என் மலர்
சினிமா செய்திகள்
முன்னதாக லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடித்து இருந்த காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான லட்சுமி படமும் ஓ.டி.டி.யில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஊரடங்கால் திரைக்கு வர தயாராக இருந்த புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட்டு வருகிறார்கள். முன்னணி கதாநாயகர்கள் படங்களும் ஓ.டி.டி.யில் வருகின்றன. இந்த நிலையில் அக்ஷய்குமார் நடித்துள்ள ‘பெல்பாட்டம்’ இந்தி படமும் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
1980-களில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் தயாராகி உள்ளது. ரஞ்சித் எம்.திவாரி இயக்கி உள்ளார். கியூமா குரோஷி, வாணி கபூர், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘பெல்பாட்டம்’ படத்தை தியேட்டரில் வெளியிட முடிவு செய்து இருந்தனர். ஆனால் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் ஓ.டி.டி.யில் வருகிறது.

சூர்யவன்சி, பெல்பாட்டம் படத்தின் போஸ்டர்கள்
இதேபோல் அக்ஷய் குமார் நடிப்பில் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ள ‘சூர்யவன்சி’ படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தை ரோகித் ஷெட்டி இயக்கி உள்ளார். இதில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடித்துள்ளார். ஏற்கனவே லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடித்து இருந்த காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான லட்சுமி படமும் ஓ.டி.டி.யில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தி பேமிலி மேன்-2 என்ற இந்தி வெப் தொடர் ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மத்திய மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கு தடைகோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தி பேமிலி மேன்-2 என்ற இந்தி வெப் தொடர் ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி இந்த கடிதத்தை எழுதி இருக்கின்றேன். இந்தி மொழியில் வெளியாகும் இந்த தொடரின் முன்னோட்டக் காட்சிகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றது.
தமிழர்களை பயங்கரவாதிகள் ஆகவும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகள் உடன் தொடர்பு கொண்டவர்களாகவும் சித்தரித்து இருக்கின்றார்கள். தமிழ் ஈழ விடுதலைப்போரில் தங்கள் இன்னுயிர்களை ஈந்த ஈழப் போராளிகளையும் கொச்சைப்படுத்தி இருக்கின்றனர்.

வைகோ
ராணுவ சீருடை அணிந்த சமந்தா என்ற தமிழ் பெண் பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாக காட்சிகள் இருக்கின்றன. இத்தகையக் காட்சிகளைக் கொண்ட இந்த தொடர் தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது; தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றது. எனவே இந்த தொடரை எதிர்த்து தமிழ்நாட்டில் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன.
அமேசான் ஓ.டி.டி. தளத்தில் இந்த தொடரை ஒளிபரப்பினால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்பதைத் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். தி பேமிலி மேன்-2 தொடர் ஒளிபரப்பைத் தடை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புகழேணியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது, வாலி திருமணம் செய்து கொண்டார்
புகழேணியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது, வாலி திருமணம் செய்து கொண்டார். இது காதல் திருமணம்; ரகசியத் திருமணமும் கூட!
ஒரு நாள் எம்.ஜி.ஆரை வாலி சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, "வாலி! காலா காலத்தில் ஒரு கல்யாணம் செய்து கொள்ளுங்க! நிறைய பணம் சம்பாதிக்கிறபோது, தனி மனிதனா இருந்தா தப்புத் தண்டாவுலே புத்திப்போகும். நீங்க உங்களுக்குப் பிடிச்ச பொண்ணைச் சொல்லுங்க. நான் முன்நின்று உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்...'' என்று எம்.ஜி.ஆர். பாசத்துடன் சொன்னார்.
அப்படியிருந்தும், எம்.ஜி.ஆருக்கே தெரியாமல் வாலியின் ரகசிய திருமணம் நடந்தது.
பிரபல திரைப்பட கவிஞராக உயர்ந்த பிறகும், வாலிக்கு நாடக ஆசை விடவில்லை. "லவ் லெட்டர்'' என்ற நாடகத்தை எழுதினார். ஏவி.எம்.ராஜன், ஜாவர் சீதாராமன், `காக்கா' ராதாகிருஷ்ணன் ஆகியோர் இதில் நடிக்க இருந்தனர்.
நாடக ஒத்திகை, அடிக்கடி வாலியின் வீட்டில் நடந்தது.
இந்த நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க, திலகம் என்ற பெண்ணை வாலி ஒப்பந்தம் செய்திருந்தார். இவர், வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றவர். நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா ஆகியோருடன் சேர்ந்து நடனம் ஆடியவர். எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் "குயில்'' நாடகத்தில் கதாநாயகியாக நடித்தவர்.
திலகத்தை மணந்து கொள்ள வாலி விரும்பினார். ஆனால் காதல் ஏற்படவில்லை.
இதுபற்றி வாலி எழுதியிருப்பதாவது:-
"நேசித்த பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என்று, அல்லும் பகலும் அதே சிந்தனையில் இருந்தேன். அவள் பிடி கொடுத்துப் பேசவில்லை.
இருப்பினும், அவளது சித்திரத்தை அழித்துவிட்டு இன்னொரு சித்திரத்தை எழுதிப் பார்க்க என் மனம் தயாராயில்லை.
அப்படி ஒரு காதல் தவத்தில் நான் ஈடுபட்டிருந்த நாளில்தான், "எங்க வீட்டுப்பிள்ளை'' படத்திற்காக பாடல் எழுத உட்கார்ந்தேன்.
டைரக்டர் சாணக்யா, பாடல் காட்சியை விளக்கினார்.
"கதாநாயகன், தான் விரும்பும் பெண்ணின் உள்ளத்தில் இடம் பெற்று விடவேண்டும் என்று படாதபாடு படுகிறான்'' என்று கூறி, அதற்கேற்ப பாடல் எழுதச் சொன்னார்.
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
கதாநாயகனின் உள்ளுணர்விலேயே நானும் இருந்ததால், என் உள்ளக்கிடக்கையை அப்படியே பாடலாக்கினேன்.
"குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்; குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்?'' - இந்தப் பாட்டின் தாக்கத்தால், என் காதலி மனம் கசிந்தாள்; என் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள்.''
இவ்வாறு வாலி கூறியுள்ளார்.
திருமணத்தை எளிய முறையில் நடத்த வாலி விருமëபினார். அதனால், உடன் பிறந்த சகோதர -சகோதரிகளிடமோ, எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற மிக மிக நெருங்கிய நண்பர்களிடமோ கூட சொல்லாமல், திருமண பத்திரிகை கூட அச்சிடாமல், கீழத்திருப்பதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்தார்.
சகுனத் தடைகள்
திருமணத்துக்கு மண்டபம் ஏற்பாடு செய்ய, தன் நண்பர் வி.கோபாலகிருஷ்ணனுடன் காரில் புறப்பட்டார், வாலி.
கோபாலகிருஷ்ணன்தான் காரை ஓட்டினார்.
அதன்பின் நடந்தது பற்றி வாலி கூறியதாவது:-
"ஒரு குக்கிராமத்தில் கார் நுழையும்போது எதிர்பாராதவிதமாக ஓர் ஐந்து வயதுப் பெண் குழந்தை குறுக்கே ஓடி வந்து, கார் ஹெட்லைட்டில் லேசாக அடிபட்டு, சிறிய காயத்தோடு தப்பியது.
குழந்தையின் தாய் பரபரப்போடு ஓடிவந்து, மகளை அள்ளி மார்போடு அணைத்துக்கொண்டாள். நானும், கோபியும் வண்டியை விட்டு இறங்கி, "குழந்தை எதிர்பாராமல் குறுக்கே ஓடிவந்ததால்தான், இப்படி ஆயிப்போச்சு... இதுல எங்க தவறு எதுவுமில்லை. இருந்தாலும், பெரிய மனசு பண்ணி நீங்க மன்னிக்கணும்'' என்று குழந்தையின் தாயிடம் சொன்னோம். அந்த அம்மையார் அதில் சமாதானமடைந்து, ஊரைக்கூட்டி விவகாரம் செய்யாமல் எங்களை மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தார்.
"வாலி! இப்படி ஒரு சின்ன ஆக்சிடெண்ட் ஆயிடுச்சே! மெட்ராசுக்கே திரும்பிடலாமா...?'' என்று கோபி என்னிடம் கேட்டார்.
"ஏன்? இதனால் என்ன?'' என்றேன் நான்.
"கல்யாணத்திற்கு இடம் பார்க்கப் போகிறோம், சகுனமே சரியில்லையே'' என்றார் கோபி.
"எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. இந்தக் கல்யாணத்துல கடவுளுக்கு இஷ்டமில்லைன்னாதான் நடக்காது. மத்தப்படி, இது மாதிரி விஷயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை'' என்றேன் நான்.
கோபி, மவுனமாகக் காரை ஓட்டிக்கொண்டு வந்தார். திடீரென்று வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று, வாலை நிமிர்த்தி சிலிர்த்துக்கொண்டு பாதையின் குறுக்கே ஓடிவந்தது.
அதன் மீது கார் மோதாமலிருக்க கோபி பிரேக்கின் பெடலை அமுக்க, எதிர்பாராமல் வண்டி நிலை குலைந்து பாதையை விட்டு வயக்காட்டில் இறங்கி ஒரு குலுக்கலோடு நின்றது. எனக்கும் கோபிக்கும் உச்சந்தலையிலும், முன் நெற்றியிலும் லேசான சிராய்ப்புகள்.
"சகுனம் சரியில்லை... வாங்க, வாலி! ஒழுங்கா நாம் மெட்ராசுக்கே திரும்பிடலாம்'' என்றார், கோபி.
வயக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் துணையோடு, எங்கள் கார், பள்ளத்திலிருந்து பாதைக்குக் கொண்டு வரப்பட்டது.
"இப்போதைக்கு உங்க கல்யாணத்தைத் தள்ளிப்போட்டுடுங்க. ஒண்ணு ஒண்ணா தடங்கல் வந்துக்கிட்டேயிருக்கு'' என்றார் கோபி. நான் அதற்கு உடன்படவில்லை.
"கோபி! எண்ணித் துணிஞ்சாச்சு... துணிஞ்சப்புறம் எண்றதே இழுக்கு... கல்யாணம் ஏப்ரல் 7-ந்தேதி, திருச்சானூர் கோவில் சத்திரத்தில் நடந்தே தீரணும்... என் முடிவை நான் மாத்திக்கறதா இல்லை... நீங்க வராட்டி, நான் நடந்தே திருப்பதி போயிடுவேன்'' என்று சொன்னதும் கோபி சிரித்து விட்டுப் பேசினார்.
"ஏப்ரல் 7-ந்தேதி சத்திரம் கிடைக்கல்லேன்னா...?''
"அப்ப, இந்தக் கல்யாணத்தைத் தள்ளிப்போடக் கடவுள் விரும்புறார்னு நினைப்பேன்.''
என் உறுதியைப் பாராட்டி கோபி, திருப்பதியை நோக்கிக் காரைச் செலுத்தினார்.
கோபி, சொன்னது ஒரு விஷயத்தில் உண்மைதான். கீழத்திருப்பதி, திருச்சானூர் கோவில் கல்யாண மண்டபம் அவ்வளவு சுலபமாகக் கிடைக்கக்கூடிய இடமில்லை. ஏனெனில் ஏகப்பட்ட முகூர்த்தங்களுக்கான மாதம் அது. மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே பலர் ரிசர்வேஷன் செய்திருக்க நிறைய வாய்ப்பு உண்டு.
திருப்பதி தேவஸ்தான பேஷ்கார், கோபிக்கு மிக நெருங்கிய நண்பர். கீழத்திருப்பதியில் குடியிருந்த அவர் வீட்டுக்குப்போய்ச் சேர்ந்து விவரத்தைச் சொன்னோம்.
"ஏப்ரல் 7-க்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது... இப்போது கேட்டால் எப்படி? கண்டிப்பாகக் கல்யாண மண்டபம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதாக இருக்கும்...'' என்று சொன்னார் கோவில் பேஷ்கார்.
"டெலிபோன் செஞ்சு கேட்டுப் பாருங்களேன்'' என்று பேஷ்காரிடம் என்பொருட்டு வேண்டினார், கோபி.
திருச்சானூர் கோவில் நிர்வாக அதிகாரியோடு போனில் பேசிவிட்டு பேஷ்கார் சொன்னார்:
"எல்லா முகூர்த்த நாட்களும் இன்னும் 3 மாதத்திற்கு `புக்' ஆகிவிட்டது. ஆனால் ஏப்ரல் 7-ந்தேதி காலியாயிருக்கு...''
உடனே நான் கோபியிடம், "இதுதான் கடவுள் திருவுள்ளம் என்பது!'' என்றேன்.
1965 ஏப்ரல் 7-ந்தேதி என் திருமணம் திருச்சானூரில் நடந்தது. மா.லட்சுமணன், "புலித்தேவன்'' பட இயக்குனர் ஏ.ராஜாராம், கோபி இவர்கள் முன்னிலையில் என் மனைவி திலகத்தின் நெற்றியில் நான் திலகம் இட்டேன்.
திருமண மண்டபத்தைத் தேர்வு செய்யப்போகும் போதே இவ்வளவு தடங்கல்கள் ஏற்படின் என்னைத்தவிர வேறு எவரேனும் இதுபோல் விடாப்பிடியாக நின்று, விவாகத்தை முடித்திருப்பார்களா என்பது சுலபமாக விடையிறுக்க முடியாத வினாவாகும்.
நான் ஆண்டவனிடத்தில் நம்பிக்கையுடையவன்.
சகுனங்களிலும், ஜாதகங்களிலும் நம்பிக்கையுடையோரை நையாண்டி செய்வது நாகரிகமற்ற செய்கை என்பதில் உறுதியாக நிற்பவன். எந்த சகுனமும், எந்த ஜாதகமும் பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட என் குடும்ப வாழ்க்கை, எந்த சஞ்சலமும், சங்கடமுமில்லாமல் நல்லபடியாகத்தான் நாயகன் அருளால் நடந்து கொண்டிருக்கிறது.''
இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
தன் திருமணம் பற்றி யாருக்கும் வாலி தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும், மறுநாள் பத்திரிகைகளில் "வாலி ரகசிய திருமணம்'' என்று செய்தி வெளியாகிவிட்டது.
அதைப் பார்த்துதான், எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.வி. ஆகியோருக்கு வாலியின் திருமண தகவலே தெரிந்தது.
இதனால் அவர்கள் வாலியிடம் கோபித்துக்கொண்டாலும், வாலி பெரும்பாடுபட்டு அவர்களை சமாதானப்படுத்தி, வாழ்த்து பெற்றார்.

ஆர்.மாதேஷ் இயக்கத்தில் விமல், ஸ்ரேயா நடிப்பில் உருவாகி வரும் ‘சண்டக்காரி தி பாஸ்’ படத்தின் முன்னோட்டம்.
திலீப்-மம்தா மோகன்தாஸ் நடித்து, ஜீத்து ஜோசப் இயக்கி கேரளாவில் வெற்றி பெற்ற மலையாள படம், ‘மை பாஸ்.’ இந்த படத்தை ‘சண்டக்காரி தி பாஸ்’ என்ற பெயரில், தமிழில் தயாராகி உள்ளது. விமல் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார்.
ஆர்.மாதேஷ் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார். இவர், விஜய் நடித்த ‘மதுர,’ பிரசாந்த் நடித்த ‘சாக்லேட்’, விஜயகாந்த் நடித்த ‘அரசாங்கம்,’ வினய் நடித்த ‘மிரட்டல்,’ திரிஷா நடித்த ‘மோகினி’ ஆகிய படங்களை இயக்கியவர்.

நடிகை ஸ்ரேயா, இயக்குனர் மாதேஷ், நடிகர் விமல்
மேலும் பிரபு, கே.ஆர்.விஜயா, ரேகா, சத்யன், மகாநதி சங்கர், கிரேன் மனோகர், தெலுங்கு பட வில்லன் தேவேந்தர் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் இசையமைக்கிறார். ஜெ.ஜெயக்குமார் தயாரித்துள்ளார். வித்தியாசமான அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட நகைச்சுவை படமாக உருவாகி வருகிறது. பெரும்பகுதி காட்சிகள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆலியா பட், அடுத்ததாக இயக்குனர் ஷங்கரின் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி உள்ளது. இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.
இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.

ஆலியா பட், ராம்சரண்
இந்நிலையில், இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ராம்சரணும், நடிகை ஆலியா பட்டும் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆர்.ஆர்.ஆர். படத்தில் ஆலியா பட்டின் நடிப்புத் திறமையை பார்த்து வியந்துபோன ராம்சரண், அவரை ஷங்கர் படத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஆதிபுருஷ் படத்தில் பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் வில்லனாக நடிக்கிறார்.
நடிகர் பிரபாஸின் 21-வது படம் ‘ஆதிபுருஷ்’. இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது. ராமாயணத்தின் ஒருபகுதியை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகானும் நடிக்கின்றனர்.
இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகின்றனர்.

சன்னி சிங், பிரபாஸ், கீர்த்தி சனோன்
இந்நிலையில், இப்படத்திற்காக நடிகர் பிரபாஸ் உடல் எடையை அதிகரித்து வருவதாக பாலிவுட் நடிகர் சன்னி சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: “நானும், பிரபாஸும் இந்தப் படத்திற்காக உடல் எடையை அதிகரிக்கவும், கைகளின் தசைகளை வலுவாக்கும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறோம். ஆனால் அதற்காக செயற்கையான மருந்துகளோ, ஊசிகளோ பயன்படுத்தாமல், இயற்கையான முறையிலேயே நாங்கள் பயிற்சி செய்து வருகிறோம்” என கூறியுள்ளார்.
நடிகர் சன்னி சிங், ஆதிபுருஷ் படத்தில் லக்ஷ்மண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைரஸிற்கு எதிரான பாதுகாப்பான தடுப்பு நடவடிக்கை என்ன என்பது இன்னமும் மக்களுக்கு சரிவர தெரியவில்லை என இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக இன்று ஒரு நாள் அனைத்து கடைகளும் வழக்கம் போல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில் ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ போன்ற படங்களை இயக்கிய ரவிக்குமார், மக்கள் விழிப்புணர்வின்றி இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “திருப்பூரில் பெரும்பாலோனோர் துணியிலான பனியன் கிளாத் வகையை சேர்ந்த மாஸ்க்கை அணிந்துள்ளனர். துவைத்து பயன்படுத்த வசதியாக இருப்பதால் பெரும்பாலும் இதை பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இந்த ரக மாஸ்க்குகள் கொரோனாவை ஒருபோதும் தடுக்காது. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அதை தாடைக்கு கீழ் அணிந்து சுற்றுகிறார்கள். கூட்டமில்லாத ஒரு மளிகை கடையில் வண்டியை நிறுத்தினேன். தாடைக்கு கீழ் மாஸ்க் அணிந்தபடி கடைக்காரர் இருந்தார். அவரிடம் அண்ணா மூக்குக்கு மாஸ்க் போடுங்க என்றேனன். வேண்டா வெறுப்பாக செய்தார்.

ரவிக்குமார்
ஒரு அக்கா சேலையை மூக்கால் பொத்தியபடி வந்தார். வைரஸிற்கு எதிரான பாதுகாப்பான தடுப்பு நடவடிக்கை என்ன என்பது இன்னமும் மக்களுக்கு சரிவர தெரியவில்லை. மாஸ்க் பற்றிய விழிப்புணர்வு கூட இல்லாமல் உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திருப்பூர் 5வது இடத்தில் உள்ளது. இன்னும் முன்னுக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத், அடுத்ததாக தெலுங்கு படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி அவரை உலகளவில் பிரபலமாக்கியது.
பின்னர் அடுத்ததடுத்த ஆல்பங்களின் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரது படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். இவர் கைவசம் இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், டான், தளபதி 65 போன்ற படங்கள் உள்ளன.

அனிருத், ஜூனியர் என்.டி.ஆர்
இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத், அடுத்ததாக தெலுங்கு படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அனிருத் ஏற்கனவே தெலுங்கில் ‘அஞ்ஞாதவாசி’, ‘ஜெர்ஸி’, ‘கேங் லீடர்’ போன்ற படங்களுக்கு இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கே.ஜி.எப். இயக்குனரின் புதிய படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்க உள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார்.
பிரபல கன்னட நடிகர் மது குருசாமி, இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக சலார் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜோதிகா, பிரபாஸ்
இதனிடையே நடிகை ஜோதிகா, சலார் படத்தில் பிரபாசுக்கு சகோதரியாக நடிக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கும் முன்னர் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், நடிகை ஜோதிகா இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், ஓய்வெடுத்து வரும் நடிகர் ஆரவ், தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார்.
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார். தற்போது ராஜபீமா, உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் நடிகர் ஆரவ், தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார்.

ஆரவ்
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “இந்த ஊரடங்கால் தெரு நாய்கள் உணவு கிடைக்காமல் பரிதவித்து வருகின்றன. இத்தகைய சமயத்தில் அவற்றுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து உதவுவோம். நானும் என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன் என குறிப்பிட்டுள்ள ஆரவ், தெரு நாய்க்கு உணவளிக்கும் வீடியோவையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Amid this pandemic & lockdown, #Straydogs struggle to get food to survive. Its high time we should act kind towards them to provide some food & water. Let’s begin it by feeding dogs in our street & Im happy to help as much as I can🤗 #feedindianmongrels#feedstraydogs#ADOPTIONpic.twitter.com/GMXiXY65fn
— Arav (@Aravoffl) May 22, 2021
விஜய்யின் தெறி படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று தற்போது யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் ‘தெறி’. விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இது அவரின் 50-வது படமாகும். பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த இப்படத்தில் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.
கடந்தாண்டு இப்படத்தில் இடம்பெற்ற ‘என் ஜீவன்’ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது அப்படத்தில் இடம்பெற்ற ‘ஈனா மீனா டிகா’ பாடலும் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

தெறி படக்குழு வெளியிட்ட போஸ்டர்
ஏற்கனவே விஜய்யின் ஆளப்போறான் தமிழன், வெறித்தனம், என் ஜீவன், வாத்தி கம்மிங் லிரிக்கல் மற்றும் வீடியோ பாடல் ஆகிய 5 பாடல்கள் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில், தற்போது ‘ஈனா மீனா டிகா’ பாடலும் 100 மில்லியன் கிளப்பில் இணைந்துள்ளது.
தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள பூஜா ஹெக்டே, ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ராதா கிருஷ்ணகுமார் இயக்கி உள்ளார்.
அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பூஜா ஹெக்டே, பிரபாஸ்
இந்நிலையில், ராதே ஷ்யாம் படத்தின் இந்தி உரிமையை ரூ. 120 கோடிக்கு வாங்கியுள்ள பிரபல நிறுவனம், இப்படத்தில் ஏற்கனவே ஒரு டூயட் பாடல் இருந்தபோதிலும், மற்றுமொரு காதல் பாடல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாம். அதனால் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், அடுத்தபடியாக ஊரடங்கு முடிந்த பிறகு மீண்டும் பிரபாஸ் - பூஜா ஹெக்டே நடிக்கும் இன்னொரு டூயட் பாடல் காட்சியை படமாக்க ராதே ஷ்யாம் படக்குழு தயாராகி வருகிறார்களாம்.