என் மலர்
சினிமா செய்திகள்
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் ஒன்று நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், படக்குழு அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘குட்லக் சகி’. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்தத் திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார்.
விளையாட்டு, காதல், நகைச்சுவைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

குட்லக் சகி படத்தின் போஸ்டர்
இதனிடையே குட்லக் சகி திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், இதுகுறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது. அவர்கள் கூறியதாவது: ‘குட்லக் சகி’ படம் ஓடிடிக்கு செல்வதாக பரவும் தகவல் உண்மையில்லை. விரைவில் அப்டேட் வெளியிடுவோம். அனைவரும் வீட்டிலேயே இருங்கள், பாதுக்காப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளனர். இதன்மூலம் ஓடிடி ரிலீஸ் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நடிகை ஒருவரின் காலில் முத்தமிடும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, பிரபல இயக்குனர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இந்தி, தெலுங்கு படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. இவர் சூர்யா நடித்த ‘ரத்த சரித்திரம்’ தெலுங்கு படத்தை இயக்கியவர். இந்தப் படம் தமிழிலும் வந்தது. பின்னர் சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை கதையையும் இயக்கி வெளியிட்டார். தற்போது சர்ச்சைக்குரிய கதைகளை இயக்கி தனது ஓடிடி தளத்தில் வெளியிட்டு வரும் இவர், சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ராம்கோபால் வர்மாவின் டுவிட்டர் பதிவு
இந்நிலையில், தற்போது நடிகை ஒருவரின் காலில் முத்தமிடும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அந்த நடிகையின் பெயர் சோனியா நரேஷ் என்றும், அந்த புகைப்படத்தை மற்றொரு நடிகையான நைனா கங்கூலி எடுத்ததாகவும் ராம் கோபால் வர்மா குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்கான நெடிசன்கள் அவரை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அஞ்சலிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வக்கீல் சாப் படம் வந்தது. தற்போது தமிழில் பூச்சாண்டி மற்றும் தெலுங்கில் 2 படங்கள் கன்னடத்தில் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார்.
அஞ்சலிக்கு 34 வயது ஆகிறது. ஏற்கனவே நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் பேசினர். அஞ்சலி அளித்த பேட்டியொன்றில் நான் காதலித்தது உண்மைதான். ஆனால் அந்த காதல் நிறைவேறவில்லை. தோல்வியில் முடிந்து விட்டது என்றார். காதலித்தவர் பெயரை வெளிப்படுத்தவில்லை.

அஞ்சலி
இந்நிலையில், அஞ்சலிக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும், விரைவில் அவரது திருமணம் ஐதராபாத்தில் நடக்க உள்ளதாகவும் புதிய தகவல் தெலுங்கு பட உலகில் பரவி வருகிறது. திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக அவர் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அஞ்சலி தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும், அவரது மகன் ஏ.ஆர்.அமீனும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர்.
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான்
இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும், அவரது மகன் ஏ.ஆர்.அமீனும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸை போட்டுக்கொண்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை அடுத்து தனது மகனுடன் செல்பி எடுத்து, அந்த புகைப்படத்தை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். தாங்கள் இருவரும் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரிஷ்யம் 2 படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் 2 படத்தில் நடிக்க கமல் திட்டமிட்டுள்ளாராம்.
மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 2013-ல் வெளியாகி வசூல் குவித்த திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமல்ஹாசன், கவுதமி நடித்து இருந்தனர். தெலுங்கு, இந்தி, கன்னடம், சீன மொழிகளிலும் திரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், திரிஷ்யம் படத்தின் 2-ம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தையும் தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் சீன மொழிகளில் ரீமேக் செய்வதாக அறிவித்து உள்ளனர்.
தமிழிலும் திரிஷ்யம் 2 படம் பாபநாசம் 2-ம் பாகமாக ரீமேக் செய்யப்படுமா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கமல்ஹாசனுடன் இதுகுறித்து பேச திரிஷ்யம் 2 படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜீத்து ஜோசப், கமல்
கமல்ஹாசன் சம்மதித்தால் திரிஷ்யம் 2 படத்தை தமிழில் ரீமேக் செய்வேன் என்று படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் ஏற்கனவே கூறியுள்ளார். கோர்ட்டு வழக்கினால் இந்தியன் 2, விக்ரம் ஆகிய 2 படப்பிடிப்பிலும் கமல்ஹாசன் பங்கேற்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் பாபநாசம் 2 படத்தில் ஒரு மாதத்தில் நடித்து முடித்து விடலாம் என்பதால் அதில் நடிப்பதற்கு கமல்ஹாசன் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.
நான் வேலை பார்த்த பகுதி எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். எல்லாருமே நான் வேலை செய்யும் இடத்தை கடந்துதான் போகவேண்டும்.
ஒருநாள் அந்தப் பாட்டு அணைக்கரை தலைமை என்ஜினீயரின் காதில் கேட்டுவிட்டது.
அதன் பிறகு நடந்தது பற்றி இளையராஜா கூறுகிறார்:
"நான் வேலை பார்த்த பகுதி எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். எல்லாருமே நான் வேலை செய்யும் இடத்தை கடந்துதான் போகவேண்டும். ஆனால் அன்று நான் பாடத்தொடங்கிய அந்த நேரத்தில் இருந்த கொஞ்ச சத்தமும் இல்லாமல் போயிருந்தது. என் பாட்டுக்காகத்தான் இப்படி எல்லோரும் அமைதியாகி விட்டார்களோ என்ற மகிழ்ச்சியில் பாடும் சத்தத்தை அதிகரித்தேன்.
அப்போதுதான் `ஸ்பாட் விசிட்'டுக்காக அங்கே வந்திருந்த தலைமை என்ஜினீயர் என் பாட்டைக் கேட்டுவிட்டார். அப்போதும் கூட என் குரல் குறையவில்லை. நிற்கவும் இல்லை.
என்னை நெருங்கியவர், "ஹேய்! கம் ஹியர் மேன்' (இங்கே வா) என்றார்.
தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த `ஓஸ் பைப்'பை மடக்கி வைத்துவிட்டு அருகில் போனேன்.
"ஹு ஆர் ? வாட் இஸ் யுவர் நேம்? (யார் நீ? உன் பெயர் என்ன?) என்று கேட்டார்.
"ராஜையா'' என்றேன்.
"கொஞ்சமும் தயங்காமல் நான் பதில் சொன்னதைப் பார்த்தவர், "நீ படித்திருக்கிறாயா?'' என்று ஆங்கிலத்தில் கேட்டார்.
"எஸ் சார். எய்த் ஸ்டாண்டர்டு'' என்றேன்.
"எய்த் ஸ்டாண்டர்டு?'' என்று ஆச்சரியமாக கேட்டவர், அரை டிராயரும், குள்ளமுமாக இருந்த என்னை ஆச்சரியமாக மேலும் கீழும் பார்த்தார். அதே வேகத்தில் "ஆபீசுக்கு வந்து என்னைப்பார்'' என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டுச் சென்று விட்டார்.
அதன்படி ஆபீசுக்குப் போய் அவரை பார்த்தேன். "நீ நாளையில் இருந்து `ஓஸ் பைப்' பிடிக்க வேண்டாம். இங்கே ஆபீசுக்கு வந்துவிடு'' என்றார்.
"சரி சார்'' என்று சொல்லிவிட்டு சந்தோஷத்துடன் வெளியே வந்தேன். அங்கிருந்த அவரது உதவியாளரிடம், "இங்கே வந்து நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டேன்.
அவரோ, "ஏய்! உன்னை ஆபீஸ் பையனாகப் போட்டிருக்காருய்யா. போ! போ!'' என்றார்.
அடுத்த நாள் சந்தோஷமாக ஆபீசுக்குப் போனேன். அங்கே நாலைந்து செகரட்டரி, கிளார்க், லெட்ஜர் கீப்பர், அக்கவுண்டண்ட் இவ்வளவு பேர்தான் மொத்தம். இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்ட ஒரே கட்டிடத்தில் தடுப்பு வைத்து அமைக்கப்பட்ட நான்கு மேஜை - நாற்காலிகள். அவ்வளவுதான்.
ஒரு பைலை கையில் கொடுத்து, "அவரிடம் கொடு'' என்பார், ஒருவர். "இதை அவர்கிட்டே கொடுத்து கையெழுத்து வாங்கி வா!'' என்பார், இன்னொருவர். இங்கும் அங்குமாக போய்க்கொண்டிருந்தேனே தவிர, மற்றபடி ஒரே போர். ஏனென்றால் பாட்டுப்பாடவே சான்ஸ்
இல்லையே!இதுபோக மத்தியானம் ஆபீசர் கேம்பசில் இருந்த என்ஜினீயர் முரளீதரனுக்கு கேரியரில் சாப்பாடு எடுத்துப் போய் பரிமாறி வரவேண்டும். ஒரு மைல் தூரம் நடந்துதான் போய்வரவேண்டும்.
ஒரு நாள் முன்னதாகவே போய் காத்திருப்பேன். இன்னொரு நாளோ அவர் காத்திருக்க, நான் லேட்டாகப்போய் திட்டு வாங்குவேன். சரிவரப் பரிமாறாவிட்டால், அதற்கு வேறு திட்டு.
என்னுடைய சர்வீசில் அவருக்குத் திருப்தி இல்லாததால், என்னை மறுபடியும் அணைக்கட்டுப் பகுதிக்கு மாற்றி, `ஓஸ் பைப்' பிடிக்க அனுப்பி விட்டார்கள்.''
இவ்வாறு கூறும் இளையராஜாவுக்குள் அணை தொடர்பான, ஒரு சோகமும் இருக்கிறது. அதுபற்றி கூறுகிறார்:
"அப்போது பெரும்பாலும் அணையின் வேலைகள் முடிவுக்கு வந்து கொண்டிருந்த நேரம். திடீரென ஒருநாள் அரசாங்க அறிவிப்பாக தண்டோரா ஒலித்தது.
அணையின் பின்பகுதியில் நீர் தேங்கும் இடத்தில் இருந்த ஊர்களான காமக்காபட்டி உள்ளிட்ட 11 கிராமங்களில் வசிப்பவர்கள் அதைக் காலி செய்துவிட்டு வேறு ஊருக்குப் போய்விட வேண்டும். இப்படி வெளியேற கடைசிநாள்'' என்று கெடு தேதியையும் அறிவித்தார்கள்.
அணை உச்சியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்த என் கண்ணில் மக்கள் ஊரை காலி செய்துவிட்டுப் போகும் காட்சி கண்ணில் படும். கெடு நாள் நெருங்க நெருங்க, கூட்டம் கூட்டமாய் அங்கிருந்த மக்கள் வெளியேறுவதைக் காண மனம் சகிக்கவில்லை.
அவர்கள் வாழ்வதற்கு அரசாங்கம் வேறு நிலங்கள் கொடுக்கலாம். நிலத்தோடு அவர்களுக்கிருந்த அந்த உறவின் பிரிவுக்கு எதை ஈடாகக் கொடுக்க முடியும்?''
- இவ்வாறு மிக இளம் வயதிலேயே மற்றவர்களின் பிரச்சினைகளையும் மனதுக்குள் பதியமிட்டுக்கொண்ட இளையராஜா, ஒரு வருடம் வைகை அணையில் வேலை செய்து முடித்துவிட்டார். கையில் பணம் கொஞ்சம் சேர்ந்திருந்தது.
"இந்த வருடம் நிச்சயம் தேவாரம் ஸ்கூலில் பணம் கட்டி சேர்ந்து ஜோதிடத்தை பொய்யாக்கி விடவேண்டும்'' என்று திட்டமிட்டார்.
ஆனால், அவர் பள்ளியில் சேருவதற்கு முன்பாக கேரளாவில் நடந்த தேர்தலில் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவேண்டி இருந்தது. அதற்காக இளையராஜாவும் கேரளா சென்றார்.
இதுபற்றி அவரே கூறுகிறார்:
"1957-ல் நடந்த பொதுத்தேர்தலில் எல்லா இடத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்க, கேரளாவில் மட்டும் கம்யுனிஸ்டு கட்சி வெற்றி பெற்றது. ஒட்டு மொத்த இந்தியாவில் ஒரேயொரு மாகாணத்தில் (கேரளா) மட்டும் காங்கிரசுக்கு எதிராக வேறு கட்சி உருவானதை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை.
இந்த நிலையில் தேவிகுளம் பீர்மேடு தொகுதியில் நடந்த தேர்தல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஒரு தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலை.
இதனால் அந்தத் தொகுதிக்கு நடந்த மறு தேர்தலில் காங்கிரசுக்கும் கம்யுனிஸ்டுக்கும் "வாழ்வா சாவா'' நிலை. எல்லா தேசியத் தலைவர்களும் அங்கே முகாமிட்டு இருந்தனர். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற டென்ஷனான நிலை. இந்த தேர்தல் பிரசாரத்துக்கு கம்யுனிஸ்டு கட்சி சார்பில் பாவலர் அண்ணன் போயிருந்தார்.
ஸ்கூலில் சேருவதற்கு முன் வந்த விடுமுறை நாட்களில் நானும் பாஸ்கரும் பாவலர் அண்ணனை பார்க்க மூணாறுக்கு போனோம்.
கம்ïனிஸ்டு கட்சி ஆபீசில் ஏகப்பட்ட கூட்டம். தேர்தல் காரியதரிசி அமர்ந்திருக்க, பல எஸ்டேட் கட்சித் தலைவர்கள் வரிசையாக நின்றிருந்தார்கள். அவர்களிடம் பேசிய செயலாளர், "கம்யுனிஸ்டு தலைவர்கள் பி.ராமமூர்த்தி, பி.டி.ரணதிவே, எஸ்.ஏ.டாங்கே, ஏ.கே.கோபாலன், ஜோதிபாசு, ராஜேஸ்வரராவ், ஜீவானந்தம் என அத்தனை பேரும் உங்கள் தொகுதிகளுக்கு அடுத்தடுத்து வருவார்கள்'' என்றார்.
இதைக்கேட்ட எஸ்டேட் தொழிலாளர்கள் அத்தனை பேரும் ஒரே குரலில் "தோழரே! இவர்களெல்லாம் எங்களுக்கு வேண்டாம். பாவலர் கையில் ஒரு மைக்கை கொடுத்து அவரை மட்டும் எங்களுடன் அனுப்பினீர்களென்றால், இந்தத் தொகுதியை நாங்கள் ஜெயித்துக் காட்டுகிறோம்'' என்றார்கள்.
இது என் கண் முன்னே நடந்த நிகழ்ச்சி.
தொழிலாளர்கள் இப்படிச் சொன்னதும் அவர்களிடம் பேசிய செயலாளர், "பாவலர் கண்டிப்பாக வருவார். அவர் பாடியபின் கூட்டம் தலைவர்களோடு நடக்கும்'' என்றார்.
உடனே மளமளவென வேலைகள் தொடர்ந்தன. பாவலர் அண்ணன் ஒரு ஜீப்பில் மைக்கை கட்டிக்கொண்டு ஒவ்வொரு எஸ்டேட்டாக பாடிச்சென்றதை கண்ணாரக் காணும் பாக்கியம் எனக்கும் பாஸ்கருக்கும் கிடைத்தது.

இந்தி நடிகர் திலீப் குமாரின் இரு சகோதரர்கள் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர்.
மும்பை:
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் (வயது 98). முதுமை காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், திலீப் குமாருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக இதே மருத்துவமனையில் நடிகர் திலீப் குமார் அனுமதிக்கப்பட்டார். அனைத்துப் பரிசோதனைகளும் செய்யப்பட்டதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திட்டம் இரண்டு படத்தின் முன்னோட்டம்.
அதிக சம்பளத்துக்கு ஆசைப்படாமல் கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர், ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் நடித்துள்ள புதிய படம் ‘திட்டம் இரண்டு.’ திடுக்கிடும் மர்மங்கள் நிறைந்த திகில் படமாக உருவாகி உள்ளது. ‘யுவர்ஸ் சேம்புல்லி’ என்ற குறும்படத்தின் மூலம் பேசப்பட்ட விக்னேஷ் கார்த்திக் இயக்கி உள்ளார்.

‘திட்டம் இரண்டு’ படத்தை பற்றி விக்னேஷ் கார்த்திக் கூறியதாவது: “ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த மர்மங்கள் நிறைந்த திகில் படம் இது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள எதிர்பாராத திருப்பங்களை கொண்ட திரைக்கதை. கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
தினேஷ் கண்ணன், வினோத் குமார் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.” இவ்வாறு அவர் கூறினார்.
ஜிகர்தண்டா, பேட்ட போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய பாபி சிம்ஹா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.
பாபி சிம்ஹா கன்னடத்தில் முதன்முறையாக நடித்துள்ள படம் '777 சார்லி'. கிரண்ராஜ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் கன்னடத்தில் உருவாகி இருந்தாலும் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள்.

அதன்படி இப்படத்தின் தமிழ் பதிப்பின் வெளியீட்டு உரிமையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார். அதேபோல் மலையாள பாதிப்பின் வெளியீட்டு உரிமையை நடிகர் பிருத்விராஜ் கைப்பற்றி உள்ளார்.

777 சார்லி படத்தின் போஸ்டர்
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா, பேட்ட போன்ற படங்களில் நடிகர் பாபி சிம்ஹா நடித்திருந்தார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‛சியான் 60’ படத்திலும் பாபி சிம்ஹா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். குறிப்பாக ஜிகர்தண்டா படத்திற்காக நடிகர் பாபி சிம்ஹா தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகரை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.
நாகின் 3- என்ற இந்தி சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகர் பியர்ல் புரி. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று உள்ளார். 31 வயதாகும் இவர் மும்பையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இவருடன் நடிக்கும் சக நடிகை ஒருவர் சம்பவத்தன்று தனது 5 வயது மகளுடன் படப்பிடிப்பு தளத்துக்கு வந்துள்ளார். அப்போது நடிகர் பியர்ல் புரி, அந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்துள்ளது.
இதுதொடர்பாக சிறுமியின் தந்தை சமீபத்தில் மும்பை போலீசில் புகார் அளித்தார். சம்பவம் வசாய் பகுதியில் நடந்தது என்பதால், வழக்கு அங்குள்ள வாலிவ் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இது பற்றி வாலிவ் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

பியர்ல் புரி
இந்நிலையில் மும்பையில் இருந்த நடிகரை அம்போலி போலீஸ் உதவியுடன் வாலிவ் போலீசார் கைது செய்தனர். அவர் மீது கற்பழிப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இவரை வசாய் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நடிகர் பியர்ல் புரியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களை இயக்கியதன் மூலம் பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்த ராஜமவுலி, அடுத்ததாக குறும்படம் ஒன்றை இயக்க உள்ளாராம்.
ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாகவும், ராணா வில்லனாகவும் நடிக்க, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த இரண்டு பாகங்களும் உலகமெங்கும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக வசூலையும் வாரிக்குவித்து சாதனை படைத்தது.

இதையடுத்து இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது ஆர்.ஆர்.ஆர் எனும் பிரம்மாண்ட படம் உருவாகி வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

ராஜமவுலி
இந்நிலையில், இயக்குனர் ராஜமவுலி குறும்படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொரோனா பேரிடர் காலத்தில் காவல்துறையின் பங்களிப்பையும், அர்ப்பணிப்பையும் சொல்லும்விதமாக 20 நிமிடங்களுக்குள் ஒரு குறும்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் ராஜமவுலி.
இது சம்பந்தமாக தெலுங்கானா காவல்துறை அதிகாரிகளையும் அவர் சந்தித்துள்ளார். ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பை தொடங்குவதற்குள் குறும்படத்தை முடிக்கும் முனைப்பில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.
மஹா படத்தின் வெளியீட்டு தேதியை சரியான நேரத்தில் அறிவிப்போம் என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மதியழகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் பரவி வந்தது. அது குறித்து தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளதாவது: ‘‘சிம்பு, ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘மஹா’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. படம் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.

ஹன்சிகா, சிம்பு
மஹா படத்தின் மீது எந்த ஒரு தடையையும் சென்னை ஐகோர்ட்டு விதிக்கவில்லை. படத்தின் வெளியீட்டு தேதியை சரியான நேரத்தில் அறிவிப்போம். இன்னும் சில காலம் அவகாசம் அளிக்கும்படி, ரசிகர்களை கேட்டுக்கொள்கிறோம்.’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.