என் மலர்tooltip icon

    சினிமா

    ஜென்டில் மேன் பட போஸ்டர், குஞ்சுமோன்
    X
    ஜென்டில் மேன் பட போஸ்டர், குஞ்சுமோன்

    ‘ஜென்டில் மேன்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது

    ‘ஜென்டில் மேன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவித்துள்ளார்.
    இயக்குனர் ஷங்கர் அறிமுகமான படம் ‘ஜென்டில் மேன்’. 1993-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மதுபாலா நடித்திருந்தார். 175 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடிய இப்படம் அந்தாண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. தற்போது சுமார் 27 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    வசந்தகால பறவை, சூரியன், ஜென்டில் மேன், காதலன், ரட்சகன், காதல் தேசம் ஆகிய பிரமாண்டமான படங்களை தயாரித்த கே.டி.குஞ்சுமோன் தான், ‘ஜென்டில் மேன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கிறார். ‘ஜென்டில் மேன்-2’ என்ற பெயரில், படம் தயாராகிறது. 

    குஞ்சுமோன்

    இதுபற்றி அவர் கூறியதாவது: “ஜென்டில் மேன்-2’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. முதல் பாகத்தை விட அதிக செலவில் பிரமாண்டமாக இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. நவீன தொழில்நுட்பத்தில், ஹாலிவுட் தரத்தில், மெகா பட்ஜெட்டில் படம் தயாராகும். படத்தில் பங்குபெறும் நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.” என அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×