என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால், திருமணத்திற்கு பின்பும் படங்களில் நடித்து வருகிறார்.
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய வெற்றி படங்களில் ஒன்று ’கைதி’. இந்த படத்தில் பாடல்கள் மற்றும் நாயகி இல்லை.

இந்த நிலையில் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது. கார்த்தி நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ள ‘கைதி’ திரைப்படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் பிளாஷ்பேக்கில் அஜய்தேவ்கான் மனைவி கேரக்டர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
வழக்கம் போல் தற்போது வெளியாகியுள்ள செய்தியும் வதந்தி தான் என்று முன்னணி நடிகையாக இருக்கும் அஞ்சலி தெரிவித்துள்ளார்.
‘கற்றது தமிழ்’ படம் மூலமாக ராம் இயக்கத்தில் அறிமுகமானவர் அஞ்சலி. பின்னர் ‘அங்காடித் தெரு’ படம் அவரை தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெறச் செய்தது. எங்கேயும் எப்போதும், இறைவி உள்ளிட்ட படங்களில் அவர் நடிப்புக்கு பெயர் கிடைத்தது. தற்போது சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை அஞ்சலி கடைசியாக தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘வக்கீல் சாப்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது அஞ்சலி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றது. அஞ்சலி திருமணம் குறித்து அடிக்கடி வதந்திகள் பரவுவதுண்டு. அதே போல் தான் தற்போது வெளியாகியுள்ள திருமண செய்தியும் வதந்தி தான் என்று அஞ்சலி தெரிவித்துள்ளார்.

“தற்போது நான் எனது திரை வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறேன். திருமணம் குறித்து நான் தற்போது யோசிக்கவில்லை. வரவிருக்கும் நாட்களில் நல்ல கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
நான் பிரபல நடிகையாக இருந்தாலும் என்னை சுற்றி கேமராக்கள் இருப்பதை நான் விரும்புவதில்லை என்று பூமிகா சாவ்லா கூறி இருக்கிறார்.
நடிகை பூமிகா சாவ்லா தமிழில் விஜய் உடன் பத்ரி படத்தின் மூலமாக அறிமுகமானார். இதையடுத்து ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இந்நிலையில் பூமிகா இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகின.

தற்போது அதற்கு பூமிகா பதிலளித்துள்ளார். “போலி செய்திகள் அவை. என்னை பிக்பாஸில் இருந்து அழைக்கவில்லை. அப்படி அவர்கள் அழைத்தாலும் நான் செல்ல மாட்டேன். என்னை சீசன் 1, 2, 3 ஆகியவற்றில் பங்குகொள்ள அழைத்தார்கள், அதன்பிறகும் கூட அழைத்தார்கள். ஆனால் நான் செல்ல மறுத்துவிட்டேன்.

இந்த சீசனில் என்னை அழைக்கவில்லை. நான் தற்போதும் அதை ஏற்க மாட்டேன். நான் பிரபல நடிகையாக இருந்தாலும் என்னை சுற்றி கேமராக்கள் இருப்பதை நான் விரும்புவதில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜோம்பி படங்களில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த், பாலியல் வழக்கில் கைதான பியர்ல் புரிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இந்தி டி.வி. நடிகர் பியர்ல் புரி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைதாகி உள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலைத்தளத்தில் பலரும் வற்புறுத்தி வருகிறார்கள்.

ஆனால் சில நடிகைகள் பியர்ல் புரி குற்றமற்றவர் என்று சொல்லி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜோம்பி படங்களில் நடித்துள்ள யாஷிகா ஆனந்தும் பியர்ல் புரிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

யாஷிகா ஆனந்த் - பியர்ல் புரி
சமூக வலைத்தளத்தில் பியர்ல் புரியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை யாஷிகா ஆனந்த் பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், ‘பியர்ல் புரி மிகவும் அமைதியாக பேசக்கூடியவர். எனக்கு தெரிந்த அன்பானவர்களில் அவரும் ஒருவர். உண்மை தெரியும் வரை பொறுத்திருப்போம். நான் பியர்ல் புரிக்கு ஆதரவு அளிக்கிறேன். எனது நண்பர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று கூறியுள்ளார்.
அறிமுக இயக்குனர் தாமரைச் செல்வன் இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் ‘நதி’ படத்தின் முன்னோட்டம்.
கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடிப்பில் ஈடுபாட்டை செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சாம் ஜோன்ஸ். 'ஏமாலி', 'லிசா' உள்ளிட்ட படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் ஜொலிக்க ஆயத்தமாகிவிட்டார்.
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச் செல்வன் இயக்கும் “நதி” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகனாக நடிப்பதோடு மட்டுமன்றி கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்படத்தை நடிகர் சாம் ஜோன்ஸ் தனது தயாரிப்பு நிறுவனம் “மாஸ் சினிமாஸ்” சார்பாக தயாரிக்கிறார்.
“நதி” படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார்.

சாம் ஜோன்ஸ், ஆனந்தி
பிரபல தெலுங்கு நடிகை சுரேகவாணி, முனிஸ்காந்த், வேலா ராமமூர்த்தி, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் கதாநாயகனுக்கு நிகரானது என்பதால் பிரபல இயக்குநர் ஒருவரை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவாளராக எம்.எஸ்.பிரபு அவர்களும், இசையமைப்பாளராக 'கனா' படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸும் பணியாற்றுகின்றனர். “நதி” படத்தின் காட்சிகள் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பிரேமம் படத்தில் மலர் டீச்சராக சாய் பல்லவி நடித்துள்ள நிலையில், அதில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவலை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து `பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான `பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.
நிவின் பாலியின் மூன்று பரிணாமங்கள் குறித்து காட்டப்பட்ட ‘பிரேமம்’ படத்தில், மலர் டீச்சராக நடித்திருந்த சாய் பல்லவியின் கதாபாத்திரம் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது. ‘பிரேமம்’ படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது.
இந்நிலையில், சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனிடம், தங்களது மலையாள படங்களில் தமிழின் தாக்கம் இருப்பது பற்றி ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் பதிலளித்ததாவது: “முதலில் நான் பிரேமம் கதை எழுதிய போது மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் அசினை நடிக்க வைக்க விரும்பினேன். அந்தக் கதையும் மலையாளத்தில் தான் இருந்தது. ஃபோர்ட் கொச்சியை சேர்ந்தவராக அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்து இருந்தேன்.

அசின், சாய் பல்லவி
பின்னர் அசினை தொடர்பு கொள்ள முடியாத காரணத்தால், மலர் டீச்சர் கதாபாத்திரத்தை தமிழ்நாட்டை சேர்ந்தவராக மாற்றி எழுதினேன். நான் சிறு வயதில் ஊட்டியில் படித்தேன் பின்னர் கல்லூரி படிப்பை சென்னையில் படித்தேன். அதனால் தான் எனது படத்தில் தமிழின் தாக்கம் அதிகமாக இருக்கிறது” என விளக்கம் அளித்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகை வரலட்சுமி வீட்டில் இருந்தபடியே விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி. ஹீரோயினாக மட்டுமல்லாது வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து வருகிறார். இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் வருகிறது.
தற்போது வரலட்சுமியின் கைவசம் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, ஆகிய தமிழ் படங்களும், லாகம் என்ற கன்னட படமும் உள்ளது. இவ்வாறு பிசியான நடிகையாக வலம்வரும் வரலட்சுமி, தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வீட்டில் இருந்தபடியே விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

வரலட்சுமி சரத்குமார்
அண்மையில் கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டிருந்த அவர், தற்போது திரைப்பிரபலங்களுடன் இணைந்து முகக்கவசம் முறையாக எப்படி அணிய வேண்டும், எப்படியெல்லாம் அணியக்கூடாது என்பதை சித்தரித்து விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளார்.
இந்த குறும்படத்தில் நடிகர்கள் கிருஷ்ணா, சதீஷ், யோகிபாபு, சந்தீப் கிஷன், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, வித்யூலேகா, வரலட்சுமி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த விழிப்புணர்வு குறும்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Thank you for being so awesom n cool..thank u all for doing it as soon as I asked u..!! Love you guys so much..!!Something fun from us to you..
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) June 7, 2021
How to wear a Mask 😷 @aishu_dil@ReginaCassandra@VidyuRaman@sundeepkishan@Actor_Krishna@actorsathish@priyadarshi_i@iYogiBabupic.twitter.com/q6dAJwhZ1a
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் ஆர்யா, அடுத்ததாக சூதுகவ்வும் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.
விஜய் சேதுபதியின் சூதுகவ்வும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி. இந்த படத்தை அடுத்து விஜய் சேதுபதியை வைத்து ‘காதலும் கடந்து போகும்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சமீபத்தில் குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கிய நலன் குமாரசாமி, அதிலும் விஜய் சேதுபதியை தான் ஹீரோவாக நடிக்க வைத்தார்.

நலன் குமாரசாமி
இவ்வாறு வரிசையாக விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்து வந்த நலன் குமாரசாமி, தற்போது முதன்முறையாக ஆர்யாவுடன் கூட்டணி அமைக்க உள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஒரு பேண்டஸி திரில்லர் கதையம்சம் கொண்டதாம். கொரோனா பரவல் குறைந்த பின் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடு ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் உருவாக்கியிருப்பதாக பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமந்தா நடிப்பில் வெளியாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “எங்கள் இனத்திற்கு எதிரான ‘தி பேமிலி மேன் 2’ இணையத் தொடரை நிறுத்த தமிழர்களும் தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசு, அத்தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக்களத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத, தகுதியற்ற நபர்களால், தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன.
அறமும் வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த, போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும், தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடும், தொடரை உருவாக்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிடவேண்டும்.

பாரதிராஜா
தி பேமிலி மேன் 2 தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும். எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்”. இவ்வாறு பாரதிராஜா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனாவுக்கு பலியான ஓவியர் இளையராஜாவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் எனும் கிராமத்தில் பிறந்தவர் இளையராஜா. ஓவியராக புகழ்பெற்ற இவர், இயக்குனர் பார்த்திபன் இயக்கிய இவன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். அதே படத்தில் பார்த்திபனின் சிறுவயது கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஓவியர் இளையராஜா
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மரணமடைந்தார் ஓவியர் இளையராஜா. அவருக்கு வயது 43. ஓவியர் இளையராஜாவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் ஒன்று நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், படக்குழு அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘குட்லக் சகி’. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்தத் திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார்.
விளையாட்டு, காதல், நகைச்சுவைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

குட்லக் சகி படத்தின் போஸ்டர்
இதனிடையே குட்லக் சகி திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், இதுகுறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது. அவர்கள் கூறியதாவது: ‘குட்லக் சகி’ படம் ஓடிடிக்கு செல்வதாக பரவும் தகவல் உண்மையில்லை. விரைவில் அப்டேட் வெளியிடுவோம். அனைவரும் வீட்டிலேயே இருங்கள், பாதுக்காப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளனர். இதன்மூலம் ஓடிடி ரிலீஸ் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நடிகை ஒருவரின் காலில் முத்தமிடும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, பிரபல இயக்குனர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இந்தி, தெலுங்கு படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. இவர் சூர்யா நடித்த ‘ரத்த சரித்திரம்’ தெலுங்கு படத்தை இயக்கியவர். இந்தப் படம் தமிழிலும் வந்தது. பின்னர் சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை கதையையும் இயக்கி வெளியிட்டார். தற்போது சர்ச்சைக்குரிய கதைகளை இயக்கி தனது ஓடிடி தளத்தில் வெளியிட்டு வரும் இவர், சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ராம்கோபால் வர்மாவின் டுவிட்டர் பதிவு
இந்நிலையில், தற்போது நடிகை ஒருவரின் காலில் முத்தமிடும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அந்த நடிகையின் பெயர் சோனியா நரேஷ் என்றும், அந்த புகைப்படத்தை மற்றொரு நடிகையான நைனா கங்கூலி எடுத்ததாகவும் ராம் கோபால் வர்மா குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்கான நெடிசன்கள் அவரை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.






