என் மலர்
சினிமா செய்திகள்
கே.ஜி.எப். இயக்குனரின் புதிய படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்க உள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார்.
பிரபல கன்னட நடிகர் மது குருசாமி, இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக சலார் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜோதிகா, பிரபாஸ்
இதனிடையே நடிகை ஜோதிகா, சலார் படத்தில் பிரபாசுக்கு சகோதரியாக நடிக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கும் முன்னர் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், நடிகை ஜோதிகா இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், ஓய்வெடுத்து வரும் நடிகர் ஆரவ், தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார்.
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார். தற்போது ராஜபீமா, உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் நடிகர் ஆரவ், தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார்.

ஆரவ்
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “இந்த ஊரடங்கால் தெரு நாய்கள் உணவு கிடைக்காமல் பரிதவித்து வருகின்றன. இத்தகைய சமயத்தில் அவற்றுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து உதவுவோம். நானும் என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன் என குறிப்பிட்டுள்ள ஆரவ், தெரு நாய்க்கு உணவளிக்கும் வீடியோவையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Amid this pandemic & lockdown, #Straydogs struggle to get food to survive. Its high time we should act kind towards them to provide some food & water. Let’s begin it by feeding dogs in our street & Im happy to help as much as I can🤗 #feedindianmongrels#feedstraydogs#ADOPTIONpic.twitter.com/GMXiXY65fn
— Arav (@Aravoffl) May 22, 2021
விஜய்யின் தெறி படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று தற்போது யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் ‘தெறி’. விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இது அவரின் 50-வது படமாகும். பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த இப்படத்தில் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.
கடந்தாண்டு இப்படத்தில் இடம்பெற்ற ‘என் ஜீவன்’ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது அப்படத்தில் இடம்பெற்ற ‘ஈனா மீனா டிகா’ பாடலும் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

தெறி படக்குழு வெளியிட்ட போஸ்டர்
ஏற்கனவே விஜய்யின் ஆளப்போறான் தமிழன், வெறித்தனம், என் ஜீவன், வாத்தி கம்மிங் லிரிக்கல் மற்றும் வீடியோ பாடல் ஆகிய 5 பாடல்கள் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில், தற்போது ‘ஈனா மீனா டிகா’ பாடலும் 100 மில்லியன் கிளப்பில் இணைந்துள்ளது.
தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள பூஜா ஹெக்டே, ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ராதா கிருஷ்ணகுமார் இயக்கி உள்ளார்.
அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பூஜா ஹெக்டே, பிரபாஸ்
இந்நிலையில், ராதே ஷ்யாம் படத்தின் இந்தி உரிமையை ரூ. 120 கோடிக்கு வாங்கியுள்ள பிரபல நிறுவனம், இப்படத்தில் ஏற்கனவே ஒரு டூயட் பாடல் இருந்தபோதிலும், மற்றுமொரு காதல் பாடல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாம். அதனால் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், அடுத்தபடியாக ஊரடங்கு முடிந்த பிறகு மீண்டும் பிரபாஸ் - பூஜா ஹெக்டே நடிக்கும் இன்னொரு டூயட் பாடல் காட்சியை படமாக்க ராதே ஷ்யாம் படக்குழு தயாராகி வருகிறார்களாம்.
நடிகை ஸ்ரேயா சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து விடுவார் என்றும் அவரால் எந்த தொல்லையும் கிடையாது எனவும் பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மதுர, அரசாங்கம், மோகினி, மிரட்டல் ஆகிய படங்களை இயக்கிய மாதேஷ், இப்போது ‘சண்டக்காரி’ படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த படத்தில், ஸ்ரேயா கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகர் விமல் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் தேவ் கில் வில்லனாக நடித்துள்ளார்.
இந்நிலையில், ‘சண்டக்காரி’ படத்தில் நடிகை ஸ்ரேயாவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து இயக்குனர் மாதேஷ் கூறியதாவது: “மும்பை கதாநாயகிகள் என்றாலே பந்தா பண்ணுவார்கள். தாமதமாக வருவார்கள். பாதுகாப்பு படையுடன் வருவார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறேன். என் கதைக்கு ஸ்ரேயா பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்ய சென்றேன்.

நடிகை ஸ்ரேயா, இயக்குனர் மாதேஷ், நடிகர் விமல்
உள்ளுக்குள் பயம் இருந்தது. ஆனால் நான் பயப்பட்ட மாதிரி ஸ்ரேயா இல்லை. பந்தாவும் இல்லை. பாதுகாப்பு படையும் கேட்கவில்லை. சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து விடுவார். எந்த தொல்லையும் கிடையாது. அவருக்கு படப்பிடிப்பு முடிந்து விட்டாலும், ‘செட்’டை விட்டுப்போகமாட்டார். மற்ற நடிகர்கள் நடிப்பதை பார்த்துக்கொண்டிருப்பார்’’ என்றார் மாதேஷ்.
நடிகை திரிஷா கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, ராங்கி, சுகர், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் உள்ளன.
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 19 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் இவர் கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

திரிஷா
இந்த ஊரடங்கு சமயத்தில் படப்பிடிப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், வீட்டிலேயே இருக்கும் நடிகை திரிஷாவிடம் சில இயக்குனர்கள் கதை சொல்ல முனைப்பு காட்டினார்களாம். ஆனால் நடிகை திரிஷா யாரிடமும் கதை கேட்கவில்லை என கூறப்படுகிறது. கொரோனா பரவல் முடிவுக்கு வந்த பின்னர் தான் புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என நடிகை திரிஷா முடிவு செய்துள்ளாராம்.
எம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும் இடையே மிகுந்த பாசமும், ஆழ்ந்த நட்பும் இருந்தபோதிலும் இடையிடையே கருத்து வேற்றுமைகளும் ஏற்பட்டன.
எம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும் இடையே மிகுந்த பாசமும், ஆழ்ந்த நட்பும் இருந்தபோதிலும் இடையிடையே கருத்து வேற்றுமைகளும் ஏற்பட்டன.
இதுபற்றி வாலி கூறியதாவது:-
"ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம் ஏதோ தனியாகப் பேசவேண்டும் என்று சொல்லி, ஒலிப்பதிவு கூடத்துக்கு வெளியே ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்றார்.
"வாலி! உங்களால் எனக்கு ஒரு தர்மசங்கடமான நிலைமை'' என்று எம்.ஜி.ஆர். சொன்னதும், எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.
என்ன அண்ணே?'' என்று பதற்றத்துடன் கேட்டேன்.
"நீங்கள் ஸ்டூடியோவுக்கு வரும்போது, நெற்றியில் விபூதி -குங்குமம் இட்டுக்காமல் வந்தால் தேவலே...'' என்று சற்று தயக்கத்தோடு சொன்னார், எம்.ஜி.ஆர்.
"ஏன் அண்ணே! இதனால் என்ன வந்தது?'' என்று கேட்டேன்.
எம்.ஜி.ஆர். சற்று விளக்கமாகச் சொன்னார்:
"வாலி! நீங்கள் தி.மு.க.வில் உறுப்பினர் இல்லை, அரசியல் தொடர்பு இல்லாதவர் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். இருந்தாலும் நீங்க எனக்குப் பாட்டு எழுதறீங்க. உங்க திறமையாலேதான் நீங்க முன்னுக்கு வந்திருக்கீங்க. நீங்க நல்லா எழுதறதாலே நான் உங்களைப் பயன்படுத்திக்கிறேன். ஆனால், நான் இருக்கிற கட்சியில் இருக்கிற என்.வி.நடராசனைப் போன்ற பெரியவர்கள், "கட்சியிலே இருக்கிற கவிஞர்களை ஆதரிக்காமல், பகுத்தறிவு கொள்கைக்கு புறம்பா விபூதி -குங்குமம் இட்டுக்கிற வாலியை ஆதரிக்கிறீங்களே!'' என்று சொல்றாங்க.
உங்களை விடறதிலே எனக்கு இஷ்டம் இல்லை. நீங்க வீட்டிலே எப்படி வேண்டுமானாலும் பக்திமானா இருந்துக்குங்க... வெளியே வரும்போது, நான் இருக்கிற கழகத்தின் கொள்கைக்கு ஏற்ப, நெற்றியில் விபூதி - குங்குமம் இல்லாமல் வந்தால் தேவலை.''
எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னதும், நான் ஒரு விநாடி சிந்தனையில் ஆழ்ந்தேன். பிறகு, எம்.ஜி.ஆரிடம் ஒரு தன்னிலை விளக்கத்தை மிகத் தெளிவாக அளித்தேன்.
"அண்ணே! நான் தீவிரமான முருக பக்தன். என்னை உங்களோட இணைச்சதும் அந்த முருகன்தான். அப்படி இருக்கும்போது, நான் விபூதியை விடமுடியாது. என்னால் உங்களுக்கு தர்ம சங்கடமான நிலைமை வேண்டாம். நான் ஒதுங்கிக் கொள்கிறேன்'' என்று நான் சொன்னவுடன், எம்.ஜி.ஆர். என் இரு கரங்களையும் பற்றி, "சரி... இந்த விஷயத்தை இத்துடன் நìறுத்திக் கொள்வோம். என்னுடன் வாங்க!'' என்று கூறியபடி, என் தோளில் கை போட்டவாறு, ரிக்கார்டிங் தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார்.
தி.மு.கழகத்தை விட்டு எம்.ஜி.ஆர். விலகாதிருந்த நாளில் (1972) கலைஞரின் மகன் மு.க.முத்துவைக் கதாநாயகனாகக் கொண்டு "பிள்ளையோ பிள்ளை'' என்னும் வண்ணப் படத்தை பூம்புகார் புரொடக்ஷன்சார் தயாரித்தனர். கிருஷ்ணன் பஞ்சு இயக்க, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, நான் பாடல்களை எழுதினேன்.
படம் தயாரானதும், அந்தப் படத்தின் பிரத்தியேகக் காட்சி ஒன்று, தேவி பாரடைஸ் தியேட்டரில் ஒரு நாள் காலைப் பொழுதில் ஏற்பாடாகியிருந்தது.
படத்தைப் பார்க்க முதல்வர் கலைஞரோடு, அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். படத்தின் இடைவேளையில் மு.க.முத்துவின் நடிப்பை எம்.ஜி.ஆர். பாராட்டிப்பேசி, ஒரு கைக்கடிகாரத்தையும் அன்பளிப்பாகத் தந்து வாழ்த்தினார்.
நானும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறும்போது, எம்.ஜி.ஆர். என்னை அவருடைய தோட்டத்திற்கு மறுநாள் காலை சிற்றுண்டிக்கு வரச்சொன்னார்.
மறுநாள், நான் தோட்டத்திற்கு சென்றேன்.
விருந்தோம்பலில் எம்.ஜி.ஆருக்கு இணையே கிடையாது. இட்லிகளும், தோசைகளும் அவர் கையாலேயே எனக்குப் பரிமாறப்பட்டன.
சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, எம்.ஜி.ஆர். என்னிடம் மெல்லப் பேசத்தொடங்கினார். "என்னங்க வாலி! மூன்று தமிழ் தோன்றியது மு.க.முத்து கிட்டதானா?''
இப்படி எம்.ஜி.ஆர். என்னைக்கேட்டதும், அவரது மனதில் உள்ளது என்னவென்று மறுவினாடியே எனக்குப் புரிந்துவிட்டது.
"பிள்ளையோ பிள்ளை'' படத்தின் இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு. திரு.பஞ்சு மூலம், கலைஞர், தன் மகன் முத்துவை வாழ்த்தி நான் பாட்டெழுத வேண்டுமென்று சொல்லியனுப்பியிருந்தார்.
அதன் காரணமாகப் படத்தின் கதாநாயகி, கதாநாயகனைப் பார்த்து - "மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ! - நீ மூவேந்தர் வழிவந்த மன்னவனோ!'' என்று பாடுவதாக பாடலைப் புனைந்தேன்.
எம்.எஸ்.வி.யும், சாருகேசி ராகத்தில் அந்த பாடலுக்கு அற்புதமாக இசையமைத்திருந்தார்.
இதைப் படத்தில் பார்த்துவிட்டுத்தான் எம்.ஜி.ஆர். என்னிடம் "மூன்று தமிழ் தோன்றியது மு.க.முத்துக்கிட்டதானா? என்று என்னைக் கேட்டார்.
"அண்ணே! மு.க.முத்து வளர வேண்டிய இளம் கலைஞன். ஆகவே நான் வாழ்த்தி எழுதும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். என்னுடைய தமிழ் எல்லாரையும் வாழ்த்துவதாக இருக்க வேண்டும் என்று நீங்களே பல தடவை சொல்லியிருக்கீங்க... அதனாலதான் அப்படி எழுதினேன்'' என்று நான் சொன்ன விளக்கத்தை எம்.ஜி.ஆர். நியாயமென்று ஏற்றுக்கொண்டாலும், அவர் மனம் முழுமையாக அதை ஒப்பவில்லை என்பதை அவர் முகம் காட்டிற்று.
மேற்கண்ட பாடல் தன்னுடைய படத்தில் எழுதப்பட்டிருந்தால், அது இன்னும் அதிக அளவு பிரபல்யம் அடைந்திருக்கக்கூடும் என்பதை, எனக்கு அவர் சொல்லாமலேயே சொன்னார் என்று நான் புரிந்து கொண்டேன்.
இதற்கு முன் (1970) மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படமாகிய "எங்கள் தங்கம்'' எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிக்க, கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் உருவாயிற்று.
இதற்கும் நான்தான் பாடல்கள் எழுதினேன். எம்.எஸ்.வி.தான் இசையமைத்தார்.
இதில் "நான் செத்துப் பிழைச்சவன்டா -எமனைப் பார்த்து சிரிச்சவன்டா'' என்று ஒரு பாடலை எழுதினேன்.
எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு இறைவனருளால் மீண்டு வந்திருந்த நேரம் அது. ஆகவே, அந்தப் பல்லவி அந்நேரத்திற்கு மிகமிகப் பொருத்தமாக இருந்தது.
முழுப் பாடலையும் எழுதி முடித்த பிறகு, பாடலை எம்.ஜி.ஆரிடம் காட்டுவதற்காக, நானும் நண்பர் முரசொலி மாறனும் ஜெமினி ஸ்டூடியோ சென்றோம்.
மாறன் வெளியே தங்கிவிட நான் மட்டும் எம்.ஜி.ஆரின் மேக்கப் ரூமிற்குள் சென்றேன்.
அப்போது எம்.ஜி.ஆர். ஜெமினியில் `நீரும் நெருப்பும்' படப்பிடிப்பிற்கான ஒப்பனையில் இருந்தார்.
முழுப் பாடலையும் நான் எம்.ஜி.ஆரிடம் பாடிக் காண்பித்தேன். அந்தப் பாடலில், உயிருக்கு அஞ்சாது நாட்டுக்கு உழைத்தோர் பற்றியெல்லாம் சரணங்களில் எழுதியிருந்தேன்.
எம்.ஜி.ஆர். பாட்டைக்கேட்டுவிட்டு வெகுவாக சந்தோஷப்பட்டார். நான் விடை பெற்றுக் கிளம்பும்போது என்னை மறுபடியும் தன் ரூமுக்குள் அழைத்தார்.
"வாலி! நாட்டுக்காக, உயிரைத் துச்சமா நினைச்சவங்களப்பத்தி இந்தப் பாட்டுல எழுதியிருக்கீங்க... அதெல்லாம் நல்லாயிருக்கு... இருந்தாலும், தமிழ் மொழிக்காகத் தண்டவாளத்துல தலை வெச்சுப் படுத்தவரு, நம்ம கலைஞர்... அவரைப்பற்றி ஒரு சரணம் எழுதி இந்தப் பாட்டுல சேத்துடுங்க...'' என்று எம்.ஜி.ஆர். என்னிடம் கேட்டுக்கொண்டார். அவர் சொன்னது போலவே பாட்டின் இரண்டாவது சரணத்தை நான் அமைத்தேன்.
(அந்த இரண்டாவது சரணம்: `ஓடும் ரெயிலை இடைமறித்து -அதன் பாதையில் தனது தலை வைத்து, உயிரையும் துரும்பாய்த்தான் மதித்து -தமிழ்ப்பெயரை காத்த கூட்டமிது'')
இந்தப் படத்தில் என் பாட்டில் கலைஞரை உயர்த்தி நான் சொல்ல வேண்டுமென்று எம்.ஜி.ஆர். விரும்பியதுபோல், இதே படத்தில் இன்னொரு பாட்டில் எம்.ஜி.ஆரை உயர்த்தி நான் சொல்ல வேண்டுமென்று கலைஞர் விரும்பினார்.
படத்தின் கதாநாயகனாகிய எம்.ஜி.ஆர், "நான் அளவோடு ரசிப்பவன்...'' - என்று பாடுவதாக ஒரு பாடலை நான் "எங்கள் தங்கம்'' படத்தில் எழுதினேன்.
"நான் அளவோடு ரசிப்பவன்'' என்று முதல் வரியை எழுதிவிட்டு, இரண்டாவது வரியை சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, என் பக்கத்தில் அமர்ந்திருந்த கலைஞர், "வாலி! இரண்டாவது வரியை - `எதையும் அளவின்றி கொடுப்பவன்' என்று போட்டா நல்லாயிருக்குமே!'' என்று என்னிடம் சொன்னார்.
நான் அவ்வாறே எழுதினேன்.
இப்படி கலைஞரும், எம்.ஜி.ஆரும் பரஸ்பர அன்பு பாராட்டிய காலம் அது.
இந்த இடத்தில், இன்னொரு உண்மையையும் நான் சொல்ல வேண்டும்.
அண்ணன் எம்.ஜி.ஆர். எந்தக் காலத்திலும், தன்னுடைய இமேஜை உயர்த்துமாறு பாடல் வரிகளை நான் எழுதவேண்டும் என்று என்னிடம் சொன்னதேயில்லை.
"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்'', "கொடுத்ததெல்லாம் கொடுத்தான்'', "நான் செத்துப் பிழைச்சவண்டா'', "நான் ஆணையிட்டால்'' போன்ற பாடல்களெல்லாம் நானாகத் தன்னிச்சையாகப் புனைந்ததே தவிர, எம்.ஜி.ஆர். எழுதச் சொல்லி எழுதியவை அல்ல; இது கடவுள் சத்தியம்.
இன்னும் உண்மையைக் கொஞ்சம் அகலமாகச் சொல்லப்போனால் -தன்னை `வள்ளல்', `மன்னன்' என்றெல்லாம் எழுதப்படுவதை அவர் கூச்சத்தோடு என்னிடம் மறுத்திருக்கிறார்.
அவர்பால் எனக்கு இருந்த அன்பின் காரணமாகவும், விருந்தோம்பல், எளிமை முதலிய அவரது உயர்ந்த பண்புகளை உடனிருந்து பார்த்தாலும் -நானே அவ்வாறு அவரைப் போற்றிப் புகழ்ந்து பாடல்கள் எழுதினேன்.''
இவ்வாறு வாலி கூறியுள்ளார்.

சாலையோரம் நாதஸ்வரம் வாசித்து உதவி கேட்கும் ஒருவரின் வீடியோவை பகிர்ந்து, அவரை கண்டுபிடிக்க உதவுமாறு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதோடு சூர்யாவின் வாடிவாசல், தனுஷின் 43-வது படம் ஆகியவற்றிற்கு இசையமைத்தும் வருகிறார்.
இந்நிலையில் சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவரின் வீடியோவை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட இணையவாசி ஒருவர், இவரது வாசிப்பையும், இருக்கும் நிலைமையையும் பாருங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதைப் பார்த்த ஜி.வி.பிரகாஷ், 'இந்த நபரை கண்டுபிடிக்க முடிந்தால், நாம் அவரை பாடல் பதிவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்புகள் மிக திறமையாகவும், துல்லியமாகவும் இருக்கின்றன' எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவை ரீ-ட்வீட் செய்திருக்கிறார்.
If we could find this person . We could use him for recordings . So talented and good precision on the notes ... talented https://t.co/79LcQrrZpj
— G.V.Prakash Kumar (@gvprakash) May 22, 2021
விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் வித்யா பிரதீப் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் பவுடர் படத்தின் முன்னோட்டம்.
சாருஹாசன் நடித்த 'தாதா 87', ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கும் 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, அடுத்ததாக பவுடர் என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். வித்யா பிரதீப் முதன்மை வேடத்தில் நடிக்க மனோபாலா, வையாபுரி, ஆதவன் அகல்யா வெங்கடேசன், நிகில் முருகன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
திரில்லர் கலந்த பிளாக் காமெடியாக படமாக தயாராகிறது. பெரும்பாலான மக்கள் பவுடர் பூசிய போலியான முகத்தோற்றத்துடன் தங்கள் அடையாளத்தை மறைத்து காலம் காலமாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படி வாழும் 18 விதமான கதாபத்திரங்களை பற்றிய படம்தான் பவுடர். ராஜா பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைத்துள்ளார். ஜெய ஸ்ரீ விஜய் இப்படத்தை தயாரித்துள்ளார்.
தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ள ஸ்ரேயா கோஷலுக்கு குழந்தை பிறந்துள்ளது.
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், இந்திய மொழி அனைத்திலும் பாடி வருகிறார். அவருடைய மயக்கும் குரலுக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரான ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் செம பிசியாகப் பாடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா கோஷல்.

சமீபத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டு அழகிய புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்தார். இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஸ்ரேயா கோஷலுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை ஸ்ரேயா கோஷல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷின் புதிய பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ஜகமே தந்திரம்'. இந்த படத்தில் ஐஷ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ரகிட ரகிட மற்றும் புஜ்ஜி ஆகிய பாடல்கள் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், நடிகர் தனுஷ் எழுதி பாடியுள்ள "நேத்து" என்ற பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

தனுஷ் - ஐஸ்வர்யா லட்சுமி
பாடல் வெளியாகி 7 மணி நேரத்திலேயே 10 லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கொரோனாதேவி சிலை, பார்ப்பதற்கு வனிதா விஜயகுமார் போலவே இருப்பதாக கிண்டல் செய்து வருகிறார்கள்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் கோவையில் உள்ளவர்கள் ஒருபடி மேலே சென்று கொரோனா தேவி சிலை வைத்து மக்கள் விரைவில் கொரோனாவில் இருந்து விடுபட வேண்டும் என வேண்டுதலோடு வழிபட்டு வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சில நெட்டிசன்கள் கொரோனாதேவி சிலை, பார்ப்பதற்கு வனிதா விஜயகுமார் போலவே இருப்பதாக ஜாலியாக கேலி கிண்டல் செய்து, அதுகுறித்த மீம்ஸ்களை அவருக்கே டேக் செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படத்தை பார்த்த வனிதா விஜயகுமார், கடுப்பாகி, "எல்லோரும் இதை ஏன் எனக்கு ஷேர் செய்கிறார்கள்? என்று பதிவு செய்து கேள்வி எழுப்பியுள்ளார்". இந்த பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.