என் மலர்

  சினிமா

  காஜல் அகர்வால்
  X
  காஜல் அகர்வால்

  ‘ரவுடி பேபி’ ஆக மாறும் காஜல் அகர்வால்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமணத்துக்கு பின்னரும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை காஜல் அகர்வால், அடுத்ததாக புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
  தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் கைவசம் பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, கமலுடன் இந்தியன் 2, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன. 

  இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால், ‘ரவுடி பேபி’ எனும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். பல முன்னணி இயக்குனர்களுடன் உதவி, இணை இயக்குனராக பணியாற்றிய ராஜா சரவணன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக  உள்ளார். மேலும் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், லட்சுமி ராய் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

  காஜல் அகர்வால்

  செல்லதுரை ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். ‘கவிப்பேரரசு’ வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். தீபக் துவாரகநாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார்.
  Next Story
  ×