என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஒன்று பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்து சாதனை படைத்து வருகிறது.
    அருள்நிதி நடித்த மௌனகுரு என்ற திரைப்படத்தை இயக்கியவர் சாந்தகுமார். இவர் அடுத்ததாக ’மகாமுனி’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இதில் ஆர்யா, இந்துஜா, மகிமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

    கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளதாக இயக்குனர் சாந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.

    மகா முனி

    இது குறித்து சாந்தகுமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘மகாமுனி திரைப்படம் 9 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இரண்டு விருதுகள் இறுதியாகிவிட்டன. அத்துடன் மேலும் இரண்டு விருது போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
    தி பேமிலி மேன் 2 வெப் தொடருக்கு எதிரான கண்டனங்கள் ஒரு பக்கம் வரும் நிலையில், மறுபக்கம் அதற்கான புரமோஷனை நடிகை சமந்தா தொடர்ந்து செய்து வருகிறார்.
    சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் தி பேமிலி மேன் 2 வெப் தொடருக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. சீமான், பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் அந்த வெப் தொடர் ஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

    இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் நாடு முழுவதும் தி பேமிலி மேன் 2 வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தனது சமூக வலைத்தள பக்கத்தில் தினமும் பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார் சமந்தா.

    இந்நிலையில் தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் தான் டூப் போடாமல் அதிரடியாக சண்டைக் காட்சிகளில் நடித்ததாகவும் தனக்கு ஊக்கமளித்து பயிற்சி கொடுத்த ஸ்டண்ட் இயக்குநர் யானிக் பென்னுக்கு தனது நன்றிகளையும் தெரிவித்து ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பல லைக்குகளை குவித்து வருகிறது.

    மேலும் இந்த வீடியோவிற்கு, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, லாவண்யா திரிபாதி உள்ளிட்ட பல நடிகைகள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.


    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் வில்லன் நடிகர் ஒருவர், முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியை புகழ்ந்து பேசி இருக்கிறார்.
    அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தில் வில்லனாக நடித்தவர் கபீர் சிங். இப்படத்தை அடுத்து, விஜய் சேதுபதியுடன் றெக்க மற்றும் காஞ்சனா 3, அருவம், ஆக்ஷன் என பல படங்களில் நடித்தார். தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.

    கபீர் சிங்
    கபீர் சிங்

    இவர் தனது திரை வாழ்க்கை பற்றி கூறும்போது, விஜய் சேதுபதியுடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். மேலும் அவருடன் நடிப்பது நடிப்புப் பள்ளிக்கு போவது போன்றது என்று புகழ்ந்துள்ளார்.
    நியு ஆர்.எஸ்.எம் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷிவபாரதி, ஜாய் பிரியா நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜலிங்கா படத்தின் முன்னோட்டம்.
    தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிகளில் வெளியான 100 க்கும் மேற்பட்ட படங்களை திருச்சி, தஞ்சை, விநியோக பகுதிகளில் வெளியிட்ட நிறுவனம் நியு ஆர்.எஸ்.எம் பிலிம்ஸ். இந்நிறுவனம் முதன்முறையாக தயாரிக்கும் திரைப்படம் ராஜலிங்கா. இப்படத்தில் கதைநாயகனாக ஷிவபாரதி நடிக்க, அவருக்கு ஜோடியாக ஜாய் பிரியா நடித்துள்ளார். மேலும் மாறன்பாண்டியன், குமரேசன் ராஜேஷ், ரோடிஷா, தியா, அரிகரன் ஆகியோர் நடிக்கின்றனர். 

    ராஜலிங்கா படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யகண்ணன் பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பு பணிகளை செந்தில் கருப்பையா கவனிக்கிறார். வல்லவன் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஷிவபாரதி இயக்கியிருக்கிறார். 

    ராஜலிங்கா படக்குழு
    ராஜலிங்கா படக்குழு

    இப்படம் குறித்து இயக்குனர் ஷிவபாரதி கூறியதாவது: “இப்படம் தற்காலத்தில் அதிகம் பேசப்படும் ஒரு சிக்கலை மையமாகக் கொண்டு எடுத்திருக்கிறேன். அழகை பார்த்து காதல்வயப்படும் ஆண், பெண் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் முன் வரம்புமீறி நடப்பதால் பெற்றோர்களுக்கும், பொது சமூகத்துக்கும் ஏற்படும் நெருக்கடியை பேசுகிறது இப்படம். 

    ஒரு காலத்தில் சமூகத்தில் நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு தமிழ் சினிமா மீது பழி போடப்பட்டது. இன்றைக்கு உலகம் கையடக்க கைபேசிக்குள் அடங்கி போனது. இதனை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துவதை காட்டிலும் மனித சமூகத்துக்கு எதிரான செயல்களுக்காகவே அதிகம் பயன்படுத்தபடுகிறது. அப்படி ஒரு பாதிப்பை எதிர்கொள்ளும் காதல் ஜோடியை பற்றிய கிரைம் திரில்லராக இப்படத்தின் திரைக்கதை அமைத்திருக்கிறேன்” என்றார்.
    பிசாசு படத்தின் முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
    மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. இந்த படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க பூர்ணா, ‘சைகோ’ பட வில்லன் ராஜ்குமார் பிச்சுமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    பிசாசு படத்தின் முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் இது மாறுபட்ட கதை என்றும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்த இயக்குனர் மிஷ்கின், இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளதாகவும் கூறி இருந்தார். 

    பிசாசு 2 படத்தின் போஸ்டர்
    பிசாசு 2 படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் விஜய் சேதுபதி ‘பிசாசு 2’ படத்தில் பேய் ஓட்டும் நபராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 
    விக்ரமின் ‘சியான் 60’ படத்தில், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் ‘சியான் 60’. இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    மேலும் இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘சியான் 60’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சியான் 60 படக்குழு
    சியான் 60 படக்குழு

    சமீபத்திய பேட்டியில் இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். இதுவரை ‘சியான் 60’ படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும், கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் எஞ்சியுள்ள படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    டுவிட்டர் ஸ்பேசஸ் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகர் தனுஷ், அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
    நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று ஆன்லைனில் நடைபெற்றது. இதையொட்டி டுவிட்டர் ஸ்பேசஸ் வாயிலாக நடிகர் தனுஷ் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடினார். இதில் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் என 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் நடிகர் தனுஷ், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    தனுஷ்
    தனுஷ்

    அப்போது அவரிடம், இயக்குனர் தனுஷை மீண்டும் எப்போது பார்க்கலாம் என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தனுஷ், “இன்னும் சில ஆண்டுகளுக்கு திறமையான இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை இருக்கிறது. அதனால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இயக்குனர் தனுஷை பார்க்க முடியாது” என்று தெரிவித்தார். நடிகர் தனுஷ் ஏற்கனவே பா.பாண்டி என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தனுஷின் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது.
    ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் படம் ‘தி கிரே மேன்’. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர். 

    இதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடித்துள்ளனர். ‘தி கிரே மேன்’ படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது.

    தனுஷ்
    தனுஷ்

    இப்படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்ற நடிகர் தனுஷ், அங்கு ஒரு மாதம் சண்டை பயிற்சி பெற்று, பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இரண்டு வாரம் அமெரிக்காவில் ஓய்வெடுக்க உள்ள தனுஷ், அதன்பின் சென்னை திரும்ப உள்ளாராம்.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
    பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 

    இந்நிலையில், ‘புஜ்ஜி’ மற்றும் ‘நேத்து’ ஆகிய இரண்டு பாடல்களும் ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெறாது என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். படத்தின் மொழிமாற்றம் கருதி இந்த இரு பாடல்களை நீக்கிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

    ஜகமே தந்திரம் படத்தின் போஸ்டர்
    ஜகமே தந்திரம் படத்தின் போஸ்டர்

    மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த இரண்டு பாடல்களும் படத்தில் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் தனுஷ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதில் ‘புஜ்ஜி’ பாடலை அனிருத்தும், ‘நேத்து’ பாடலை தனுஷும் பாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
    இயக்குனர் லிங்குசாமி அடுத்ததாக இயக்க உள்ள தெலுங்கு படத்தில், நடிகர் அருண் விஜய்யை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
    தமிழில் ஆனந்தம், ரன், பையா, சண்டக்கோழி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி, தற்போது தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளார். 

    இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ளது. இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். 

    மாதவன், அருண் விஜய்
    மாதவன், அருண் விஜய்

    அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாக உள்ள இப்படத்தில், வலுவான வில்லன் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கி உள்ளாராம் லிங்குசாமி. மேலும் அந்த கதாபாத்திரத்தில் முன்னணி நடிகரை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டுள்ளாராம். ஏற்கனவே மாதவனிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அருண் விஜய்யிடமும் பேசி வருகிறார்களாம். 

    இவர்கள் இருவரில் யார் வில்லனாக நடிக்க சம்மதிப்பார்கள் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். நடிகர் அருண் விஜய் ஏற்கனவே அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சரியான கதைகளே இல்லாமல் வெறும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலேயே ஆபாச வெப் தொடர்களை உருவாக்கி வருவதாக பிரபல நடிகை குற்றம்சாட்டி உள்ளார்.
    இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ‘ஐந்து ஐந்து ஐந்து’ படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தவர் எரிகா பெர்ணான்டஸ். அதன்பின் விரட்டு, விழித்திரு போன்ற படங்களில் நடித்த இவர், தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் பாலிவுட் பக்கம் போனார். தற்போது அங்கு முன்னணி நடிகை ஆகிவிட்டார்.

    குறிப்பாக ‘குச் ரங் பியார் கே ஐஸே பி’ என்ற வெப்தொடரின் 2 சீசன்களிலும் டாக்டர் சோனாக்‌ஷி போஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். தற்போது அந்த தொடரின் 3-வது சீசனில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை எரிகா பெர்ணான்டசுக்கு மேலும் சில வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், போல்ட் கண்டன்ட் என்ற பெயரில் ஆபாசமாக நடிக்க அவர்கள் சொன்னதால், அதில் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

    எரிகா பெர்ணான்டஸ்
    எரிகா பெர்ணான்டஸ்

    இதுகுறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது: “சரியான கதைகளே இல்லாமல் வெறும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலேயே ஆபாச வெப் தொடர்களை உருவாக்கி வருகிறார்கள். எவ்வித காரணமும் இன்றி போல்டாக நடிக்க வேண்டும் என்றால் எப்படி நடிக்க முடியும் என நான் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடத்தில் பதிலில்லை .

    போல்ட் எனும் பெயரில் தேவையில்லாத ஆபாச காட்சிகளை கமர்ஷியல் மற்றும் வியாபார நோக்கத்துடன் திணிப்பது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. கதைக்கு தேவைப்பட்டால் அப்படி நடிப்பதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. ஆனால் வேண்டுமென்றே அத்தகைய காட்சிகளை திணித்து பணம் சம்பாதிக்க நினைத்தால், அதற்கு நான் உடன்படமாட்டேன். அதனால் தான் தேடிவந்த சில வாய்ப்புகளை நிராகரித்தேன்” என அவர் கூறியுள்ளார்.
    தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் கைவசம் பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, கமலுடன் இந்தியன் 2, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன. 

    இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் அடுத்ததாக இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்துக்கு ‘உமா’ என்று பெயர் வைத்துள்ளனர். இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படமாம். இதில் நடிப்பது குறித்து காஜல் அகர்வால் கூறுகையில் ‘சவாலான கதைகளில் நடிக்க தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறேன். உமா படத்திலும் சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கும்’ என்றார். 

    காஜல் அகர்வால்
    காஜல் அகர்வால்

    நடிகை காஜல் அகர்வால் ஏற்கனவே சிங்கம், ஸ்பெஷல் 26, டோ லப்சோன் கி கஹானி, மும்பை சகா போன்ற இந்தி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×