என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சுருதிஹாசன், தற்போது பிரபாசுக்கு ஜோடியாக சலார் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ள சுருதிஹாசன், அடுத்ததாக பிரபாசுக்கு ஜோடியாக சலார் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

சுருதிஹாசன்
நடிகர் கமல்ஹாசனை போன்று, நடிகை சுருதிஹாசனும் பன்முகத்திறமை கொண்டவராக விளங்குகிறார். நடிப்பு, இசை மற்றும் பாடல்கள் பாடுவது என சினிமாவில் பல துறைகளில் கால்பதித்த சுருதிஹாசன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொகுப்பாளராக அவதாரம் எடுத்தார். தமிழ் சினிமா பிரபலங்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை கடந்த சில வருடங்களுக்கு முன் தொகுத்து வழங்கிய சுருதிஹாசன், தற்போது மீண்டும் தொகுப்பாளராக களமிறங்க உள்ளாராம்.
அதன்படி, இவர் ஓடிடி தளத்துக்காக உருவாகும் தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல பாலிவுட் நடிகையான டாப்சியும், டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் என்பவரும் காதலித்து வருகின்றனர்.
தமிழில் ஆடுகளம் படத்தில் நடித்து பிரபலமான டாப்சி, பாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு டாப்சியும், டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் என்பவரும் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கள் வந்தன.
காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் டாப்சி வெளியிட்டு வந்தார். இருவரும் மாலத்தீவுக்கு ஜோடியாக சென்று வந்தனர்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் காதலர் குறித்து நடிகை டாப்சி கூறியதாவது: “சினிமா துறையில் இருப்பவரை காதலிக்க விரும்பவில்லை. எனது சொந்த வாழ்க்கையும், தொழில் சார்ந்த வாழ்க்கையும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மத்தியாஸ் எனக்கு நெருக்கமான வளையத்துக்குள் இருக்கிறார்.

டாப்சி
அதனாலேயே அவருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறேன். திருமணம் பற்றி இப்போது சிந்திக்கவில்லை. ஆண்டுக்கு 5 அல்லது 6 படங்கள் என்று நடிக்கும் எண்ணிக்கை 2 அல்லது 3 படங்கள் என்று குறையும்போது திருமணத்துக்கு தயாராவேன்'' என்றார்.
நூறு பேருக்கு உணவளிக்க முடியாவிட்டாலும் ஒருவருக்காவது உணவு கொடுங்கள் என நடிகை ராஷி கண்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷி கண்ணா கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவக் கோரி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசி இருப்பதாவது: “கொரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து சாமானிய மக்கள் படும் பாட்டை சகிக்க முடியவில்லை. நிறைய குடும்பங்கள் கொடுமையான சூழலில் இருக்கின்றன. தொண்டு நிறுவனம் மூலம் என்னால் முயன்ற உதவிகளை வழங்கி வருகிறேன். இன்று லட்சக்கணக்கான மக்கள் உயிர் வாழத் தேவைப்படுவது ஆக்சிஜனும், உணவும்தான்.

நடிகை ராஷி கண்ணா ஏழைகளுக்கு உணவளித்தபோது எடுத்த புகைப்படம்
இந்த பெருந்தொற்றால் பசியின் குரல் பலரின் காதுகளில் விழுவதில்லை. வாழ்வாதார பற்றாக்குறையாலும், வருமானம் குறைந்து போனதாலும் அடிப்படைத் தேவையான உணவுக்கே வழியில்லாமல்போய், இந்த பெருந்தொற்றின் இரண்டாம் அலை பல ஏழைக்குடும்பங்களை பட்டினியில் தள்ளி விட்டது. கொரோனா வைரசுக்கு முன்னால், பசியே அவர்களை கொன்று விடும்போல் உள்ளது. பல உதவி அமைப்புகளுக்கு பணம் பற்றாக்குறையாக உள்ளது.
நான் தனிப்பட்ட முறையில் இந்த பெருந்தொற்று நேரத்தில் பசியால் தவிக்கும் ஏழைகளுக்கு சாப்பாடு கொடுக்கின்றேன். இப்போது உங்கள் உள்ளங்களை கொஞ்சம் திறந்து உதவ வேண்டிய நேரம் இது. உங்களால் நூறு பேருக்கு உணவளிக்க முடியாவிட்டாலும் ஒருவருக்காவது உணவு கொடுங்கள்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங்கின் சகோதரி பிரியங்கா சிங், மைத்துனர் சித்தார்த் ஆகியோரும் சுஷாந்த் சிங்குடன் சேர்ந்து கஞ்சா பயன்படுத்தியதாக ரியா தெரிவித்து உள்ளார்.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஆண்டு ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். சுஷாந்த் சிங் மரணம் குறித்து சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தியது. அப்போது சுஷாந்தின் காதலி நடிகை ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர், போதை பொருள் வாங்கியது, பயன்படுத்தியது, எடுத்து சென்றது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடிகை ரியா, அவரது தம்பி சோவிக், வீட்டு வேலைக்காரர்கள் உள்ளிட்டவர்களை கைது செய்தனர்.
இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் நடிகர் சுஷாந்த் சிங்கின் சகோதரி பிரியங்கா சிங், மைத்துனர் சித்தார்த் ஆகியோரும் சுஷாந்த் சிங்குடன் சேர்ந்து கஞ்சா பயன்படுத்தினார்கள் என ரியா தெரிவித்து உள்ளார்.

ரியா சக்ரபோர்த்தி
மேலும் சுஷாந்த் சிங் கஞ்சா பயன்படுத்துவது அவரது குடும்பத்தினருக்கு தெரியும் எனவும், அவர்களே சுஷாந்திற்கு கஞ்சா வாங்கி கொடுத்து உள்ளனர் எனவும் அவர் வாக்குமூலம் அளித்து உள்ளார். இதேபோல், தன்னுடன் பழகுவதற்கு முன்பே சுஷாந்த் சிங் போதைக்கு அடிமையாகி இருந்ததாகவும் ரியா வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
சின்ன வயதில் இளையராஜா பாடிய பாட்டு பெண் குரலில் அமைந்தது! குரலைக் கேட்டு விட்டு, "பாடுவது பெண்'' என்று பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர்.
சின்ன வயதில் இளையராஜா பாடிய பாட்டு பெண் குரலில் அமைந்தது! குரலைக் கேட்டு விட்டு, "பாடுவது பெண்'' என்று பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர்.
கேரள முதல்-மந்திரி நம்பூதிரிபாடு, பாவலர் வரதராஜனை மேடைக்கு அழைத்து, "தனது மந்திரிசபை அமையக் காரணமானவர்'' என்று பாராட்டியதால் அவர் ஒரே நாளில் புகழின் உச்சிக்குப் போய்விட்டார்.
"இந்த சம்பவம்தான் நான் இசை உலகில் அதிகமாக கால்பதிக்க காரணமாக அமைந்தது'' என்கிறார், இளையராஜா.
அவர் கூறுகிறார்:-
"கேரளாவில் நடந்த நிகழ்ச்சி மூலமாக பாவலரை அறிந்த கம்ïனிஸ்டு கட்சியினர் அவரை தங்கள் பகுதிகளிலும் பாட அழைத்தார்கள். அதில் முதல் அழைப்பு திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் கம்ïனிஸ்டு தொழிலாளர் மாநாட்டுக் குழுவிடம் இருந்து வந்தது.
அண்ணனும் பாட ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக விளம்பரமும் செய்தார்கள். ஆனால் பாட வேண்டிய மூன்று நாளைக்கு முன் அண்ணனுக்கு ஜ×ரம் வந்துவிட்டது. இரண்டொரு நாளில் ஜ×ரம் சரியாகி விடும் என்று பார்த்தால் அதிகமானதே தவிர, குறைந்த பாடில்லை.
இதற்கிடையே நிகழ்ச்சிக்கு வரமுடியாத சூழ்நிலையை விளக்கி அண்ணன் தந்தி கொடுத்துவிட்டார். அப்படியும் அண்ணனை அழைத்து பாட வைத்தே ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட நிகழ்ச்சி அமைப்பாளர்கள், நிகழ்ச்சிக்கு முதல் நாள் திருச்சியில் இருந்து காரை எடுத்துக்கொண்டு நேராகவே வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.
அவர்களின் ஆர்வத்தை நேரில் பார்த்த அண்ணன், `அடாத ஜ×ரத்திலும் விடாது பாட' முடிவு செய்துவிட்டார். ஆர்மோனியம் சங்கரதாஸ், தபேலாக்காரர் சகிதம் அண்ணன் புறப்படவிருந்த நேரத்தில் அம்மா அண்ணனிடம் வந்தார். "உன்னுடன் தம்பி ராஜையாவையும் அழைத்துப் போனால், அவனையும் இடையிடையே இரண்டொரு பாட்டுப்பாட வைக்கலாமே. அவன் அப்படிப் பாடும்போது உனக்கும் `ரெஸ்ட்' கிடைத்த மாதிரி இருக்கும்'' என்றார்.
ஜ×ரத்தில் பலவீனப்பட்ட நிலையில் அண்ணன் பாடப்போனால், அவருக்கு கொஞ்சமாவது ஓய்வு தேவை என்ற கண்ணோட்டத்தில்தான் அம்மா என்னை சிபாரிசு செய்தார். அதைப் புரிந்து கொண்ட அண்ணன், என்னைப் பார்த்தார். என்ன நினைத்தாரோ, "சரி நீயும் வா'' என்றார்.
அண்ணனின் இந்த அழைப்புதான் என் கலையுலக வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கம் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.
திருவெறும்பூர் மாநாட்டில் சுமார் ஐம்பதாயிரம் பேர் கூடிய கூட்டத்தில் நான் முதன் முதலில் பாடியபோது கிடைத்த கைதட்டல், உயர் படிப்பு குறித்து நான் கட்டியிருந்த மனக்கோட்டையைத் தகர்க்கப்போகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை.
மூன்று நாட்கள் திருச்சியில் கச்சேரி. பாடும் நேரம் மாலைதானே. மற்ற நேரங்களில் பெரும்பாலும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில், தாயுமானவர் கோவில் என்று நேரம் ஓடியது. மலைக்கோட்டையின் உச்சியில் இருந்து, காவிரியைப் பார்ப்பது கண்கொள்ளாக்காட்சி. ஸ்ரீரங்கம், திருவானைக் காவல் கோபுர தரிசனம் என்று, கண்களில் அதிசயங்கள் கண்டேன்.
அதோடு காவிரியாற்றில் உற்சாகக் குளியல் போட்டபோது, அந்த மகிழ்ச்சி என்னை உறைïரைத் தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்ட காலத்திற்கே கொண்டு போய்விட்டது.
மூன்று நாட்கள் கழித்து பள்ளிக்கு வந்தால், மாணவ நண்பர்கள் என்னிடம், "என்ன ஆயிற்று? ஏன் ஸ்கூலுக்கு வரவில்லை?'' என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். நானோ மூன்று நாளும் ஸ்கூலில் என்ன பாடம் நடந்திருக்கும் என்பதற்குப் பதிலாக, இந்த மூன்று நாளில் வெளியுலகில் என்ன பாடம் படித்தேன் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். கூரை வேய்ந்த அந்த சின்னஞ்சிறிய வகுப்பறையின் தடுப்புச் சுவர்களுக்குள் இருந்தபடி மலைக்கோட்டையின் உச்சிக்கும் மேலே திறந்த வானவெளியிலே கற்பனை சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தேன்.
அண்ணனுக்கு கச்சேரிகளுக்கு நிறைய அழைப்பு வந்தது. அவரோடு அவ்வப்போது கச்சேரிகளில் கலந்து கொண்டு படிப்பையும் தொடர்வது சாத்தியமாக இல்லை. அவ்வளவுதான். பள்ளிக்கூட கதவு அடைபட்டு விட்டது.
அப்போது சிறிய வயது என்பதால் என் குரல் பெண் குரல் மாதிரி இருக்கும். அண்ணன் நான் பாடுவதற்கென்றே பாடல்களையும் எழுதிவிட்டார். அண்ணனுடன் பாட `டூயட்' பாடல்களும் தயாராயின! இப்படி அண்ணனின் இசைக்குழுவில் நானும் முக்கியமான பாத்திரமாகி விட்டேன்.
இசை நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், தொடக்கத்திலேயே மக்களை அண்ணன் தன் பக்கம் இழுத்து விடுவார். முதல் பாடல் முடிந்து, வந்திருக்கும் எல்லாருக்கும் `வணக்கம்' சொல்லும் பாடலிலேயே பத்து இடங்களில் கை தட்டல்கள் வாங்கி விடுவார். கூட்டம் முழுவதும் அவர் சிரித்தால் சிரிக்கும்; கோபித்தால் மக்கள் முகத்திலும் கனல் தெரியும். அழும் மாதிரி பேசினாலோ முன் வரிசையில் உட்கார்ந்திருப்பவர்களின் முகங்களில் கண்ணீர் வழியும்.
இது, தினமும் நாங்கள் காணும் அன்றாட நிகழ்ச்சி.
டூயட் பாடலில் அண்ணன், "காங்கிரசில சேரப்போறேண்டி பொம்பளே! கதரைப் போட்டு பார்க்கப் போறேண்டி' என்று பாட, பதிலுக்கு நான், "வெளிய சொல்லித் தொலைச்சுடாதீங்க மாப்பிளே! வீணா கெட்டுப் போயிடாதீங்க'' என்று பாடுவேன்.
சிறு வயது என்பதால், என் குரல் பெண் குரல் போல ஒலிக்கும்.
இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? என்னைப் பார்க்காமல் வெளியில் என் குரலைக் கேட்டுவிட்டு "யாரோ ஒரு பெண் பாடுகிறாள்'' என்று எதிர்பார்த்து அப்புறமாய் நேரில் பார்க்க வந்து ஏமாந்து போனவர்கள் பலர்! குரலைக்கேட்டு நான் பெண்தான் என்று பந்தயம் கட்டி தோற்றவர்களும் ஏராளம்.
1962-ல் பாண்டிச்சேரி தேர்தலில் அண்ணன் பாடிய பாட்டு ரொம்பவே பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அண்ணனும் நானும் இப்படிப்
பாடுவோம்:"ஒத்த ரூபா தாரேன் நான்
ஒனப்பத் தட்டும் தாரேன்
ஓட்டுப் போடுற பொண்ணே - கொஞ்சம்
மாட்டப் பாத்து குத்து''
- இது அண்ணன்.
"ஒத்த ரூபாயும் வேணாம் ஒங்க
ஒனப்பூத் தட்டும் வேணாம் - நீங்க
ஊரை அழிக்கிற கூட்டம் - ஒங்கள
ஒழிச்சிக் கட்டப் போறோம்''
- இது நான்.
இந்தப் பாட்டுக்கு எவ்வளவு கரகோஷம் தெரியுமா?
இப்படி பாடி, நானும் ரசிகர்களுக்கு தெரிய வந்த நேரத்தில், "இனி நீ பாட வரவேண்டாம்'' என்று அண்ணன் சொன்னால் எப்படி
இருக்கும்?படிப்புப் போச்சு; பாட்டும் போச்சு என்றால் எனக்கு எப்படி இருக்கும்?

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் மகன் சஞ்சய், தனது தோழிகளுடன் காருக்குள் ஆட்டம் போடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
விஜய்யின் மகன் சஞ்சய் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் செய்திகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக சஞ்சய் காரில் சென்று கொண்டிருந்த போது எடுத்த வீடியோ ஒன்றும், தனது நண்பர்களுடன் செல்பி எடுத்த புகைப்படம் ஒன்றும் வைரல் ஆனது.
இந்த நிலையில் தற்போது விஜய் மகன் சஞ்சய் தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் காரில் டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகிறது. விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற தீம் மியூசிக்கிற்கு சஞ்சய்யும் அவரது நண்பர்களும் ஆடுவது போன்ற சில காட்சிகள் உள்ளன. ஜாலியாக எந்தவித இடையூறுமின்றி விஜய் மகன் சஞ்சய் அவரது நண்பர்களும் டான்ஸ் ஆடும் வீடியோவை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக வலம் வரும் விஜய் ஆன்டனி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர், இசையமைப்பாளர், பாடகர், எடிட்டர், பாடலாசிரியர், சவுண்ட் என்ஜினியர் என்று பல தளங்களில் பதினைந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக வலம்வருபவர் விஜய் ஆண்டனி.

தற்போது ‘கோடியில் ஒருவன்’, ‘தமிழரசன்’, ‘அக்னிச் சிறகுகள்’, ‘காக்கி’, ‘பிச்சைக்காரன்-2’ உட்பட ஏராளமான படங்களில் நடித்துவரும் விஜய் ஆண்டனி, ‘‘இந்த கொரோனா காலத்தில் பொதுமக்கள், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து, பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். முகக் கவசம் அணிந்து வீட்டையும் நாட்டையும் காப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் போல் நைஜீரியா சிறுவர்கள் நடித்து அசத்தி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள்.
கார்த்திக் சுப்புராஜ் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இது தனுஷ் ரசிகர்களை மட்டுமல்ல, முகம் தெரியாத நைஜீரிய சிறுவர்களையும் கூட கவர்ந்துள்ளது. நைஜீரிய சிறுவர்கள் இணைந்து ஜகமே தந்திரம் டிரைலரை தங்கள் பாணியில் உருவாக்கி நடித்துள்ளனர்.
ஒரிஜினலில் வரும் காட்சிகள் போலவே தங்களது கெட்டப்பை மாற்றிக்கொண்டு, தமிழில் வசனங்களை பேசி நடித்துள்ள இவர்கள், ஜகமே தந்திரம் என்கிற டைட்டிலையும் தமிழிலேயே எழுதி இணைத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
Wat a talent @IkoroduB சூப்பர் சூப்பர்டா..தம்பிகளா 👏👏👏#JagameThandhiram@dhanushkraja@karthiksubbaraj@Music_Santhosh@StudiosYNot@sash041075pic.twitter.com/Oyuqz2fFEJ
— Soundara Raja Actor (@soundar4uall) June 7, 2021
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பார்வதி நாயர், ரசிகர்களின் ஆபாச கேள்விகளுக்கு கூலாக பதிலளித்துள்ளார்.
அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அந்த படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பார்வதி நாயர் நடித்திருந்தார். தற்போது பார்வதி தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடியபோது சிலர் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்டனர். அதற்கு அவர் தனது பாணியில் பதில் அளித்து உள்ளார்.

இதில் ஒரு ரசிகர் உங்களுடைய சைஸ் என்ன? என கேட்ட போது எனது ஷூ சைஸ் 37 என்றும் டிரஸ் சைஸ் எஸ் என்றும் அவர் பதிலடி கொடுத்துள்ளார். இதேபோன்று பல சர்ச்சை கேள்விகளுக்கு அவர் கூலாக பதிலளித்துள்ளார்.
வெற்றிமாறன் ஒரு முறை சொன்ன அறிவுரையை கேட்காமல் விட்டதாக இயக்குனர் கார்த்திக் நரேன் சமீபத்தில் கூறி இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி இருவரையும் வைத்து விடுதலை என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் கார்த்திக் நரேன். அதனைத் தொடர்ந்து மாபியா என்ற படத்தை இயக்கினார்.
இந்த படத்தை எதனால் எடுத்தேன், என்ன சூழ்நிலை எடுத்தேன் என்பதை பகிர்ந்து கொண்டார். அப்போது, துருவங்கள் பதினாறு வெற்றி பெற்றவுடன் எடுக்கப்பட்ட நரகாசுரன் படம் ரிலீஸ் தள்ளிக்கொண்டே சென்றதால் எப்படியாவது ஒரு படம் கொடுத்துவிட வேண்டும் என அவசர அவசரமாக மாபியா திரைப்படம் எடுத்தேன்.

வெற்றி மாறன் - கார்த்திக் நரேன்
அந்தப் படத்தை உருவாக்குவதற்கு முன்னால்தான் வெற்றிமாறன் ஒரு அறிவுரையை கொடுத்திருந்தார். படம் எடுக்க வேண்டும் என்ற அவசரத்தில் ஓடக் கூடாது, ஒரு படம் லேட்டானாலும் தரமான படமாக கொடுக்க வேண்டும் என்பதில் கவனம் இருக்க வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் அதை நான் பின்பற்றவில்லை எனக் கூறி வருத்தப்பட்டுள்ளார் கார்த்திக் நரேன்.
சரவண சுப்பையா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் திரைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சிட்டிசன். இந்த படத்தை சரவண சுப்பையா இயக்கியிருந்தார்.

சிட்டிசன் படத்தில் அஜித்
இந்தத் திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி 20 வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

சிட்டிசன் படத்தில் அஜித்
மேலும் இதுவரை வெளிவராத சில புகைப்படங்களையும் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஒன்று பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்து சாதனை படைத்து வருகிறது.
அருள்நிதி நடித்த மௌனகுரு என்ற திரைப்படத்தை இயக்கியவர் சாந்தகுமார். இவர் அடுத்ததாக ’மகாமுனி’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இதில் ஆர்யா, இந்துஜா, மகிமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளதாக இயக்குனர் சாந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சாந்தகுமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘மகாமுனி திரைப்படம் 9 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இரண்டு விருதுகள் இறுதியாகிவிட்டன. அத்துடன் மேலும் இரண்டு விருது போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.