என் மலர்
சினிமா

விக்னேஷ் சிவன், நயன்தாரா
நயன்தாரா படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அடுத்ததாக நடித்துள்ள படத்தின் அப்டேட்டை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தை ‘அவள்’ பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கி உள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து தயாரித்துள்ளார்கள். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

நெற்றிக்கண் படக்குழு வெளியிட்ட போஸ்டர்
இந்நிலையில், நெற்றிக்கண் படத்தின் முக்கிய அப்டேட்டை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். அதன்படி, இப்படத்தில் இடம்பெறும் ‘இதுவும் கடந்து போகும்’ என்கிற பாடல், நாளை (ஜூன் 9) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா இப்பாடல் வரிகளை எழுதி உள்ளார்.
Next Story






