என் மலர்
சினிமா செய்திகள்
ராம்கோபால் வர்மா இயக்கிய ரத்த சரித்திரா படத்தில் ஏமாற்றப்பட்டேன் என்று பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே பேட்டி அளித்துள்ளார்.
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி மற்றும் வெற்றிச்செல்வன், தோனி படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார். பார்ச்சட் என்ற இந்தி படத்தில் பாலியல் தொழிலாளியாக வந்தார்.

ராதிகா ஆப்தேவின் நிர்வாண வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமா வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து ராதிகா ஆப்தே தற்போது அளித்துள்ள பேட்டியில் கூறும்போது, “நிர்வாண வீடியோ வெளியானதும் நான்கு நாட்கள் வெளியே தலைகாட்ட முடியவில்லை. எனது கார் டிரைவர், வீட்டு வேலை செய்பவர்கள், உறவினர்கள் யாரேனும் அந்த வீடியோவை பார்த்து இருப்பார்களோ என்ற அச்சத்தினால் மனம் புழுங்கி இருந்தேன்.
அந்த வீடியோவை வைத்து சமூக வலைத்தளத்தில் என்னை கேவலமாக அவதூறும், கேலியும் செய்ததை தாங்க முடியவில்லை. அதையெல்லாம் கடந்து தொடர்ந்து நடித்து வருகிறேன்.

ராம்கோபால் வர்மா இயக்கிய ரத்த சரித்திரா படத்தில் ஏமாற்றப்பட்டேன். எதிர்பார்த்த சம்பளம் தரவில்லை. படப்பிடிப்பை திட்டமிட்ட நேரத்தில் தொடங்காமல் எனது நேரத்தையும், திறமையையும் விரயமாக்கினர். சினிமா என்றால் இப்படித்தான் இருக்குமா என்றெல்லாம் யோசித்தேன். அதில் ஏற்பட்ட அனுபவம் நான் ஒதுக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதில் என்னை உறுதியாக இருக்க வைத்தது’’ என்றார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நாகார்ஜுனா, தனது கனவை நிறைவேற்ற தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நாகார்ஜுனா தமிழில் ரட்சகன் படத்தில் நடித்துள்ளார். நாகார்ஜுனாவுக்கு ஐதராபாத்தில் ஸ்டூடியோ உள்ளது. அடுத்து சினிமா அருங்காட்சியகம் தொடங்க திட்டமிட்டு உள்ளார்.

இதுகுறித்து நாகார்ஜுனா கூறும்போது, “திரைப்படங்களை எதிர்கால சந்ததியினருக்கும் கொண்டு செல்ல வேண்டும். எனவே தெலுங்கு சினிமாவுக்காக ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது எனது கனவாக இருக்கிறது.

2019-ல் திரைப்பட பயிற்சி கருத்தரங்கு ஒன்றை நடத்தியபோது சினிமாவில் உள்ள தொழில்நுட்பங்களை பார்த்து வியந்தேன். அப்போதே தெலுங்கு திரைப்பட துறையில் உள்ள அம்சங்கள் அனைத்தையும் சேகரித்து அருங்காட்சியகம் அமைக்கும் எண்ணம் தோன்றியது. இதனை செயல்படுத்த நாடு முழுவதும் உள்ள திரைப்பட சாதனையாளர்களுடன் ஆலோசித்து வருகிறேன்.
துரதிர்ஷ்டவசமாக கொரோனா தொற்று எனது திட்டத்தை தாமதப்படுத்தி உள்ளது. அருங்காட்சியகத்துக்கான பொருட்களை சேகரிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நூலகங்கள் போல திரைப்படங்களும் பாதுகாக்கப்பட வேண்டியவை'' என்றார்.
நடிகை ஜெயசித்ரா தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை தனது சொந்த செலவில் வழங்கி உள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ்.முருகன் கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.


நடிகை ஜெயசித்ரா அதனை ஏற்று 200க்கு மேற்பட்ட தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை தனது சொந்த செலவில் வழங்கினார். தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ்.முருகன் மற்றும் நடிகர் ஶ்ரீமன் முன்னிலை வகித்தனர். அருகில் வழக்கறிஞர் அய்யனார் மற்றும் நடிகர் பிரகாஷ். நடிகர் சங்க உறுப்பினர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பெற்றுக் கொண்டனர்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி பிஆர்ஓவாக இருந்து வந்த பிஏ ராஜு திடீரென காலமானது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னனி நடிகர்களான மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் உள்பட பலருக்கும் பி.ஆர்.ஓவாக இருந்து வந்தவர் பி.ஏ.ராஜு. மேலும் விஷால் உள்பட ஒருசில தமிழ் நடிகர்களுக்கும் பி.ஆர்.ஓவாக இருந்து வந்தார்.

அதுமட்டுமின்றி சினிமா பத்திரிகையாளராகவும் திரைப்படங்களின் புரமோஷன்களையும் சிறப்பாக கவனித்து வந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக பி.ஏ.ராஜு காலமானார். இவரது மறைவு செய்தியைக் கேட்டு முன்னணி நடிகர்கள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜூனியர் என்டிஆர், மகேஷ் பாபு, தேவிஸ்ரீபிரசாத், தமிழ் நடிகர்கள் விஷால், விக்ரம் உள்பட பலர் தங்களது சமூக வலைதளங்களில் பிஆர்ஓ ராஜு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ரஜினி பட நடிகை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது, முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் நாட்டில் வேகமாக பரவி வருகிறது.


இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்தவருமான ராதிகா ஆப்தே தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
சில நாட்களுக்கு முன் முகம் சரியான அழகான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள ரைசா, அதற்கான காரணத்தை கூறி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ரைசா வில்சன். இவர் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று பலருடைய கவனத்தை ஈர்த்தார். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து சில படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமானார்.

இவர் கடந்த மாதம் சிகிச்சைக்கு தோல் மருத்துவரிடம் சென்றதாகவும் அதனால் தனது முகத்தில் ஏற்பட்ட காயம் குறித்தும் பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து பல சர்ச்சைகள் நடந்தன. சில நாட்களுக்கு முன் மீண்டும் முகம் சரியான அழகான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் ரைசா.

பலரும் இதுகுறித்து கேள்விகள் எழுப்பி வந்த நிலையில் அதற்கான பதிலை தெரிவித்துள்ளார் ரைசா. புதிய கிளினிக் ஒன்றிற்கு சென்றதாகவும் அங்கு எடுத்துக்கொண்ட ஐந்து வார சிகிச்சைக்கு பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
பல படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ஜோதிகா, அடுத்ததாக பிரபல நடிகருக்கு சகோதரியாக நடிக்க இருக்கிறார்.
கேஜிஎப் படம் மூலம் மிகவும் பிரபல இயக்குனராக மாறியவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக கேஜிஎப்-2 படத்தை இயக்கிய முடித்துவிட்டு, தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.


இந்த நிலையில் இப்படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பிரபாஸுக்கு சகோதரியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால், சென்னையில் எளிமையாக தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். இன்று அவர் தனது 61வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்து மழையில் அவரை நனைய வைத்து வருகின்றனர். வழக்கமாக ஏதோ ஒரு படப்பிடிப்பு தளத்தில் எந்த ஆடம்பரமும் இல்லாமல் தனது பிறந்தநாளை படக்குழுவினருடன் கொண்டாடுவார் மோகன்லால்.

அதேபோல இந்தமுறை தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய சில நண்பர்களுடன் சென்னையில் உள்ள தனது வீட்டில் மிக எளிமையாக கொண்டாடியுள்ளார். இதன் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நண்பருடன் மோகன்லால்
சென்னையில் நடைபெற்று வந்த மலையாள பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களாகவே சென்னையிலேயே மோகன்லால் தங்கி இருக்கிறார்.
பேமிலிமேன் 2 வெப் தொடருக்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், நடிகை சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு செய்திருக்கிறார்.
சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் வெப் தொடர் ‘தி பேமிலிமேன் 2’. இந்த தொடர் வரும் ஜூன் மாதம் நான்காம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த தொடரின் டிரைலர் வெளியானது. இந்த டிரைலர் மாபெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருந்தாலும் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தொடரை வெளியிடக்கூடாது என்று கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தத் வெப்தொடரை வெளியிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

சமந்தாவின் பதிவு
இந்த நிலையில் சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் ’அமைதியாக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள்’ என்று பதிவு செய்து மார்ட்டின் லூதர் கிங்கின் பொன்மொழியான ’முழுப்பாதையும் தென்படாவிட்டாலும் முதலடியை எடுத்து வைப்பதற்கு நம்பிக்கையே முக்கியம்’ என்பதையும் பதிவு செய்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் பாடல்கள் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவர் இசையில் ஏற்கனவே வெளியான ‘ரகிடா ரகிடா’ மற்றும் ‘புஜ்ஜி’ ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக ‘நேத்து’ என்கிற ரொமாண்டிக் பாடலை நாளை காலை 11 மணிக்கு வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் மொத்த பாடல்களின் பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இருப்பதாகவும் அவை அனைத்தையும் அடுத்தடுத்து வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தனுஷ் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ரம்யா பாண்டியன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது, முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் நாட்டில் வேகமாக பரவி வருகிறது.


இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் கொரோனா முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டார். மேலும் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வந்த பொன்னம்பலம், தனது கிட்னியை மாற்ற உதவிய சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வந்தவர் பொன்னம்பலம். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பொன்னம்பலம் கலந்துக் கொண்டார். சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பொன்னம்பலம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வீடியோ வைரலானது.
இதையடுத்து பலரிடம் உதவி கேட்டார். சரத்குமார், கமல் உள்ளிட்ட பலர் பொன்னம்பலத்திற்கு உதவி செய்தனர். இந்நிலையில் தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் சிரஞ்சீவி பொன்னம்பலத்தின் கிட்னியை மாற்ற உதவி செய்திருக்கிறார். இதற்கு நடிகர் பொன்னம்பலம் வீடியோ வெளியீடு சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.






