என் மலர்
சினிமா செய்திகள்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வரும் கங்கனா ரணாவத், ஏற்கனவே ‘மணிகர்னிகா’ என்ற இந்தி படத்தை இயக்கி உள்ளார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு, விஜய் இயக்கத்தில், ‘தலைவி’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது. அதில் ஜெயலலிதா வேடத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இதையடுத்து, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கை வரலாற்று படத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். இந்த படத்துக்கு, ‘எமர்ஜென்சி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கங்கனா ரணாவத்
இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அதை சுட்டிக்காட்டும் விதத்தில், படத்துக்கு ‘எமர்ஜென்சி’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்திராகாந்தி வேடத்தில் கங்கனா ரணாவத் நடிப்பதுடன், இப்படத்தை இயக்கவும் உள்ளார். இவர் ஏற்கனவே ‘மணிகர்னிகா’ என்ற இந்தி படத்தை இயக்கி இருக்கிறார். அவர் இயக்கும் இரண்டாவது படம், இது என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவோடு ஓ.டி.டி. தளமும் படிப்படியாக முன்னேறினால்தான் சினிமா துறை சிறப்பாக இருக்கும் என நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: “ஓ.டி.டி. தளத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதன் மூலம் நடிகர் - நடிகைகள், இயக்குனர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது. கொரோனா காலத்தில் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பது இயலாத காரியம்.
இதனால் ரசிகர்கள் பார்வை ஓ.டி.டி. பக்கம் திரும்பி இருக்கிறது. இதன் மூலம் படங்களை உலக அளவில் ரசிகர்கள் எல்லோரும் பார்க்கிறார்கள். நல்ல கதையம்சம் இருந்தால் அதை பாராட்டவும் செய்கிறார்கள். பெரிய திரையில் படங்களை பார்த்து சந்தோஷப்படும் ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர். அதேபோல் இப்போது ஓ.டி.டி.யில் வரும் படங்களை விரும்பும் ரசிகர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

பொழுது போக்கு தளங்கள் எத்தனை இருந்தாலும் தியேட்டரில் பெரிய திரையில் படம் பாக்கும் மேஜிக் மட்டும் அப்படியேதான் இருக்கும். ஆனால் சினிமாவோடு ஓ.டி.டி. தளமும் படிப்படியாக முன்னேறினால்தான் சினிமா துறை சிறப்பாக இருக்கும். ஓ.டி.டி. தளங்களை நான் ஆதரிக்கிறேன்.’’ இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.
இசையமைப்பாளர் ஜெரார்டு பெலிக்ஸ் - பிரேஷி சாந்தனா தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ‘ஸ்டாலின் தான் வாராரு.... விடியல் தரப் போறாரு’ என்ற திமுகவின் தேர்தல் பிரச்சார பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது. இளம் இசையமைப்பாளர் ஜெரார்டு பெலிக்ஸ் இசையமைத்திருந்த இந்தப் பாடல், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இந்தப் பாடலை பாடியிருந்தார்.

மணமக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பசுமைகூடை வழங்கியபோது எடுத்த புகைப்படம்
இந்நிலையில், இசையமைப்பாளர் ஜெரார்டு பெலிக்ஸ் - பிரேஷி சாந்தனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகரும், எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு, மரக்கன்றுகள் அடங்கிய பசுமைக்கூடையை வழங்கி மணமக்களை வாழ்த்தினர்.
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவருடைய 31வது படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார். மேலும் விஷாலின் நெருங்கிய நண்பர்களான ரமணாவும், நந்தாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

பாபுராஜ்
இந்நிலையில், இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. மலையாளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், ஏற்கனவே தமிழில் அஜித்தின் ஜனா, விக்ரமின் ஸ்கெட்ச் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹியூமா குரேஷி, தற்போது வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்து பிரபலமானவர் ஹியூமா குரேஷி. இவர் தற்போது வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தியிலும் முன்னணி நடிகையாக இருக்கும் ஹியூமா குரேஷி, தொண்டு நிறுவனம் தொடங்கி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன்மூலம் உதவிகள் வழங்கி வருகிறார்.
இந்நிலையில், கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள குழந்தைகளுக்கான தனி வார்டு ஒன்றை உருவாக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டு உள்ளார். இதுகுறித்து ஹியூமா குரேஷி கூறும்போது: “எனது தொண்டு நிறுவன அமைப்பு மூலம் இதுவரை 100-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கொரோனாவுக்கு எதிரான யுத்தம் இன்னும் முடியவில்லை.

கொரோனா 3-வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். இரண்டாவது அலையை போல் நிலைமை மோசமாவது வரை பார்த்துக்கொண்டிருக்க கூடாது. டெல்லியில் குழந்தைகளுக்காக 30 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டை உருவாக்கி வருகிறோம்” என்றார்.
அருவி படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை அதிதி பாலன் நடிப்பில் அடுத்ததாக `நவரசா' என்ற வெப் தொடர் வெளியாக இருக்கிறது.
அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த 2017 ஆண்டு வெளியான திரைப்படம் 'அருவி'. இப்படத்தில் நடித்த அதிதி பாலன் தன் நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இத்திரைப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான சில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

இப்படத்தைத் தொடர்ந்து வேறு எந்தப் படத்திலும் அதிதி பாலன் நடிக்கவில்லை. இடையில், ஒரு ஆந்தாலஜி படத்தில் மட்டும் நடித்தார். இந்நிலையில், பிருத்திவிராஜ் நடிப்பில் உருவான 'கோல்டு கேஸ்' மலையாள படத்தில் அதிதி நடித்திருக்கிறார். இந்தப் படம் இன்று வெளியாகி இருக்கிறது.
நான்கு வருடங்களாக தமிழ் சினிமாவில் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், "அருவி படத்துக்குக்குப் பிறகு நான் எடுத்துக்கொண்ட இந்த இடைவெளி நிறைய பேருக்கு மிக நீண்டதாகத் தோன்றலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, இது சினிமாவைப் புரிந்துகொள்வதற்காக நான் தேர்ந்தெடுத்த ஒரு வழி.

கடந்த சில ஆண்டுகளாக இந்த இடைவெளியில் நன்றாகவே திரைத்துறையைப் புரிந்துகொண்டேன். சினிமாவில் நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதைக் கண்டுபிடிக்கவும், சினிமா தொடர்பான விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் இடைப்பட்ட இந்த நேரத்தை நான் பயன்படுத்திக்கொண்டேன்" என்றார்.
அதிதி பாலன் நடிப்பில் அடுத்ததாக `நவரசா' என்ற வெப் தொடர் வெளியாக இருக்கிறது. இதனை 9 இயக்குநர்கள் இயக்க, கொரோனாவால் உருக்குலைந்த தமிழ் சினிமா தொழிலார்களுக்கு உதவும் வகையில் மணிரத்னம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் எடையை குறைத்து பல படங்களை கைவசம் வைத்து இருக்கும் சிம்புவின் சமைக்கும் வீடியோ ஒன்று ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
நடிகர் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் மாநாடு, பத்து தல, மஹா, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன. இதில் மாநாடு படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில், தனது வீட்டில் மஸ்ரூம் பன்னீர் சமைக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து பல லைக்குகளை குவித்து வருகிறது.
இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கேஜிஎஃப் 2 படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'கேஜிஎஃப்' முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது 'கேஜிஎஃப் 2' இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பையும் சாதனைகளையும் செய்தது.


கேஜிஎஃப் 2 படக்குழுவினர்
இந்த நிலையில், இன்று 'கேஜிஎஃப் 2' படத்தின் 6 பாடல்கள் கொண்ட தென்னிந்திய ஆடியோ உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் 7 கோடியே 20 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. இதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் அர்ஜுன், தன்னுடைய சொந்த செலவில் கட்டிய கோவிலின் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன். இவருடைய நடிப்புக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கதாநாயகன், வில்லன், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் அர்ஜுன். இவர் தனது சொந்த செலவில் கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றை கட்டிவந்தார்.

இன்று அந்த ஆஞ்சநேயர் கோவிலின் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக குறிப்பிட்ட சிலரை மட்டுமே அழைத்த அவர், தனது யூடியூப் சேனல் மூலம் நேரடி ஒளிப்பரப்பையும் செய்தார். தற்போது கும்பாபிஷேகம் நடந்தபின்பு தன் குடும்பத்தாரும் அர்ஜுன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘அண்ணாத்த’. கொரோனா அச்சத்திற்கு நடுவிலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அதாவது இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 4.11.2021 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், விரைவில் சென்னை திரும்பி அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை முடிக்க இருக்கிறார்.
முன்னணி நடிகராக இருக்கும் அஜித்துடன் 27 ஆண்டுகளுக்கு முன்பு நடித்ததை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து பிரபல நடிகை நினைவுகூர்ந்து இருக்கிறார்.
கடந்த 1994ஆம் ஆண்டு சுரேஷ் மேனன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரேவதி நடிப்பில் உருவான திரைப்படம் ’பாசமலர்கள்’. இந்த படத்தில் அஜித் மற்றும் காயத்ரி முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். நடிகை காயத்ரி அதன் பின் ’மெட்டி ஒலி’ சீரியல் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய புகழ் பெற்றார்.

காயத்ரி
இந்த நிலையில் நடிகை காயத்ரி தனது சமூக வலைத்தள பக்கத்தில், ’பாசமலர்கள்’ படத்தில் நடித்தபோது அஜித் மற்றும் படக்குழுவினர்களுடன் இருந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். 27 வருடங்கள் கழித்து அஜித்துடன் நடித்ததை நடிகை காயத்ரி நினைவுகூர்ந்து இருக்கும் நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அஜித்துடன் காயத்ரி
முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு நடித்துள்ள ஒரு புதிய படத்தின் டீசரை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட இருக்கிறார்.
நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்திலும், ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

மஹா பட டீசரை வெளியிடும் சிவகார்த்திகேயன்
இப்படத்தின் டீசரை ஜூலை 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்தனர். இந்நிலையில், இந்த டீசரை சிவகார்த்திகேயன் வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.






