என் மலர்
சினிமா செய்திகள்
மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான விக்ரம் வேதா திரைப்படம் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படம் இந்தியில் ரீமேக்காக இருப்பதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியானது. புஷ்கர் - காயத்ரி இருவருமே இயக்க ஒப்பந்தமானார்கள். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிப்பதற்குப் பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

ஹிருத்திக் ரோஷன் - சைப் அலிகான்
நீண்ட மாதங்களாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தை முடிந்து, தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி, செப்டம்பர் 30, 2022-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் தற்போது நடித்து வரும் D 43 படத்திலிருந்து இயக்குனர் விலகிவிட்டார் என்று வெளியான தகவலுக்கு படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
'தி கிரே மேன்' ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இந்தியா திரும்பிய தனுஷ், தற்போது ஹைதராபாத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் 'டி 43' படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் இயக்குனர் பொறுப்பிலிருந்து கார்த்திக் நரேன் விலகிவிட்டார் என்று செய்திகள் வெளியானது. மேலும், தனுஷே தற்போது இயக்கி வருவதாகவும், அவருக்கு உறுதுணையாக சுப்பிரமணிய சிவா இருப்பதாகவும் கூறப்பட்டது.

இது தொடர்பாக விசாரித்தபோது, "தனுஷ் - கார்த்திக் நரேன் இருவருக்குமே எந்தவொரு பிரச்சனையும் இல்லை. கார்த்திக் நரேன்தான் இயக்குனராகப் பணிபுரிந்து வருகிறார்" என்று தெரிவித்தார்கள்.
சல்மான்கான், அவரது சகோதரி அல்விராகான் மற்றும் பீயிங் ஹ்யூமன் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் ஏற்கனவே அரிய வகை மானை வேட்டையாடிய வழக்கில் சிக்கினார். தற்போது அவர் மீது புதிதாக மோசடி புகார் கூறப்பட்டு உள்ளது.

சண்டிகார் நகரை சேர்ந்த தொழில் அதிபர் அருண் குப்தா என்பவர் சல்மான்கான் மற்றும் அவரது சகோதரி அல்விராகான் ஆகியோர் மீது போலீசில் அளித்துள்ள புகார் மனுவில், ‘’நான் சண்டிகாரில் 2018-ல் சல்மான்கானின் பீயிங் ஹ்யூமன் நிறுவனம் பெயரில் அதிக பணம் செலவழித்து நகைக்கடை தொடங்கினேன். கடைக்கு தேவையான பொருட்களை அளிப்பதாக சல்மான்கான் தரப்பில் தெரிவித்தனர். ஆனால் சொன்னபடி செய்யவில்லை.
கடை திறப்பு விழாவில் சல்மான்கான் கலந்து கொள்வார் என்று கூறினர். ஆனால் அவர் வரவில்லை. கடைக்கு தேவையான பொருட்களை அனுப்பாததால் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் கடை பூட்டப்பட்டு எனக்கு பொருளாதார இழப்பும், மன உளைச்சலும் ஏற்பட்டு உள்ளது’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த புகாரின் பேரில் சல்மான்கான், அவரது சகோதரி அல்விராகான் மற்றும் பீயிங் ஹ்யூமன் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் வருகிற 13-ந் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
கடவுள் பக்தி அதிகம் கொண்ட நடிகர் யோகி பாபு, சிவன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று சிறப்பு தரிசனம் செய்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. இவர் ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கும் யோகி பாபு, கடவுள் பக்தி அதிகம் கொண்டவர். இந்நிலையில் இவர் சித்தூர் மாவட்டம் சுருட்டப்பள்ளியில் உள்ள பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றிருக்கிறார்.

அங்கு சிறப்பு தரிசனம் செய்த யோகி பாபுக்கு, கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டு பொன்னாடை போர்த்தி நிர்வாக அதிகாரிகள் கவுரவித்தனர்.
தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.

மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

வெங்கட்பிரபுக்கு பரிசளிக்கும் சிம்பு
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டது. கடைசி நாளில் படக்குழுவினர் அனைவருக்கும் நடிகர் சிம்பு வாட்ச் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் வருகிற ஜூலை 21-ம் தேதி பக்ரீத் பண்டிகை நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் புதிய படத்தில் சித்தார்த் மற்றும் சர்வானந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளார்கள்.
இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி வரும் படம் மஹா சமுத்திரம். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் சித்தார்த், சர்வானந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மேலும் அனு இமானுவேல், அதிதி ராவ் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.


மகா சமுத்திரம் பட போஸ்டர்
வில்லனாக கருடா ராம் என்கிற ராமச்சந்திர ராஜு நடிக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம். இப்படம் 17 மொழிகளில் 190 நாடுகளில், ஓடிடி தளத்தில் வெளிவந்தது. இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்தார். மற்றொரு நாயகியாக சஞ்சனா நடராஜன் நடித்திருந்தார்.


இவர் ரகிட ரகிட பாடலில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் சஞ்சனாவின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பெண்ணா இப்படி கவர்ச்சியை வாரி வழங்கியுள்ளார் என்று பலரும் ஆச்சர்யப்பட்டு வருகிறார்கள்.
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமலின் விக்ரம் படத்தை இயக்க உள்ளார்.
நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.


லோகேஷ் கனகராஜ் பதிவு
இப்படத்திற்கான போட்டோ ஷூட் இன்று நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை வெளியிட இருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருக்கிறார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தோழிகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இதையடுத்து இவர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா பல வெற்றிப் படங்களில் பாடல்களை பாடியுள்ளார். இவர் தனது சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவார்.

தோழிகளுடன் ஆண்ட்ரியா
அந்த வரிசையில் தற்போது கல்லூரியில் படிக்கும்போது தனது தோழிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ளார். அதில் 'நான் ஒரு கல்லூரி பெண்ணாக இருந்தபோது பெரிய பெண்ணாக மாற விரும்பினேன். இப்போது பெரிய பெண்ணாக இருக்கிறேன். ஆனால் மீண்டும் கவலையற்ற கல்லூரி பெண்ணாக திரும்பி செல்ல விரும்புகிறேன்' என பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரை நடிகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானவர் தலைகீழாக தொங்கும் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தினமும் கவர்ச்சி மற்றும் கலர்புல்லான புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் ஷிவானி, தற்போது வித்தியாசமாக ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஷிவானி நாராயணன்
குறிப்பாக தலைகீழாய் தொங்கிக்கொண்டு ஷிவானி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் ரசிகர்கள் ஏராளமான லைக்குகளை குவித்து சிங்கப்பெண்ணே... என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. இவர் நடிப்பில் வெளியான அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என வரிசையாக படங்கள் வெற்றி பெற்றதால் கவனிக்கப்படும் நாயகியாக மாறினார்.

இந்நிலையில் நடிகை நந்திதா சமூக வலைத்தள பக்கத்தின் நேரலையில் பேசிக்கொண்டிருக்கும் போது, ரசிகர் ஒருவர் உங்களுடைய சைஸ் என்ன என்று அவருடைய உடல் உறுப்பை மையப்படுத்தி கேள்வி கேட்டுள்ளார். இதனால் கடுப்பான நந்திதா, இந்த கேள்வியை உங்களுடைய அம்மா, அக்கா, தங்கச்சி போன்றோரிடம் கேட்டால் சரியான விடை கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபகாலமாக பல நடிகைகளும் இதே மாதிரி மோசமான கேள்விகளுக்கு பதிலடி கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தி மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வரும் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்து இருக்கிறார்.
பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். மேலும் வீரமாதேவி என்ற படத்திலும், வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி படத்திலும் சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.


இந்நிலையில், பெட்ரோல் விலையை கிண்டல் செய்யும் விதமாக சைக்கிள் புகைப்படத்தை பகிர்ந்து, பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விட்டதால் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
When it's finally crossed ₹100...you gotta take care of your health!!
— sunnyleone (@SunnyLeone) July 8, 2021
#Cycling is the new #GLAM 🚴♀️⛽️ pic.twitter.com/M6QSCnfLkD






