என் மலர்
சினிமா செய்திகள்
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அடுத்தடுத்து, அந்த கட்சி வேட்பாளர்கள் விலகி வருவதால், பிக்பாஸ் நிகழ்ச்சி போல் இருக்கிறது என்று கஸ்தூரி கூறியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திடீரென கட்சியில் இருந்து விலகினர்.

அவரை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியா கட்சியில் இருந்து விலகுவதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருவர் பின் ஒருவராக மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அக்கட்சியை சார்ந்தவர்கள் விலகி வருவதை கலாய்க்கும் விதமாக, நடிகை கஸ்தூரி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் "மதுரவாயில் தொகுதியில் போட்டியிட்ட யூடியூபர் பத்மபிரியா, வேளச்சேரி தொகுதி போட்டியிட்ட சந்தோஷ் பாபு ஆகிய இருவருமே மக்கள் நீதி மய்யம் கட்சியில், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் சேர்ந்தனர். தற்போது இருவரும் விலகி விட்டனர். இது கிட்டத்தட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் எலிமினேஷன் போலவே தெரிகிறது அடுத்த எலிமினேஷன் யார் என்பதை பார்ப்போம் என்று பதிவு செய்திருக்கிறார்.
தமிழில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியாவின் உடற்பயிற்சி வீடியோ ரசிகர்களிடையே அதிக லைக்குகளை குவித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. அதனைத் தொடர்ந்து சரத்குமாருடன் பச்சைக்கிளி முத்துச்சரம், கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன், அஜித்துடன் மங்காத்தா, கமலுடன் விஸ்வரூபம், உத்தமவில்லன், தனுஷுடன் வடசென்னை, விஜய்யுடன் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களையும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவு செய்வார். இந்நிலையில், தற்போது ஒருகையில் நாயை வைத்து உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீனும் இணைந்து ஒரு பாடலை பாடி வெளியிட்டுள்ளனர்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீனும் இணைந்து முகமது நபிகளை புகழும் வகையில் ஒரு பாடலை வெளியிட்டுள்ளனர்.

'தலா அல் பத்ரு அலாய்னா' எனும் இந்தப்பாடல் மக்களின் வேண்டுகோளை ஏற்று, மதீனா நகருக்கு முகம்மது நபிகள் (Pbuh), வருகைபுரிந்த போது மக்களால் பாடப்பட்டது. பெரும் வரலாற்றை உள்ளடக்கிய, மதீனா நகரில் உருவான இந்தப்பாடல் மிகவும் புகழ் பெற்றது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீனும் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். இப்பாடல் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பிரபலமான சேனல்களில் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள குட்டி ரமேஷ் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
சமீபகாலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்துவரும் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் என மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பலர் சமீபத்தில் உயிரிழந்தனர். இந்நிலையில் பிரபல சீரியல் நடிகரான குட்டி ரமேஷ் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.


பிரபலமான சேனல்களில் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் குட்டி ரமேஷ். தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தேன்மொழி BA ஊராட்சிமன்ற தலைவர் என்ற தொடரில் நாயகியின் தந்தையாக நடித்து வந்தார். நடிகர் குட்டி ரமேஷின் மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அனுசரண் இயக்கத்தில் யோகிபாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி உள்ள ‘பன்னிகுட்டி’ படத்தின் முன்னோட்டம்.
அனுசரண் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பன்னிகுட்டி. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கருணாகரன், யோகிபாபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி, டிபி.கஜேந்திரன், லட்சுமி ப்ரியா, ராமர், தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர்.

முற்றிலும் கிராமிய பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது. தற்சார்பு பொருளாதாரத்தையும், சுயசார்பு வாழ்க்கையையும் வலியுறுத்தும் வகையில் முழுநீள காமெடி படமாக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் கே இசையமைத்துள்ளார். சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மஹா’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்து இருக்கிறார்.
நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மதியழகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், தனக்கு தெரியாமல் படத்தை முடித்து, ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் முயற்சிகள் நடப்பதாகவும், படத்தை வெளியிட தடை கோரியும் இயக்குனர் யு.ஆர்.ஜமீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், படத்தை இயக்க தனக்கு 24 லட்சம் ரூபாய் ஊதியம் தருவதாக ஒப்புக்கொண்ட தயாரிப்பு நிறுவனம், இதுவரை 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே தந்துள்ளதால், மீதமுள்ள 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் ஜமீல் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, மே 19-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் உள்பட மூவர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி, அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் அண்ணாத்த. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதன் படப்பிடிப்பிற்காக கடந்த ஒரு மாதமாக ஐதராபாத்தில் தங்கி இருந்த ரஜினிகாந்த், சில தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார்.
விரைவில் டப்பிங் பணிகளில் கலந்துகொள்ள உள்ள அவர், அது முடிந்ததும், அடுத்த மாதம் உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்கா சென்று வந்த பின் நடிகர் ரஜினிகாந்த் அடுத்த படத்திற்கு தயாராக் உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று வந்த பின், நடிகர் தனுஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. ஏற்கனவே பா.பாண்டி படத்தை இயக்கி உள்ள தனுஷ், அடுத்ததாக ரஜினி படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை எந்த கதாநாயகிகளும் நடித்திராத, ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் தான் நடித்து உள்ளதாக நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, தெலுங்கில் பிரபாசுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம், அகில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் படத்தில் இதுவரை எந்த கதாநாயகிகளும் நடித்திராத, ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறாராம் பூஜா ஹெக்டே. ஸ்டாண்ட் அப் காமெடி செய்பவராக இந்தப்படத்தில் நடித்து உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.
தமிழில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற தேன் திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளதாம்.
கணேஷ் விநாயகன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற படம் தேன். இப்படத்தில் தருண் குமார் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலமாக பிரபலமான அபர்ணதி மலைவாழ் பெண்ணாக நடித்துள்ளார். தேன் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளார்களாம். இதன் தெலுங்கு ரீமேக்கையும், கணேஷ் விநாயகன் தான் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் கதாநாயகனாக ஆதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் மிருகம், அரவான், மரகத நாணயம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் ‘சூரரைப் போற்று’.
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா, வருகிற ஜுன் 11 ம் தேதி துவங்கி 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காலம் என்பதால், ஷாங்காய் திரைப்பட விழா இந்த ஆண்டு கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட உள்ளதாம்.
கொரோனா அரக்கனை எதிர்கொள்ள தாராளமாக நிவாரண நிதி வழங்கலாம் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து பல்வேறு தரப்பினர் நிதி வழங்கி வருகின்றனர்.
சென்னை:
கொரோனா 2-ம் அலையானது தற்பொழுது நாடெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா அரக்கனை எதிர்கொள்ள தாராளமாக நிவாரண நிதி வழங்கலாம் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து பல்வேறு தரப்பினர் நிதி வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரூ.1 கோடி வழங்கி உள்ளார்.
தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து சௌர்ந்தயா நிதி வழங்கினார்.
கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குங்கள் என்று தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து நடிகர் சிவக்குமார், தனது குடும்பத்தினர் சார்பாக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். அதேபோல் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கி இருந்தனர்.

இந்நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், தற்போது ரூ.25 லட்சம் ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கி உள்ளார். முதலில் அவர் 2.5 கோடி வழங்கியதாக செய்திகள் வெளியாகிய நிலையில், அஜித் 25 லட்சம் கொடுத்ததாக அவரது செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.






