என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல படங்களில் நடித்து வரும் ரைசாவை ஹாலிவுட் நடிகைகளுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா வில்சன். அதன்பின் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தில் நடித்தார். இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது காதலிக்க நேரமில்லை, எப்.ஐ.ஆர் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். 

    ரைசா

    இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரைசா, தற்போது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் பிளாக் விடோ படத்தில் நடித்த ஸ்கார்லெட் ஜான்சன் மற்றும் கேட் வுமன் படத்தில் வரும் ஹாலே பெர்ரி போன்று இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

    ஹாலிவுட் நடிகைகள்
    நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான சாக்‌ஷி அகர்வால், அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை கொடைக்கானலில் நடைபெற்றுள்ளது.
    தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். 

    தற்போது நடிகை சாக்‌ஷி அகர்வால், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன. மேலும் புரவி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக ‘தி நைட்’ என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

    சாக்‌ஷி அகர்வால்

    இந்த படத்திற்கான பூஜை இன்று கொடைக்கானலில் எளிமையாக நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் இசையமைப்பாளர் விது கதாநாயகனாக நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி ரங்கா புவனேஷ்வர் என்பவர் இயக்குகிறார்.
    அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டாணாக்காரன்’ படத்தின் முன்னோட்டம்.
    இந்திய திரையுலகில் இதுவரை வெளிவராத ஒரு கதையில், விக்ரம் பிரபு நடித்து இருக்கிறார். இந்தப் படத்துக்கு ‘டாணாக் காரன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இயக்குனர் வெற்றிமாறனிடம் ‘வடசென்னை’, ‘விசாரணை’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த தமிழ், இந்தப் படத்தின் மூலம் இயக்குனர் ஆகியிருக்கிறார்.

    இப்படத்தில் விக்ரம் பிரபுவின் ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்து இருக்கிறார். லால் வில்லனாக வருகிறார். போஸ் வெங்கட், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். எஸ்.ஆர்.பிரபு தயாரித்து இருக்கிறார். 

    விக்ரம் பிரபு

    ‘டாணாக்காரன்’ பற்றி இயக்குனர் தமிழ் கூறியதாவது: “தமிழ்நாட்டில், 1997-ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தைக் கருவாகக் கொண்ட படம் இது. போலீஸ் வேலைக்குச் செல்லும் ஒரு இளைஞர், பயிற்சியின்போது சந்திக்கும் சம்பவங்களே கதை. இது, இந்திய சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத கதை.

    51 நாட்கள் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தி முடித்து விட்டோம். படத்தின் இறுதிக்கட்ட வேலைகளும் முடிவடைந்தன. படத்தை மே மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.” என கூறினார்.
    இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு நடிகர் தனுஷ், டுவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி கவனம் பெற்ற அவர், ரஜினியின் பேட்ட படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனரானார். 

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    தனுஷின் டுவிட்டர் பதிவு

    அந்த வகையில் டுவிட்டர் வாயிலாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் தனுஷ், தான் பணியாற்றிய இயக்குனர்களில் தலைசிறந்த ஒருவர் கார்த்திக் சுப்புராஜ் என புகழ்ந்துள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. 
    உப்பென்னா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை அடுத்து நடிகர் விஜய் சேதுபதிக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.
    தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் கடைசி விவசாயி, நவரசா, மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் உள்ளன. இவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

    அண்மையில், தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான உப்பென்னா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதனால் இவருக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.

    டிரைவிங் லைசன்ஸ் பட போஸ்டர்

    இந்நிலையில், மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘டிரைவிங் லைசன்ஸ்’ படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் ராம்சரண் கைப்பற்றி உள்ளார். இதில் பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ரவிதேஜா நடிக்க உள்ளாராம். மேலும் அப்படத்தில் இடம்பெறும் போலீஸ் கதபாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், அடுத்ததாக நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார்.
    ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர். 

    கமலின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த ஷங்கர், கொரோனா அச்சுறுத்தல் மற்றும் கமலின் தேர்தல் பணி காரணமாக அப்படத்தை கிடப்பில் போட்டுள்ளார். இதையடுத்து பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார். 

    ரன்வீர் சிங்

    இதனிடையே நடிகர் ரன்வீர் சிங்கும் இயக்குனர் ஷங்கரிடம் கதை கேட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், அதுகுறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இயக்குனர் ஷங்கர், ரன்வீர் சிங்கை வைத்து ‘அந்நியன்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருந்த ‘அந்நியன்’ திரைப்படம் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
    கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தும் படப்பிடிப்புக்கு சென்ற நடிகையின் பொறுப்பற்ற செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
    இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் கவுஹர் கான். இந்தி படங்களிலும் நடித்து வரும் இவர் மும்பையில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் இவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகள் கவுஹர் கானுக்கு அறிவுறுத்தினர். 

    ஆனால் நடிகை கவுஹர் கான், அதனை பொருட்படுத்தாமல் படப்பிடிப்புக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    கவுஹர் கான்

    இந்நிலையில், நடிகை கவுஹர் கானின் பொறுப்பற்ற செயலை கண்டித்துள்ள  சினிமா ஊழியர்கள் கூட்டமைப்பு, அவர் அடுத்த 60 நாட்களுக்கு படங்களில் நடிக்க தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நடிகர் அஜித் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது, இப்படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டைக் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அதனை விரைவில் வெளிநாட்டில் படமாக்க உள்ளனர். கடந்த மாதம் நடிகர் அஜித், சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு கால் டாக்ஸியில் வந்து பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். 

    இந்நிலையில், நடிகர் அஜித் ஆட்டோவில் முகக்கவசம் அணிந்தபடி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதைப்பார்த்த அஜித் ரசிகர்கள், ‘இதைவிட எளிமையாக ஒரு நடிகர் இருக்க முடியுமா... தல... தல தான்’ என வியந்து பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி நடிகர் அஜித் ஆட்டோவில் செல்லும் வீடியோவையும் வைரலாக்கி வருகின்றனர். 

    சிங்கம், வேல், ஆறு, சாமி, பூஜை போன்ற படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் ஹரி, தற்போது கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறாராம்.
    திரைப்பட இயக்குனர் ஹரி கடும் காய்ச்சலால் பழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹரியுடன் பணியாற்றிய நபருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ஹரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயக்குனர் ஹரிக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

    ஹரி

    இயக்குனர் ஹரி தற்போது அருண் விஜய்யின் 33-வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக பழனியில் நடைபெற்று வந்தது. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
    பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள புதிய படத்தில் ‘குக் வித் கோமாளி’ பிரபலம் ஒருவர் நடிக்க உள்ளாராம்.
    சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் இதில் நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

    புகழ்

    இந்நிலையில், சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் புகழ், இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர சந்தானத்துடனும் ஒரு படத்தில் நடிக்கிறார். இவ்வாறு அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வரும் புகழ், பிசியான நடிகராக வலம்வருகிறார்.
    ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள தலைவி படத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி ஆகியோர் நடித்துள்ளனர்.
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    கங்கனா ரணாவத்

    இந்நிலையில், தலைவி படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற மார்ச் 23-ந் தேதி நடிகை கங்கனா ரணாவத்தின் பிறந்தநாளன்று தலைவி படத்தின் டிரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தலைவி படம் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
    கணேஷ் விநாயகன் இயக்கத்தில் தருண் குமார், அபர்னதி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தேன்’ படத்தின் விமர்சனம்.
    குறிஞ்சிக்குடி மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் தருண் குமார். இவர் மலைத்தேன் எடுப்பதை தொழிலாகச் செய்து வருகிறார். மற்றொரு மலைக் கிராமத்தை சேர்ந்த நாயகி அபர்ணதி, தனது தந்தை தேவராஜ் உடல் நலத்திற்காக மலைத்தேன் தேடி செல்கிறார். அபர்ணதியின் நிலையை அறிந்து அவருக்கு உதவுகிறார் தருண் குமார்.

    இந்த பழக்கத்தில் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்து ஊர் மக்கள் முன்னிலையில், வாழை மட்டையை இரண்டாகப் பிரித்து சாமியிடம் திருமணத்துக்குச் சம்மதம் கேட்கிறார்கள். வாழை மட்டை சரியாக பிரியாததால், சாமி வரம் கொடுக்கவில்லை என்று கூறி, ஊர் பெரியவர்கள் திருமணத்துக்கு மறுக்கிறார்கள்.

    தேன் விமர்சனம்

    தருணை மறக்க முடியாத அபர்ணதி, ஊர் முடிவை எதிர்த்துத் திருமணம் செய்துகொள்கிறார். பெண் குழந்தை பிறந்த நிலையில், அபர்ணதிக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. மனைவி அபர்ணதியின் சிகிச்சைக்காக மலை கிராமத்தை விட்டு ஊருக்குள் வரும் தருணுக்கு பல சிக்கல்கள் ஏற்படுகிறது.

    இறுதியில் சிக்கல்களை கடந்து மனைவி அபர்ணதியின் உயிரை தருண் காப்பாற்றினாரா? அபர்ணதிக்கு உடல் நலக்குறைவு ஏற்படக் காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    'குங்கமப்பூவும் கொஞ்சும் புறாவும்', 'தகராறு' உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த தருண் குமார், இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இவரது வெள்ளந்தியான நடிப்பு மலைக் கிராமத்து மனிதனைக் கண்முன் நிறுத்துகிறது. கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

    தேன் விமர்சனம்

    நாயகியான அபர்ணதி, மலைக்கிராமத்து பூங்கொடியாகவே மாறி இருக்கிறார். இவர் பேசும் மொழி, உடல் மொழி அனைத்தும் கதாபாத்திரதிற்கு வலு சேர்த்திருக்கிறது. இவரின் மிகை இல்லாத நடிப்பு ரசிக்க வைக்கிறது. வாய் பேசாமல் நடித்திருக்கும் பேபி அனுஸ்ரீ பரிதாபத்தை ஏற்படுத்தி கண் கலங்க வைக்கிறார்.

    'தகராறு', 'வீர சிவாஜி' படங்களை இயக்கிய கணேஷ் விநாயகன், மலை கிராம மக்களின் வாழ்வியல், அரசியல், கார்ப்ரேட் நிறுவனம் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார். எளியதாக தொடங்கும் கதைக்களம் இறுதியில் பார்ப்பவர்களை கதைக்குள் ஒன்ற வைக்கிறது. அரசு அதிகாரிகளின் அலட்சியம், பண மதிப்பிழப்பு, கார்ப்பரேட் அரசியல், இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது, மலைக்கிராமங்கள் வேட்டையாடப்படுவது, காட்டுத்தீ என பல விஷயங்களை சொல்லி இருக்கிறார்.

    தேன் விமர்சனம்

    சுகுமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. அருவியின் ஆர்ப்பரிப்பு, மலையின் அழகு என ஒளிப்பதிவில் பளிச்சிடுகிறார். சனந்த் பரத்வாஜியின் இசையும் பின்னணியும் படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் ‘தேன்’ சுவை அதிகம்.
    ×