என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்டபோது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது, முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் நாட்டில் வேகமாக பரவி வருகிறது.

    இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தடுப்பூசி போட்டுக் கொண்டார். நேற்று நடிகை நயன்தாரா, தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சென்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

    நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்டபோது எடுத்த புகைப்படம்

    இந்நிலையில், நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்டபோது எடுத்த புகைப்படத்தில், நர்ஸ் கையில் தடுப்பூசியே இல்லை என்றும், வெறும் விரல்களால் தடுப்பூசி போடுவது போல போஸ் கொடுத்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது. நயன்தாராவின் புகைப்படங்களை பகிர்ந்த நெட்டிசன்கள் பலரும் ஊசி எங்கே என கமெண்ட்டுகளைப் பதிவிட்டு வருகிறார்கள். 
    வறுமையில் வாடும் நடிகை பாவலா சியாமளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் சிரஞ்சீவிக்கு பாராட்டுக்கள குவிந்த வண்ணம் உள்ளன.
    பழம்பெரும் தெலுங்கு நடிகையான பாவலா சியாமளா, கடந்த 1984-ல் வெளியான சேலஞ்ச் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து சுவரணகமலம், பாபாய் ஓட்டல், கோதண்ட ராமுடு, இந்த்ரா, கட்கம் கவுரி, பிளேடு பாப்சி, ரெயின்பொப், குண்டூர் டாக்கீஸ் உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார்.

    இவர் நடிப்பில் கடைசியாக 2019-ல் மதுவடலரா படம் வந்தது. அதன்பின் கொரோனாவால் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை. இதனால் வருமானம் இன்றி கஷ்டப்படுவதாக கூறிவந்தார். சியாமளாவின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். 

    சிரஞ்சீவி, பாவலா சியாமளா

    இந்நிலையில், வறுமையில் வாடும் நடிகை சியாமளா, தனக்கு திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்காக வழங்கப்பட்ட விருதுகளை விற்று இருக்கிறார். சியாமளா கஷ்டப்படுவதை அறிந்த தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் தெலுங்கு திரைப்பட சங்கத்தின் மூலம் மாதம் அவருக்கு 6 ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கவும் வழிவகை செய்துள்ளார் சிரஞ்சீவி. அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
    தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
    சிவா - அஜித் கூட்டணி முதன்முறையாக இணைந்து பணியாற்றிய படம் வீரம். கடந்த 2014-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழை தொடர்ந்து, தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்க கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வரவேற்பை பெற்றது.

    இதையடுத்து இந்தியிலும் வீரம் படத்தை ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்தன. இந்தி ரீமேக்கில் அஜித் கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிப்பதாக இருந்தது. பின்னர் அவர் விலகியதால், தற்போது அவருக்கு பதிலாக சல்மான்கான் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

    சல்மான்கான்

    இந்த படத்துக்கு ‘பை ஈத் கபி தீவாளி’ என பெயரிட்டுள்ளனர். கொரோனா பரவல் குறைந்த பின் படப்பிடிப்பை முழு வீச்சில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே தேர்வாகி உள்ளார். தெலுங்கு நடிகையான பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். 

    ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படும் நிலையில், தற்போது அஜித்தின் வீரம் படமும் அங்கு ரீமேக் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது, முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் நாட்டில் வேகமாக பரவி வருகிறது.

    இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

    இந்நிலையில், நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    "இன்றோடு உன் தரித்திரம் முடிந்தது'' என்று வாலியிடம் முக்தா சீனிவாசன் சொன்னது உண்மை ஆயிற்று.
    "என் படங்களுக்கு `வாலி' என்னும் புதிய கவிஞர்தான் இனி பாட்டு எழுதுவார்'' என்று பொதுக்கூட்டத்திலேயே எம்.ஜி.ஆர். அறிவித்தார்.

    "இன்றோடு உன் தரித்திரம் முடிந்தது'' என்று வாலியிடம் முக்தா சீனிவாசன் சொன்னது உண்மை ஆயிற்று.

    விஸ்வநாதன் -ராமமூர்த்தியுடன் பணியாற்றத் தொடங்கியவுடனேயே, வாலியை கோடம்பாக்கம் கவனிக்கத் தொடங்கியது.

    கம்பெனி கம்பெனியாக, வாலியின் திறமை பற்றி எம்.எஸ்.விஸ்வநாதன் கூறியதன் பயனாக, வாய்ப்புகள் குவியலாயின.

    "சாரதா'' படத்திற்கு பிறகு டைரக்டராக பெரும் புகழ் பெற்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் இருந்து ஒரு நாள் வாலிக்கு அழைப்பு வந்தது. வாலி அவரை சந்தித்தார்.

    "எம்.எஸ்.வி. உங்களைப் பற்றி நிறைய சொன்னார். முதலில் இப்போது ஒரு பாட்டு எழுதுங்கள். மற்றதை பிறகு பார்ப்போம்'' என்றார், கோபாலகிருஷ்ணன்.

    "ரொம்ப நன்றி சார்!'' என்றார் வாலி.

    "எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு எழுதின ஏதாவது ஒரு பாட்டை சொல்லுங்கள்'' என்று கே.எஸ்.ஜி. கேட்டார்.

    "உறவு என்றொரு சொல் இருந்தால், பிரிவு என்றொரு பொருளிருக்கும். காதல் என்றொரு கதை இருந்தால், கனவு என்றொரு முடிவிருக்கும்'' என்ற பாடலை, மெட்டோடு வாலி பாடிக்காட்டினார். இது, "இதயத்தில் நீ'' என்ற படத்துக்காக எழுதப்பட்ட பாடல்.

    "ஓகே! பாடல் நன்றாக இருக்கிறது. ஒரு பானை சேற்றுக்கு ஒரு அரிசி பதம். நீங்கள் போய்விட்டு, நாளைக்கு வாருங்கள். கார் அனுப்புகிறேன்'' என்றார், கோபாலகிருஷ்ணன்.

    நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்க, கிளப்ஹவுசுக்குத் திரும்பினார், வாலி.

    சொன்னபடி, மறுநாள் வண்டி அனுப்பினார், கோபாலகிருஷ்ணன். எம்.எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும், பக்கவாத்தியக்காரர்களுடன் அமர்ந்திருந்தார்கள்.

    படத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியை விவரித்து, அதற்கான தாலாட்டுப் பாடலை எழுதும்படி வாலியிடம் கோபாலகிருஷ்ணன் சொன்னார்.

    "அத்தைமடி மெத்தையடி, ஆடி விளையாடம்மா'' என்ற பல்லவியை எழுதி, விஸ்வநாதனிடம் கொடுத்தார். அதை அவர் படித்துப் பார்த்துவிட்டு, கே.எஸ்.ஜி.யிடம் நீட்டினார்.

    ஒரு சிட்டிகை பொடியை உறிஞ்சிவிட்டு, பல்லவியை கே.எஸ்.ஜி. படித்துப் பார்த்தார். மகிழ்ச்சியுடன் வாலி முதுகில் ஒரு தட்டு தட்டினார்.

    கோபாலகிருஷ்ணனின் முதல் தயாரிப்பான "கற்பகம்'' படத்துக்கு அனைத்துப் பாடல்களையும் வாலிதான் எழுதினார். அந்தப் படம், அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை தேடித்தந்தது.

    ஜி.என்.வேலுமணியின் சரவணா பிலிம்ஸ், வரிசையாக வெற்றிப் படங்களைத் தயாரித்து வந்தது. ஒருநாள், எம்.எஸ்.விஸ்வநாதன் தன்னுடைய காரை வாலிக்கு அனுப்பி, சரவணா பிலிம்சுக்கு வரச்சொன்னார்.

    வாலி உடனே புறப்பட்டுச் சென்றார். வாலியை வேலுமணிக்கு விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்தார்.

    சரவணா பிலிம்ஸ் தயாரிக்க இருக்கும் படத்தின் முழுக் கதையையும் கதாசிரியர் சக்தி கிருஷ்ணசாமி சொன்னார்.

    "வாலி! கதையைக் கேட்டுட்டீங்க! இந்தக் கதைக்கு ஐந்து எழுத்தில் வருவது மாதிரி ஒரு `டைட்டில் சொல்லுங்க!'' என்றார், வேலுமணி.

    உடனே "படகோட்டி'' என்று சொன்னார், வாலி.

    "பிரமாதம்'' என்று கூறியபடி, தன் கதர் ஜிப்பாவில் இருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து வாலியின் கையில் திணித்தார், வேலுமணி.

    "படகோட்டி''க்கு இரண்டு பாடல்கள் பதிவாயின. முன்பு இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசனால் நிராகரிக்கப்பட்ட "கொடுத்ததெல்லாம் கொடுத்தான், யாருக்காகக் கொடுத்தான்?'' என்ற பாடலும் விஸ்வநாதன் இசை அமைப்பில், டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பிரமாதமாக அமைந்தது.

    "படகோட்டி'' படத்துக்கு வாலி பாட்டு எழுதுகிறார் என்பது, அதுவரை எம்.ஜி.ஆருக்குத் தெரியாது. இரண்டு பாடல்கள் பதிவான பிறகு, அவற்றை ராமாவரம் தோட்டத்துக்கு வேலுமணி கொண்டு சென்று, எம்.ஜி.ஆருக்குப் போட்டுக் காட்டினார்.

    பாடல்கள் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப்போயின.

    அன்று மாலை, பரங்கிமலையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், எம்.ஜி.ஆர். பேசினார். "என்னுடைய படங்களுக்கு வாலி என்னும் புதிய கவிஞர்தான் இனி பாட்டுகள் எழுதுவார்'' என்று அக்கூட்டத்தில் அறிவித்தார்.

    இதுபற்றி, வாலி கூறியிருப்பதாவது:-

    "அப்போது எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் நிறைய இடைவெளி ஏற்பட்டிருந்தது. என்னைக் கொண்டு அதை சரி செய்து கொள்ளலாம் என்று எம்.ஜி.ஆர். எண்ணினார். அவர் எண்ணத்திற்கேற்ப என்னுடைய வளர்ச்சியும் அமைந்தது.

    `படகோட்டி'யின் பாடல்கள் பெரும்பாலும் பதிவாகிவிட்ட நிலையில், ஒரே ஒரு பாடல் எழுதி ஒலிப்பதிவு செய்யவேண்டியிருந்தது.

    அந்த நேரத்தில் நான் கடுமையான ஜ×ரத்தால் பாதிக்கப்பட்டு, வீட்டில் படுத்த படுக்கையாகக் கிடந்தேன்.

    வேலுமணி அவர்களுக்கோ, பாட்டு மிகமிக அவசரத்தேவை. உடனே ஒலிப்பதிவு செய்து மறுநாள் படப்பிடிப்பை நடத்தியாக வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் இன்னும் மூன்று மாதத்திற்கு எம்.ஜி.ஆர். கால்ஷீட் கிடைப்பது கடினம்.

    இந்த ஒரு பாட்டை மட்டும், வேறு யாரையாவது வைத்து எழுதிவிடலாம் என்ற நிலை வந்தபோது, விஸ்வநாதன் அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

    "அருமையான பாடல்களை வாலி அண்ணன் இந்தப் படத்துல எழுதியிருக்காரு. இந்த ஒரு பாட்டுக்காக இன்னொருவரைத் தேடிச் செல்வது தர்ம நியாயமல்ல...'' என்று வாதாடினார்.

    ஆர்மோனியப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, பக்கவாத்தியக்காரர்களோடு என் வீட்டிற்கே வந்துவிட்டார்.

    அப்போது நான் தனிக்கட்டை; திருமணமாகவில்லை.

    படுக்கையில் படுத்தவாறே, விஸ்வநாதன் அவர்களின் வர்ணமெட்டிற்கேற்ப நான் வார்த்தைகளைச் சொல்ல, உதவி இயக்குனர் ஒருவர் அதை எழுதி முடித்தார்.

    "அழகு ஒரு ராகம்; ஆசை ஒரு தாளம்'' என்பதே அந்தப்பாடல்.''

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
    பிரபல இயக்குனர் ஷங்கரின் தாயார் எஸ். முத்துலட்சுமி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவரின் தயார் எஸ். முத்துலட்சுமி, 88 வயதான இவர் இன்று சென்னையில் காலமானார். வயது மூப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்துள்ளது. அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஷங்கருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    ஹாசிம் மரிக்கார் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சந்திரிகா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் உன் காதல் இருந்தால் படத்தின் முன்னோட்டம்.
    கேரளாவில் பிரபலமான 'மரிக்கார் ஃபிலிம்ஸ்' என்ற நிறுவனம் முதல் முதலாக தமிழில் தயாரித்துள்ள படம் 'உன் காதல் இருந்தால்' . தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக சந்திரிகா ரவி, லெனா, ஹர்ஷிகா பூனாச்சா ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். இப்படத்தில் ரியாஸ்கான் முதல்முறையாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஸ்ரீகாந்த், சந்திரிகா ரவி 

    கஸ்தூரி இரட்டை வேடத்தில் நடிக்க, மக்பூல் சல்மான், வையாபுரி, சிராக் ஜானி, ஜென்சன், கிரேன் மனோகர், சோனா ஹைடன், சிரியா ரமேஷ், சாக்ஷி திவிவேதி, மற்றும் காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். சாஜித் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாய் சுரேஷ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். மன்சூர் அஹமத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை ஸ்ரீகாந்த் தேவா மேற்கொண்டுள்ளார். 
    பிரபுதேவா நடிப்பில் உருவாகி உள்ள படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
    பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’.  நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    நிவேதா பெத்துராஜ், பிரபுதேவா

    இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கேஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக இது உருவாகி உள்ளது. சமீபத்தில் பிரபுதேவா இயக்கத்தில் உருவான ராதே எனும் இந்தி படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    நடிகை நயன்தாரா, தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த, விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் நயன்தாரா. ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், இடையிடையே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார். 

    நயன்தாராவை முதன்மைப்படுத்தி வந்த அறம் படம், அவருக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதையடுத்து கோலமாவு கோகிலா, டோரா, இமைக்கா நொடிகள், ஐரா ஆகிய படங்களிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

    நயன்தாரா

    நடிகை நயன்தாரா, தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த, விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு எடுத்து கதை கேட்டு வருகிறாராம் நயன்தாரா. தற்போது அவர் கைவசம் உள்ள நெற்றிக்கண் படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
    பிரபல எழுத்தாளர் கி.ரா தனது அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பார் என நடிகர் சிவகுமார் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
    பிரபல எழுத்தாளர் கி.ரா என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் (99), வயது மூப்பால் புதுச்சேரியில் காலமானார். கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் 1922-ம் ஆண்டு பிறந்தவர் கி.ரா. ஏழாம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்த கி.ரா. பின்னர் எழுத்தாளராக மாறினார்.

    தற்போது புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வந்த இவர், வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில் கி.ரா.வின் மறைவுக்கு நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: “நான் பிறந்த பத்து மாதத்தில் என் தந்தையை இழந்துவிட்டேன். தற்போது 80 வயதில் எனது ஞானத்தந்தை 99 வயது வாழ்ந்த கி.ரா.வை இழந்துவிட்டேன். கி.ரா.வும், கணபதி அம்மாளும் எனக்கு இன்னொரு தாய்-தந்தையர். எனக்கு அவருக்கும் 35 வருடகாலமாக உறவு உண்டு. அவர் சம்பந்தபட்ட பல விழாக்களில் புதுச்சேரி சென்று கலந்து கொண்டிருக்கிறேன்.

    சிவகுமார்

    அந்த மகத்தான மனிதர் கரிசல் மண்ணைப் பற்றி எழுதிய கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், கரிசல்காட்டு கடுதாசி, வட்டார வழக்கு சொல்லகராதி போன்ற அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். இந்த கொரோனா பொது முடக்கத்தால் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செய்ய முடியாததற்கு மனமார வருந்துகிறேன். மீண்டும் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்”. இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.
    மருத்துவமனையின் அத்தனை சங்கிலிகளிலிருந்தும் விடுபட்ட சிட்டுக்கிருவியாய் நேற்றிரவு இல்லம் திரும்பினேன் என இயக்குனர் வசந்த பாலன் கூறியுள்ளார்.
    2002-ல் வெளியான ஆல்பம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்த பாலன். இதையடுத்து இவர் இயக்கிய ‘வெயில்,’ ‘அங்காடித்தெரு’, ‘காவியத் தலைவன்’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக இவர் இயக்கிய வெயில் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.

    தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஜெயில்’. ஜி.வி.பிரகாஷ், அபர்னதி நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அடுத்ததாக அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தை இயக்கி வருவதுடன், அப்படத்தை தனது பள்ளி பருவ நண்பர்களுடன் இணைந்து தயாரித்தும் வருகிறார்.

    இதனிடையே இயக்குனர் வசந்தபாலன் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், 20 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்ற பின் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள இயக்குனர் வசந்தபாலன், நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

    வசந்த பாலன்

    இதுகுறித்து அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “மருத்துவமனையின் அத்தனை சங்கிலிகளிலிருந்தும் விடுபட்ட சிட்டுக்கிருவியாய் நேற்றிரவு இல்லம் திரும்பினேன். நட்பின் கரங்கள் எனை அன்பின் சிப்பியில் அடைகாத்து அருளியதால் சுகமாய் இல்லம் திரும்பியிருக்கிறேன். 

    நன்றியை விட உயர்ந்த வார்த்தை உண்டெனில், உணர்ச்சிக்கரமான வார்த்தை உண்டெனில், கண்ணீர் கசியும் வார்த்தை உண்டெனில், அதை என் நட்பின் திசையெங்கும் படைக்கிறேன். ஒரு மாத பூர்ண ஓய்வுக்கு பிறகு மெல்ல பணிக்கு திரும்பலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக” அவர் கூறியுள்ளார்.
    பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி உலகளவில் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 1000 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
    சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

    ஐஎம்டிபி ரேட்டிங்

    இந்நிலையில் பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி உலகளவில் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 1000 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் 3-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு 9.1 ரேட்டிங் புள்ளிகள் கிடைத்துள்ளது. ஷஷாங் ரிடம்ப்ஷன் திரைப்படம் 9.3 புள்ளிகளுடன் முதலிடத்தையும், காட்பாதர் திரைப்படம் 9.2 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. 
    ×