என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரெஜினா நடிப்பில் உருவாகி வரும் கள்ளபார்ட் படத்தின் முன்னோட்டம்.
    மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் `கள்ளபார்ட்'. அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும்  இப்படத்தை மிக பிரமாண்டமாக தயாராகிறது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். 

    அரவிந்த்சாமி
    அரவிந்த்சாமி 

    என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் வசனங்களை ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார். மேலும் அரவிந்த்கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இளையராஜா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
    அல்லு அர்ஜுன், பகத் பாசில் நடித்துள்ள புஷ்பா படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது.
    சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    அல்லு அர்ஜுன்
    அல்லு அர்ஜுன்

    இந்நிலையில், இப்படத்தை வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், அடுத்ததாக நடிக்க உள்ள படத்தின் தலைப்பு மாற்றப்பட உள்ளதாம்.
    தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. 

    இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. 

    நானே வருவேன் படத்தின் போஸ்டர்
    நானே வருவேன் படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், நானே வருவேன் படத்தின் தலைப்பு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் புதிய தலைப்பை தயாரிப்பாளர் தாணு வெளியிடுவார் எனவும், அதோடு தலைப்பு மாற்றத்துக்கான காரணத்தையும் அவர் தெரிவிப்பார் எனவும் கூறப்படுகிறது. 
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி, அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.
    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது.

    இந்நிலையில், நடிகர் ரஜினி அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். அதன்படி ரஜினியின் 169-வது படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தேசிங்கு பெரியசாமி, தனுஷ்
    தேசிங்கு பெரியசாமி, தனுஷ்

    இதையடுத்து ரஜினியின் 170-வது படத்தை நடிகர் தனுஷ் இயக்க இருப்பதாகவும், இப்படத்தை ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் புதிய சாதனை படைத்திருக்கிறது.
    தனுஷ், சாய்பல்லவி, நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘மாரி 2’. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இதில் தனுஷ் எழுதி பாடி இருந்த ‘ரவுடி பேபி’ பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. 

    இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். இந்த பாடலில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. ‘யூடியூப்’பில் வெளியிடப்பட்ட ரவுடி பேபி பாடலின் வீடியோ தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்த வண்ணம் உள்ளது.

    தனுஷ், சாய் பல்லவி
    தனுஷ், சாய் பல்லவி

    இந்நிலையில், ரவுடி பேபி பாடல் வீடியோ யூடியூபில் 5 மில்லியன் லைக்குகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. தென்னிந்திய அளவில் வெளியான பாடல்களில் 5 மில்லியன் லைக்குகளை பெற்ற முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடல் யூடியூபில் இதுவரை 118 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.
    தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வரும் அதர்வா, குருதி ஆட்டம், அட்ரஸ், தள்ளிப்போகாதே போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
    ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’,  ‘துப்பறிவாளன்’,  ‘சைக்கோ’ என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின், தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் நடிகர் விஜய் சேதுபதியும் கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

    மிஷ்கின்
    மிஷ்கின்

    இந்நிலையில், இயக்குனர் மிஷ்கின் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் நடிகர் அதர்வா நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டணி உறுதியானால், அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் முதல் படமாக இது அமையும். தற்போது நடிகர் அதர்வா கைவசம் குருதி ஆட்டம், அட்ரஸ், தள்ளிப்போகாதே போன்ற படங்கள் உள்ளன.
    அஷ்வின் ஹீரோவாக அறிமுகமாகும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
    ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஷ்வின். இவர் தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில், ‘என்ன சொல்ல போகிறாய்’ படம் மூலம் நடிகர் அஷ்வின் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். 

    விளம்பர படங்களை இயக்கி பிரபலமான ஹரிஹரன் இப்படத்தை இயக்குகிறார். நடிகர் புகழ் காமெடியனாக நடிக்கிறார். விவேக் - மெர்வின் இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். 

    தேஜூ அஸ்வினி, அவந்திகா
    தேஜூ அஸ்வினி, அவந்திகா

    டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கும் இப்படம், காதல், காமெடி கலந்து உருவாக உள்ளது. இப்படத்தில் அஷ்வினுக்கு ஜோடியாக நடிக்க தேஜூ அஸ்வினி மற்றும் அவந்திகா ஆகிய இரண்டு புதுமுக ஹீரோயின்கள் ஒப்பந்தமாகி உள்ளனர். 

    என்ன சொல்ல போகிறாய் பட பூஜையின் போது எடுத்த புகைப்படம்
    என்ன சொல்ல போகிறாய் பட பூஜையின் போது எடுத்த புகைப்படம்

    இதில் நடிகை தேஜூ அஸ்வினி, சமீபத்தில் வெளியாகி வைரலான ‘அஸ்க் மாரோ’ என்கிற ஆல்பம் பாடலில் கவினுக்கு ஜோடியாக ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது. வருகிற ஜூலை 19-ந் தேதி படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.
    கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி தொடர் உருவாகி உள்ளது.
    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், ஜெயேந்திராவுடன் இணைந்து ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி வெப் தொடரை தயாரித்துள்ளார். நவரசங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த வெப் தொடரை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், வஸந்த் சாய், கவுதம் மேனன், பிஜாய் நம்பியார், பிரியதர்ஷன், அரவிந்த்சாமி உள்பட 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். 

    கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த வெப் தொடர் உருவாகி உள்ளது. இதில் சூர்யா, விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, சித்தார்த், பிரகாஷ் ராஜ், அசோக் செல்வன், அதர்வா, நித்யா மேனன், பார்வதி, ரம்யா நம்பீசன், பிரசன்னா, அதிதி பாலன், ரித்விகா உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    நவரசா வெப் தொடரில் நடித்துள்ள பிரபலங்கள்
    நவரசா வெப் தொடரில் நடித்துள்ள பிரபலங்கள்

    இந்நிலையில், நவரசங்களுடன் கூடிய டீசரை வெளியிட்டு, இந்த வெப் தொடரின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர். அதன்படி, நவரசா வெப் தொடர் வருகிற ஆகஸ்ட் 6-ந் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, விரைவில் மும்பையில் வீடு வாங்க இருக்கிறாராம்.
    தென்னிந்திய நடிகைகள் மும்பையில் வீடு வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். சுருதிஹாசனுக்கு மும்பையில் வீடு உள்ளது. ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் மும்பையில் வீடு வாங்கினார். விரைவில் சமந்தாவும் அங்கு வீடு வாங்க இருக்கிறாராம். திருமணத்துக்கு பிறகு கணவருடன் ஐதராபாத்தில் குடியேறிய சமந்தா, அதிகளவில் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். 

    சமீபத்தில் ‘தி பேமிலிமேன் 2’ வெப் தொடர் மூலம் இந்திக்கும் சென்றுள்ளார். இந்த தொடரில் சமந்தா நடித்த போராளி கதாபாத்திரத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இதனால் தொடர்ந்து இந்தி வெப் தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடிக்க சமந்தாவுக்கு வாய்ப்புகள் வருகின்றன. 

    சமந்தா
    சமந்தா

    எனவே மும்பையில் தங்கி நடிப்பதற்காக வீடு பார்க்கிறார் சமந்தா. தற்போது இவர், சகுந்தலம் எனும் புராண படத்தில் சகுந்தலையாக நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் தயாராகிறது.

    இதுதவிர, விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படமும் சமந்தா கைவசம் உள்ளது. இதில் விஜய்சேதுபதி ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் நயன்தாராவும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.
    நடிகை நயன்தாரா கைவசம் அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.
    தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் ஏற்கனவே 2 முறை காதல் முறிவை சந்தித்து மூன்றாவதாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. 

    சுமார் 6 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள், விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை நயன்தாரா குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி நயன்தாராவை குடும்பத்தினர் வற்புறுத்துவதாகவும், அவர்களது நிர்ப்பந்தம் காரணமாக நயன்தாராவும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டதாகவும் மலையாள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. 

    விக்னேஷ் சிவன், நயன்தாரா
    விக்னேஷ் சிவன், நயன்தாரா

    இதனால் அடுத்த சில மாதங்களில் நயன்தாரா திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை நயன்தாரா கைவசம் அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். 
    மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார்.
    நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அங்கு சென்று சிகிச்சை பெற்ற பின் சில நாட்கள் ஓய்வெடுத்து வந்த ரஜினிகாந்த், அவ்வப்போது அங்குள்ள ரசிகர்களையும் சந்தித்து வந்தார். அவர்களுடன் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பி உள்ளார். இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ பரிசோதனை நல்லபடியாக முடிந்தது என தெரிவித்தார்.

    ரஜினிகாந்த்

    அடுத்தபடியாக நடிகர் ரஜினிகாந்த், அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த வாரத்தில் டப்பிங் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாத்த திரைப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்.
    பேய்களை மையமாக வைத்து தயாராகும் திகில் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகைகள் பேயாக நடித்து உள்ளனர். தற்போது காஜல் அகர்வாலும் புதிய படத்தில் பேயாக நடிக்கிறார்.

    கோஷ்டி என்று பெயர் வைத்துள்ள இப்படத்தை கல்யாண் இயக்குகிறார். இவர் பிரபுதேவா நடித்த குலேபகாவலி படத்தை இயக்கியவர்.

    படக்குழுவினர்
    கோஷ்டி படக்குழுவினர்

    இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, மயில்சாமி, சத்யன் உள்பட 30 நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் புரமோ பாடலுடன் இதன் படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் டிரெய்லர், பாடல்களை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
    ×