search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    கங்கனா ரணாவத்
    X
    கங்கனா ரணாவத்

    பிரபல நடிகைகளை சாடிய கங்கனா... கலாய்க்கும் நெட்டிசன்கள்

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் பிரபல நடிகைகளை சாடி வெளியிட்ட பதிவுக்கு ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
    உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி தீரத் சிங் ராவத் பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிவதை விமர்சித்தது சர்ச்சையாகி உள்ளது. அவர் பேசும்போது, “இளைய தலைமுறையினர் நாகரிகம் என்ற பெயரில் கிழிந்த ஜீன்ஸ் அணிகிறார்கள். இளம்பெண்களும் அணிகிறார்கள். நான் விமானத்தில் பயணித்தபோது தொண்டு நிறுவனம் நடத்தும் ஒரு பெண் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து இருந்தார். அவரால் சமூகத்தில் நல்ல தாக்கத்தை எப்படி உருவாக்க முடியும்’' என்றார். 

    அவரது பேச்சை கண்டிக்கும் வகையில் நடிகைகளும், இளம்பெண்களும் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத்தும் லேசாக கிழிந்த ஜீன்ஸ் அணிந்துள்ள தனது புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு, “கிழிந்த ஜீன்ஸ் அணிய விரும்பினால் இந்த புகைப்படத்தில் குளிர்ச்சியாக இருப்பது போன்ற ஜீன்ஸை அணியுங்கள். அது ஸ்டைலாக தெரியும். அதற்கு மாறாக வீடு இல்லாத பிச்சைக்காரர்கள் போன்று கிழிந்த ஜீன்ஸை அணிய வேண்டாம். இளசுகள் பலர் தற்போது இப்படித்தான் அணிகிறார்கள்'' என்றார். 

    இந்த கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிலர் கங்கனா அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் தீபிகா படுகோனே, சாரா அலிகான், டாப்சி, ஆலியா பட் உள்ளிட்டோரின் கிழிந்த ஜீன்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு இவர்களைத்தான் கங்கனா ரணாவத் சாடி உள்ளார் என்று பதிவுகள் வெளியிட்டுள்ளனர்.



    Next Story
    ×