருந்தேன். ஏனென்றால் நுரையீரல் சீக்கிரம் குணமாகும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். அவை குணமாகி வருகின்றன. ஆனால் அதற்குச் சற்று நேரம் பிடிக்கிறது” என கூறி இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வெளியான தகவல்படி எஸ்.பி.பி.க்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஆலோசனை நடந்தப்படுவதாக கூறப்படுகிறது.
தமிழ் பட நடிகை ஒருவர் துளசியுடன் கஞ்சாவை ஒப்பிட்டதால் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு எதிராக கண்டன பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
திரையுலகில் போதை பொருட்கள் தாராளமாக புழங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகளை பயன்படுத்தியதாக பிரபல கன்னட நடிகை ராகிணி திவேதி கைது செய்யப்பட்டு உள்ளார். இந்தி பட உலகையும் போதை பொருள் விவகாரம் உலுக்கி வருகிறது. இந்தி நடிகை ரியா சக்கரவர்த்திக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ரியாவின் சகோதரர் கைதாகி உள்ளார்.
இந்த நிலையில் சுமிதா என்ற பெயரில் படங்களில் நடித்து வரும் கன்னட நடிகை நிவேதிதா கஞ்சாவுக்கு ஆதரவாக பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார். இவர் தமிழில் கிஷோருடன் போர்க்களம், நடிகர் அபிஷேக் இயக்கிய கதை, பெப்சி விஜயன் இயக்கிய மார்க்கண்டேயன், சித்திரம் பேசுதடி 2-ம் பாகம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அவர் கூறும்போது, “துளசியைப்போல் கஞ்சா மருத்துவ குணம் கொண்டது. இதனை தடை செய்வதற்கு முன்பு பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். இதை தடை செய்ததற்கு பின்னால் பெரிய சதி இருக்கிறது. 40 நாடுகளில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக பயன்படுத்துகிறார்கள். எனவே இதனை சட்டப்பூர்வமாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் சுமிதாவுக்கு எதிராக பலரும் கண்டன பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர்.
தெலுங்கு நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி மாரடைப்பால் காலமானார்.
அமராவதி:
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி. (74)
வில்லன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் என அனைத்து கதாபாத்திரங்களிலும் முத்திரை பதித்துள்ளார்.
இவர் தமிழில் ஆறு, உத்தமபுத்திரன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை அவர் மாரடைப்பால் காலமானார். அவரது இறப்பு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
போதை பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி வீட்டில் அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர்.
பெங்களூரு:
கன்னட திரை உலகிலும், பெங்களூருவில் முக்கியமான விருந்து நிகழ்ச்சிகளிலும் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்த போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ராகிணி திவேதி, அவரது நண்பர் ரவி சங்கர், நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த வீரேன் கண்ணா, ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த லோயம் பெப்பர் சம்பா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பெங்களுருவில் நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழில் பல படங்களில் நடித்த நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் பிக்பாஸ் சீசன் 4-ல் பிரபல நடிகையின் சகோதரர் கலந்து கொண்டிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் பிக்பாஸ் குறித்த தகவல்கள் அடிக்கடி வைரலாகி வருகிறது. தமிழில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4-ன் 2வது புரமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இரண்டாவது புரமோவிற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க, நடன இயக்குநரும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளருமான சாண்டி நடனம் அமைத்தார். இதனையடுத்து தமிழ் பிக்பாஸில் கலந்து கொள்பவர்கள் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் அதிகம் காணமுடிகிறது.

இந்நிலையில் தெலுங்கில் நாகர்ஜூனா தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று முதல் துவங்கி உள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் ரசிகர்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டனர்.
இதில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் நடித்து வரும் சுஜிதா, தனது சகோதரர் சூர்யா கிரண் பிக்பாஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் அவருக்கு வாழ்த்துகளையும் கூறி இருக்கிறார் சுஜிதா.
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி அறிவித்த ரிட்டயர்மென்ட் ஸ்டைலில் நடிகர் கவினும் ரிட்டயர்மெண்ட் அறிவித்து இருக்கிறார்.
பிரபல இந்திய கிரிக்கெட் தோனி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தோனி தனது ஓய்வு முடிவை அறிவிக்கும் போது, ‘Thanks a lot for ur love and support throughout. from 1929 hrs consider me as Retired’ என்ற வாசகங்களுடன் ஒரு வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் தோனியின் அதே ஸ்டைலில் நடிகரும் பிக்பாஸ் போட்டியாளருமான கவின் தனது ரிட்டயர்மென்டை அறிவித்துள்ளார் கவின். அவர் அறிவித்துள்ள ரிட்டயர்மென்ட் பதிவில் Thanks a lot for your love and support throughout. From 20:24 hrs consider me as retired’ என்ற வரிகள் உள்ளன. மேலும் தோனி பதிவு செய்த பாடலையும் பதிவு செய்திருக்கிறார் கவின்.
Thanks a lot for your love and support throughout.
— Kavin (@Kavin_m_0431) September 7, 2020
From 20:24 hrs consider me as retired. pic.twitter.com/YhAQyMRoyH
ஆனால் கவின் சினிமாவிலிருந்தோ அல்லது தொலைக்காட்சியிலிருந்தோ ஓய்வு பெறவில்லை. சமீபத்தில் பப்ஜி விளையாட்டை மத்திய அரசு தடை செய்த நிலையில் பப்ஜி விளையாட்டுக்கு தான் ஓய்வு கொடுத்து விட்டதாக அவர் அறிவித்து உள்ளார். கவினின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
மும்பைக்கு வருகிறேன் முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று கூறிய நடிகை கங்கனா ரணாவத்துக்கு உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அளித்துள்ளது.
சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தியில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம், போதை பொருள் புழக்கம் உள்ளது என்றெல்லாம் நடிகை கங்கனா ரணாவத் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். மராட்டிய அரசியல்வாதிகளும் மும்பை போலீசாரும் வாரிசு நடிகர்களுக்கு ஆதரவாக இருப்பதாக சாடினார். இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பின.
இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது, கங்கனா மராட்டியத்தையும், மும்பை போலீசையும் அவமானப்படுத்தி உள்ளார். பயம் இருந்தால் மும்பைக்கு திரும்ப வரவேண்டாம் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கங்கனா ரணாவத் “நான் மும்பைக்கு வரவேண்டாம் என்று பலரும் என்னை அச்சுறுத்துகிறார்கள். வருகிற செப்டம்பர் 9-ந்தேதி மும்பை வருகிறேன். முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள்” என்று சவால் விடுத்தார்.
இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் தங்கியுள்ள கங்கனாவின் வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அவருக்கு ஒய் பிளஸ் பிரிவு (Y +) பாதுகாப்பு அளிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வனமகன் படம் மூலம் அறிமுகமான சாயிஷா, தற்போது செம்ம குத்து குத்தும் வீடியோ ஒன்றை அவரது கணவர் ஆர்யா வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாயிஷா. அதனைத் தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது ஆர்யாவுடன் டெடி என்ற படத்தில் நடித்துள்ளார்.
நடிகை சாயிஷா, கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தபோது, நடிகர் ஆர்யாவுடன் காதல் மலர்ந்த நிலையில், இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருக்கும் நடிகை சாயிஷா அவ்வப்போது தனது புகைப்படங்கள், நடனமாடும் மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் சாயிஷா தனது கணவர் ஆர்யாவுடன் இணைந்து பாக்சிங் பயிற்சி மேற்கொள்ள தொடங்கியுள்ளார். அதுகுறித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். தற்போது ஆர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு கோச்சிங் கொடுப்பவரை செம்ம குத்து குத்துகிறார் சாயிஷா. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
My partner in action 🥊🥊🥊💪💪💪 @sayyeshaa 😍 pic.twitter.com/th1TuGR5v5
— Arya (@arya_offl) September 7, 2020
கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் குட் நியூஸ் ஒன்றை சொல்லியுள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து தினசரி அப்டேட்டுகளை அவரது மகன் சரண் கொடுத்து வந்தார். ஆனால் கடந்த சில தினங்களாக எஸ்.பி.பி உடல்நிலை குறித்து சரண் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் இருந்தார். திங்கள் கிழமை நல்ல செய்தி வரும் என்று சொல்லியிருந்தார்.
அதன்படி, இன்று எஸ்.பி.பி.சரண் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘கொரோனா பரிசோதனையில் எஸ்.பி.பி.க்கு நெகட்டிவ் என வந்துள்ளது. நுரையீரல் தொற்று குணமடைந்துவருகிறது. தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐபேடில், கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை பார்த்து வருகிறார். பேச நினைப்பதை எழுதி காண்பிக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
எஸ் பி பி யின் உடல் நலம் குறித்து அவரது மகன் விளக்கம்#SPB#SPBalasubrahmanyam#SPBCharanpic.twitter.com/AkqyakFPeI
— Maalai Malar News (@maalaimalar) September 7, 2020
பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட சாண்டி, பிக்பாஸ் 4-வது சீசன் குறித்து வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி தமிழில் இதுவரை 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர்.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா விழிப்புணர்வுடன் கூடிய பிக்பாஸ் 4 புரமோ ஒன்று வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்த புரோமோவின் ஆரம்பத்தில் கமல் நடனம் ஆடியபடி வருவது அட்டகாசமாக இருந்தது.

இந்நிலையில், இந்த வீடியோவில் கமலுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தது, கடந்த சீசனில் போட்டியாளராக இருந்தவரும், முன்னணி நடன இயக்குனருமான சாண்டி என தெரிவந்துள்ளது. கமல்ஹாசனுக்கு நடன அசைவுகளை சொல்லிக்கொடுக்கும் புகைப்படத்தை சாண்டி தனது இன்ஸ்டாமிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.






