என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சரியான கதைகளே இல்லாமல் வெறும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலேயே ஆபாச வெப் தொடர்களை உருவாக்கி வருவதாக பிரபல நடிகை குற்றம்சாட்டி உள்ளார்.
    இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ‘ஐந்து ஐந்து ஐந்து’ படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தவர் எரிகா பெர்ணான்டஸ். அதன்பின் விரட்டு, விழித்திரு போன்ற படங்களில் நடித்த இவர், தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் பாலிவுட் பக்கம் போனார். தற்போது அங்கு முன்னணி நடிகை ஆகிவிட்டார்.

    குறிப்பாக ‘குச் ரங் பியார் கே ஐஸே பி’ என்ற வெப்தொடரின் 2 சீசன்களிலும் டாக்டர் சோனாக்‌ஷி போஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். தற்போது அந்த தொடரின் 3-வது சீசனில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை எரிகா பெர்ணான்டசுக்கு மேலும் சில வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், போல்ட் கண்டன்ட் என்ற பெயரில் ஆபாசமாக நடிக்க அவர்கள் சொன்னதால், அதில் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

    எரிகா பெர்ணான்டஸ்
    எரிகா பெர்ணான்டஸ்

    இதுகுறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது: “சரியான கதைகளே இல்லாமல் வெறும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலேயே ஆபாச வெப் தொடர்களை உருவாக்கி வருகிறார்கள். எவ்வித காரணமும் இன்றி போல்டாக நடிக்க வேண்டும் என்றால் எப்படி நடிக்க முடியும் என நான் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடத்தில் பதிலில்லை .

    போல்ட் எனும் பெயரில் தேவையில்லாத ஆபாச காட்சிகளை கமர்ஷியல் மற்றும் வியாபார நோக்கத்துடன் திணிப்பது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. கதைக்கு தேவைப்பட்டால் அப்படி நடிப்பதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. ஆனால் வேண்டுமென்றே அத்தகைய காட்சிகளை திணித்து பணம் சம்பாதிக்க நினைத்தால், அதற்கு நான் உடன்படமாட்டேன். அதனால் தான் தேடிவந்த சில வாய்ப்புகளை நிராகரித்தேன்” என அவர் கூறியுள்ளார்.
    தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் கைவசம் பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, கமலுடன் இந்தியன் 2, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன. 

    இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் அடுத்ததாக இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்துக்கு ‘உமா’ என்று பெயர் வைத்துள்ளனர். இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படமாம். இதில் நடிப்பது குறித்து காஜல் அகர்வால் கூறுகையில் ‘சவாலான கதைகளில் நடிக்க தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறேன். உமா படத்திலும் சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கும்’ என்றார். 

    காஜல் அகர்வால்
    காஜல் அகர்வால்

    நடிகை காஜல் அகர்வால் ஏற்கனவே சிங்கம், ஸ்பெஷல் 26, டோ லப்சோன் கி கஹானி, மும்பை சகா போன்ற இந்தி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அடுத்ததாக நடித்துள்ள படத்தின் அப்டேட்டை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
    நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தை ‘அவள்’ பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கி உள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து தயாரித்துள்ளார்கள். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    நெற்றிக்கண் படத்தின் போஸ்டர்
    நெற்றிக்கண் படக்குழு வெளியிட்ட போஸ்டர்

    இந்நிலையில், நெற்றிக்கண் படத்தின் முக்கிய அப்டேட்டை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். அதன்படி, இப்படத்தில் இடம்பெறும் ‘இதுவும் கடந்து போகும்’ என்கிற பாடல், நாளை (ஜூன் 9) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா இப்பாடல் வரிகளை எழுதி உள்ளார்.
    கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பஞ்சதந்திரம் படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்பது குறித்து பிரபல நடிகர் விளக்கம் அளித்துள்ளார்.
    ரஜினிகாந்தின் எந்திரன், கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்தின் பில்லா, விஷாலின் சண்டக்கோழி, விக்ரமின் சாமி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி, லாரன்சின் காஞ்சனா மற்றும் அரண்மனை உள்ளிட்ட படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன. தற்போது கமலின் இந்தியன் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. 

    இதனிடையே கமல்ஹாசன் நடித்து 2002-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் வரவேண்டும் என்றும் ரசிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இந்த படத்தில் கமலுடன் ஜெயராம், ஸ்ரீமன், யூகி சேது, சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். முழுக்க முழுக்க நகைச்சுவை காட்சிகள் நிறைந்த இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருந்தார். 

    ஸ்ரீமன்
    ஸ்ரீமன் 

    இந்நிலையில், இப்படத்தில் நடித்திருந்த நடிகர் ஸ்ரீமன் பஞ்சதந்திரம் 2-ம் பாகம் வருமா என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: “என்னிடம் நிறைய பேர் பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். எனக்கு தெரிந்த வகையில் இதற்கான பதில் என்னவென்றால், கமல்ஹாசன் முடிவு செய்தால் அது நடக்கும். இது நடக்குமா? இல்லையா என்று உங்களைப்போல் படக்குழுவினரும் காத்து இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
    கேரள சட்டசபை தேர்தலில், கம்ïனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார்.
    கேரள சட்டசபை தேர்தலில், கம்ïனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார். கம்ïனிஸ்டு கட்சி வெற்றி பெற்று, நம்பூதிரிபாடு முதல்-மந்திரியானார். "இந்த வெற்றி பாவலர் வரதராஜனின் வெற்றி'' என்று நம்பூதிரிபாடு பாராட்டினார்.

    தேர்தல் பிரசாரத்தில் அண்ணனுடன் சேர்ந்து ஈடுபட்ட அனுபவம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "ஒரு தேயிலைத் தோட்டத்தின் வழியாக நாங்கள் சென்றபோது, ஓரிடத்தில் ஆண்களும், பெண்களுமாக தேயிலை பறித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே மேட்டுப் பகுதியில் ஜீப்பை நிறுத்தச் சொன்ன பாவலர் அண்ணன் பிரசார பாட்டை பாடினார் இப்படி:

    "சிக்கிக்கிட்டு முழிக்குதம்மா

    வெட்கங்கெட்ட காளை ரெண்டு

    முட்டி உடைஞ்ச காளை என் கண்ணம்மா - இது

    மூக்குக்கயிறு அறுந்த காளை என் பொன்னம்மா''

    என்று பாடினார்.

    பாவலரின் பாட்டு தேயிலைத் தோட்டத்தில் எதிரொலிக்க, அங்கே வேலை செய்தவர்கள் தங்கள் பின்னால் கட்டியிருந்த தேயிலைக் கூடைகளை அப்படியே போட்டுவிட்டு, மேலே வேகமாக ஓடிவந்து ஜீப்பை சுற்றி நின்று கேட்டார்கள்.

    இடையிடையே கரகோஷம். ஆனந்தக் கூச்சல்கள்.

    `இன்னும் ஒரு பாட்டு. இன்னும் ஒரு பாட்டு' என்று ரசிகர்களாக மாறிப்போன தொழிலாளர்கள்!

    நேரம் ஆகிவிட்டதை உணர்ந்த பாவலர் அவர்களிடம், "வேறு இடங்களுக்கும் போகவேண்டும். நேரமாகிவிட்டது'' என்று சொல்லி ஜீப்பை கிளப்பச் சொல்ல,

    அப்போது, "பாவலரே! கொஞ்ச நேரம் பொறுங்க'' என்று சொன்ன ஒரு தொழிலாளி, ஓட்டமாய் ஒரு பர்லாங் தூரம் ஓடி கையில் சூடு பறக்கும் `டீ' கிளாசுடன் வந்து நின்றார்.

    அந்தக் குளிரிலும் ஆவி பறக்க டீ கொடுத்த அந்த அன்பு, எங்களை நெகிழச் செய்தது.

    எதிர்பார்த்தபடியே அந்தத் தொகுதியில் மீண்டும் கம்ïனிஸ்டு கட்சி ஜெயிக்க, நம்பூதிரிபாடு தலைமையில் கம்ïனிஸ்டு கட்சி மந்திரிசபை அமைத்தது.

    மூணாறு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வெற்றி விழா கொண்டாட்டம். லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம். மேடையில் நம்பூதிரிபாடு பேசவந்தபோது, "இவடே பாவலர் வரதராஜன் ஆரானு?'' என்று கேட்டார்.

    கூட்டத்தின் முன் வரிசையில் அமர்ந்திருëëத பாவலரை ஜனங்கள் எழுந்து நிற்க வைத்தார்கள். பாவலரை பார்த்த நம்பூதிரிபாடு, `என்ட சகாவே! இவிட வரு'' என்றார். அண்ணன் மேடையில் ஏறினார். கைதட்டல் அதிகமாகியது.

    அப்போது நம்பூதிரிபாடு "ஈ வெற்றி முழுவன் பாவலர் வரதராஜன்ட வெற்றியானு'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

    அவர் இப்படிச் சொன்னதும் மொத்தக் கூட்டமும் உற்சாகமானது. கைதட்டல் ஒலி விண்ணை எட்டியது. இந்த சம்பவத்துக்குப் பிறகே தமிழ்நாடு கம்ïனிஸ்டு கட்சிக்கு பாவலர் அறிமுகமானார்.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    பாவலர் அண்ணனின் பாட்டு மூலம் கேரளத்தில் கிடைத்த வெற்றியை பகிர்ந்து கொண்ட இளையராஜா, தேவாரம் ஸ்கூலில் ஒன்பதாம் வகுப்பில் பீஸ் கட்டி சேர்ந்து விட்டார்.

    அதுபற்றி உற்சாகத்துடன் இளையராஜா சொன்னார்:

    "பள்ளியில் சேர்ந்த அன்று நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை. புதிய புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் வாங்கினேன். அதன் மணம் மனதுக்கு ரம்மியமாக இருந்தது. புதுப் புத்தகங்களை வாங்கிய அன்று அவற்றை தலையணைக்கு பக்கத்தில் வைத்து தூங்கினேன்.

    அடுத்த நாள் காலை பள்ளிக்குக் கிளம்பினேன். போன வருடம் 9-ம் வகுப்பில் பெயிலான என் நண்பன் ஜெயகரனும் என்னுடன் 9-ம் வகுப்பில் சேர்ந்து கொண்டான். நான் படிக்காமல் ஒரு வருடம் வேஸ்ட் ஆகிவிட்டதே என வருந்தியதை, அவன் படித்தும் ஒரு வருஷம் வேஸ்ட் ஆகியிருப்பதை எண்ணி மனதை தேற்றிக்கொண்டேன்.

    பள்ளியில் சேர்ந்தாகிவிட்டது. அது `நான் 9-வது படிக்க முடியாது'' என்று சொன்ன ஜோதிடர்களுக்குத் தெரிய வேண்டாமா?

    ஜோதிடர்களை பார்த்தேன். "நான் இளங்கோவடிகள் இல்லை என்றாலும், உங்கள் ஜோதிடத்தைப் பொய்யாக்கி விட்டேன் பார்த்தீர்களா?'' என்று கேட்டேன்.

    அவர்களோ என்னை ஏளனமாக பார்த்தபடிகள், "கொஞ்சம் பொறு கண்ணா. இன்னும் மூணே மாசம். இந்த கிரகம் இந்த வீட்டுக்கு வரும்போது எல்லாம் சரியாய்ப் போயிடும் (அதாவது படிக்க முடியாமல் போய்விடும்) என்றார்கள்.

    "அதையும் பார்க்கலாம்'' என்று சொல்லிவிட்டு, படிப்பைத் தொடர்ந்தேன். என்ன நடந்தாலும் எக்காரணம் கொண்டும் படிப்பையும், ஸ்கூலையும் விட்டு விடுவதில்லை என்று எனக்குள் ஒரு வைராக்கியமே குடிகொண்டது.

    அப்போது என்னை பார்ப்பவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். நாலைந்து மாணவர்களோடு சேர்ந்து நானும் பேசிக்கொண்டிருக்கும்போது, நான் ஏதாவது முக்கியமாக சொன்னால்கூட, அதை ஏனோதானோவென்றே கேட்பார்கள்.

    பள்ளியில் காலை பிரேயரை எனக்கு அண்ணன் முறைக்காரரான குருசாமி என்பவர் பாடுவார். இல்லையென்றால் ராமநாதன் என்ற தேவாரத்து மாணவன் பாடுவார். இவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. படித்தார்கள்.

    அன்றைக்கென்று பார்த்தால் குருசாமி அண்ணனுக்கு நல்ல ஜ×ரம். குரல் வேறு கம்மிப் போயிருந்தது. அதனால் அன்றைய பிரேயர் பாடலை `பாட முடியாது' என்பதை தெரிந்து கொண்டவர், பிரேயர் நேரத்தில் என்னைப் பாட அழைத்தார்.

    மைதானம் முழுக்க மாணவர்கள். நான் தயங்கித் தயங்கி, படிகளில் ஏறி, மேல் படியில் வழக்கமாக பிரேயர் பாடும் இடத்தில் நின்றபடி, `ஆதியந்தம் இல்லா அருட்ஜோதியே' என்று தொடங்கினேன். ஒரு அமைதி எங்கிருந்தோ வந்து கவ்வியது. பாடி முடியும்வரை அந்த அமைதி தொடர்ந்தது. பாடல் முடிந்து அவரவர் வகுப்புகளுக்குச் சென்ற மாணவர்கள் என்னை விசேஷமாக பார்த்தார்கள்.

    என் வகுப்பிலோ மாணவ-மாணவிகள் என்னை தனியாக கவனித்தார்கள்.

    அதுவரை என்னை பொருட்படுத்தாதவர்களுக்கு அன்று முதல் நான் முக்கியமானவன் ஆனேன். என்னை சட்டை செய்யாதவர்கள்கூட வலுவில் வந்து பேசினார்கள்.

    இப்படி திடீர் கவனிப்பு தொடர்ந்தாலும் ஜோதிடத்தை பொய்யாக்க வேண்டும் என்ற உறுதியுடன் படிப்பிலும் தீவிர கவனம் செலுத்தினேன். காலாண்டுத் தேர்வில் நல்ல மார்க் எடுத்தேன்.
    ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் நடிகர் தனுஷ் படக்குழுவினருடன் டுவிட்டர் ஸ்பேசில் கலந்துக் கொண்டு உரையாடினார்.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ஜகமே தந்திரம்'. இந்த படத்தில் ஐஷ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் ஜூன் 18 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில் டுவிட்டர் ஸ்பேசில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

    இதில் நடிகர் தனுஷ் பேசும் போது, ஜகமே தந்திரம் படத்தின் வெளியீட்டுக்காக ரொம்ப நாளாக காத்துக் கொண்டு இருக்கிறோம். கடைசியாக இப்படம் மக்களிடம் போய் சேர இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நடித்த சுருளி கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை இப்படத்தின் 2ஆம் பாகம் எடுக்க தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறேன். அந்த அளவிற்கு சுருளி ரொம்ப பிடித்திருக்கிறது.

    தனுஷ்

    இந்த படம் என் ரசிகர்கள் மட்டுமில்லை, மற்ற ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இப்படத்தின் பாடல்கள் பெரிய வரவேற்பை கொடுத்து இருக்கிறது. ஆனால், பாடல்களை விட பின்னணி இசை சிறப்பாக இருக்கும் என்றார்.
    தனது பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் பாண்டிராஜ், தான் இயக்கி வரும் சூர்யா 40 படத்தின் புதிய அப்டேட்டை தனது சமூக வலைத்தள பக்கத்தில் கொடுத்துள்ளார்.
    பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். மேலும் நடிகர் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. கொரோனா ஊரடங்கால் இதன் சூட்டிங் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் இயக்குனர் பாண்டிராஜ், தனது சமூக வலைத்தள பக்கத்தில், 

    #Suriya40 update Dear #AnbaanaFans 35% படம் முடிஞ்சுருக்கு, எடுத்தவரைக்கும் நல்லா வந்திருக்கு. அடுத்த schedule Lockdown முடிஞ்சதும் start பண்ண வேண்டியதுதான் Our team Ready. Title Mass ah, Pre Anoucement ஓட வரும். July வரை time kodunga plz என்று பதிவு செய்துள்ளார்.


    மங்காத்தா, ஜில்லா படங்களில் நடித்தவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான மகத், அவரது மனைவி பிராச்சி தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது.
    அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மகத். அதையடுத்து ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரிய அளவில் பிரபலமானார்.

    இவர் பிராச்சி மிஸ்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் தனது மனைவி பிராச்சி மிஸ்ரா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இவர்கள் வீட்டில் பிராச்சிக்கு நடந்த வளைகாப்பு விழாவின் வீடியோ ரசிகர்களை கவர்ந்தது. 

    இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை நடிகர் மகத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


    தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
    கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் மும்பையில் தற்போது வசித்து வருகிறார். நடிகையும், பாடகியான இவர், சமீபத்தில் தெலுங்கில் வெளியாகியிருந்த 'கிராக்' திரைப்படத்தில், நடிகர் ரவி தேஜாவுடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து இருக்கிறார்.

    ஸ்ருதி ஹாசன்

    இந்நிலையில், இன்ஸ்டாகிராம் லைவ் ஒன்றில் இருந்த ஸ்ருதிஹாசன், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர், 'திருமணம் செய்து கொண்டீர்களா?' என கேள்வி கேட்டுள்ளார். இதற்கு ஸ்ருதிஹாசன், 'இல்லை' என்று பதில் அளித்துள்ளார்.
    நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 படத்தில் பிரபல நடிகர், தான் நடிக்க இருப்பதை உறுதி செய்து இருக்கிறார்.
    விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் ’தளபதி 65’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் முடிவடைந்தது. இந்த படப்பிடிப்பில் சுமார் 25 முதல் 30 சதவீத படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தவுடன் மீண்டும் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தவுடன் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதில் விஜய், பூஜா ஹெக்டே உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

    விஜய் - யோகி பாபு
    விஜய் - யோகி பாபு

    இந்த நிலையில் ஏற்கனவே ’தளபதி 65’ படத்தில் யோகி பாபு நடிப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அவரே சமூகவலைதளத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த போது ’தளபதி 65’ படத்தில் நடிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

    யோகி பாபுவின் பதிவு
    யோகி பாபுவின் பதிவு 

    ஏற்கனவே விஜய்யுடன் மெர்சல், சர்கார் மற்றும் பிகில் ஆகிய படங்களில் நடித்த யோகிபாபு, தற்போது நான்காவது முறையாக விஜய்யுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால், திருமணத்திற்கு பின்பும் படங்களில் நடித்து வருகிறார்.
    பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய வெற்றி படங்களில் ஒன்று ’கைதி’. இந்த படத்தில் பாடல்கள் மற்றும் நாயகி இல்லை.

    இந்த நிலையில் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது. கார்த்தி நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

    காஜல் அகர்வால்

    இந்த நிலையில் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ள ‘கைதி’ திரைப்படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் பிளாஷ்பேக்கில் அஜய்தேவ்கான் மனைவி கேரக்டர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
    வழக்கம் போல் தற்போது வெளியாகியுள்ள செய்தியும் வதந்தி தான் என்று முன்னணி நடிகையாக இருக்கும் அஞ்சலி தெரிவித்துள்ளார்.
    ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக ராம் இயக்கத்தில் அறிமுகமானவர் அஞ்சலி. பின்னர் ‘அங்காடித் தெரு’ படம் அவரை தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெறச் செய்தது. எங்கேயும் எப்போதும், இறைவி உள்ளிட்ட படங்களில் அவர் நடிப்புக்கு பெயர் கிடைத்தது. தற்போது சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். 

    நடிகை அஞ்சலி கடைசியாக தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘வக்கீல் சாப்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது அஞ்சலி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றது. அஞ்சலி திருமணம் குறித்து அடிக்கடி வதந்திகள் பரவுவதுண்டு. அதே போல் தான் தற்போது வெளியாகியுள்ள திருமண செய்தியும் வதந்தி தான் என்று அஞ்சலி தெரிவித்துள்ளார்.

    அஞ்சலி

    “தற்போது நான் எனது திரை வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறேன். திருமணம் குறித்து நான் தற்போது யோசிக்கவில்லை. வரவிருக்கும் நாட்களில் நல்ல கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
    ×