என் மலர்
சினிமா செய்திகள்
மக்களுக்கு ஊழலற்ற ஆட்சி உள்ளிட்ட எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாஜகவில் இணைந்திருக்கிறேன் என்று நடிகர் செந்தில் கூறியுள்ளார்.
80, 90-களில் தவிர்க்க முடியாத முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் செந்தில். கவுண்டமணி - செந்தில் நகைச்சுவைக் கூட்டணிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இன்று வரைக்கும் உள்ளது. இவர் நடிப்பையும் தாண்டி, அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.
அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த செந்தில், ஜெயலலிதா மறைவை அடுத்து டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு செயலாளராக அரசியல் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று தன்னை பாஜக கட்சியில் இணைத்துக் கொண்டார்.

சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் செந்தில், “ஊழலற்ற ஆட்சி என்பது பாஜகவின் வழக்கம் என்பதால் தான் அக்கட்சியில் இணைந்துள்ளேன். மக்களுக்கு ஊழலற்ற ஆட்சி உள்ளிட்ட எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாஜகவில் இணைந்திருக்கிறேன். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன். தலைமை கூறினால் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன்” என்றார்.
சமீபத்தில் கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நடிகை காஜல் அகர்வாலின் கவர்ச்சி புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
2008-ல் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார். தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து இந்தியன் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் கொரோனா காலக்கட்டத்தின் போது, கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். நண்பர்கள் மற்றும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைக்கப்பட்டார்கள். திருமணத்திற்குப் பிறகும் படங்களில் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால், சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.

தற்போது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பல லைக்குகளை குவித்து கமண்ட் செய்து வருகிறார்கள்.
டிக் டாக் மூலம் மிகவும் பிரபலமான இலக்கியா, நடிப்பது எவ்வளவு சிரமம் என்பதை தற்போது தெரிந்துக் கொண்டதாக பட விழாவில் கூறியிருக்கிறார்.
ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் 'டிக் டாக்' புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நீ சுடத்தான் வந்தியா'. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் பேரரசு, ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே ராஜன், தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் பி.வி.கதிரவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர்.
படத்தின் நாயகி இலக்கியா பேசும்போது, ‘இந்த மேடை எனது கனவு மேடை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. என்னை அனைவரும் ஆதரிக்க வேண்டும். உண்மையில் படம் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்ததே தவிர படப்பிடிப்பில்தான் அது எவ்வளவு சிரமம் என்று புரிந்தது.

பலரும் நடிப்பு அனுபவம் இல்லாத என்னைப் புரிந்து கொண்டு உதவினார்கள். சினிமா எவ்வளவு சிரமம் என்பதை தெரிந்து கொண்டேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அனைவரும் இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும் "என்றார்.
பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் புதிய படத்தின் போஸ்டர் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று வெளியிட்டு இருக்கிறார்கள்.
பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ராதே ஷியாம்’. இன்று மகா சிவராத்திரி புனித தினத்தை முன்னிட்டு சிவ-பார்வதியின் புராண காதலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ராதே ஷியாம் படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.
பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்துள்ள இந்த காதல் கதையின் புதிய போஸ்டரில், இருவரும் வெவ்வேறு திசைகளை நோக்கியவாறு தரையில் படுத்துள்ளனர். இது படத்தின் பிரமாண்டத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.

இத்தாலியில் உள்ள ரோம் உள்ளிட்ட மிகவும் அழகான இடங்களில் ‘ராதே ஷியாம்’ படமாக்கப்பட்டுள்ளது. பன்மொழிப் படமான ‘ராதே ஷியாம்’, ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், யூ வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. வம்சி மற்றும் பிரமோத் பிரமாண்ட பொருட்செலவில் இதை தயாரித்துள்ளனர். இப்படம் இந்த வருடம் ஜூலை 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, பிரபல இயக்குனர் சொன்ன வரலாற்று கதை பிடித்திருப்பதாகவும் விரைவில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
சூரரைப் போற்று திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இதையடுத்து வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் பிரபல இயக்குனர் வசந்தபாலன், சூர்யாவிடம் கதை சொல்லி கவர்ந்திருக்கிறார். வசந்தபாலன் சொன்ன வரலாற்று கதை சூர்யாவிற்கு பிடித்திருப்பதாகவும், விரைவில் இருவரும் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனர் வசந்தபாலன், ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத்தலைவன் ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது ஜி.வி.பிரகாஷை வைத்து ஜெயில் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா, நடிகைகளின் சம்பளம் பற்றி பேசி இருக்கிறார்.
நடிகர்-நடிகைகள் படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்துகிறார்கள். ஆனாலும் கதாநாயகர்கள் சம்பளத்தை ஒப்பிடும்போது தங்களின் சம்பளம் பல மடங்கு குறைவாக இருப்பதாக கதாநாயகிகள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். இந்தி நடிகைகள் அதிகபட்சமாக ஒரு படத்துக்கு ரூ.13 கோடி வரை வாங்குகிறார்கள்.
தென்னிந்திய நடிகைகளில் நயன்தாரா முதல் இடத்தில் இருக்கிறார். ஒரு படத்துக்கு அவர் ரூ.4 கோடி வரை வாங்குகிறார் என்கின்றனர். இந்த நிலையில் நடிகைகளுக்கு சம்பளம் குறைவாக கொடுக்கப்படுவதாக சமந்தா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “நடிகைகளுக்கு சம்பளம் குறைவாகவே தரப்படுகிறது. ஒரு நடிகை முதல் 3 கதாநாயகிகளில் ஒருவராக இருந்தாலும் அவருக்கு கொடுக்கும் சம்பளம் குறைவுதான். அந்த நடிகை வாங்கும் சம்பளம் முதல் 20 நடிகர்கள் பட்டியலில் கூட இல்லாத கதாநாயகர் வாங்கும் சம்பளத்துடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. நடிகைகள் தங்களுக்கு சம்பளம் அதிகம் வேண்டும் என்று கேட்டால் பிரச்சினையாக்குகின்றனர். ஆனால் நடிகர் சம்பளம் அதிகம் கேட்டால் உடன்படுகிறார்கள்'' என்றார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி சுல்தான் படத்தை அடுத்து சிறுத்தை பாணியில் பின்பற்றி நடிக்க இருக்கிறார்.
பாக்யராஜ் கண்ணன் இயக்கிய சுல்தான் படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்துக்கு பிறகு மித்ரன் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார். மித்ரன் ஏற்கனவே விஷால் நடித்த இரும்புத்திரை, சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படங்களை இயக்கி பிரபலமானவர். கார்த்தி-மித்ரன் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். அதிரடி திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது.

இதில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2011-ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற சிறுத்தை படத்திலும் கார்த்தி இரு வேடங்களில் நடித்து இருந்தார். அந்த படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. மீண்டும் அவர் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது.
மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால், தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் தடுப்பூசி போட்டு வருகிறார்கள். பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.
இதுகுறித்து மோகன்லால் கூறும்போது, “கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக்கொண்டேன். அரசின் அறிவுரையை ஏற்று அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி சமூகத்தின் பாதுகாப்புக்கானது. கொரோனாவுக்கு விரைவாக தடுப்பு மருந்து கண்டுபிடித்த நிறுவனங்களுக்கும், மருத்துவர்களுக்கும் நன்றி” என்றார்.
எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சராக பதவி வகித்தபோது, ஒரு படத்தில் நடிக்க ஏற்பாடு நடந்தது. பாடல் பதிவும் நடந்தது. ஆனால், அத்துடன் படம் கைவிடப்பட்டது.
எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சராக பதவி வகித்தபோது, ஒரு படத்தில் நடிக்க ஏற்பாடு நடந்தது. பாடல் பதிவும் நடந்தது. ஆனால், அத்துடன் படம் கைவிடப்பட்டது.
1977-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சரானார்.
தேர்தலில் வெற்றி பெற்றபோது, எம்.ஜி.ஆர். நடித்த "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' என்ற படம் முடிவடையும் தருணத்தில் இருந்தது. மீதியிருந்த இரண்டொரு காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டு, முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார். அதன்பின் நடிக்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், 1978-ல் அவர் படத்தில் நடிக்க ஏற்பாடு செய்தார். அதுபற்றி, கவிஞர் வாலி எழுதியிருப்பதாவது:-
`அக்கரைப்பச்சை', `இளைய தலைமுறை' முதலிய படங்களைத் தயாரித்த என் நண்பர் ஜி.கே.தர்மராஜ் அவர்களும், புகழ் வாய்ந்த ஒளிப்பதிவாளர் மாருதிராவ் அவர்களும் ஒரு நாள் இரவு என் வீட்டிற்கு வந்தார்கள்.
"நான் ஒரு படம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். நண்பர் மாருதிராவும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். நíங்கதான் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எல்லாம் எழுதணும்'' என்று வந்த விஷயத்தை சுருக்கமாக விளக்கினார், தர்மராஜ்.
``இப்போது என் கைவசத்தில் எந்தக் கதையும் இல்லையே...'' என்று நான் தயங்கியவாறே சொல்லிவிட்டு, "யார் ஹீரோவாக நடிக்கப்போகிறார்?'' என்று தர்மராஜை வினவினேன்.
"யார் ஹீரோவா நடிக்கப்போகிறார்ங்கறதை அப்புறம் சொல்றேன். ஆனால் அந்த ஹீரோதான் உங்ககிட்ட கதையை வாங்கி, வேலையை ஆரம்பிக்கச் சொல்லி எங்களை இங்கே அனுப்பினார்...'' என்று மாருதிராவ் ஒரு சஸ்பென்ஸ் வைத்துப் பேசினார்.
"அவருக்கு எப்படிக் கதை எழுதணும்னு, உங்களுக்குத்தான் தெரியும்னு அவரே சொன்னாருங்க. அவர் வீட்லேருந்துதான், அவர் சொல்லி அனுப்பித்தான் நாங்க நேர உங்க வீட்டுக்கு வந்திருக்கோம்...'' என்று புன்னகைத்தார், தர்மராஜ்.
நான்தான் கதை வசனம் எழுத வேண்டுமென்று என் எழுத்தில் அவ்வளவு ஆர்வம் கொண்டு, இவர்களை என் வீட்டிற்கு அனுப்பிய ஹீரோ யாராக இருக்கக்கூடும் என்று நான் வியப்பும், மகிழ்வும் விழிகளில் குமிழியிட ஒரு வினாடி சிந்தனையில் ஆழ்ந்தேன்.
பிறகு, தர்மராஜிடம், "உங்களை என்கிட்ட அனுப்பிச்ச ஹீரோ யாரு சார்? அதெ முதல்ல சொல்லுங்க...'' என்று விடாப்பிடியாகக் கேட்டேன்.
அவர் யாரென்று, தர்மராஜ் சொன்னதும் நான் திகைத்துப்போனேன். இது கனவா? நனவா? என்று நான் கிள்ளிப் பார்க்காத குறைதான்.
"நிஜமாவா சொல்றீங்க?'' என்று நான் மாருதிராவிடமும், தர்மராஜிடமும் மாறி மாறிக்கேட்டேன்.
"உங்களுக்கு சந்தேகமிருந்தா, நீங்க வேணும்னா அவர்கிட்டயே, போன் பண்ணிப் பேசுங்க...'' என்றார் தர்மராஜ்.
"அதுக்குக் கேக்கலீங்க. அவர் சினிமாவில் நடிக்க முடியாதே... அப்படியிருக்கும்போது எப்படி உங்ககிட்ட நடிக்கிறேன்னு ஒத்துக்கிட்டாரு? சாத்தியமில்லாத விஷயத்தைச் சொல்றீங்களே சார்!'' என்று சொன்னேன் நான்.
தர்மராஜ் மெல்லிய புன்னகையை இதழோரம் இழையவிட்டவாறே, "இந்தப் பத்தாயிரம் ரூபாயை அட்வான்சா வாங்கிக்கங்க. அப்புறம் அண்ணனோட நீங்களே பேசி, அவர் நடிக்கிறார்ங்கற விஷயத்தை உறுதி பண்ணிக்கிட்டு, கதை எழுத ஆரம்பியுங்க...'' என்று என் கையில் காசோலையைத் திணித்துவிட்டு மாருதிராவுடன் காரில் ஏறிப்போய்விட்டார்.
மறுநாள் அதிகாலையிலேயே நானே என் காரை ஓட்டிக்கொண்டு அன்புக்குரிய என் அண்ணனை அவர் இருப்பிடத்தில் சந்தித்து, "நீங்க படத்திலே நடிக்க ஒத்துக்கிட்டு, என்னைக் கதையெழுதச் சொல்லி தர்மராஜையும், மாருதிராவையும் என் வீட்டுக்கு அனுப்பிச்சீங்களாண்ணே!'' என்று ஒரே மூச்சாகப் பேசி முடித்தேன்.
"ஆமாம். நான் நடிக்கப்போகிறேன்... சீக்கிரம் கதையை ரெடி பண்ணுங்க. ஏப்ரல் 14-ந்தேதி பூஜை!'' என்று அவர் சொன்னதும் நான் வியப்பால் வாயடைத்துப்போனேன்.
ஏனெனில் என்னிடத்தில் படத்தில் நடிக்கப்போவதாகச் சொன்னவர், அப்போது முதல்-அமைச்சராகக் கோட்டையில் கொலுவிருந்த என் அன்பு அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்கள்.
"ஏண்ணே, நீங்க முதல்-அமைச்சரா இருந்துக்கிட்டு சினிமாவில் நடிக்கறது...'' என்று நான் சொல்வதற்குள், "சாத்தியமான்னு கேக்குறீங்களா? சாத்தியமா இருக்கத் தொட்டுத்தான் உங்களைக் கதை எழுதச் சொல்றேன்'' என்று பாசத்தோடு என் கன்னத்தை வருடினார் எம்.ஜி.ஆர்.
நான் வீடு வந்து சேர்ந்தேன். இரவு பகலாக உட்கார்ந்து எம்.ஜி.ஆர். நடிப்பதற்காக ஒரு கதையை உருவாக்கினேன்.
10 நாட்கள் கழித்து, `கதை தயார்' என்று எம்.ஜி.ஆருக்கு டெலிபோன் செய்தேன்.
அன்று இரவு, அண்ணன் எம்.ஜி.ஆரின் நெருங்கிய உறவினரும், அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமானவருமான குஞ்சப்பன், என் வீட்டிற்கு வந்தார்.
"நாளைக் காலை 6 மணி விமானத்தில் சி.எம். கூட நீங்களும் மதுரைக்குப் போறீங்க. விமானப் பயணத்திலேயே கதையைக் கேட்டுக்கறேன்னு சொன்னாரு. அடுத்த நாள் விமானத்தில் நீங்க மதுரையிலிருந்து மெட்ராசுக்குத் திரும்பிடலாம். அதுக்கும் ஏற்பாடு பண்ணி வச்சிருக்கறேன்'' என்று குஞ்சப்பன் தான் வந்த விஷயத்தை விளக்கிச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
விமானத்திலேயே எம்.ஜி.ஆருக்குக் கதையைச் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்துப்போயிற்று. திருநெல்வேலிக்கும் என்னை உடன் அழைத்துச் சென்றார். அன்று இரவு நெடுநேரம், நானும் அவரும் அந்தக் கதையைப் பேசிப் பேசி மெருகேற்றினோம்.
படத்திற்கு, "உன்னை விடமாட்டேன்'' என்று தலைப்பு வைத்தால் நன்றாயிருக்கும் என்று சொன்னேன். எம்.ஜி.ஆர். பொன்னிறம் மின்னப் புன்னகைத்தார். அவர், புன்னகைத்தால் `சம்மதம்' என்று அர்த்தம்.
சென்னை வந்த பிறகு திரைக்கதையை எழுதும் பணியில் நான் ஈடுபட்டாலும், `ஒரு மாநில முதல்-அமைச்சர் சினிமாவில் நடிப்பதை, மத்திய அரசு எப்படி ஒத்துக்கொள்ளும்' என்கிற சந்தேகம் என் சிந்தனை ஓட்டத்தை அவ்வப்போது தடை செய்து கொண்டுதானிருந்தது.
ஓரிரு வாரங்கள் கழித்து ஒருநாள் அதிகாலையில் தொலைபேசியின் மணி, என் துயிலைக் கலைத்தது.
ரிசீவரை எடுத்து, `ஹலோ!' என்றேன்.
`வாழ்க!' என்று சொல்லிவிட்டு, "காலை பேப்பர் பார்த்தீங்களா? உடனே எடுத்துப் பாருங்க'' என்றார் எம்.ஜி.ஆர். உடனே போனை வைத்துவிட்டார்.
"மாநில முதல்-அமைச்சராக இருந்து கொண்டு, தன் கடமைகளுக்கு குந்தகம் வராமல் எம்.ஜி.ஆர். சினிமாவில் நடிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை'' என்று பொருள்பட பத்திரிகையாளர்களிடம் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்கள் சொல்லியிருந்த விஷயம், பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது.
பிறகென்ன! இரவு பகலாக திரைக்கதையை எழுதி முடித்தேன். படத்தின் இயக்குனராக கே.சங்கரை அமர்த்திக் கொள்ளும்படி எம்.ஜி.ஆர். என்னிடத்திலும், தயாரிப்பாளர் தர்மராஜிடமும் சொன்னார்.
"யாரை இசையமைப்பாளராகப் போடுவது?'' என்று தர்மராஜ் கேட்டார்.
"புதுசா ஒரு பையன் வந்திருக்கிறாரே! அந்தப் பையனைப் போட்டுக்கலாம். பாட்டெல்லாம் கேட்டேன். நல்லாயிருக்கு'' என்றார், எம்.ஜி.ஆர்.
"நீங்க, இளையராஜாவைச் சொல்றீங்களா?'' என்றேன் நான்.
"ஆமாய்யா!'' என்றார் எம்.ஜி.ஆர்.
பிறகு என்னைப் பார்த்து, "நீங்கபோயி பூஜைக்கு தலைமை தாங்க வரச்சொல்லி, கவர்னரைக் கூப்பிடுங்க. தர்மராஜையும் அழைச்சுக்கிட்டுப் போய், நான் சொன்னேன்னு சொல்லுங்க...'' என்று எம்.ஜி.ஆர். சொன்னதன் பேரில், நானும், தர்மராஜ×ம் கவர்னர் மாளிகைக்குச் சென்று பூஜையில் கலந்து கொள்ள அழைத்தோம்.
`என்ன கதை? என்ன மாதிரிப்படம்?' என்றெல்லாம் கவர்னர் என்னிடம் கேட்டறிந்து கொண்டு, வருவதற்குச் சம்மதம் தெரிவித்தார்.
பிறகு, சில காரணங்களை முன்னிட்டு கவர்னர் வருகை தவிர்க்கப்பட்டது.
பிரசாத் ஸ்டூடியோவில் பாடல் ஒலிப்பதிவுடன், எம்.ஜி.ஆர். அவர்களும், ஏனைய அமைச்சர்களும் கலந்து கொள்ள படத்தின் பூஜைக்கான அழைப்பிதழ்கள் அச்சாகிக் கொண்டிருந்தன.
விழாவிற்கு இரண்டு நாள் முன்னதாக அண்ணன் எம்.ஜி.ஆர். என்னைத் தொலைபேசியில் அழைத்து, "படத்துவக்க விழாவிற்கு, நாஞ்சில் மனோகரனைத் தலைமை தாங்கச் சொல்லி கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் வரவேற்புரையை நிகழ்த்துங்கள்'' என்று என்னைப் பணிந்தார்.
பூஜை, குறிப்பிட்ட நாளில் கோலாகலமாக நடந்தது. இளையராஜாவின் இசையில் டி.எம்.சவுந்தரராஜன் பாட, எம்.ஜி.ஆர். முன்னிலையில் பாடல் ஒலிப்பதிவாயிற்று.
அந்நாளில் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்து கொண்டே, படத்திலும் நடிக்கப் போகிறார் என்னும் செய்தியை, அன்றாடம் பத்திரிகைகள் கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்துக் கொண்டு வந்தன.
ஓரிரு மாதங்களுக்குப் பிறகு, படத்தில் நடிப்பதை, என்ன காரணத்திற்காகவோ எம்.ஜி.ஆர். மறுபரிசீலனை செய்து தவிர்த்து விட்டார்.
காரணத்தை நானும் கேட்கவில்லை; அவரும் சொல்லவில்லை.''
இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் தான் வெளியே செல்வதில்லை என்று சோகமாக கூறியிருக்கிறார்.
அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ திரைப்படத்திலும் ‘விஸ்வாசம்’ திரைப்படத்திலும் அவருக்கு மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தின் ஸ்டோரியில் ’நான் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் நன்றாக நடித்துள்ளதாக பலரும் என்னை பாராட்டுகின்றனர். ஆனால் அதே நேரத்தில் என்னிடம் பலர் கூறுவது என்னவென்றால் நான் மிகவும் உயரம் குறைவாக இருக்கிறேன் என்றும் இன்னும் நான் வளர வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இதன் காரணமாகத்தான் நான் அதிகமாக வெளியே செல்வதில்லை என்று அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
புலிக்குத்தி பாண்டி படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் டாணாக்காரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக முத்தையா இயக்கத்தில் ‘புலிக்குத்தி பாண்டி’ படம் வெளியானது. தற்போது ‘டாணாக்காரன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தமிழ் என்பவர் இயக்குகிறார்.
சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பான காவல்துறையினரை ‘டாணாக்காரன்’ என்றுதான் அழைப்பார்கள். போஸ்டரிலும் விக்ரம் பிரபு அதே கெட்டப்பில் இருக்கிறார். தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதை என்பதால், இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். மகேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார்.
நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான சனம் ஷெட்டி தன்னுடைய மகிழ்ச்சியான தருணத்தை பற்றி பகிர்ந்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. இவர் சமீபத்தில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், பெண் சக்தி விருதை கமலிடம் இருந்து சனம் ஷெட்டி பெற்றிருக்கிறது. இது குறித்து கூறிய சனம் ஷெட்டி, கனவுல கூட நினைக்காதது இன்று நடந்தது. லெஜெண்ட் கமல் சார் கையால் விருதை வாங்கியது மகிழ்ச்சி. பெண்களின் சக்தியை நாம் கொண்டாடும் நாளில் வழங்கப்படுவது மறக்க முடியாத தருணம்’ என்று கூறியிருக்கிறார்.