என் மலர்
சினிமா செய்திகள்
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பு மகாசிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்தாண்டு மகாசிவராத்திரி விழா ஆதியோகி சிலை முன்பு நடைபெற்று வருகிறது.
வழக்கமாக, சத்குரு முன்னிலையில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேரில் பங்கேற்பார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் இருப்பதால், குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே நேரடியாக விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த விழாவில் நடிகைகள் சமந்தா, ரகுல் பிரீத் சிங், தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சக நடிகைகளுடன் இணைந்து நடிகை சமந்தா நடனமாடினார். மேலும் ஆதியோகி சிலை முன்பு எடுத்த செல்பி புகைப்படத்தையும் நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியர், தற்போது பிரபல நடிகர் மாதவனுடன் இணைந்து நடித்து வருகிறார்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் மஞ்சு வாரியர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற அசுரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் தனுஷின் மனைவியாக எதார்த்தமாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
இதையடுத்து மலையாளத்தில் பிசியான மஞ்சு வாரியர், மோகன்லாலுடன் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம், மம்முட்டியுடன் தி பிரீஸ்டு, நிவின் பாலியுடன் படவெட்டு என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியர், பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். கல்பேஷ் இயக்கத்தில் மாதவன் நடிக்கும் ‘அமெரிக்கி பண்டிட்’ என்கிற படத்தில் மஞ்சு வாரியர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது போபாலில் நடைபெற்று வருகிறது.
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அரண்மனை 3’ படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர்.
அரண்மனை பேய் படம் இதுவரை 2 பாகங்கள் வந்துள்ளன. சுந்தர்.சி இயக்கிய இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராகி உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார்.
இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் விவேக், யோகிபாபு ஆகியோர் காமெடி வேடங்களில் வருகின்றனர். இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ‘அரண்மனை 3’ படத்தை வருகிற மே மாதம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற உப்பென்னா திரைப்படம், 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.
தெலுங்கில் காதலர் தினத்தன்று வெளியான படம் உப்பென்னா. இப்படத்தை அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கி இருந்தார். விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம், 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.
புதுமுகங்கள் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடித்திருந்த இப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக மிரட்டி இருந்தார். அவரின் கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்ததோடு, ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்த நடிகை கீர்த்தி ஷெட்டி, அடுத்ததாக மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளராம். உப்பென்னா படத்தில் கீர்த்தி ஷெட்டியின் நடிப்பை பார்த்து வியந்த மகேஷ் பாபு, அவருக்கு இந்த வாய்ப்பை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் அனில் ரவிபுடி இயக்க உள்ளாராம்.
‘திரிஷ்யம்-2 ’ திரைப்படம் மலையாளத்தில் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து, அதனை பிற மொழிகளிலும் ரீமேக் செய்கின்றனர்.
மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திரிஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2 ’ கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. திரிஷ்யம் 2-ம் பாகத்தை பிற மொழிகளிலும் ரீமேக் செய்கின்றனர். அதன்படி ‘திரிஷ்யம் 2’ தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது.
முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ், மீனா, நதியா ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘திரிஷ்யம் 2’ தெலுங்கு ரீமேக்கில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மலையாளத்தில் மோகன்லால் தரப்பு வக்கீலாக நடித்திருந்த நடிகை சாந்தி பிரியாவின் கதாபாத்திரத்தில் பூர்ணா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் நடிகை பூர்ணா திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளாராம்.
நடிகை நிக்கி கல்ராணி ஏற்கனவே யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் போன்ற படங்களில் ஆதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தமிழில் மிருகம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான ஆதி, தொடர்ந்து ஈரம், அய்யனார், ஆடுபுலி, அரவான், யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் என வித்தியசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது தெலுங்கில் பிசியான நடிகராக வலம்வரும் இவர், பாட்னர், கிளாப், குட் லக் ஷகி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் ஆதி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இவர் அடுத்ததாக ‘சிவுடு’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சுசீந்திரன் இயக்குகிறார். நடிகர் ஜெய் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும் இந்தப் படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணி நடிக்க உள்ளாராம். ஏற்கனவே யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் போன்ற படங்களில் ஆதிக்கு ஜோடியாக நடித்த நடிகை நிக்கி கல்ராணி, தற்போது மூன்றாவது முறையாக அவருடன் இணைந்துள்ளார்.
நடிகர் ஆதியும், நடிகை நிக்கி கல்ராணியும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியானது. ஆனால் இருவரும் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களை மீண்டும் திரையரங்குகளுக்கு வரவழைக்கும் நோக்கில் தமிழகத்தில் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்து வருகின்றனர்.
கொரோனா லாக்டவுனுக்கு பின் மக்கள் திரையரங்குகளுக்கு வர தயக்கம் காட்டினர். அதேபோல் மாஸ்டரை தவிர, லாக்டவுனுக்கு பின் வெளியான எந்த படங்களும் சரிவர ஓடாததால் திரையரங்குகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதனால், மக்களை மீண்டும் திரையரங்குகளுக்கு வரவழைக்கும் நோக்கில் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை போன்ற படங்கள் மீண்டும் வெளியாகி வரவேற்பை பெற்றன. அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான பில்லா படமும் நாளை ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில், சிம்பு, ஜோதிகா நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘மன்மதன்’ திரைப்படம், டிஜிட்டலில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் ரிலீசாக உள்ளதாம். இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்திய சிம்பு தான், இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் அடுத்த வாரம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
மாஸ்டர் படம் வெற்றியடைந்ததை அடுத்து, நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்க உள்ள ‘தளபதி 65’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறாராம்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் விஜய். இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் விஜய் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க உள்ளதாகவும், அந்த 3 படங்களும் ஒரே ஆண்டில் ரிலீசாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 65’ படத்திற்காக தயாராகி வருகிறார். நெல்சன் இயக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
‘தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட உள்ளார்களாம்.

இதையடுத்து விஜய்யின் ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்கி படத்தை அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் ‘தளபதி 67’ படத்தை அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி, 2022-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரே ஆண்டில் விஜய்யின் மூன்று படங்கள் வெளியாக உள்ளதாக கூறப்படுவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன், யோகிபாபு, வினய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தை வருகிற மார்ச் 26-ந் தேதி வெளியிட உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. பின்னர் சட்டசபை தேர்தல் காரணமாக படத்தின் ரிலீஸை தள்ளிவைப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற ரம்ஜான் பண்டிகையை ஒட்டி படத்தை பிரம்மாண்டமாக வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அனைவரும் தவறாமல் தேர்தலில் வாக்களிக்குமாறும், ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
தி நகர் சென்றபோது ‘கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா’ என்ற அங்காடித்தெரு பாடல் மனதிற்குள் ஒலித்துக் கொண்டிருந்ததாக வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.
வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த படம் ‘அங்காடித் தெரு’. சென்னை, தி நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபல ஜவுளிக்கடைகளில் வேலை செய்யும் ஆண்கள், பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை வெளிச்சம் போட்டு காட்டிய இப்படம், நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தி நகர், ரங்கநாதன் தெருவுக்குச் சென்றதைப் பற்றி இயக்குனர் வசந்த பாலன் தனது முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அதில், “புதிய திரைப்படத்தின் ஆடை அலங்காரப்பொருட்கள் வாங்குவதற்காக வேறு வழியின்றி 13 வருடங்களுக்கு பிறகு பழைய காதலியைப் பார்க்க செல்வதைப் போல இன்று ரங்கநாதன் தெருவுக்குள் நுழைந்தேன். அரை மணி நேரத்தில் சுடிதார் தைத்து தருகிறோம் என்கிற பெண்களின் குரல் என்னை வரவேற்றது.

வீட்டுக்குள் வானம் என்று விற்பனை செய்கிற ராஜாவையும், சமோசா விற்கும் பெரியவரையும், கர்ச்சீப் விற்கும் அப்துலையும் கண்டேன். மனம் அங்காடித்தெரு சூட்டிங் நாட்களை புரட்டிப் பார்த்தது. இன்று ரங்கநாதன் தெருவில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இளநீர் குடிக்க நான் முகக்கவசத்தை கழட்டும் போது ஓரிருவர் கண்டு கொண்டு, ஜெயில் வெளியீடு பற்றி விசாரித்தார்கள்.
ஒரு ஜவுளிக்கடையில் கதாநாயகிக்கு சுடிதார் வாங்க நின்றபோது மானேஜர் ஒருவர் அங்கு வேலை செய்யும் பெண்களை சகட்டுமேனிக்கு திட்டிக் கொண்டிருந்தார். வசவு சொற்களைக் கேட்க சகிக்காமல் தெருவை விட்டு வெளியே வந்தேன். கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா என்ற அங்காடித்தெரு பாடல் மனதிற்குள் ஒலித்துக் கொண்டிருந்தது”. என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தாதூன் படம் தமிழில் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது, இதில் பிரசாந்த் நாயகனாக நடிக்க அவரது தந்தை தியாகராஜன் இயக்குகிறார்.
இந்தியில் வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தின் மலையாள ரீமேக்கான ‘பிரம்மம்’ படத்தில் பிருதிவிராஜ், மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடிக்கின்றனர். தமிழில் மனிதன், முகமூடி, பில்லா 2, சத்யம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மலையாள நடிகர் கிருஷ்ணகுமாரின் மகளும், மலையாள நடிகையுமான அஹானா கிருஷ்ணாவையும் ‘பிரம்மம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருந்தனர்.
ஆனால் தற்போது திடீரென்று படத்தில் இருந்து அஹானாவை நீக்கி விட்டனர். அஹானாவின் தந்தை கிருஷ்ணகுமார் சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்ததால் அஹானாவை ‘பிரம்மம்’ படத்தில் இருந்து நீக்கி விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.

இதற்கு விளக்கம் அளித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரம்மம் படத்தின் நடிகர், நடிகை தேர்வில் எந்த அரசியல் தொடர்பும் இல்லை. படத்துக்கு அஹானாவை தேர்வு செய்து போட்டோஷூட் நடத்தியபோது கதாபாத்திரத்துக்கு அவர் பொருத்தமாக இல்லை என்று தெரிந்ததால் அவரிடம் தெரியப்படுத்தி மன்னிப்பு கேட்டோம். இதில் எந்த அரசியல் காரணமும் இல்லை” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
அந்தாதூன் படம் தமிழில் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது, இதில் பிரசாந்த் நாயகனாக நடிக்க அவரது தந்தை தியாகராஜன் இயக்குகிறார்.
ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் ஹாஸ்டல் படத்தின் முன்னோட்டம்.
பல வெற்றி படங்களை தயாரித்தவரும் விநியோகம் செய்வதவருமான ஆர்.ரவீந்திரன் தனது தயாரிப்பு நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக தயாரித்துள்ள புதிய படத்திற்கு “ஹாஸ்டல்” எனப் பெயரிட்டுள்ளனர்.
சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - பிரவீன் குமார், இசை - போபோ சசி, படத்தொகுப்பு - ராகுல்,






