என் மலர்
சினிமா செய்திகள்
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில், பிரபல நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சை வேட்பாளராக களமிறங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர். தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களும் ஒரு சிலர் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது நடிகர் மன்சூர் அலிகான் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். 18.03.2021 நாளை காலை 11 மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்கிறார். கடந்த மாதம் ‘தமிழ் தேசிய புலிகள் கட்சி’ தொடங்கி இருந்தாலும், இன்னும் முறையான அங்கீகாரம் கட்சிக்கு கிடைக்காததால், சுயேட்சையாக களம் இறங்குகிறார் மன்சூர் அலிகான்.
பிரபல நடிகராக இருக்கும் கார்த்தி - ரஞ்சனி தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு முருகன் பெயரை சூட்டி இருக்கிறார்கள்.
பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. முதல் படத்திலேயே முத்திரை பதித்த அவர், தொடர்ந்து பையா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, மெட்ராஸ் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
இந்த தம்பதிக்கு கடந்த 2013ம் ஆண்டு உமையாள் என்ற பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து சுமார் 7 ஆண்டுகள் கழித்து கடந்த அக்டோபர் மாதம் கார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தைக்கு ‘கந்தன்’ என்று முருக கடவுளின் பெயரை சூட்டி இருக்கிறார்.
மேலும் சமூக வலைத்தளத்தில் ‘கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக "கந்தன்" என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும். அன்புடன்... அப்பா’ என்று பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.
கண்ணா,
— Actor Karthi (@Karthi_Offl) March 17, 2021
அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக "கந்தன்" என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும்.
அன்புடன்...
அப்பா. pic.twitter.com/O6UvID6b7X
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிகாந்த், விஜய், சூர்யா போன்ற பிரபல நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் புதிய படத்தையும் தயாரிக்க இருக்கிறார்கள்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்க இருக்கிறார். இவர் இதற்குமுன் சிவகார்த்திகேயன் நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ’ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இமான் இசையமைக்க இருக்கும் இந்த படத்திற்கான வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.
We are happy to announce Makkal Selvan @VijaySethuOffl's #VJS46bySunPictures directed by @ponramVVS and music by @immancomposer.@kaarthekeyens@dineshkrishnanb@vivekharshan@onlynikil@StonebenchFilmspic.twitter.com/N4wq2zIvLU
— Sun Pictures (@sunpictures) March 17, 2021
தமிழில் மகாபிரபு, செல்வா, நிலாவே வா, சாக்லெட் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ், அடுத்ததாக ரஜினி படத்தை இயக்க இருக்கிறார்.
தமிழில் மகாபிரபு, செல்வா, நிலாவே வா, சாக்லெட் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். இவர் அங்காடி தெரு படத்தில் வில்லன் வேடத்திலும் நடித்திருந்தார். இவர் தற்போது ‘ரஜினி’ என்ற படத்தை இயக்க இருக்கிறார்.
வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த தயாரிப்பாளருடன் 13 வருடங்களுக்கு முன்பு அர்ஜுன் நடித்த வாத்தியார் படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கி அது மாபெரும் வெற்றி பெற்றது.
அதே வெற்றிக் கூட்டணி இந்த ‘ரஜினி’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

ரஜினி படத்தில் விஜய் சத்யா கதாநாயகனாகவும், கைநாட் அரோரா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் மரணமடைந்து 2 நாட்கள் ஆன நிலையில், அவரது வீட்டில் மற்றொரு சோகம் நடந்துள்ளது.
இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து லாபம் படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணியின் போது உடல் நலக்குறைவு காரணமாக எஸ்.பி.ஜனநாதன் காலமானார்.
இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தனர். நடிகர்கள், நடிகைகள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, பின்னர் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டு கண்ணீர் மல்க விடைக்கொடுத்தார்.

எஸ்.பி.ஜனநாதன் மரணமடைந்து இரண்டு நாட்களே ஆன நிலையில் சோகம் தாங்காமல் மாரடைப்பு காரணமாக அவரது தங்கை லட்சுமி நேற்று உயிரிழந்தார். அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் பாபி சிம்ஹா, காஷ்மீரா பர்தேஷி நடிப்பில் உருவாகி வரும் வசந்த முல்லை படத்தின் முன்னோட்டம்.
எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வரும் படம் வசந்த முல்லை. இந்தப் படத்தை குறும்பட இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கி வருகிறார். 'வசந்த முல்லை' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.

பாபி சிம்ஹாவுக்கு நாயகியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் சிலர் நடித்துள்ளனர். ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு ஆக்ஷன் த்ரில்லர் விருந்து காத்திருக்கிறது. இப்படத்திற்கு வசனம் - பொன்னி வளவன், ஒளிப்பதிவு - கோபி அமர்நாத், இசையமைப்பாளர் - ராஜேஷ் முருகேஷன் உள்ளிட்ட பலர் பணியாற்றி வருகிறார்கள்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் காஜல் அகர்வால், அடுத்ததாக பிரபல நடிகரின் தந்தைக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் காஜல் அகர்வால். இவர் கைவசம் தற்போது இந்தியன் 2, பாரீஸ் பாரீஸ், ஹேய் சினாமிகா ஆகிய படங்கள் உள்ளன. சமீபத்தில் தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவை திருமணம் செய்து கொண்ட காஜல், திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா, விஷ்ணு மஞ்சுவுடன் மொசகல்லு போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள காஜல் அகர்வால், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.

சமீபத்திய பேட்டியில் இதனை உறுதிசெய்த காஜல் அகர்வால், நாகார்ஜுனாவுடன் நடிக்க வேண்டும் என்கிற தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போவதாக தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தாவின் கணவரும், நடிகருமான நாகசைதன்யாவின் தந்தை தான் நாகார்ஜுனா என்பது குறிப்பிடத்தக்கது. நாக சைதன்யாவுடன் ஏற்கனவே தாதா படத்தில் நடித்துள்ள காஜல் அகர்வால், நாகார்ஜுனாவுடன் நடிப்பது இதுவே முதன்முறை.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் கூட்டணியில் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் உருவாகி உள்ளது.
பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் தான் தற்போது தமிழ்நாட்டின் பரபரப்பு. இளைஞர்கள் மத்தியில் இந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடல் ஏஆர் ரகுமான் சுயாதீன கலைஞர்களுக்காக உருவாகியுள்ள மாஜா என்ற தளத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. தீ பாடிய இந்தப் பாடலுக்கு அவரின் தந்தை சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், என்ஜாய் எஞ்சாமி பாடலை கேட்ட இயக்குனர் செல்வராகவன், அக்குழுவினரை வியந்து பாராட்டி உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ‘என்ஜாய் எஞ்சாமி’ என்ன ஒரு பாட்டு, இப்பாடல் உருவாக்கமும் மிகவும் பிடித்திருந்தது. தீ, அறிவு மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என செல்வராகவன் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தடகள வீராங்கனை சாந்தியின் வாழ்க்கையில் நடந்த திருப்பங்கள் நிறைந்த சம்பவங்களை மையமாக வைத்து ‘சாந்தி செளந்தரராஜன்’ திரைப்படம் உருவாக உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை சாந்தி செளந்தரராஜன் வாழ்க்கை சினிமா படமாகிறது. சாந்தி செளந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த திருப்பங்கள் நிறைந்த சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது.
அறிமுக இயக்குனர் ஜெயசீலன் தவப்புதல்வி இப்படத்தை இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்கிறார். புதுக்கோட்டை அருகே உள்ள சாந்தி செளந்தரராஜனின் கிராமத்தில் படப்பிடிப்பை தொடங்கி பஞ்சாப், கத்தார், ஓமன் ஆகிய இடங்களில் நடத்த உள்ளனர்.

இதனிடையே இப்படத்தில் சாந்தி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்நிலையில், அதுகுறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாந்தி செளந்தரராஜன் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கவில்லை என அவரின் பி.ஆர்.ஓ தெரிவித்துள்ளார்.
குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை கனிகா, அங்கு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
5 ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கனிகா. சேரன் நடித்த ஆட்டோகிராப், அஜித் நடித்த வரலாறு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார். வாய்ப்பு கிடைக்காததால் சிறு வேடங்களில் நடித்து வந்தார். மலையாள நடிகையான இவர் குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வருகிறார். திருமணமாகி அவருக்கு பத்து வயதில் மகன் உள்ளார். தினமும் உடற்பயிற்சி செய்து உடலை பிட்டாக வைத்துள்ள அவர், இப்போதும் இளமை தோற்றத்தில் காணப்படுகிறார்.

நடிகை கனிகா எப்போதும் சமூக வலைதளங்களில் தீவிரமாக இருப்பவர். இந்நிலையில், குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை கனிகா, அங்கு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிகினி உடையில் போஸ் கொடுத்தவாரு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளர் இளையராஜாவை அவரது புதிய ஸ்டுடியோவில் சமீபத்தில் சந்தித்த நடிகர் விவேக், அவரிடம் பாராட்டு பெற்றுள்ளார்.
கொரோனா காரணமாக நாடெங்கும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் போது தனது மனதுக்கு பிடித்த இளையராஜா பாடல்களை பியானோவில் கற்றுக் கொண்டு, இசைஞானி இளையராஜாவிடமே பாராட்டு பெற்றிருக்கிறார் நடிகர் விவேக்.
இதை பற்றி விவேக் நெகிழ்ச்சியுடன் கூறியதாவது: “என் மகன் வாசித்த பியானோவில் இசைஞானியின் பாடல்களை வாசிக்க பழகினேன். அதில் எனக்கு மிகவும் பிடித்தமானது 'உன்னால் முடியும் தம்பி' திரைப்படத்திற்காக இசைஞானி இசை அமைத்த 'இதழில் கதை எழுதும் நேரமிது...' பாடல் ஆகும்.
ராஜா சாரை மரியாதை நிமித்தமாக அவரது புதிய ஸ்டுடியோவில் சமீபத்தில் சந்தித்தேன். அப்போது புத்தர் சிலை ஒன்றை நினைவுப் பரிசாக அவருக்கு அளித்தேன். அவரிடம் உரையாடிய போது, உங்கள் இன்ஸ்பிரேஷனில் நான் பியானோ வாசிக்க கற்றுக்கொண்டேன் என்று கூறி நான் வாசித்த 'இதழில் கதை எழுதும் நேரமிது...' காணொளியை காண்பித்தேன். அதை பார்த்துவிட்டு அவர் பாராட்டினார்.

இளையராஜாவுடனான உரையாடலின் போது நான் ஒரு பியானோ வாங்கி உள்ளதையும், அடுத்த சந்ததியினரும் நினைவு கூற வேண்டும் என்பதற்காக அவரது புகைப்படத்தையும் ஆட்டோகிராப்பையும் அதில் பதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் கூறினேன்.
அதைக்கேட்ட இசைஞானியும், என்னுடைய வேண்டுகோளை நிறைவேற்றும் விதத்தில் தன்னுடைய புகைப்படத்தில் ‘இறையருள் நிறைக’ என்று எழுதி கையெழுத்திட்டு தந்துள்ளதாக” விவேக் கூறினார்.
விக்ரம், துருவ் விக்ரம் முதன்முறையாக இணைந்து நடிக்கும் ‘சியான் 60’ படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் ‘சியான் 60’. இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரம் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
மேலும் இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘சியான் 60’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் இளம் நடிகர் சனத் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட, மெர்குரி போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






