என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தை அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கி உள்ளார்.
    அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இவர் மறைந்த இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குனர் ஆவார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். விவேக், மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

    யாதும் ஊரே யாவரும் கேளிர் படக்குழு வெளியிட்ட போஸ்டர்

    இப்படத்தில் இடம்பெறும் ‘முருகா’ எனும் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், இந்தப் பாடலை பாடியது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சுல்தான் படத்திற்காக நடிகர் சிம்பு பாடிய ‘யாரையும் இவ்ளோ அழகா’ பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால், யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் இடம்பெறும் ‘முருகா’ பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    ஆர்யா, சாயிஷா நடிப்பில் கடந்த வாரம் ஓடிடியில் வெளியான டெடி படத்தை இயக்குனர் சக்தி சவுந்தரராஜன் இயக்கி உள்ளார்.
    சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடிப்பில் கடந்த வாரம் ஓடிடியில் வெளியான படம் டெடி.  இப்படத்தில் இடம்பெறும் டெடி என்கிற பொம்மை கதாபாத்திரம் குழந்தைகள் ரசிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது. மேலும் வி.எப்.எக்ஸ் மூலம் அந்த டெடி கதாபாத்திரத்தை தத்ரூபமாக காட்டியதற்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், படத்தில் டெடியாக நடித்தது யார் என்பதை நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார். 

    ஆர்யாவின் டுவிட்டர் பதிவு

    இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “டெடி பட காட்சிகளின் பின்னால் இருக்கும் மனிதர் இவர் தான், மிஸ்டர் கோகுல். மேடை நாடக நடிகரான இவர், பொம்மைக்குரிய ஆடையை அணிந்து அந்த டெடியின் உடல் மொழியை வெளிப்படுத்தினார். தலையை மட்டும் 3டி முறையில் உருவாக்கி, ‘பர்பாமன்ஸ் கேப்சர்’ எனும் டெக்னாலஜியை பயன்படுத்தி படமாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் கோகுலுடன் எடுத்த புகைப்படத்தையும் ஆர்யா பதிவிட்டுள்ளார். 
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகை மீரா மிதுன், சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வந்தார்.
    தமிழில், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். அதன்பின் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சையான கருத்துகளை பதிவு செய்து வந்த இவர், சமீபத்தில் விஜய், சூர்யா, ஜோதிகா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்நிலையில், நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி அவதுாறாக பேசிதற்காக மன்னிப்புக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீராமிதுன். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: நான் இதுவரை நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி அவதுாறாகப் பேசியதற்கு, திருநங்கையும், அதிமுக பிரமுகருமான அப்சரா ரெட்டி தான் காரணம்.

    மீரா மிதுன்

    அப்சரா ரெட்டியின் சைபர் புல்லிங்கில் சிக்கி, நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி அவதுாறாகப் பேசி விட்டதாகவும், அதற்காக அவர்களிடமும், அவர்களது ரசிகர்களிடமும் மன்னிப்புக் கோருவதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார். மேலும் அப்சரா ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீரா மிதுன் கோரிக்கை விடுத்துள்ளார்.


    லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர்.
    தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் லெஜண்ட் சரவணன் அறிமுகமாகிறார். அவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்தை இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளனர். 

    இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

    லெஜண்ட் சரவணன்

    இப்படத்தின் படப்பிடிப்பு மணாலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு நடிகர் லெஜண்ட் சரவணன், நடிகை ஊர்வசி ரவ்துலா நடிக்கும் ரொமாண்டிக் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் லெஜண்ட் சரவணன் நடித்த ஆக்‌ஷன் காட்சியின் போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது.
    நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே சேதுபதி, செக்க சிவந்த வானம் போன்ற படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
    சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர். மகன் திரைப்படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. இதையடுத்து இவர் இயக்கும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.

    விஜய் சேதுபதி 46 பட போஸ்டர்

    விஜய் சேதுபதியின் 46-வது படமான இதற்கு டி இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பக்கா கமர்ஷியல் திரைப்படமாக இது உருவாக உள்ளதாம். நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே சேதுபதி, செக்க சிவந்த வானம் போன்ற படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர் என ஏராளமானோர் நடிக்கின்றனர்.
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் இந்தியன்-2. இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கிய படக்குழுவினர், பின்னர் ஐதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் படமாக்கினர். 

    விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஷுட்டிங், கடந்தாண்டு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக தடைபட்டது. அப்போது நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு ஓராண்டாகியும் இன்னும் தொடங்கப்படவில்லை. 

    காஜல் அகர்வால்

    இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படாததற்கான உண்மை காரணத்தை நடிகை காஜல் அகர்வால் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தியன் 2 படத்தில் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பணியாற்றி வந்ததாகவும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அவர்களால் தற்போது இந்தியா வர முடியாத சூழல் நிலவுகிறது. அதனால் தான் இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமாவதாக காஜல் தெரிவித்துள்ளார்.
    வெள்ளித்திரையில் எந்த மாதிரி சவாலான வேடங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன் என நடிகை அதிதி ராவ் ஹைதரி தெரிவித்துள்ளார்.
    தமிழில் கார்த்தியுடன் காற்று வெளியிடை படத்தில் நடித்து பிரபலமான அதிதிராவ் ஹைதரி செக்க சிவந்த வானம், சைக்கோ படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் மகா சமுத்திரம் படத்தில் நடித்து வருகிறார். 

    அவர் அளித்த பேட்டி வருமாறு: “எந்த மாதிரி சவாலான வேடங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன். வெள்ளித்திரையில் இப்படித்தான் நடிப்பேன். அந்த மாதிரி நடிக்க மாட்டேன் என்றெல்லாம் எந்த நிபந்தனையும் வைக்க கூடாது. உணர்ச்சிகரமாக நடிக்க வேண்டும் என்றாலும் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்றாலும் தயாராக இருக்க வேண்டும். 

    அதிதி ராவ்

    தேவையில்லாமல் காட்சிகளை திணிப்பது போல் இருக்க கூடாது. கதையில் அந்த காட்சி தேவையாக இருக்க வேண்டும். அப்படி அவசியமாக இருந்தால் முத்தம் கொடுத்தோ, கவர்ச்சியாகவோ நடிக்க தயாராக இருக்கிறேன்”. இவ்வாறு அதிதிராவ் கூறினார்.
    பாகுபலி படத்தின் முதல் இரண்டு பாகங்கள், மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது.
    ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த படம் பாகுபலி. இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து 2017-ல் வெளியான பாகுபலி படத்தின் 2-ம் பாகமும் வெற்றி பெற்றது. இந்த இரண்டு பாகங்களும் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இந்திய திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியது. 

    இந்நிலையில், பாகுபலி படத்தின் 3-ம் பாகத்தை இயக்க ராஜமவுலி தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை திரையரங்குகளுக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் நேரடியாக வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாகுபலி 3-ம் பாகத்தை ரூ.200 கோடி பட்ஜெட்டில் 9 தொடர்களாக எடுக்க முடிவு செய்துள்ளார்களாம். 

    ராஜமவுலி

    இதனை திரைப்படமாக எடுக்க அதிக வருடங்கள் பிடிக்கும் என்பதால் குறுகிய காலத்தில் படமாக்கி ஓ.டி.டி.யில் வெளியிடுகிறார்கள். பாகுபலி 3-ம் பாகத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் ராஜமவுலி தற்போது ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் முடிந்ததும் பாகுபலி 3-ம் பாகத்தை தொடங்க உள்ளாராம்.
    பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷாவின் புதிய படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
    திரிஷா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ’பரமபதம் விளையாட்டு’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை திருஞானம் இயக்கி இருக்கிறார். நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

    இப்படம் கடந்த வருடம் மார்ச் மாதம் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக வெளியாகாமல் இருந்தது. தற்போது இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    திரிஷா

    ஹாட் ஸ்டார் நிறுவனத்துடன் படக்குழுவினர் ஒப்பந்தம் செய்து விட்டதாகவும் தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
    தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, விவசாயம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர், குறுகிய காலத்தில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார். 

    இவர் தமிழில் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் நடித்துள்ளார். பாக்யராஜ் கண்ணன் இயக்கி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா விவசாயம் செய்யும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.


    நடிகர், நடன இயக்குனர், இயக்குனராக இருக்கும் பிரபுதேவா தமிழகச் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.

    அந்த வகையில் நடிகர் பிரபுதேவா தற்போது 2021 தேர்தல் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பாடி இருக்கிறார். தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் பிரபுதேவா கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போதும் இதேபோல தேர்தல் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
    விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இப்படத்தை லாபம் பட இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்கி இருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் விவேக், மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். நடிகைகள் கனிகா, ரித்விகா ஆகியோர் முக்கிய வேடங்களில் வருகின்றனர். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. 

    யாதும் ஊரே யாவரும் கேளிர்

    தற்போது இப்படத்தின் முருகா என்ற முதல் பாடலை மார்ச் 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    ×