என் மலர்
சினிமா செய்திகள்
இளையராஜாவின் அப்பா இறந்த நேரத்தில் கேரளாவில் 25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விற்கும்படியான சூழ்நிலையும் இளையராஜாவின் தாயாருக்கு ஏற்பட்டது.
இளையராஜாவின் அப்பா இறந்த நேரத்தில் கேரளாவில் 25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விற்கும்படியான சூழ்நிலையும் இளையராஜாவின் தாயாருக்கு ஏற்பட்டது.
வாழ்க்கையை நாடகம் என்பார்கள். இளையராஜா வீட்டிலோ, `நாடகம்'தான் இந்த திருவிளையாடலை செய்து முடித்து விட்டது.அதுபற்றி இளையராஜாவே தொடருகிறார்:
"அப்பா இறந்த நேரத்தில், ஆறு குழந்தைகளோடு அம்மா ரொம்பவே சிரமப்பட்டார். அப்பா தானாக உருவாக்கிய
25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் அப்போது எங்கள் குடும்பத்தின் சொத்தாக இருந்தது. அத்துடன் குடியிருந்த வீடும் சொந்தமாக இருந்தது. பண்ணைபுரத்தின் மேற்கே இருந்த குளத்தை நிலமாக மாற்றியதில், மூன்று ஏக்கர் நிலம் கைக்கு வந்தது.
பாவலர் அண்ணனுக்கு கம்ïனிஸ்டு கட்சி மீது ஈடுபாடு ஏற்பட்ட நேரம் அது. கட்சிக்காக தன் சொந்த செலவில் நாடகம் எழுதி அரங்கேற்றினார். "இரு கொலைகள்'', "பாட்டாளியின் குரல்'' என்ற இந்த இரண்டு நாடகங்களுக்கும் அண்ணனே கதை, வசனம், பாடல்கள் எழுதினார். டைரக்ஷனும் அவரே. அதோடு நாடகத்தில் காமெடி நடிகர் வேஷத்தையும் அவரே செய்தார்.
இந்த நாடகத்தில் நடிக்க உள்ளூர், பக்கத்து ஊர் என்று சிலரை தேர்ந்தெடுத்தார். இன்னும் சில நடிகர் - நடிகைகளை, மதுரையில் இருந்தும் கேரளாவில் இருந்தும் தேர்ந்தெடுத்தார்.
நாடக ஒத்திகை எங்கள் வீட்டில்தான் நடக்கும். இந்த ஒத்திகை மட்டுமே ஒரு மாதத்துக்கு மேலாக தொடர்ந்தது. அத்தனை பேருக்கும் எங்கள் வீட்டில்தான் சாப்பாடு. அம்மாவும், அக்கா கமலமும் சமைத்துப்போட்டார்கள். தினமும் ஆடு, கோழி, மீன் என்று சமையல்
நாடகம் நடக்க வேண்டிய தினத்தில்தான் சோதனை. நாடகத்தை காண்ட்ராக்ட் எடுத்திருந்த அண்ணனின் நண்பர் ஒருவர், டிக்கெட்டில் வசூலான பணத்தை எடுத்துக்கொண்டு `எஸ்கேப்' ஆகிவிட்டார். நாடக மேடை மைக்கில், அவர் பெயரைச் சொல்லி "எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்'' என்று அறிவிப்பு செய்து கொண்டிருந்தார்கள்.
ஓடியவர் ஓடியவர்தான். என்றாலும் அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த கூட்டத்தை ஏமாற்ற விரும்பாத அண்ணன், தனக்கே உரிய கலை ஆர்வத்தில் நாடகத்தை நடத்தி முடித்து விட்டார்.
நாடகம் முடிந்த பிறகுதான் பிரச்சினை. நாடகம் போட்ட தியேட்டருக்கு பணம், மைக்செட், மதுரையில் இருந்து வந்த சீன் செட்டிங்ஸ் மேக்கப் மேன், டிரஸ், விளம்பர பேனர்கள், போஸ்டர்கள், டிக்கெட், நோட்டீஸ், பிரிண்டிங் சார்ஜ், விளம்பர வண்டிக்கு வாடகை, பேண்டு செட், பின்னணி இசை, ஆர்மோனியம், தபேலா, பாடகர் - பாடகி என இத்தனை பேருக்கும் பணம் பட்டுவாடா செய்தாகவேண்டிய நிர்ப்பந்தம். ஆனால், அண்ணன் தனக்கே உரிய மன உறுதியுடன் பணத்தை குறிப்பிட்ட தினத்தில் தருவதாக எல்லோரிடமும் உறுதிமொழி கொடுத்தார். அவர்கள் அண்ணனை நம்பினார்கள்.
இதில் தியேட்டர் மட்டும்தான் பண்ணைபுரம் கிராமத்துக்கு சொந்தமானது. தியேட்டர் வாடகைக்கு மட்டும் கிராமத்தினரை அழைத்து விஷயம் சொல்லி சமாளித்தார்.
ஆனால் மற்றவர்களுக்கு? அத்தோடு நாடக சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் ஒரு மாதத்துக்கும் மேலாக சமைத்துப் போட்ட கடன்?
அண்ணனின் தர்ம சங்கடமான நிலையை அம்மா புரிந்து கொண்டார். அண்ணன், நாடகக்காரர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் நோக்கத்தில் அப்பா சுயமாக சம்பாதித்து வைத்திருந்த ஏலக்காய் தோட்டத்தை விற்கும் முடிவுக்கு வந்தார்.
இன்று கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள அந்த ஏலக்காய் தோட்டத்தை அன்று அம்மா விற்றது வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு. மகன் பட்ட கடனுக்காக சொத்தை விற்று பிரச்சினையை சரி செய்தார் அம்மா.
அந்த ஏலக்காய் தோட்டத்துக்கு அப்பா வைத்திருந்த பெயர் என்ன தெரியுமா? அசோகவனம்.''
இவ்வாறு குறிப்பிட்ட இளையராஜா, இசையில் தனக்கு ஆர்வம் ஏற்பட்ட நிகழ்ச்சி பற்றி கூறியதாவது:-
இன்றைக்கிருக்கும் "கரோக்கி'' சிஸ்டத்தை (திரை இசையுடன் சேர்ந்து பாடுவது) அந்தக் காலத்திலேயே பாவலர் அண்ணன் ஆரம்பித்து விட்டார். எனக்குத்தெரிய இந்த முறையைத் தொடங்கியவர் அண்ணனாகத்தான் இருக்கக்கூடும்.
ஒரு இசைத்தட்டை ஓடவிட்டதும் மிïசிக் தொடங்கும். அதில் பாடுகிற குரல் ஒலிக்கும் நேரத்தில் மைக்கில் அண்ணன் பாடுவார். இசைத் தட்டில் இருந்து எழுகிற வால்ïமை குறைத்து வைப்பார். இதில் என்னையும் பாட வைப்பார்.
"அமுதைப் பொழியும் நிலவே'', "உலவும் தென்றல் காற்றினிலே'', "திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்'' - இப்படி பல பாடல்களை நானும் பாடியிருக்கிறேன்.
ஊர்த் திருவிழாக்களில், அவ்வப்போது ஆர்மோனியம் - மிருதங்கம் சகிதம் கச்சேரி செய்ய ஆரம்பித்தார், அண்ணன். இதில் ஆர்மோனியம் வாசிக்க, சாக்ராபுரம் என்ற ஊரில் இருந்து சங்கரதாஸ் என்பவர் வருவார். வீட்டில் ஒத்திகை நடக்கும்.
அவருடைய வாசிப்பில் நானும், பாஸ்கரும் அதிகமாக ஈர்க்கப்பட்டு, ஒரு கட்டத்தில் அவரது ரசிகர்களாகவே மாறிப்போனோம்.
இப்படி இசையும், படிப்புமாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் எட்டாவது வகுப்பு வந்துவிட்டேன். அப்போது ஒரு நாள் அம்மா எங்கள் எல்லோருடைய ஜாதகங்களையும் பார்க்க விரும்பி, பழனிச்சாமி, சந்தானம் என்ற 2 ஜோதிடர்களை வரவழைத்திருந்தார்.
அந்த ஜோதிடர்களின் கணிப்பு தப்பியதே இல்லை. அத்தனை கச்சிதமாக இருக்கும்.
அந்த ஜோதிடர்கள் என் ஜாதகத்தை பார்க்கும்போது என்ன சொன்னார்கள் தெரியுமா? "இந்த ஜாதகன்தான் இந்த வீட்டுக்கு பெருவிரல் போல! ஆனால் இவன் எட்டாவதற்கு மேல் படிக்க முடியாது.''
அதிர்ந்தே போனேன். ஆனால் அதுதான் நடந்தது

கல்லூரி அகில், சதுரங்க வேட்டை இஷாரா நாயர், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா படத்தின் முன்னோட்டம்.
நிலா புரமோட்டர்ஸ், TN75 K K கிரியேஷன்ஸ், ஆர்ட்ஸ் லைன், துரை சுதாகர், திருமுருகன், இணைந்து தயாரிக்கும் படம் எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா. இதில் கல்லூரி அகில், சதுரங்க வேட்டை இஷாரா நாயர், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, சூப்பர் சுப்பராயன், கௌசல்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் வரும் மார்ச் 26 முதல் உலகமெங்கும் திரைக்கு வர விருக்கிறது.
கிராமத்தில் இருந்து சாதிக்க வேண்டும் என்று சென்னை கிளம்பி வரும் இளைஞன் தன்னுடைய முயற்சி தோல்வி அடைவதால் மீண்டும் தன் கிராமத்துக்கே சென்று மன தொய்வடையும் போது தன்னை பெரிதும் நம்பும் நடிகர் மொட்டை ராஜேந்திரன் அவருடைய உதவியுடன் மீண்டும் சென்னைக்கு வந்த யோகி பாபுவுடன் இணைந்து ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.
ஒளிப்பதிவு ரஹிம் பாபு. இசை வர்ஷன், ஜெய்டன். எடிட்டிங் சுரேஷ் URS. சண்டைப்பயிற்சி சூப்பர் சுப்பராயன். கலை ஜான் பிரிட்டோ. கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் இயக்குனர் கெவின்.
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ், சியான் 60 படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார்.
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி கவனம் பெற்ற அவர், ரஜினியின் பேட்ட படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனரானார்.
கார்த்திக் சுப்புராஜ் தற்போது விக்ரம் - துருவ் விக்ரம் நடிக்கும் சியான் 60 படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் படக்குழுவினர் உடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். வாணி போஜன், சிம்ரன் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் லாபம் படக்குழுவினர் திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘லாபம்’. எஸ்.பி.ஜனநாதன் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
இந்நிலையில், படக்குழுவினர் திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் படங்களில் தொனிக்கும் கருத்துகளுக்கும், ஒலிக்கும் போராட்டக் குரலுக்கும் என்றைக்கும் முடிவு கிடையாது. அவருடைய படங்களில் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் யாவும் காலத்துக்கும் பொருந்திப் போகக்கூடியவை. அப்படிப்பட்ட படைப்புகளில் ஒன்றுதான் எங்கள் நிறுவனமும் விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸூம் இணைந்து தயாரித்து விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லாபம்’ திரைப்படம்.
இந்தப் படம் திரைக்கு வருவதற்கான இறுதிக்கப்பட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்தத் தருணத்தில் எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் மறைவு மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.
அதேசமயம், எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் ‘லாபம்’ படத்தின் அனைத்துப் பணிகளையும் முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார். எஞ்சியிருக்கும் சில பணிகளை எங்கள் படக்குழுவினரே முடித்து வெளியுடவுள்ளோம். அனைத்து பணிகளையும் முடித்து ஏற்கெனவே திட்டமிட்டபடி வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடமாகவும், அவரின் ரசிகர்களுக்கான திரைப்படமாக ‘லாபம்’ இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமல் ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன், தன்னுடைய சோகத்தில் இருந்து மீட்க எது காரணம் என்பதை கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் வாரிசாக அறிமுகமானாலும் தனக்கான அடையாளத்தை அழுத்தமாக பதித்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, 'எழுத்து என்பது எப்போதுமே எனக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது.
நான் பாடல்கள் எழுதுகிறேன், கவிதைகள் எழுதுகிறேன், சோகமான தருணங்களில் அவை நம்மை நாம் சிறப்பான முறையில் வெளிப்படுத்த உதவுகின்றன என்று நான் நம்புகிறேன். நான் எழுதும் கவிதைகளுக்கும், கதைகளுக்கும் திரை வடிவம் கொடுக்க விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறேன்.
கடும் வேலைப்பளுவுக்கு இடையே எழுத்து மட்டுமே எனக்கு அவற்றிலிருந்து விடுபட ஒரு நிவாரணியாக இருக்கிறது. பாடல்கள் எழுதுவதும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு செயல். பல ஆண்டுகளாக நான் என் திறன்களைத் தொடர்ந்து கூர்தீட்டி வருகிறேன்''. இவ்வாறு ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.
நல்.செந்தில்குமார் இயக்கத்தில் மகேந்திரன், மியாஸ்ரீ நடிப்பில் வெளியாகி இருக்கும் நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு படத்தின் விமர்சனம்.
கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் நாயகன் மகேந்திரன். இவர் இருக்கும் ஊரில் கோவில் திருவிழா நடக்க இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு குடும்பத்தினரிடம் 1500 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இதில் ஊரில் இருக்கும் ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். மேலும் திருவிழா நடக்கும் போது மதுபோதையில் ரகளையும் செய்கிறார்.
இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்தவர் மறுநாள் இறந்து கிடக்கிறார். இதனால் திருவிழா நிறுத்தப்படுகிறது. மேலும் இறந்தவர் இரவு நேரத்தில் ஆவியாக வருவதாக பலரும் கூறுகிறார்கள். இறுதியில் அந்த ஊருக்கு என்னதான் ஆச்சு? ஆவியாக வந்து பயமுறுத்த என்ன காரணம்? நாயகன் மகேந்திரன் இதை கண்டுபித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மகேந்திரன், வழக்கம்போல் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். எந்த வேலையாக இருந்தாலும் காசு கொடுத்தால்தான் செய்வேன் என்கிற இவருடைய கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது. நாயகியாக வரும் மியாஸ்ரீ, மகேந்திரனை காதலிப்பது, பாடல்களுக்கு என்று வந்து செல்கிறார். ஆர்.சுந்தர்ராஜன், மனோஜ் குமார், பசங்க சிவக்குமார், அப்புக் குட்டி, தவசி, பெஞ்சமின், லொள்ளு சபா உதயா ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார்கள்.

சின்ன கதையை சஸ்பென்ஸ், திரில்லர் கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் நல்.செந்தில்குமார். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். கிராமத்தில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள் ஒரு பக்கம் நடக்கும் போது, தேவையில்லாத காட்சிகள் படத்திற்கு வந்து செல்வது பலவீனமாக அமைந்திருக்கிறது. 3 மணிநேர படத்திற்காக தேவையில்லாத விஷயங்களை திணித்தது போல் இருக்கிறது. திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
ஜே.ஆர்.கே.வின் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’ சுவாரஸ்யம் குறைவு.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கர்ணன்’ படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில், இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் மார்ச் 23-ம் தேதி டீசர் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் பிரபல நடிகைகளை சாடி வெளியிட்ட பதிவுக்கு ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி தீரத் சிங் ராவத் பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிவதை விமர்சித்தது சர்ச்சையாகி உள்ளது. அவர் பேசும்போது, “இளைய தலைமுறையினர் நாகரிகம் என்ற பெயரில் கிழிந்த ஜீன்ஸ் அணிகிறார்கள். இளம்பெண்களும் அணிகிறார்கள். நான் விமானத்தில் பயணித்தபோது தொண்டு நிறுவனம் நடத்தும் ஒரு பெண் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து இருந்தார். அவரால் சமூகத்தில் நல்ல தாக்கத்தை எப்படி உருவாக்க முடியும்’' என்றார்.
அவரது பேச்சை கண்டிக்கும் வகையில் நடிகைகளும், இளம்பெண்களும் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத்தும் லேசாக கிழிந்த ஜீன்ஸ் அணிந்துள்ள தனது புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு, “கிழிந்த ஜீன்ஸ் அணிய விரும்பினால் இந்த புகைப்படத்தில் குளிர்ச்சியாக இருப்பது போன்ற ஜீன்ஸை அணியுங்கள். அது ஸ்டைலாக தெரியும். அதற்கு மாறாக வீடு இல்லாத பிச்சைக்காரர்கள் போன்று கிழிந்த ஜீன்ஸை அணிய வேண்டாம். இளசுகள் பலர் தற்போது இப்படித்தான் அணிகிறார்கள்'' என்றார்.
இந்த கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிலர் கங்கனா அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் தீபிகா படுகோனே, சாரா அலிகான், டாப்சி, ஆலியா பட் உள்ளிட்டோரின் கிழிந்த ஜீன்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு இவர்களைத்தான் கங்கனா ரணாவத் சாடி உள்ளார் என்று பதிவுகள் வெளியிட்டுள்ளனர்.
If you want to wear ripped jeans make sure coolness quotient is of this magnitude as in these pics, so that it looks like your style not your state a homeless beggar who hasn’t got allowance from parents this month, most young people look like that these days #RippedJeansTwitterpic.twitter.com/hc14cLxQDE
— Kangana Ranaut (@KanganaTeam) March 18, 2021
திண்டுக்கல்லில் நடந்த விஜய்சேதுபதி சினிமா படப்பிடிப்பை பார்ப்பதற்கு ரசிகர்கள் திரண்டதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாநகராட்சி நகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள் திண்டுக்கல் பஸ்நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது பஸ்நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு நின்று கொண்டிருந்தனர். உடனே அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய சினிமா படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தது. இதனால் ரசிகர்கள் உள்பட ஏராளமானோர் அங்கு குவிந்தது தெரியவந்தது.

மேலும் அதில் பலர் முக கவசம் அணியவில்லை. இதுமட்டுமின்றி சமூக இடைவெளியை மறந்து அனைவரும் நெருக்கமாக நின்று சினிமா படப்பிடிப்பை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். இதனால் கொரோனா பரவும் வகையில் கூட்டம் கூடுவதற்கு காரணமாக இருந்ததாக, சினிமா படக்குழுவினருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் நடிகை ஷெரின் புதிய புகைப்படம் வெளியிட்டு மாப்பிள்ளை தேடி வருகிறார்.
செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஷெரின். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது குண்டாக இருந்த ஷெரின் தற்போது 10 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷெரின் தற்போது மண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘பொண்ணு ரெடி, மாப்பிள்ளை எங்கே?’ என்று பதிவு செய்திருக்கிறார்.
இதற்கு ரசிகர்கள் நான் இருக்கிறேன் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் சிலர், பொண்ணுக்கு பாட தெரியுமா? ஆட தெரியுமா? என்று கேள்வியும் கேட்டு வருகிறார்கள்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் முக்கிய அப்டேட்டை வில்லன் நடிகர் வெளியிட்டுள்ளார்.
‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து எச் வினோத்- அஜித் கூட்டணி ‘வலிமை’ படத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தில் ஹுமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இறுதியாக, சண்டைக் காட்சி ஒன்றை வெளிநாட்டில் படமாக்கப் படக்குழு பயணிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.
தற்போது இதுகுறித்துத் தெளிவான தகவலை படத்தில் வில்லனாக நடிக்கும் கார்த்திகேயா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். "நான் சந்தித்ததிலேயே மிகவும் எளிமையானவர் அஜித். அவருடன் 'வலிமை'யில் நடித்திருந்தது அற்புதமான அனுபவமாக இருந்தது. இன்னும் ஒரு சேசிங் காட்சியை ஸ்பெயின் நாட்டில் படம் பிடிக்கவுள்ளோம். ஸ்பெயின் அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்" என்று கார்த்திகேயா கூறியுள்ளார்.

இந்தப் படப்பிடிப்பு 3 நாட்கள் என்றும், இது முடிந்தால் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் தெரிகிறது. முன்னதாக, மே 1-ம் தேதி 'வலிமை' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் எனவும், அன்று முதல் விளம்பரப்படுத்தும் பணிகளும் தொடங்கும் என்றும் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் வாசிப்பு விழாவில் கபிலன் வைரமுத்து எழுதிய நூல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் தேசிய வாசிப்பு இயக்கத்தின் முக்கியமான நிகழ்வான வாசிப்பு விழாவில் கபிலன் வைரமுத்து எழுதிய மெய்நிகரி மற்றும் அம்பறாத்தூணி, சோ தர்மன் எழுதிய சூல் ஆகிய நூல்கள் இடம் பெறுகின்றன.
இது குறித்து வெளியாகியிருக்கும் பிரத்யேக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
நான்கு அதிகாரத்துவ மொழிகளில் சிங்கப்பூர் வாசகர்களின் வாசிப்பை ஊக்குவிக்க சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் சிறப்பு நிகழ்வுதான் சிங்கப்பூர் வாசிப்பு விழா. உரைகள், பட்டறைகள் போன்ற வழக்கமான நிகழ்ச்சிகளுக்கு அப்பால் எளிமையான முறையிலும் புதுமையான வழிகளிலும் வாசிப்பை அறிமுகம் செய்ய முனைகிறது வாசிப்பு விழா.

கலைச் சிற்பங்கள், விளையாட்டுகள், புதுமையான இலக்கியத் தடங்கள் போன்றவை அதில் அடங்கும். தேசிய வாசிப்பு இயக்கத்தின் மிக முக்கியமான நிகழ்வு வாசிப்பு விழா. இளம் எழுத்தாளர் கபிலன் வைரமுத்துவின் மெய்நிகரி என்ற நாவலும் அம்பறாத்தூணி என்ற சிறுகதைத் தொகுப்பும் (இரண்டாவது), சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர், சோ தர்மனின் சூல் என்ற நாவலும் வாசிப்பு விழாவின் சிறப்பு அம்சங்களாக இடம் பெறுகின்றன. நூல்கள் மூலமும் அவற்றைச் சுற்றிய உரையாடல்கள் மூலமும் கற்றலை ஊக்குவிப்பதற்கு பொருத்தமான நூல்களாக இவை அமைந்துள்ளன.
நூலக வாரியத்தின் வாசிப்பு விழாவில் எழுத்தாளர்கள் இருவரும் கெளரவிக்கப்பட விருக்கிறார்கள்.