என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த நடிகர் ரியோவின் ஏப்ரல் மாத பிளான் பற்றி தற்போது வெளியாகியுள்ளது.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் ரியோ. இவர் நடிப்பில் தற்போது பிளான் பண்ணி பண்ணனும் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பானா காத்தாடி புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார். இதில் ரியோவிற்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் பால சரவணன், தங்கதுரை ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர்.

    பிளான் பண்ணி பண்ணனும்

    யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படம் நகைச்சுவை பொழுதுபோக்கு கதையம்சத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் டீசர், பாடல்கள் ஏற்கனவே வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
    முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன் மீது தனக்கு காதல் வர காரணமான கதை பற்றி அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் வீடியோ மூலம் கூறியிருக்கிறார்.
    காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த செல்வராகவன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே ஆகிய படங்களை இயக்கினார்.

    சமீபத்தில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்ததாக தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்க இருக்கிறார்.

    மனைவியுடன் செல்வராகவன்

    இந்நிலையில் இவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2010ஆம் ஆண்டும் செல்வராகவன் உருவாக்கி கானல் நீர் என்ற கதையை படித்துதான் செல்வராகவன் மீது காதல் வயப்பட்டேன் என்று கூறுகிறார். மேலும் கானல் நீர் திரைப்படம் தான் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் வெளியான இரண்டாம் உலகம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அமலாபால், சட்டை பட்டனை கழட்டி தத்துவம் பேசி இருக்கிறார்.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். இவரது நடிப்பில் அதோ அந்த பறவை போல, கடாவர் ஆகிய திரைப்படங்கள் உருவாகியுள்ளது. சமூக வலைத்தளத்தில் அதிகமாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் அமலா பால். 

    தற்போது சட்டை பட்டனை கழட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் அமலாபால், ‘என்னால் மாற்ற முடியாத விஷயங்களை இனி ஏற்றுக்கொள்வதில்லை. நான் இப்போது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை மாற்றுகிறேன். 
    நீங்கள் வெறுப்பதை ஏற்றுக்கொள்வதை நிறுத்தும்போது உங்கள் வாழ்க்கை எவ்வளவு கடுமையானதாக மாறும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது’ என்று பதிவு செய்திருக்கிறார்.


    தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஷாலினி பாண்டேவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
    தெலுங்கு சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி மிகவும் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டதால், தெலுங்கு சினிமாவை தவிர தமிழ், இந்தி எனப் பல மொழிகளிலும் கவனம் பெற்றார்.

    ஷாலினி பாண்டே

    இவர் தமிழில் “100% காதல்“, “கொரில்லா“, போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். அழகான குண்டு கன்னத்திற்கு ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில் ஷாலினி பாண்டே உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் உங்களுடைய குண்டு கன்னங்கள் எங்கே என்று கேட்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
    தமிழில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, சீதக்காதி, புரியாத புதிர் படங்களில் நடித்த காயத்ரி தற்போது கேரளா பக்கம் சென்றிருக்கிறார்.
    மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்'. இதில் சுராஜ், சௌபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர். 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குச் சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகள் கிடைத்தன.

    இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் கே.எஸ்.ரவிகுமார் நடித்துத் தயாரித்து வருகிறார். 'கூகுள் குட்டப்பன்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு தென்காசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' படத்தின் இயக்குநர் ரதீஷ் பாலகிருஷ்ணன் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். 

    காயத்ரி

    இதில் குஞ்சாக்கோ போபன் நாயகனாக நடிக்கவுள்ளார். இதில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் காயத்ரி. மலையாளத்தில் காயத்ரி அறிமுகமாகும் முதல் படமாக இது அமைந்துள்ளது. தற்போது தமிழில் விஜய் சேதுபதிக்கு நாயகியாக காயத்ரி நடித்துள்ள 'மாமனிதன்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
    பிரசாந்த் - சிம்ரன் நடித்து வரும் அந்தாதூன் ரீமேக் படத்தில் பிரபல நடிகை ஒருவர் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
    பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாகவும் நாயகியாக சிம்ரனும் நடிக்கிறார்கள்.

    தற்போது மேலும் ஒரு நாயகியாக பிரியா ஆனந்த் இணைந்திருக்கிறார். இவர் பாலிவுட்டில் ராதிகா ஆப்தே நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரசாந்தும், பிரியா ஆனந்தும் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    பிரியா ஆனந்த் - பிரசாந்த்

    இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    பல படங்களில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த கிஷோர், தற்போது அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
    தென்னிந்திய சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகர் என அழைக்கப்படுபவர் நடிகர் கிஷோர். இவர் தற்போது அறிமுக இயக்குனர் திரவ் இயக்கும் “ராஜாவுக்கு ராஜாடா” படத்தில் அப்பா கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 

    “ராஜாவுக்கு ராஜாடா” திரைப்படம் அப்பா மகள் உறவை அழகாக சொல்லும் ஒரு இசைத்திரைப்படமாக உருவாக்க இருக்கிறார் இயக்குனர் திரவ். இவர் இதற்கு முன்னால் தேசிய விருதை வென்ற “குற்றம் கடிதல்” படத்தில் இணை இயக்குனராகவும், பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் ஜோதிகா நடிப்பில் உருவான “மகளிர் மட்டும்” படத்தில் திரைக்கதையில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார். 

    கிஷோர்

    இப்படத்தில் கிஷோருடன் சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியான், தனன்யா, ஜஷ்வந்த் மணிகண்டன், கண்ணன் பாரதி, பிரபாகரன் ஜே, மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். சங்கர் ரங்கராஜன் இசையமைக்க, தேவராஜ் புகழேந்தி ஒளிப்பதிவு செய்கிறார்.
    பேட்ட, மாஸ்டர் படத்தை தொடர்ந்து தனுஷுடன் நடித்து வரும் மாளவிகா மோகனன் அடுத்ததாக பிரபல நடிகருடன் நடிக்க ஆசை இருப்பதாக கூறியிருக்கிறார்.
    ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

    மகேஷ் பாபு - மாளவிகா மோகனன்

    இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர், மகேஷ் பாபு - மாளவிகா மோகனன் புகைப்படத்தை வைத்து யாரெல்லாம் இந்த காம்பினேஷனை பார்க்க ஆசைப்படுறீங்க என்று கேட்க, அதற்கு முதல் ஆளாக மாளவிகா மோகனன் நான் என்று பதிலளித்து இருக்கிறார். மாளவிகா மோகனின் இந்த பதிலுக்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பு கொடுத்து வருகிறது.
    பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 40’ படப்பிடிப்பில் சூர்யா கலந்துக் கொண்டுள்ளதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
    சூரரைப்போற்று திரைப்படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். சூர்யா 40 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.

    சமீபத்தில் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். கொரோனா சிகிச்சைக்குப் பின் ஓய்வெடுத்து வருவதால் நடிகர் சூர்யா அதில் கலந்து கொள்ளவில்லை. தற்போது இதன் படப்பிடிப்பில் சூர்யா கலந்துக் கொண்டிருக்கிறார்.

    சூர்யா

    தான் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டதை புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்திருக்கிறார் சூர்யா. இதை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்து இருக்கிறார்கள்.
    நடிகர் விஜய்யின் ‘தளபதி 66’ படத்தை இயக்கப்போவதும், தயாரிக்கப்போவதும் யார் என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
    நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜய்யின் 66-வது படம் குறித்த தகவல்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. 

    லோகேஷ் கனகராஜ், விஜய்

    இந்நிலையில், தளபதி 66 படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்க உள்ளதாகவும், விஜய்யின் மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. குறுகிய கால தயாரிப்பாக இப்படம் உருவாக உள்ளதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    அறிமுக இயக்குனர் அருள் இயக்கத்தில் காசிமா ரஃபி, அகிலா நாராயணன், சர்ஜுன் நடிப்பில் உருவாகி உள்ள ‘காதம்பரி’ படத்தின் முன்னோட்டம்.
    அறிமுக இயக்குனர் அருள் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் காதம்பரி. கதாநாயகனாக அருள் மற்றும் கதாநாயகியாக காசிமா ரஃபி நடித்துள்ளார்கள். மேலும் அகிலா நாராயணன், சர்ஜுன், நிம்மி, பூஜிதா, சௌமியா, மகாராஜன் மற்றும் முருகானந்தம் ஆகியோர்களும் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு உருவாகி இருக்கும் படம் காதம்பரி.

    அருள்

    படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது: இந்த படத்தின் தலைப்பை நயன்தாரா - விக்னேஷ் சிவன் கூட்டணியில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான நானும் ரவுடிதான் படத்திலிருந்து நயன்தாராவின் பெயரான காதம்பரியை படத்தின் தலைப்பாக வைத்துள்ளேன். முழுக்க முழுக்க திகில் படமாக உருவாகி இருக்கிறது. குறைந்த பட்ஜெட் படமாக இருந்தாலும், இதுவரை தமிழ் சினிமாவில் வந்த பேய் படங்களை போன்று அல்லாது இது ஒரு வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என கூறினார்.
    மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து கர்ணன் திரைப்படம் உருவாகி உள்ளது.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது.

    இந்நிலையில், மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கர்ணன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி பொதுநல வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.

    கர்ணன் படத்தில் இடம்பெறும் ‘பண்டாரத்தி புராணம்’ எனும் பாடல் குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தும் விதமாக உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் பண்டாரத்தி புராணம் பாடலை யூடியூப் சேனல் மற்றும் கர்ணன் படத்திலிருந்து நீக்கவும், அதுவரை படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    மாரி செல்வராஜ், தனுஷ்

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு திரைப்பட தணிக்கைத்துறையின் மண்டல அலுவலர், கர்ணன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, பாடலை வெளியிட்ட யூடியூப் சேனல் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
    ×