என் மலர்
சினிமா செய்திகள்
நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்த ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன.
நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தினார் பார்த்திபன். இதில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே திரையில் கேட்கும். பார்த்திபன் மட்டுமே எல்லோரிடமும் கலந்துரையாடுவார். இந்த படத்தை திரையுலகினர் பலரும் வியந்து பாராட்டினர். இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன.

இந்நிலையில், ஒத்த செருப்பு படம் இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக பார்த்திபன் அறிவித்துள்ளார். ஒத்த செருப்பு படத்தின் இந்தி ரீமேக்கில் நவாசுதீன் சித்திக் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆங்கில ரீமேக்கில் நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் பார்த்திபன் தற்போது இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள விக்ரம் படத்தில் மற்றுமொரு மலையாள நடிகர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகினார் ஆண்டனி வர்கீஸ். இதனால் அவரை விக்ரம் படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பரவல் குறைந்த பின் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
சென்னையில் ரோட்டோரம் உணவின்றி தவிக்கும் 100 ஏழைகளுக்கு தினமும் பார்சலில் உணவு வழங்கி உதவி உள்ளார் யோகிபாபு பட தயாரிப்பாளர்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு டிஸ்கவர் ஸ்டூடியோ பிலிம் கம்பெனி எனும் தயாரிப்பு நிறுவனம் உதவி வருகிறது.

இந்நிறுவனம், தற்போது தினேஷ் மாஸ்டர் மற்றும் யோகிபாபு நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறது. எஸ்.பி.ராஜ்குமார் இப்படத்தை இயக்குகிறார். சென்னையில் ரோட்டோரம் உணவின்றி தவிக்கும் 100 ஏழைகளுக்கு பார்சலில் உணவு மற்றும் ஜூஸ் வழங்கி வருகின்றனர். டிஸ்கவர் ஸ்டூடியோ பிலிம் கம்பெனி எனும் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் இசையமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
அண்மையில் தான் நடித்த படங்கள் அனைத்தும் முடங்கிக் கிடப்பதால் நடிகை காஜல் அகர்வால் சோகத்தில் உள்ளாராம்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் கடைசியாக கோமாளி படம் 2019-ல் திரைக்கு வந்தது. இதையடுத்து ஏராளமான படங்களில் அவர் நடித்திருந்தாலும், அவை அனைத்தும் ரிலீசாகாமல் முடங்கிப் போய் உள்ளது.
அவர் நடித்த பாரிஸ் பாரிஸ் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தணிக்கை குழு சர்ச்சையில் சிக்கி நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் முடங்கி உள்ளது. ஹேய் சினாமிகா என்ற படத்தில் நடித்தபோது காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிந்தது. திருமணத்துக்கு பிறகு பாக்கி இருந்த அந்த படத்தின் காட்சிகளை நடித்து முடித்து விட்டார். இருப்பினும் அதுவும் கொரோனாவால் ரிலீசாகாமல் உள்ளது.

இதேபோல் கமல்ஹாசன் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கும் இந்தியன் 2 படம் பாதியில் நிற்கிறது. இயக்குனர் ஷங்கர் தெலுங்கு, இந்தி படங்களை இயக்க தயாராவதால் இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பதில் குழப்பம் நிலவுகிறது.
மேலும் தெலுங்கில் திரிஷா நடிக்காமல் விலகிய சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் நடிக்க காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில், இப்போது கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் 2 தமிழ் படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்தப் படங்களும் சில பிரச்சினைகளால் முடங்கி உள்ளன. தான் நடித்துள்ள படங்கள் அனைத்தும் முடங்கிக் கிடப்பதால் நடிகை காஜல் அகர்வால் சோகத்தில் உள்ளாராம்.
கண்ணதாசனிடம் வாலியை வசனகர்த்தா மா.லட்சுமணன் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.
கண்ணதாசனிடம் வாலியை வசனகர்த்தா மா.லட்சுமணன் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.
"தெரியுமே! திருச்சி வானொலியில் நாடகம் எல்லாம் எழுதிக் கொண்டிருந்த வாலிதானே நீங்கள்?'' என்று கேட்டார், கண்ணதாசன்.
அவருடைய ஞாபகசக்தியை எண்ணி வாலி வியந்தார். இருவருக்கும் காபி கொண்டுவரச்சொல்லி தன் கையாலேயே கொடுத்தார், கண்ணதாசன்.
"நான் ஒரு தீவிர ஆஸ்திகன்... நீங்களும் இப்படி ஆஸ்திகனா மாறிவிட்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்'' என்று வாலி கூற, "நான் எப்பவுமே ஆஸ்திகன்தான். ஜுபிடர் பிக்சர்சில் இருக்கிறபோது, விபூதி குங்குமத்தோடு இருப்பேன்'' என்றார், கண்ணதாசன்.
வாலி, கண்ணதாசனைப் பற்றி எழுதிக் கொண்டு போயிருந்த ஒரு கவிதையைப் படித்தார்.
"காட்டுக்குள் தேனீக்கள் கூட்டுக்குள் வைத்ததை, பாட்டுக்குள் வைத்தவனே!'' என்று தொடங்கும் அந்தப் பாடலை வாலி பாடிக்காட்ட, கண்ணதாசன் மகிழ்ந்தார்.
"நாம் அடிக்கடி சந்திக்கலாம்...'' என்று கண்ணதாசன் கூறினார்.
ஆனால் காலம், கண்ணதாசனையும், வாலியையும் எதிர் எதிர் அணியில் நிறுத்தி தொழில் புரிய வைத்தது.
இந்தியில் மிகப்பெரிய வெற்றிப்படமான "தீதார்'' படத்தின் கதையை "நீங்காத நினைவு'' என்ற பெயரில் பத்மா பிலிம்சார் படமாக எடுத்தார்கள். இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளராக கே.வி.மகாதேவனும், இயக்குனராக தாதாமிராசியும் பணியாற்றினர்.
இந்தப் படத்தின் அதிபர் சுலைமானிடம் வாலியை வசனகர்த்தா `மா.ரா.'' அறிமுகப்படுத்தினார். சுலைமானுக்கு வாலியின் பாடல் பிடித்திருந்தது.
அதைத்தொடர்ந்து, மகாதேவனை வாலி சந்தித்தார். அந்தக் காலத்தில், எந்த இசை அமைப்பாளரும் ஒரு புதிய பாடல் ஆசிரியரை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கேற்ப, வாலியிடம் மகாதேவன் இறுக்கமாகவே இருந்தார்.
வாலியை அவர் உதறவும் இல்லை; உற்சாகப்படுத்தவும் இல்லை. ஆயினும், பட அதிபர் சுலைமானும், வசன கர்த்தா "மா.ரா.''வும் வாலிக்கு பக்க பலமாக இருந்ததால், "நீங்காத நினைவு'' படத்தில் வாலியின் பாடல்கள் இடம் பெற்றன.
(ஆரம்பத்தில் வாலியை முழு மனதுடன் மகாதேவன் வரவேற்கவில்லை என்றாலும், பிற்காலத்தில் வாலியின் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு இசை அமைத்தார்.)
இந்தக் காலக்கட்டத்தில், வாலியின் வாழ்க்கையில் எதிர்பாராத பெரிய திருப்பம் ஏற்பட்டது.
முக்தா பிலிம்சார் அப்போது "இதயத்தில் நீ'' என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். முக்தா சீனிவாசனிடம் "நீங்காத நினைவு'' படத்தயாரிப்பாளர் சுலைமானும், வசனகர்த்தா "மா.ரா.''வும் வாலியைப் பற்றி கூறினார்கள். இதன் விளைவாக, வாலிக்கு அப்படத்தில் பாட்டு எழுதும் வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு நடந்தது பற்றி வாலி கூறுகிறார்:
"என் ஆனந்தத்திற்கு எல்லையேயில்லை. ஏனெனில் அந்தப் படத்தின் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. இவர்களிடம் பாட்டெழுதும் வாய்ப்புக்காகத்தானே நான் இத்தனை காலம் தவமிருந்தேன்!
1963 ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஒரு மத்தியான வேளையில் முக்தா பிலிம்ஸ் மாடியிலுள்ள சின்ன அறையில் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், ராமமூர்த்திக்கும் நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன்.
நான் ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்திலும், எஸ்.எஸ்.ஆர். படத்திலும் பாடல்கள் எழுதியிருப்பதையெல்லாம் விஸ்வநாதனிடம் விவரித்துச் சொன்னார் முக்தா சீனிவாசன்.
"நல்ல கவிஞர். பாட்டைப் பாருங்கள். பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒத்துவராது என்று தோன்றினால் நான் உங்களை வற்புறுத்தமாட்டேன்'' என்றெல்லாம் தெளிவாகச் சொன்னார் முக்தா சீனிவாசன்.
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நான் ஒரு வணக்கத்தைப் போட்டேன்.
"ஏதாவது பல்லவி எழுதிக்கொடுங்கள்'' என்றார், விஸ்வநாதன். பாட்டுக்கான காட்சி விளக்கத்தை இயக்குனர் முக்தா சீனிவாசன் சொன்னார்.
உடனே நான் ஒரு பல்லவியை எழுதி விஸ்வநாதனிடம் நீட்டினேன்.
"பூவரையும் பூவைக்குப் பூமாலை போடவா?
பொன்மகளே! வாழ்கவென்று பாமாலை போடவா?''
- என்பதுதான் அந்தப் பல்லவி.
"பூவைக்கு என்பதெல்லாம், டிïனுக்கு சரியாக வராதே...'' என்றார் எம்.எஸ்.வி.
உடனே `பூங்கொடியே' என்று மாற்றிக் கொடுத்தேன்.
ஒரு சிட்டிகை பொடியை எடுத்து மூக்கில் உறிஞ்சினார், விஸ்வநாதன். அப்போதெல்லாம் அவருக்குப் பொடி போடும் பழக்கமுண்டு.
நான் எழுதிக் கொடுத்த பல்லவிக்கு ஐந்தே நிமிடங்களில் -ஐந்து விதமாக மெட்டமைத்துப் பாடியதைக் கேட்டு நான் அசந்து போனேன்.
"சரணத்திற்கு, நான் கொடுக்கும் மெட்டுக்குத்தான் நீங்கள் பாட்டு எழுதவேண்டும்'' என்று விஸ்வநாதன் சரணத்திற்கான மெட்டை வாசித்தார்.
விஸ்வநாதன் கொடுத்த மெட்டிற்கு கால்மணி நேரத்தில் நான்கைந்து சரணங்களை எழுதி அவரிடம் நீட்டினேன்.
சரணங்களை வாங்கியவர், அவற்றைப் பாடாமல் திரும்பத் திரும்ப இரண்டு மூன்று முறை மனதிற்குள் படித்துப் பார்த்தார் விஸ்வநாதன்.
பிறகு ஒரே ஒரு கேள்விதான் என்னை கேட்டார்:
"இவ்வளவு நாளா எங்கே இருந்தீங்க?'' என்பதுதான் அந்த கேள்வி.
நான் கண்கலங்கி மவுனி ஆனேன்.
சரணங்களை உடனே `மளமள'வென்று பாடினார்.
"சீனு அண்ணா! அடுத்த சிச்சுவேஷனையும், இவர்கிட்ட சொல்லுங்க...'' என்றார் விசு.
சொன்னார் சீனிவாசன்.
உடனே நான் எழுதினேன்:
`ஒடிவது போல் இடையிருக்கும்
இருக்கட்டுமே! - அது
ஒய்யார நடை நடக்கும்
நடக்கட்டுமே!
சுடுவது போல் கண் சிவக்கும்
சிவக்கட்டுமே! - அது
சுட்டுவிட்டால் கவி பிறக்கும்
பிறக்கட்டுமே!
விஸ்வநாதன், மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போனார். உடனே விதவிதமான மெட்டமைத்துப் பாடிக்காட்டினார். வழக்கம்போல் அவர் கொடுத்த மெட்டுக்கு நான் சரணங்களை எழுதி முடித்தேன்.
பிற்பகல் 3 மணியிலிருந்து 4 1/2 மணிக்குள் இரண்டு பாடல்களும் நிறைவடைந்தன.
விஸ்வநாதன் அடுத்த கம்பெனிக்குப்புறப்பட்டுவிட்டார். போகும்போது, முக்தா சீனிவாசனைத் தனியாக அழைத்துக் காதில் ஏதோ சொல்லிவிட்டுப் போனார்.
`என்ன சொன்னாரோ?' என்று நான் பதை பதைத்துக்கொண்டே சீனிவாசனிடம் கேட்டேன்!
"உன்னை வைத்தே மிச்சப் பாடல்களையும் எழுதலாம் என்று சொல்லிவிட்டுப் போனாரய்யா! இன்னியோடு உன் தரித்திரம் ஒழிந்தது'' என்றார் முக்தா.
எனக்கு நா எழவில்லை. கண்களில் நீர் கோத்து விழிப்படலம் மறைக்க நின்றேன்.
முக்தா சீனிவாசன் என் கண் முன்னால் எனக்குக் கடவுளாகவே காட்சியளித்தார். வறுமையில் வாடி நித்தநித்தம் செத்துக் கொண்டிருந்த எனக்கு வாழ்வுப் பிச்சை போட்ட முக்தா சீனிவாசனை நான் மூச்சுள்ளளவும் மறப்பதற்கில்லை''
இவ்வாறு வாலி கூறினார்.

அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி இயக்கத்தில் தர்ஷன், லாஸ்லியா நடிப்பில் உருவாக உள்ள ‘கூகுள் குட்டப்பன்’ படத்தின் முன்னோட்டம்.
மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. ‘கூகுள் குட்டப்பன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் ஹீரோவாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளாராம்.

மேலும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, யூடியூப் பிரபலம் ராகுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்க உள்ளனர். இவர்கள் இருவரும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் ஆவர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ரவி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ படத்தை ஓடிடியில் பார்த்த பிரபல பாலிவுட் இயக்குனர், தனுஷையும், படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டி உள்ளார்.
தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், ஆனந்த் எல் ராய் இயக்கிய ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தற்போது ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் மேலும் ஒரு இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘அத்ரங்கி ரே’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ படத்தை ஓடிடியில் பார்த்த இயக்குனர் ஆனந்த் எல் ராய், தனுஷையும் படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: “அற்புதம், புத்திசாலித்தனம்... இப்படித்தான் கர்ணன் படத்தின் அனுபவத்தை என்னால் விவரிக்க முடியும். மாரி செல்வராஜ், என்ன ஒரு அற்புதமாக கதையை சொல்லியிருக்கிறார். உங்கள் எண்ணங்களை செல்லுலாய்டில் அழகாக வர்ணம் பூசி இருக்கிறீர்கள். தனுஷ், நீ ஒரு நடிகன் என நான் நினைத்தேன், ஆனால் நீ ஒரு மந்திரவாதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம்வரும் சல்மான் கான், ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், பரத், மேகா ஆகாஷ், திஷா பதானி ஆகியோர் நடித்த ராதே இந்தி படம் கொரோனாவால் தியேட்டர்களுக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. பணம் செலுத்தி படம் பார்க்கும் முறையில் இந்த படத்தை வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில் ராதே படம் ரிலீசான சில மணி நேரத்தில் திருட்டு இணைய தளத்திலும் வந்தது.
ரசிகர்கள் பலர் திருட்டு இணையதளத்தில் படத்தை பார்த்து வருகிறார்கள். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சட்டவிரோதமாக ராதே படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு சல்மான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: “ராதே படத்தை நியாயமான விலையாக ரூ.249 கட்டணம் செலுத்தி பார்க்கும்படி கோரியிருந்தோம். இந்த படத்தை திருட்டு இணைய தளத்தில் வெளியிட்டு இருப்பது பெரிய குற்றம். சட்டவிரோதமான திருட்டு இணைய தளங்களுக்கு எதிராக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். இந்த திருட்டு இணைய தளத்தில் இருந்து ரசிகர்கள் படம் பார்க்க வேண்டாம். மீறி பார்த்தால் அவர்கள் மீதும் சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை எடுக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், திடீரென கவர்ச்சிக்கு மாறி உள்ளார்.
கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு பட உலகில் மளமளவென உயர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். மறைந்த நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிகையர் திலகம் படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பிறகு தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலேயே வந்தார். அரைகுறை உடையில் கவர்ச்சியாக நடிக்க வந்த வாய்ப்புகளை உதறினார்.
ஆனால் கீர்த்தி சுரேஷ் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வசூல் குவிக்கவில்லை. ஓ.டி.டி.யில் வெளியான அவரது பென்குயின் படமும் வரவேற்பை பெறவில்லை. உடல் எடையை குறைத்ததிலும் தோற்றம் மாறியது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வந்த ரங்குதே தெலுங்கு படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார். படுக்கை அறை காட்சிகளிலும் படத்தின் கதாநாயகன் நிதுனுடன் நெருக்கமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். நிதினுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷா இப்படி நடித்துள்ளார்? என்று வியந்ததுடன், இனிமேல் அவரை படங்களில் கவர்ச்சியாக பார்க்கலாம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த் சாரை வைத்து நான் படம் எடுக்க வேண்டும் என்று என் தலையில் எழுதியிருந்தால் அது நடந்தே தீரும் என பிரேமம் பட இயக்குனர் தெரிவித்துள்ளார்.
‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து `பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான `பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது. நிவின் பாலியின் மூன்று பரிணாமங்கள் குறித்து காட்டப்பட்ட `பிரேமம்' படத்தில், மலர் டீச்சராக நடித்திருந்த சாய் பல்லவியின் கதாபாத்திரம் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது.
‘பிரேமம்’ படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. 'பிரேமம்' படத்தின் வெற்றிக்கு பிறகு 5 ஆண்டுகளாக எந்த ஒரு பட அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வந்த அல்போன்ஸ் புத்திரன், கடந்தாண்டு தனது அடுத்த படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்தார். ‘பாட்டு’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பஹத் பாசில் நாயகனாக நடிக்கிறார்.
இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரனிடம் ரசிகர் ஒருவர், ரஜினியை வைத்துப் படம் இயக்குவதற்காகக் கதை வைத்துள்ளீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு அல்போன்ஸ் புத்திரன் பதிலளித்து பதிவிட்டுள்ளதாவது: “ரஜினி சாருக்கு கதை வைத்திருக்கிறேன். ‘பிரேமம்’ படத்துக்கு பிறகு அவரை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால், இதுவரை சந்திக்க முடியவில்லை. ரஜினிகாந்த் சாரை வைத்து நான் படம் எடுக்க வேண்டும் என்று என் தலையில் எழுதியிருந்தால் அது நடந்தே தீரும்.
நேரம் மட்டும் சரி ஆகட்டும். நாம் பாதி வேலையை செய்துவிட்டால் கடவுள் மீதி வேலையை பார்த்துக்கொள்வார் என்று நம்பிக்கை உள்ளது. தற்போது கடவுள் கொரோனாவை அழிப்பதில் பிசியாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதன்பிறகு திரும்பவும் முயற்சிப்பேன்”. இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.
பிரபல நடிகர் அடித்து துன்புறுத்தியதால், அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
பிரபல மலையாள நடிகர் உன்னி தேவ். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் 2019-ல் திருமணம் நடந்தது. இவர்கள் கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் வசித்தனர். சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டது. மனைவியை உன்னிதேவ் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து உன்னி தேவ் மீது பிரியங்கா போலீசில் புகார் அளித்தார். மனுவில் கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் புகார் அளித்த மறுநாளே பிரியங்கா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 26. பிரியங்கா உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

அவர்கள் கூறும்போது, “பிரியங்கா உடலில் காயம் உள்ளது. உன்னிதேவ் அடித்து துன்புறுத்தியதால்தான் இறந்துள்ளார். பிரியங்காவின் நகைகளை உன்னி தேவ் விற்று செலவு செய்துள்ளார்” என்றனர். உன்னிதேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசிலும் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
கொரோனா 2-ம் அலையானது தற்பொழுது நாடெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார். ரூ.30 லட்சத்தை அவர் ஆன்லைன் மூலமாக அனுப்பி உள்ளார்.