என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் ஆகிய படங்களில் நடித்த நடிகை ஜெனிலியா கீழே விழுந்து தனது கையை உடைத்துக் கொண்டார்.
    சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களில் தனது குறும்புத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் ஜெனிலியா. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த ஜெனிலியா, திடீர் என்று இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து ஒதுங்கினார்.

    எப்போதும் குடும்பம், குழந்தைகள், திரைப்பட விழாக்கள் என இன்றைக்கும் தனக்கே உரிய குறும்பு தனங்களோடு வலம் வரும் ஜெனிலியா தன்னுடைய குழந்தைகளுக்காக ஸ்கேட்டிங் கற்றுக் கொண்டு இருக்கிறார். தான் கற்றுக்கொண்ட ஸ்கேட்டிங் திறமையை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடலாம் என எண்ணியிருக்கிறார். அப்போது ஸ்கேட்டிங் செய்யும்போது நிலை தடுமாறி கிழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது.

    ஜெனிலியா

    ஆனால் தனக்கு ஏற்பட்ட இந்த வலியையும் பொருட்படுத்தாத ஜெனிலியா எப்போதும் போல அதே குறும்பு சிரிப்புடன் இந்த வெற்றிக் கதை தோல்வியில் முடிந்து விட்டது. ஆனால் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்வேன் எனக் கூறி வீடியோ பதிவிட்டு இருக்கிறார். 


    96 மற்றும் மாஸ்டர் படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை கௌரி கிஷன், சின்னத்தலயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
    விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ’96’ படத்தில் ஜானு கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை கௌரி கிஷன். இப்படத்தை அடுத்து விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கர்ணன்’ படத்தில் நடித்திருக்கிறார்.

    கௌரி கிஷன் - ரெய்னா

    நடிகை கௌரி கிஷன் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துக் கொண்டார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரும், சின்னத்தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
    விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக இருக்கும் பிச்சைக்காரன் 2 படத்தின் இயக்குனர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து 2016-ல் வெளியான படம் பிச்சைக்காரன். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் இப்படம் டப் செய்து வெளியாகி அதிக வசூலையும் குவித்தது. 

    இந்த நிலையில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதி வருவதாக சில மாதங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனி தெரிவித்து இருந்தார். முதல் பாகத்தை இயக்கிய சசி வேறு படவேலைகளில் இருப்பதால் இரண்டாம் பாகத்தை இயக்கவில்லை.

    பிச்சைக்காரன் 2 

    இதனால், பாரம் படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசாமி, பிச்சைக்காரன் 2 படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், பிரியா கிருஷ்ணசாமி இப்படத்தில் இருந்து விலகி இருக்கிறார். இவருக்கு பதிலாக மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்க இருக்கிறார்.

    இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன், தற்போது விஜய் ஆண்டனியை வைத்து கோடியில் ஒருவன் படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.
    தமிழில் சூப்பரான பாடல்களை பாடி வரும் பாடகர் சித் ஸ்ரீராம் மீது ரசிகர்கள் தண்ணீர் மற்றும் பீர் பாட்டிலை வீசி இருக்கிறார்கள்.
    கண்ணான கண்னே, தள்ளி போகாதே உள்பட பல பாடல்கள் மூலம் பிரபலமான பாடகர் சித் ஸ்ரீராம். இவர் சமீபத்தில் ஐதராபாத்தில் ஜூபிலி ஹில்ஸில் அமைந்துள்ள ஒரு தனியார் பாரில் பாடல் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். 500 பேர் மட்டுமே அனுமதி என்று கூறப்பட்ட அந்த நிகழ்ச்சிக்கு அதன் ஏற்பாட்டாளர்கள் மேலும் பலரை அனுமதித்துள்ளனர். 

    அப்போது கூட்டத்தில் பலர் அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சித் ஸ்ரீராம் மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போது போதையில் இருந்த சிலர் அவர் மீதும் இசை வாசிப்பவர்கள் மீதும் தண்ணீர் மற்றும் பீர் பாட்டிலை வீசியுள்ளனர். இதனால் கோபமடைந்த சித் ஸ்ரீராம் நிகழ்ச்சியை பாதியில் நிறுத்தினார். 

    சித் ஸ்ரீராம்

    பின்பு மைக்கில், ஒரு பிரபல பாடகரை நீங்கள் மதிக்கும் விதம் இதுதானா? என்று கேட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக சித் ஸ்ரீராம் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. அதனால் அந்தப் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டு படப்பிடிப்பு ஆரம்பமாகி இருக்கிறது.
    ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதினையும் வென்றது. 


    பிரசாந்த் - தியாகராஜன் - சிம்ரன்

    இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். அந்தகன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். நடிகை சிம்ரன், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. 
    ஓ மை கடவுளே படத்தின் வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வன், பிரியா பவானி சங்கருடன் இணைந்து நடித்து வரும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
    பல வெற்றி படங்களை தயாரித்தவரும் விநியோகம் செய்வதவருமான ஆர்.ரவீந்திரன் தனது தயாரிப்பு நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக தயாரித்துள்ள புதிய படத்திற்கு “ஹாஸ்டல்” எனப் பெயரிட்டுள்ளனர்.

    ஹாஸ்டல்

    சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடந்ததை அடுத்து இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளனர்.
    தமிழ், மலையாளம் மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை பூர்ணா, முன்னணி நடிகர்களோடு நடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
    நடிகை பூர்ணா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:- “பெண்கள் தியாகத்தின் மறு உருவம். எல்லா துறையிலும் பெண்கள் முன்னேறுகிறார்கள். அவர்களுக்கு ஆண்களுக்கு சமமாக அனைத்து உரிமைகளும் வழங்க வேண்டும். பெண்களுக்கு சிறுவயது முதலே பெற்றோர் அறிவுரைகளை சொல்லி வளர்க்கிறார்கள். கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். சில எல்லைகளை வைக்கிறார்கள்.

    பூர்ணா

    கட்டுப்பாடோடு இருக்கவேண்டும் என்பதை ஆண்களுக்கும் சொல்லி தர வேண்டும். சினிமா துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. பெண் இயக்குனர்கள் இன்னும் அதிகமாக வந்தால் மேலும் பலன் கிடைக்கும். ஆனால் சினிமாவில் 80 சதவீதம் ஹீரோக்களின் ஆதிக்கம்தான் உள்ளது. சமீபகாலமாகதான் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வருகின்றன. 15 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கிறேன். முன்னணி நடிகர்களோடு நடிக்கவில்லை. ஆனால் பூர்ணா என்றால் பலமான கதாபாத்திரங்களுக்கு ஏற்றவர் என்ற பெயர் கிடைத்துள்ளது''.


    இவ்வாறு அவர் கூறினார்.
    ஒளிமார் சினிமாஸ் சார்பாக ஜெ.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பூம் பூம் காளை’ படத்தின் முன்னோட்டம்.
    ஒளிமார் சினிமாஸ் சார்பாக ஜெ.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பூம் பூம் காளை’. இந்த படத்தின் நாயகனாக நடிகை அனுராதாவின் மகன் கெவின் நடித்துள்ளார். கதாநாயகியாக சாரா தேவா நடித்துள்ளார். இவர் ‘சிவலிங்கா’ படத்தின் நாயகிகளில் ஒருவர். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், அப்புக் குட்டி, ‘காதல்’ அருண், சச்சு, கிரேன் மனோகர், அபிநயாஸ்ரீ உட்பட பலர் நடிக் கின்றனர்.

    ஒளிப்பதிவு- கே.பி.வேல் முருகன், இசை- பி.ஆர்.ஸ்ரீநாத், பாடல்கள்- எஸ். ஞானகரவேல், படத் தொகுப்பு- யுவராஜ், இயக்கம்- ஆர்.டி. குஷால்குமார்.

    பூம் பூம் காளை படக்குழு

    படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: “காதல் பொய்.. காமம் தான் நிஜம் என்று சொன் னால் உடனே பல பேர் எதிர் குரல் கொடுப்பார்கள். ஆனால் நிதானமாக யோசித்து பார்த்தால் உண்மை புரியும். ‘பூம் பூம் காளை’ படத்தின் மையக் கருத்து இது தான். நாயகன், நாயகி இருவரும் திருமணம் முடித்து தேனிலவு செல்கிறார்கள். 

    நாயகியோ கணவனுடன் அன்பாக பழகி, அதன்பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபட விரும்புகிறாள். நாயகனோ திருமணம் முடிந்த உடனே அது நடப்பது எப்போது என ‘பூம் பூம் காளை’யாக அலை பாய்கிறான். இப்படி எதிர்கருத்து கொண்டவர்களின் தேனிலவு நடந்ததா? இல்லையா? என்பதை நகைச்சுவை கலந்து சொல்லும் படம் இது” என்றார்.
    திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘வலிமை அப்டேட் மக்களே’ என குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. இப்படத்தின் அப்டேட்டை அஜித் ரசிகர்கள் கடந்த பல மாதங்களாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் படக்குழுவினர் தரப்பில் இருந்து எந்த அப்டேட்டும் கிடைத்தபாடில்லை. ஓராண்டுக்கு மேலாக இந்த படம் குறித்து எந்தவிதமான அப்டேட்டும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘வலிமை அப்டேட் மக்களே’ என குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

    விஜயகார்த்திகேயன்

    ‘ஜனநாயகத்தின் வலிமை உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டிலும் உள்ளது’ என்று அந்த புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தேர்தல் விழிப்புணர்வுக்காகவும் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார். இதையும் ஒரு அப்டேட்டாக எடுத்துக் கொண்டு நேர்மையான முறையில் ஓட்டு போடுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    திருப்பூர் மாவட்ட கலெக்டரின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


    ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர்.
    ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதினையும் வென்றது. 

    இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். அந்தகன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். நடிகை சிம்ரன், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    இப்படத்தை இயக்க முதலில் மோகன்ராஜா ஒப்பந்தமானார். பின்னர் தெலுங்கு படத்தில் பிசியானதால் அவர் விலகினார். இதையடுத்து ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் இயக்குனர் ஜெஜெ பிரெட்ரிக் இயக்க உள்ளதாக அறிவித்தனர். 

    ஜெஜெ பிரெட்ரிக்கின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், இயக்குனர் ஜெஜெ பிரெட்ரிக்கும் அப்படத்தில் இருந்து விலகி உள்ளாராம். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “அந்தகன் படத்தை நான் இயக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அந்தகன் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி, விரைவில் எனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார். 
    வேதா கிருஷ்ணமூர்த்தி, ஆகான்ஷா கோலி, திவ்யா, வனிதா மற்றும் மம்தா ஆகியோர் வாத்தி கம்மிங் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடியுள்ளனர்
    ‘வாத்தி கம்மிங்’ பாடல், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்றது. அனிருத் இசை அமைத்துள்ள இப்பாடல் வெளியாகி ஓராண்டு ஆனாலும், ரசிகர்களிடம் இப்பாடலுக்கான வரவேற்பு குறைந்தபாடில்லை. பிரபலங்கள் பலரும் இப்பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் கடந்த மாதம், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அஸ்வின், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர், இப்பாடலுக்கு நடனமாடிய வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில், ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் நடனமாடியுள்ளனர். 

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் அசத்தல் வெற்றி பெற்றது. 

    இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இந்திய வீராங்கனைகள் வேதா கிருஷ்ணமூர்த்தி, ஆகான்ஷா கோலி, திவ்யா, வனிதா மற்றும் மம்தா ஆகியோர் வாத்தி கம்மிங் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஷங்கரின் ஜென்டில்மேன், காதலன், முதல்வன், பாய்ஸ், இந்தியன், ஜீன்ஸ், சிவாஜி, எந்திரன், ஐ, 2.0 போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்
    இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக தென் கொரிய நடிகையான பேசூஜி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளார்.

    இந்நிலையில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ஏ.ஆர்.ரகுமானிடம், ரசிகர் ஒருவர் தெலுங்கு படத்திற்கு எப்போது இசை அமைக்க போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

    ஏ.ஆர்.ரகுமான்

    இதற்கு பதிலளித்த அவர், மிக விரைவில் தெலுங்கு படம் ஒன்றிற்கு இசையமைக்க உள்ளதாக கூறினார். இதன்மூலம் அவர் குறிப்பிட்ட அந்த தெலுங்கு படம் ஷங்கரின் படமாகத் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஷங்கரின் ஜென்டில்மேன், காதலன், முதல்வன், பாய்ஸ், இந்தியன், ஜீன்ஸ், சிவாஜி, எந்திரன், ஐ, 2.0 போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×