என் மலர்
சினிமா செய்திகள்
முன்னணி நடிகராக இருக்கும் அஜித் பாணியில் பிரபல நடிகை ஒருவர் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.
’ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் அதன்பிறகு ’டிக் டிக் டிக்’ ’சங்கத்தமிழன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் நடித்துள்ள ’பொன்மாணிக்கவேல்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.



நிவேதா பெத்துராஜ்
கார் ஓட்டுவதில் அதிக விருப்பம் கொண்ட நிவேதா, தனது சமூக வலைத்தளத்தில் கார் ஓட்டியது குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை ஏற்கனவே வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் பலர் அஜித் பாணியில் நிவேதா கார் ரேஸில் இறங்கிவிட்டார் என்று பாராட்டி வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஓராண்டாக ரிலீசாகாமல் இருந்த சிவகார்த்திகேயனின் படம் தற்போது ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பது மட்டுமின்றி, படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் இதுவரை 2 படங்களை தயாரித்துள்ளார். அதில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான ‘கனா’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ரியோ நடிப்பில் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தை தயாரித்திருந்தார்.
தற்போது சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 3-வது படம் ‘வாழ்’. இப்படத்தை அருவி பட இயக்குனர் அருண்பிரபு இயக்கி உள்ளார். இப்படத்தை கடந்தாண்டே வெளியிட திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

வாழ் படத்தின் ரிலீஸ் தேதி
இந்நிலையில், இப்படம் வருகிற ஜூலை 16-ந் தேதி நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினியின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படங்களில் ஒன்று பாட்ஷா. இந்த படத்தில் வில்லன்களுடன் அமர்ந்து பேசும்போது ரஜினியின் பக்கத்தில் நாய் ஒன்று இருக்கும்.


அதேபோல் அமெரிக்கா சென்றுள்ள ரஜினிகாந்த் ரசிகர் ஒருவரை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது ரஜினியின் பக்கத்தில் நாய் ஒன்று உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் அப்படியே பாட்ஷா படக்காட்சியை பார்ப்பது போலவே இருப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.
தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்த பிரபலமான மிருதுளா விஜய், சின்னத்திரை நடிகரை இன்று திருமணம் செய்து கொண்டார்.
பிரபல மலையாள நடிகை மிருதுளா விஜய். இவர் தமிழில், நூறாம் நாள், ஜெனிபர் கருப்பையா, கடன் அன்பை முறிக்கும் உள்பட சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார். மலையாளத்தில் இவர் நடித்த பிரிட்டீஷ் பங்களா, செலிபிரேசன் உள்ளிட்ட படங்கள் வரவேற்பை பெற்றன. தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் இசை ஆல்பங்களிலும் இவர் நடித்து இருக்கிறார்.

இவருக்கும் மலையாள டிவி நடிகர் யுவகிருஷ்ணா என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நிச்சயமானது. இந்நிலையில் இவர்கள் திருமணம் திருவனந்தபுரத்தில் இன்று நடந்தது.

கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி நடந்த இவர்கள் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.
ஜீவஜோதியின் வாழ்க்கை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் சினிமா படமாக தயாராக உள்ளது.
ஜீவஜோதி மீது ஓட்டல் தொழிலில் கொடிகட்டி பறந்த ராஜகோபால் ஆசைப்பட்டது, ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் சிக்கியது உள்ளிட்ட உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் தயாராக உள்ளது.

ஜீவஜோதியாக நடிக்கும் நடிகை, ராஜகோபாலாக நடிக்கும் நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.
படம் குறித்து ஜீவஜோதி கூறும்போது, “எனது வாழ்வில் நான் அடைந்த துன்பங்களை தாண்டி, உணர்வுப்பூர்வமிக்க சட்டத்தின் வழியிலான, எனது போராட்டத்தை, வசதி படைத்த உணவக முதலாளிக்கு எதிராக 18 வருடங்கள் நடந்த போரை, ஜங்கிலி பிக்சர்ஸ் திரைப்படமாக உருவாக்க முன்வந்திருப்பது, மனதிற்கு நெகிழ்வை தருகிறது.

கணவருடன் ஜீவஜோதி
எனது கதையை பெரிய திரையில் காணும்போது ஆணாதிக்கத்தின் முகத்தை, நான் அனுபவித்த வலியை அனைவரும் உணர்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய மர்ம நபர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
அம்புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர். இவரது வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ்கள் மற்றும் போட்டோக்களை அனுப்பி வருவதாகவும், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு அடையாறு சைபர் பிரிவில் புகார் அளித்தார்.
புகார் அளித்த 2 நாட்களில் ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாக திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராய் ஜான்பால் (21) என்பவரை சைபர் பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தான் கொடுத்த புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றி தெரிவித்து நடிகை சனம் ஷெட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
Sincere thanks to Chennai Police Department @chennaicorp , DCP sir (Adyar)@dcpadyarpolice & Cyber Crimes Department for helping me🙏
— Sanam Shetty (@ungalsanam) July 8, 2021
I'd like to clarify to Press- this is NOT Pornography related abuse.
Please note this is Death Threats.
Thanks for the support🙏#mystatementpic.twitter.com/YlSOcktFt7
போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது.
வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் அப்டேட்டை அஜித் ரசிகர்கள் கடந்த பல மாதங்களாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் படக்குழுவினர் தரப்பில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் கிடைத்தபாடில்லை.
சமீபத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை காண வந்த அஜித் ரசிகர் ஒருவர், வலிமை அப்டேட் கேட்ட புகைப்படங்கள் வைரலானது.

கால்பந்தாட்ட மைதானம்
தற்போது நடந்து வரும் யூரோ கால்பந்தாட்டப் போட்டியில் அஜித் ரசிகர் ஒருவர் 'வலிமை அப்டேட்' என எழுதப்பட்ட பதாகையுடன் மைதானத்தில் அமர்ந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குத்துச் சண்டையை மையமாக வைத்து பா.இரஞ்சித் இயக்கி இருக்கும் சார்பட்டா பரம்பரை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் “சார்பட்டா பரம்பரை”. வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.

இப்படத்தில் ஆர்யாவுடன் பசுபதி, ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர், துஷாரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இப்படம் ஜூலை 22 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.
அறிமுக இயக்குனர் விக்டர் இம்மானுவேல் இயக்கத்தில் விக்டர், இலக்கியா நடிப்பில் உருவாகி வரும் ‘மரபு’ படத்தின் முன்னோட்டம்.
அறிமுக இயக்குனர் விக்டர் இம்மானுவேலின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மரபு’. விக்டர் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இலக்கியா நடிக்கிறார். மேலும் ஆனந்த் பாபு வில்லனாக நடித்துள்ளார். சவுந்தர்யன் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனராக மகேஷும், ஸ்டண்ட் இயக்குனராக ஜாகுவார் தங்கமும் பணியாற்றுகின்றனர்.
படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது: “ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும், உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல்லது பழக்கவழக்கம், நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து அல்லது தலைமுறை தலைமுறையாக வந்த சிறப்பு அல்லது வழிவழியாகச் சந்ததிகளிடம் தொடரும் ஒன்று என்று சுருக்கமாக கூறலாம்.

இலக்கியா, விக்டர்
அதேவேளை மரபு என்ற சொல்லும் பலரால் பாவிக்கப் படுகின்றன, அறிவுடையோர் எந்தப் பொருளை அல்லது அவர்கள் மேற்கொண்ட செயல்களை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ, அதே முறைப்படி வழங்குதல் அல்லது பின்பற்றுதல் மரபாகும். ஆனால் தற்போது தனது மரபுசார் பண்புகளை மறந்து வாழ்வில் அற்ப விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம் மரபு”. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழில் கைதி, மாஸ்டர், அந்தகாரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ், அடுத்ததாக தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் தனது அற்புதமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். கைதியின் வெற்றியைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் விக்னராஜன் இயக்கத்தில் வெளியான அந்தகாரம் படமும் அர்ஜுன் தாஸுக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக்கொடுத்தது.
இதுதவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் அர்ஜுன் தாஸ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.

அர்ஜுன் தாஸ்
தற்போது வசந்தபாலன் இயக்கும் படத்தில் நடித்து முடித்துள்ள அர்ஜுன் தாஸ், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் - கமல் கூட்டணியில் உருவாக உள்ள ‘விக்ரம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இப்படி தமிழில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் அர்ஜுன் தாஸ், தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். கடந்தாண்டு வெளியாகி வெற்றி பெற்ற கப்பேலா எனும் மலையாள படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இப்படத்தின் மூலம் அர்ஜுன் தாஸ் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, ரசிகரின் கேள்விக்கு கூலாக பதிலளித்துள்ளார்.
சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் குறுகிய காலகட்டத்தில் மகேஷ் பாபு, நாகர்ஜுனா, நானி, விஜய் தேவரகொண்டா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து நம்பர் ஒன் நடிகையாகி விட்டார். இதுதவிர பாலிவுட்டிலும் 3 படங்களில் நடித்து வருகிறார்.
இவ்வாறு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ராஷ்மிகா
அந்த வகையில் சமீபத்தில் கலந்துரையாடிய அவர், ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். குறிப்பாக ரசிகர் ஒருவர் நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு கூலாக பதிலளித்த ராஷ்மிகா, “நான் சிகரெட் பிடித்ததே இல்லை. அதேபோல் சிகரெட் பிடிப்பவர்கள் பக்கமும் செல்ல மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
நடிகர் சிம்பு கைவசம் மாநாடு, பத்து தல, மஹா, கவுதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன.
தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களைத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதன்படி நடிகர் சிம்புவும் ஒரு காலத்தில் டுவிட்டரில் மிகவும் பரபரப்பாக இயங்கி வந்தார். பின்னர் திடீரென அதிலிருந்து விலகியிருந்த சிம்பு, கடந்தாண்டு அக்டோபர் மாதம் மீண்டும் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் இணைந்தார்.
டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சிம்பு, அவ்வப்போது புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த வாரம் சமையல் செய்யும் வீடியோ ஒன்றை சிம்பு பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ மிகவும் வைரலானது.

சிம்புவின் இன்ஸ்டாகிராம் பதிவு
இந்நிலையில், நடிகர் சிம்பு சமையல் செய்யும் வீடியோ, இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த வீடியோவை ஒரே வாரத்தில் ஒரு கோடி பேர் பார்த்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் இத்தகைய சாதனையை படைக்கும் முதல் தமிழ் நடிகர் சிம்பு என்பது குறிப்பிடத்தக்கது.






