என் மலர்
சினிமா செய்திகள்
பள்ளியில் தனக்கு பாலியல் கொடுமை நடக்கவில்லை என்றும், தனது நண்பர்களுக்கு நடந்த விஷயங்களை தான் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாகவும் நடிகை கவுரி கிஷன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்லைன் வகுப்பின் போது பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் ராஜகோபாலன் மீது புகாரளித்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

96, மாஸ்டர், கர்ணன் பட நடிகை கவுரி கிஷன் தான் அடையாறு பள்ளியில் படித்தபோது ஆசிரியர்கள் சிலர், மாணவ - மாணவிகளை அசிங்கமாக பேசுவது, சாதியை வைத்து பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது, கேரக்டரை கேவலப்படுத்துவது, ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை போன்ற கொடுமைகளை அவர்கள் அனுபவித்ததாக தெரிவித்திருந்தார்.

நண்பர்களின் கசப்பான அனுபவங்களை பகிர்ந்த இடத்தில், தான் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக ஊடகங்களில் தவறாகக் குறிப்பிட்டிருப்பதாக, அதனை தற்போது தெளிவுப்படுத்தியிருக்கிறார் கவுரி. இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், ”நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு பாலியல் ரீதியான எந்த துன்புறுத்தலும் நடக்கவில்லை. ஊடகங்கள் பிஎஸ்பிபி பள்ளியுடன் என்னை தவறாக இணைக்கிறார்கள். இதனை இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் நெற்றிக்கண் படத்தின் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார்.

'அவள்' படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெறும் இதுவும் கடந்து போகும் என்ற பாடலை இன்னும் சில தினங்களில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியாவின் முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவரை ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பன்முக திறமைக்கொண்ட இவர் நடிப்பிலும் கலக்கி வருகிறார். மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

நடிப்பை தாண்டி சமூக நலனிலும் அக்கறை கொண்டவர். பல்வேறு சமுதாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமூக பிரச்சினைகளுக்காக பலமுறை கேள்வி எழுப்பியுள்ளார். கொரானா பாதிக்கப்பட்ட இவர், வீட்டு தனிமையில் இருந்து சமீபத்தில்தான் குணமடைந்தார். தற்போது அரசு சார்பில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் வீட்டில் பயனுள்ள பணிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில்தான் தனது வீட்டு மொட்டை மாடியில் ஒரு அழகிய தோட்டம் ஒன்றை அமைத்துள்ளார். அதில் ஏராளமான செடி, கொடிகளை நட்டு தினந்தோறும் பராமரித்து வருகிறார். இயற்கை மீது தீராத அன்பு கொண்ட ஆண்ட்ரியா, மற்றவர்களும் இதுபோன்ற பணிகளில் ஈடுபடவேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தமிழில் தனுஷ், சிம்பு படங்களில் நடித்து பிரபலமான ரிச்சா கங்கோபாத்யாய் திருமணமானதும் உடல் எடை கூடி காணப்படும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'மயக்கம் என்ன' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். இப்படத்தை தொடர்ந்து சிம்புவுடன் இவர் நடித்த 'ஒஸ்தி' படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

சினிமாவில் பிரபலமாக இருக்கும் போதே ஜியோ என்பவரை திருமணம் செய்துகொண்டார் அவர். தற்போது வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் அடுத்த மாதம் குழந்தை பிறந்துவிடும் என்று பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும் ரிச்சா மிகவும் உடல் எடை கூடி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டதாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
திரைப்படங்கள் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் மாறி உள்ளது என்று முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா தற்போது வெப் தொடர்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் தமன்னா நடித்த நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் வெளியானது. இந்த நிலையில் தமன்னா அளித்துள்ள பேட்டியில், “தற்போது சினிமாவுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. திரைப்படங்கள் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் மாறி உள்ளது. சினிமா பற்றிய அவர்களின் பார்வையும் இனிமேல் மாறும். இந்த மாற்றங்கள் காரணமாக நட்சத்திர அந்தஸ்தும் மாற தொடங்கி உள்ளது.

தனி நடிகருக்காக ரசிகர் யாரும் படங்களை பார்க்க மாட்டார்கள். படத்தின் கதை வலுவாக உள்ளதா என்பதை வைத்தே படம் பார்க்கிறார்கள். 10 வருடங்களுக்கு முன்னால் ஒரு நடிகருக்கு கிடைத்த ரசிகர்கள் கூட்டம் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு கிடைப்பது கஷ்டமான விஷயம்.

இந்த நிலையில் எனக்கும் ரசிகர் கூட்டம் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நான் கிரைம், திரில்லர் கதைகளில் நடிக்காத குறையை நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் போக்கியது. அதில் நான் நடித்த கதாபாத்திரம் பெரிய சவாலாக இருந்தது’’ என்றார்.
கவிஞர் வைரமுத்துவுக்கு விருது வழங்குவதற்கு கடும் எதிர்ப்புகள் வந்த நிலையில் ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிக்கை வெளியிட்டுள்ளது.
மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. இதுவரை மூத்த மலையாளப் படைப்பாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்து, இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முதல் முறையாக மலையாளி அல்லாத ஒரு இலக்கியவாதிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கு மலையாள நடிகை பார்வதி, பாலியல் புகார்கள் பல சுமத்தப்பட்டிருக்கும் ஒருவருக்கு ஓ.என்.வி பெயரில் விருது வழங்குவது பெரும் அவமரியாதை என்று கூறினார். மேலும் மலையாளம் சினிமா உலகில் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது.

ஓ.என்.வி அறிக்கை
இந்நிலையில் ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், விருதுகள் குழுவின் பரிந்துரையின்படி இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருக்கும் ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம் என ஓ.என்.வி கலாச்சார அகாடமி தெரிவித்துள்ளது.
ஷரவணன் சுப்பையா இயக்கத்தில் அனேகா, கதிரவன் நடிப்பில் உருவாகி உள்ள ‘மீண்டும்’ படத்தின் முன்னோட்டம்.
அஜித்குமார் நடித்த ‘சிட்டிசன்’ படத்தை இயக்கியவர், ஷரவணன் சுப்பையா. இவர் நீண்ட இடைவெளிக்குப்பின் இயக்கியுள்ள படம், ‘மீண்டும்.’ நடிகர் மணிகண்டனை, `கதிரவன்' என்று பெயர் மாற்றி கதாநாயகனாக நடிக்க வைத்து இருக்கிறார், ஷரவணன் சுப்பையா. கதாநாயகியாக நட்பே துணை பட நடிகை அனேகா நடித்துள்ளார். இதில் இயக்குனர் ஷரவணன் சுப்பையாவும் நடித்து இருக்கிறார்.
படத்தை பற்றி அவர் கூறியதாவது: ‘‘தாய்நாட்டுக்கு எதிரான ஒரு முக்கிய பிரச்சினையை விசாரிக்கும்படி, கதாநாயகன் கதிரவனிடம் ஒப்படைக்கிறார்கள். இதை ஓரு சவாலாக ஏற்று களம் இறங்குகிறார், கதிரவன். அவரை எதிரிகள் பிடித்து சித்ரவதை செய்கிறார்கள். அந்த கொடூரம் அதிர்ச்சியின் உச்சம்.

அனேகா, கதிரவன்
படத்தின் உச்சக்கட்ட காட்சி, இதுவரை இந்திய திரையுலகில் யாரும் படமாக்கியிராதது. எஸ்.எஸ்.ஸ்டான்லி, யார் கண்ணன், கேபிள் சங்கர், சுப்பிரமணியசிவா, துரை சுதாகர், இந்துமதி, மோனிஷா, அனுராதா ஆகியோரும் நடித்துள்ளனர். ஹீரோ சினிமாஸ் சார்பில் சி.மணிகண்டன் தயாரித்துள்ளார்.’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கூலிப்படையை வைத்து தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை சாந்தினி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் படத்தில் நடித்தவர் நடிகை சாந்தினி. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் மணிகண்டன் தன்னை காதலிப்பதாக கூறி 5 வருடங்கள் குடும்பம் நடத்தியதாகவும், கருவுற்ற தன்னை கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே தன்னை திருமணம் செய்ய மறுப்பதோடு, கூலிப்படையை வைத்து தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் சாந்தினி. மேலும் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் சிலர் இளையராஜா பாடல்கள் பாடி நண்பனின் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
மலேசியாவில் வசித்து வந்த இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகர் ஒருவர், தான் உயிரிழந்த பின், தன்னை இளையராஜா பாடலோடு வழியனுப்பி வைக்கும் படி தனது நெருங்கிய நண்பர்களிடம் முன் கூட்டியே கூறி இருந்தாராம். சில தினங்களுக்கு முன் அந்த இளையராஜா ரசிகர் மறைந்து விட, அவரது இறுதி ஆசையை அவரின் நண்பர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதோடு, காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள அந்த இளையராஜா ரசிகரின் உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தும் காட்சிகளும், அவரது நண்பர்கள் மாஸ்க் அணிந்தவாறு கூடி நின்று, ‘இளமை எனும் பூங்காற்று’ உள்ளிட்ட இளையராஜாவின் சில பாடல்களை பாடி கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. அந்த இளையராஜா ரசிகரின் வயது என்ன, அவர் எதனால் உயிரிழந்தார் உள்ளிட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இசைஞானி இளையராஜாவின் பாடலோடு நண்பனுக்கு இறுதியாக மரியாதை செலுத்திய நண்பர்கள். #ilayaraja
— Sathishwaran PRO (@SathishwaranPRO) May 28, 2021
❤️🥺 pic.twitter.com/S2QFNDjK2S
விக்ரம் படத்தில் நடிகை சுருதிஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்தநிலையில், இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் கமலின் 232 வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். கொரோனா பரவல் குறைந்த பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சுருதிஹாசன்
இப்படத்தில் நடிகை சுருதிஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில், நடிகை சுருதிஹாசன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: “அப்பாவின் விக்ரம் படத்தில் நடிக்க இதுவரை எனக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை” எனக்கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நடிகை சுருதிஹாசன் தற்போது பிரபாஸுக்கு ஜோடியாக சலார் படத்தில் நடித்து வருகிறார்.
கவினின் ‘லிப்ட்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவின் தற்போது நாயகனாக நடித்துள்ள படம் 'லிப்ட்'. வினித் வரபிரசாத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்குத் தயாராகி வந்த சமயத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ரவீந்திரன் சந்திரசேகர்
இதனிடையே, இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் பரவி வந்தன. இந்நிலையில், 'லிப்ட்' படத்தின் வெளியீடு குறித்து லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: “லிப்ட் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகவுள்ளது. ஜூன் 20-ம் தேதிக்கு மேல் சூழ்நிலையைப் பார்த்துவிட்டு, தியேட்டரில் வெளியிடக் கூடிய சூழல் இல்லை என்றால் மட்டுமே ஓடிடியில் வெளியாகும். ஆனால், 'லிப்ட்' தியேட்டருக்கான படம் தான்” என்று ரவீந்திரன் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நவரசங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் நவரசா ஆந்தாலஜி வெப் தொடரை 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப் தொடரை தயாரித்து வருகிறார். நவரசங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த வெப் தொடரை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், கவுதம் மேனன், பிஜாய் நம்பியார், பொன்ராம், அரவிந்த்சாமி உள்பட 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர்.
இதில் சூர்யா, விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, சித்தார்த், பிரகாஷ் ராஜ், கெளதம் கார்த்திக், அசோக் செல்வன், விக்ராந்த், ரோபோ சங்கர், நித்யா மேனன், பார்வதி, அம்மு அபிராமி, பூர்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்விகா உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

நவரசா வெப் தொடரை இயக்கிய இயக்குனர்களின் புகைப்படம்
இந்த தொடரின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஆந்தாலஜி தொடர் வருகிற ஆகஸ்ட் மாதம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






