என் மலர்
சினிமா

அஷ்வின்
முதல் படத்திலேயே அஷ்வினுக்கு ஜோடியாக நடிக்கும் 2 ஹீரோயின்கள்
அஷ்வின் ஹீரோவாக அறிமுகமாகும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஷ்வின். இவர் தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில், ‘என்ன சொல்ல போகிறாய்’ படம் மூலம் நடிகர் அஷ்வின் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார்.
விளம்பர படங்களை இயக்கி பிரபலமான ஹரிஹரன் இப்படத்தை இயக்குகிறார். நடிகர் புகழ் காமெடியனாக நடிக்கிறார். விவேக் - மெர்வின் இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

தேஜூ அஸ்வினி, அவந்திகா
டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கும் இப்படம், காதல், காமெடி கலந்து உருவாக உள்ளது. இப்படத்தில் அஷ்வினுக்கு ஜோடியாக நடிக்க தேஜூ அஸ்வினி மற்றும் அவந்திகா ஆகிய இரண்டு புதுமுக ஹீரோயின்கள் ஒப்பந்தமாகி உள்ளனர்.

என்ன சொல்ல போகிறாய் பட பூஜையின் போது எடுத்த புகைப்படம்
இதில் நடிகை தேஜூ அஸ்வினி, சமீபத்தில் வெளியாகி வைரலான ‘அஸ்க் மாரோ’ என்கிற ஆல்பம் பாடலில் கவினுக்கு ஜோடியாக ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது. வருகிற ஜூலை 19-ந் தேதி படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.
Next Story






