என் மலர்
சினிமா செய்திகள்
அஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்திகேயா. இவர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.
இதனிடையே வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இருப்பினும் இதுகுறித்து வலிமை படக்குழுவினர் எந்தவித அறிவிப்பும் வெளியிடாததால் அஜித் ரசிகர்கள் குழம்பிப்போய் இருந்தனர்.

நடிகர் கார்த்திகேயாவின் டுவிட்டர் பதிவு
இந்நிலையில், அவர்களின் குழப்பத்தை போக்கும் வகையில், வலிமை பட வில்லன் கார்த்திகேயா தனது டுவிட்டர் பக்கத்தில், இன்று மாலை 6 மணிக்கு சர்ப்ரைஸ் இருக்கிறது என பதிவிட்டுள்ளார். இதனால் உற்சாகத்தில் திளைத்துப் போன ரசிகர்கள், கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றனர்.
அஜித் நடிக்கும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. எச்.வினோத் இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. இதனை தற்போது ஐதராபாத்தில் படமாக்கி வருகின்றனர். வலிமை படத்தின் அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள், ஓராண்டுக்கு மேலாக காத்திருக்கின்றனர். இந்த மாதம் வலிமை பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில், அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வலிமை படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனால் ValimaiMotionPoster என்கிற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
திருமணத்துக்கு பின்னரும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை காஜல் அகர்வால், அடுத்ததாக புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் கைவசம் பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, கமலுடன் இந்தியன் 2, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன.
இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால், ‘ரவுடி பேபி’ எனும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். பல முன்னணி இயக்குனர்களுடன் உதவி, இணை இயக்குனராக பணியாற்றிய ராஜா சரவணன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். மேலும் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், லட்சுமி ராய் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

செல்லதுரை ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். ‘கவிப்பேரரசு’ வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். தீபக் துவாரகநாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார்.
நடிகை நமீதா, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனது கணவர் வீரேந்திர சவுத்ரியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகை நமீதா தனது கணவர் வீரேந்திர சவுத்ரியுடன் திருமலைக்கு வந்திருந்தார். இருவரும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சென்று மூலவர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அத்துடன் கோவில் வளாகத்தில் உள்ள பல்வேறு சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் அவர்களுக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம் ஆகியவற்றை அர்ச்சகர்கள் வழங்கினர்.
வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர். கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகை நமீதா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஏழுமலையானை தரிசனம் செய்தது சந்தோஷமாக இருந்தது. இதற்கு முன்பு வந்தபோது தரிசன ஏற்பாடுகள் நன்றாக இருந்தது. ஆனால் தற்போது கோயிலில் தரிசன ஏற்பாடுகள் சரியில்லை’’ என்றார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, அடுத்தடுத்து 2 புதிய படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.
நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவற்றில் ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, விரைவில் வெளியாக உள்ளது. இதில் அவர் பார்வையற்றவராக நடித்து இருக்கிறார்.
அதேபோல் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்து முடித்து விட்டார் நயன்தாரா. இந்த படத்தில் அவர் வக்கீல் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில், நடிகை நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள இரண்டு படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை நயன்தாரா, நடிக்க உள்ள அடுத்த 2 தமிழ் படங்களையும் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்க உள்ளார். இதில் ஒரு படத்தை புதுமுக இயக்குனர் விப்பின் இயக்க உள்ளார். சைக்கலாஜிக்கல் மிஸ்டிரி த்ரில்லர் படமாக இது உருவாக உள்ளது.

இயக்குனர் விப்பின், நடிகை நயன்தாரா
இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். இதேபோல் மற்றொரு படத்தை இயக்கப்போவது யார்?, அதில் நயன்தாராவுடன் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் யார்? என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காமெடியனாக இருந்து ஹீரோவாக உயர்ந்துள்ள நடிகர் சந்தானம், ஆர்யா செய்த செயலால் கண்கலங்கினாராம்.
ஆர்யாவும், சந்தானமும் நெருங்கிய நண்பர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். பல வருடங்களாக நண்பர்களாக இருந்த இவர்கள் இடையே நெருக்கமான நட்பை ஏற்படுத்தியது, ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படம். இந்த படத்தின் படப்பிடிப்பின் போதுதான் இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இதையடுத்து ராஜா ராணி, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, சிக்கு புக்கு, சேட்டை போன்ற படங்களிலும் இணைந்து பணியாற்றினர்.

சந்தானம், ஆர்யா
நடிகர் சந்தானம் இப்போது, ‘சபாபதி’ என்ற புதிய படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதில் அவருக்கு அப்பாவாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளார். படம் திரைக்கு வர தயாரானபோது, படத்தின் வியாபாரத்துக்கு ஆர்யா உதவி இருக்கிறார். நட்புக்கு உதாரணமாக நடந்து கொண்ட ஆர்யாவை சந்தானம் கட்டிப்பிடித்து, ‘‘நண்பேன்டா’’ என்று நெகிழ்ந்து போய் கண்கலங்கினாராம்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் டாப்சி, திருமணத்துக்கு நிபந்தனை ஒன்றை விதித்துள்ளாராம்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள டாப்சி தற்போது அதிக இந்தி படங்களில் நடித்து வருகிறார். சினிமா அனுபவம் மற்றும் திருமணம் குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு: “எல்லா துறைகளையும் போல் சினிமாவும் போட்டி நிறைந்த துறையாக உள்ளது. இதனால் கேமராவுக்கு முன்னால் நிற்கும் நடிகர், நடிகைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. ரசிகர்கள் தரும் ஆதரவுக்கு நாங்கள் கொடுக்கும் விலையாகவே போட்டி, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை எடுத்துக்கொள்கிறோம்.
போட்டி நிறைந்த எல்லா துறைகளிலுமே சங்கடங்கள் உள்ளன. போட்டியும், மன அழுத்தமும் இல்லாத துறை எதுவும் இல்லை. எனது பெற்றோருக்கு பிடிக்காதவரை திருமணம் செய்து கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னை காதலிப்பவர்களிடம் இந்த நிபந்தனையை வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறேன். காதல் என்பது பொழுதுபோக்கு இல்லை.

எனது திருமணம் குறித்து பெற்றோர் கவலைப்படுகின்றனர். விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படியும் வற்புறுத்துகின்றனர். திருமணம் செய்து கொள்ளாமல் இப்படியே இருந்து விடுவேனோ என்ற வருத்தம் அவர்களுக்கு உள்ளது”. இவ்வாறு டாப்சி கூறினார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் போட்டியாளராக பங்கேற்று கவனம் பெற்ற அர்ச்சனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் அர்ச்சனா. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் போட்டியாளராக பங்கேற்று கவனம் பெற்றார்.

இந்த நிலையில் தற்போது இவருக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக அவரே தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். என்னுடைய இதயம் சொல்வதை கேட்டு வேலை செய்ததால் மூளை இதயத்தை விட புத்திசாலி என காட்ட முயற்சி செய்து உள்ளது. இதனால் மூளை அருகே சிறிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் எனக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் பலருடைய அழைப்புகளை என்னால் ஏற்க முடியாமல் போகலாம். என்னுடைய மகள் சாரா என் உடல் நலம் குறித்த அப்டேட்டை வெளியிடுவார். இந்த சவாலான அறுவைச் சிகிச்சையில் இருந்து மீண்டு வருவேன் என உறுதியளிக்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என பதிவு செய்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் உருவாகும் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியானது. கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் அடங்கிய இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.

அதே சமயம் கமல், நெப்போலியன், பசுபதி நடிப்பில் வெளியான விருமாண்டி படத்தின் போஸ்டர் போல் இருப்பதாக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நாடக நடிகர் ராம்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
300க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்தவர் ராம்கி என்கிற ராமகிருஷ்ணன். இவர் மேடை நாடகம் மட்டுமின்றி 100க்கும் மேற்பட்ட டிவி சீரியல்களில் நடித்துள்ளார். 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.


சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரின் மறைவுக்கு நாடக கலைஞர்கள், சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமலின் விக்ரம் படத்தை இயக்க உள்ளார்.
நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கான போட்டோ ஷூட் நேற்று நடைபெற்ற நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார்.
அதன் படி இன்று மாலை விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் அடங்கிய விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Yuththaththaal Adho Adho Vidiyudhu
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) July 10, 2021
Saththaththaal Araajagam Azhiyudhu
Raththaththaal Adho Thalai Uruludhu
Sorkkangkal Idho Idho Theriyudhu
Thudikkidhu Pujam!
Jeyippadhu Nijam!@ikamalhaasan@VijaySethuOffl#FahadhFaasil@anirudhofficial#Vikram#VikramFirstLook#Arambichitompic.twitter.com/aaaWDXeI4l
ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் கௌசிக் ஶ்ரீபுஹர் இயக்கத்தில் உருவாகும் டேய் தகப்பா படத்தின் முன்னோட்டம்.
பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன் அவர்களின் மகன் சஞ்சய், ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்பரேஷன் சார்பாக சி. வி.விக்ரம் சுர்யவர்மா தயாரிப்பில் கௌசிக் ஶ்ரீபுஹர் இயக்கத்தில் உருவாகும் "டேய் தகப்பா" எனும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.
விருது பெற்ற குறும்படங்களை இயக்கிய கௌசிக் ஶ்ரீபுஹர் இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார். C.V. விக்ரம் சுர்யவர்மா தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் நாயகியாக ஆராத்யா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் மதுரை முத்து, விஜய் டிவி புகழ் பப்பூ, ஹர்ஷ்த் கான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
படத்திற்கு இசை ஜான் ராபின்ஸ், ஒளிப்பதிவு - S.J.சுபாஷ். நடன இயக்கத்தை பாபா பாஸ்கர் மேற்கொள்கிறார்.






