என் மலர்tooltip icon

    சினிமா

    800 பட போஸ்டர்
    X
    800 பட போஸ்டர்

    800

    எம் எஸ் ஸ்ரீபதி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள முத்தையா முரளிதரனின் பயோபிக்கான 800 படத்தின் முன்னோட்டம்.
    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். 

    தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனமும், மூவி டிரெயின் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளார். படத்தொகுப்பு பணிகளை சிவா நந்தீஸ்வரன் கவனிக்கிறார். இப்படத்தை அடுத்தாண்டு இறுதியில் வெளியிட உள்ளனர்.
    Next Story
    ×