search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கார்த்திக் சுப்புராஜ், ஜகமே தந்திரம் படத்தின் போஸ்டர்
    X
    கார்த்திக் சுப்புராஜ், ஜகமே தந்திரம் படத்தின் போஸ்டர்

    ஜகமே தந்திரம் படத்தில் இந்த 2 பாடல்கள் இடம்பெறாது - இயக்குனரின் அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம்

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
    பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 

    இந்நிலையில், ‘புஜ்ஜி’ மற்றும் ‘நேத்து’ ஆகிய இரண்டு பாடல்களும் ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெறாது என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். படத்தின் மொழிமாற்றம் கருதி இந்த இரு பாடல்களை நீக்கிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

    ஜகமே தந்திரம் படத்தின் போஸ்டர்
    ஜகமே தந்திரம் படத்தின் போஸ்டர்

    மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த இரண்டு பாடல்களும் படத்தில் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் தனுஷ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதில் ‘புஜ்ஜி’ பாடலை அனிருத்தும், ‘நேத்து’ பாடலை தனுஷும் பாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×