என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில், 17-வது போட்டியாளராக பிரபல தொகுப்பாளினி சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்.
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனில் போட்டியாளர்களாக, ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ஆரி அர்ஜுனன், சோம் சேகர், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், 17-வது போட்டியாளராக பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். அவரின் திடீர் என்ட்ரியை பார்த்து உற்சாகமடைந்த மற்ற போட்டியாளர்கள், அவரை கட்டியணைத்து வரவேற்றனர்.

தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் 4 துவக்க நிகழ்ச்சி அன்றே போட்டியாளராக உள்ளே வருவார் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் அர்ச்சனா தொகுப்பாளராக பணிபுரியும் சேனல் நிர்வாகம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என தடை போட்டதால் அப்போது அவர் செல்லவில்லை. தற்போது அந்த பிரச்சனை சுமூகமாக முடிந்துவிட்டதால், தற்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகையாக இருக்கும் எமி ஜாக்சன், கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.
ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து குழந்தை பெற்றுக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வார். குழந்தை பெற்ற பிறகு லேசாக கூடிய உடல் எடையை முற்றிலும் குறைத்து பழைய தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.

இந்நிலையில், ஸ்லிம் லுக்கில் உடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில் இருக்கும் புகைப்படத்தை எமி ஜாக்சன் வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
அந்த உடையில் பார்த்தால் எமி ஜாக்சன் பேண்ட் போட்டிருக்கிறாரா? என பலருக்கும் சந்தேகம் எழுந்திருக்கிறது. அந்த அளவிற்கு உடலை இறுக்கி பிடித்திருக்கும் ஸ்கின் கலர் உடையை அணிந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு படத்தில் முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் அக்ஷரா ஹாசன், பவித்ராவை நம்பி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
அக்ஷரா ஹாசன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’. நடிகர் விஜய் சேதுபதி பர்ஸ்ட் லுக்கை வெளியிட, நடிகை ஸ்ருதி ஹாசன் படத்தின் டீசரை வெளியிட, கமல்ஹாசன் சமீபத்தில் இதன் டிரைலரை வெளியிட்டார்.
வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அக்ஷரா ஹாசன், இப்படம் பற்றி கூறும்போது, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு திரைப்படம் போல் தமிழில் இதுவரை வந்தது இல்லை. இந்தியாவில் முதல் படம். இயக்குனர் ராஜா ராமமூர்த்தி கதை சொல்லும் போது எனக்கு மிகவும் பிடித்தது. என்னால் 100 சதவிகிதம் உழைக்க முடியும் என்ற நம்பிக்கை வந்த பிறகுதான் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்வேன். அதுபோல், இந்த படத்தில் பவித்ரா கதாபாத்திரத்தை நம்பிக்கையுடன் ஏற்றேன். கதை கேட்கும் போது ஆடியன்சாகத்தான் கேட்டேன். நான் ரசித்ததுபோல் நீங்களும் ரசிப்பீர்கள். படக்குழுவினர் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

திரைப்படம் இயக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. விரைவில் இயக்குவேன். அது 2022 ஆம் ஆண்டில் சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்றார்.
இப்படத்தில் அக்ஷரா ஹாசன் நாயகியாக நடிக்க, பிரபல பாடகி உஷா உதூப் அக்ஷரா ஹாசனின் பாட்டியாக நடிக்கிறார். பெண்கள் கூட்டம் மிகுந்திருக்கும் இந்தப்படக்குழுவில் மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ் கலைராணி, ஷாலினி விஜயகுமார், சித்தார்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன் மற்றும் கிரன் கேஷவ் நடிக்கிறார்கள்.
முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க விஜய்சேதுபதிக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி 800 என்ற படத்தை உருவாக்கவுள்ளனர். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும், விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது” என்று கண்டித்தனர்.
நேற்று மோசன் போஸ்டர் வெளியான நிலையில் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வந்தனர். ஒரு பக்கம் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆதரவாக we stand with vijay Sethupathi என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வந்தனர்.

இந்நிலையில், படக்குழுவினர் திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் 800 திரைப்படம் பல்வேறு வகையில் அரசியல் ஆக்கப்பட்டு வருவதை அறிகிறோம். 800 திரைப்படம் முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர, இதில் எந்த வித அரசியலும் கிடையாது. தமிழகத்தில் இருந்து தேயிலைத் தோட்டக் கூலியாளர்களாக இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு சமூகத்தில் இருந்து வந்த முரளிதரன் எப்படி பல தடைகளைத் தாண்டி உலக அளவில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார் என்பது தான் திரைப்படத்தின் கதையம்சம்.
திரைப்படம் இளைய சமுதாயத்துக்கும் வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும் தங்கள் வாழ்க்கை பயணத்தில் எவ்வளவு தடைகள் வந்தாலும் தடைகளை கடந்து சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் படமாக இருக்கும். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராக ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும். இத்திரைப்படத்தில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் விதத்திலான காட்சியமைப்புகள் கிடையாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை அடுத்து முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஆரம்ப பணிகள் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் தற்போது விஜய்யின் வின்டேஜ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தனது தாய் ஷோபாவுடன் தாஜ்மஹால் முன்பு விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதி படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் ஆதரவாக களம் இறங்கி இருக்கிறார்கள்.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி 800 என்ற படத்தை உருவாக்கவுள்ளனர். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும், விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது” என்று கண்டித்தனர்.

நேற்று மோசன் போஸ்டர் வெளியான நிலையில் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வந்தனர்.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக, we stand with vijay Sethupathi என்ற ஹேஷ்டேகை ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.
எம் எஸ் ஸ்ரீபதி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள முத்தையா முரளிதரனின் பயோபிக்கான 800 படத்தின் முன்னோட்டம்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார்.
தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும், மூவி டிரெயின் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளார். படத்தொகுப்பு பணிகளை சிவா நந்தீஸ்வரன் கவனிக்கிறார். இப்படத்தை அடுத்தாண்டு இறுதியில் வெளியிட உள்ளனர்.
3, வேலையில்லா பட்டதாரி, மாரி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த தனுஷ்- அனிருத் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது.
தனுஷ் நடித்த ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதைத் தொடர்ந்து ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாரி’, ‘தங்கமகன்’ ஆகிய தனுஷ் நடித்த படங்களுக்கும், ‘எதிர்நீச்சல்’, ‘நானும் ரவுடிதான்’ ஆகிய தனுஷ் தயாரித்த படங்களுக்கும் இவரே இசையமைப்பாளராக பணிபுரிந்தார்.
இடையில், தனுஷ் நடிப்பில் வெளிவந்த படங்களுக்கு அனிருத்துக்கு பதிலாக வேறு வேறு இசையமைப்பாளர்களை ஒப்பந்தம் செய்யப்பட்டு வந்தனர். தனுஷுக்கும், அனிருத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாலேயே தனுஷ் வேறொரு இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. குட்டி, உத்தம புத்திரன், யாரடி நீ மோகினி போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர், அடுத்ததாக தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். அந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி நடித்த க/பெ. ரணசிங்கம் படக்கதை தன்னுடையது என எழுத்தாளர் மிடறு முருகதாஸ் புகார் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்சேதுபதி நடித்த க/பெ.ரணசிங்கம் திரைப்படம் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தின் கதை தன்னுடையது என, புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள தீத்தான் விடுதியை சேர்ந்த எழுத்தாளர் மிடறு முருகதாஸ் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கறம்பக்குடி போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு இதழ்களில் கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றை எழுதி வருகிறேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிர்வாகியாகவும் உள்ளேன்.

இந்நிலையில் நான் எழுதி கடந்த 2017-ம் ஆண்டு கதை சொல்லி மாத இதழில் வெளியான ‘தவிப்பு என்ற கதையை மையமாக வைத்து க/பெ.ரணசிங்கம் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கதை 2018-ம் ஆண்டு நான் வெளியிட்ட தூக்கு கூடை என்ற புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
எனவே அனுமதி பெறாமலேயே எனது கதையை பயன்படுத்தி, க/பெ.ரணசிங்கம் திரைப்படத்தை எடுத்த இயக்குனர் விருமாண்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
மேலும் மிடறு முருகதாஸ் நிருபர்களிடம் கூறும்போது, 2017-ம் ஆண்டு வெளியான எனது கதையை பயன்படுத்தியிருப்பது தெளிவாக தெரிகிறது. என்னிடம் கேட்டிருந்தால் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் நான் அந்தக் கதையை வழங்கி இருப்பேன். ஆனால் எந்த தகவலும் சொல்லாமல் படம் எடுத்திருப்பது வருத்தத்தை தருகிறது என்றார்.
ஷங்கர் இயக்கிய ‘ஜீன்ஸ்’ படத்தில் நடித்த பிரசாந்த் - ஐஸ்வர்யா ராய் கூட்டணி மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதினையும் வென்றது.
இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியில், தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார். இதில் ஆயுஷ்மான் குரானா வேடத்தில் பிரசாந்த் நடிக்கிறார். பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது.

'அந்தாதூன்' படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்துக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது தபுவின் கதாபாத்திரம்தான். அதில் யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்து வந்தது.
இந்நிலையில், தபுவின் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நடிகை ஐஸ்வர்யா ராய் ஏற்கனவே ஷங்கர் இயக்கிய ‘ஜீன்ஸ்’ படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்தையா முரளிதரனின் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்பு தெரிவித்து “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி படம் ஒன்றை உருவாக்கவுள்ளனர். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும், விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது” என்று கண்டித்தனர்.

இந்நிலையில் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி மோஷன் போஸ்டரும் வெளியானதால் தற்போது எதிர்ப்பு அதிகமாகி உள்ளது. அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
ராகவேந்திரா திருமண மண்டப சொத்து வரி நிலுவை தொடர்பான வழக்கில் நடிகர் ரஜினிகாந்துக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
சென்னை:
சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரியாக நிலுவையில் உள்ள ரூ.6.50 லட்சத்தை செலுத்தும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி ராகவேந்திரா திருமண மண்டப உரிமையாளரான நடிகர் ரஜினிகாந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மத்திய, மாநில அரசுகள் விதித்த பொதுமுடக்கம் காரணமாக மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாகவே இருந்ததால் சொத்து வரியை ரத்து செய்து உத்தரவிடவேண்டும், கொரோனா கால வரி குறைப்புக்கு ராகவேந்திரா மண்டபத்திற்கு தகுதி உள்ளது என அந்த மனுவில் ரஜினிகாந்த் கூறியிருந்தார்
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். அத்துடன், அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாகவும் நீதிபதி எச்சரித்தார். வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து மனுவை திரும்ப பெறுவதாக ரஜினி தரப்பு வழக்கறிஞர் கூறினார். வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக மனு அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.






