என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு தலைப்பு மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. 

    இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. 

    நானே வருவேன் படத்தின் போஸ்டர்
    நானே வருவேன் படத்தின் போஸ்டர்

    நானே வருவேன் படத்தின் தலைப்பு மாற்றப்பட உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியானது. இந்நிலையில், இப்படத்திற்கு புதிதாக ‘ராயன்’ என தலைப்பு வைக்கப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    தொகுப்பாளராக இருந்து ஹீரோவாக உயர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் கைவசம் டாக்டர், அயலான், டான் போன்ற படங்கள் உள்ளன. இதில், டாக்டர் படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதேபோல் அயலான் படமும் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டான் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி, கடந்த மார்ச் மாதம் தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘ஜாதி ரத்னலு’ படத்தை இயக்கிய அனுதீப், அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராக உள்ளதாகவும், இப்படத்தின் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கில் அறிமுகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

    அனுதீப், சிவகார்த்திகேயன்
    இயக்குனர் அனுதீப், நடிகர் சிவகார்த்திகேயன்

    ஏற்கனவே நடிகர்கள் விஜய், தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் தெலுங்கு படங்களில் கமிட்டாகி உள்ள நிலையில், தற்போது நடிகர் சிவகார்த்திகேயனும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் சூர்யாவின் மாறா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
    சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. 

    தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 

    இந்நிலையில், சூரரைப் போற்று திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதன் இந்தி பதிப்பையும் சுதா கொங்கரா தான் இயக்க உள்ளார். மேலும் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்க உள்ளார். சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் சூர்யாவின் மாறா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    அஜய் தேவ்கன், ஹிருத்திக் ரோஷன், அக்‌ஷய் குமார், ஜான் ஆபிரஹாம்
    அஜய் தேவ்கன், ஹிருத்திக் ரோஷன், அக்‌ஷய் குமார், ஜான் ஆபிரஹாம்

    இந்நிலையில், அக்கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஹிருத்திக் ரோஷன், அக்‌ஷய் குமார், ஜான் ஆபிரஹாம் ஆகியோர் முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நவரசா வெப் தொடரில் இடம்பெறும் 9 குறும்படங்களில், கவுதம் மேனன் - சூர்யா கூட்டணியில் உருவாகும் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ குறும்படமும் ஒன்று.
    கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி வெப் தொடர் உருவாகி இருக்கிறது. நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள இந்த ஆந்தாலஜி தொடரை 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். இதனை மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இணைந்து தயாரித்துள்ளனர்.

    இந்த வெப் தொடரில் இடம்பெறும் 9 குறும்படங்களில், கவுதம் மேனன் - சூர்யா கூட்டணியில் உருவாகும் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ குறும்படமும் ஒன்று. இந்நிலையில், இந்த குறும்படம் குறித்த சர்ப்ரைஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. 

    சூர்யா, ப்ரயாகா
    சூர்யா, ப்ரயாகா

    அதன்படி, ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ குறும்படத்தில் இடம்பெறும் ‘தூரிகா’ எனும் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பாடலை கார்த்திக் இசையமைத்து பாடியுள்ளார். மதன் கார்க்கி இப்பாடல் வரிகளை எழுதி உள்ளார். நவரசா வெப் தொடர் வருகிற ஆகஸ்ட் 6-ந் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


    வலிமை அப்டேட்டுக்காக ஓராண்டுக்கு மேலாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை நேற்று மாலை வெளியிட்டனர்.
    அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. எச்.வினோத் இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். 

    வலிமை அப்டேட்டுக்காக ஓராண்டுக்கு மேலாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை நேற்று மாலை வெளியிட்டனர். 

    அஜித்தின் ஸ்டைலிஷ் லுக், யுவன் சங்கர் ராஜாவின் மாஸான பின்னணி இசை என ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் அமைந்திருந்த இந்த மோஷன் போஸ்டர், தற்போது புதிய சாதனை படைத்துள்ளது.

    அஜித்
    அஜித்

    இந்தியளவில் அதிக லைக்குகளை பெற்ற மோஷன் போஸ்டராக, அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் இருந்து வந்த நிலையில், தற்போது வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் அந்த சாதனையை 14 மணிநேரத்தில் முறியடித்துள்ளது. இதுவரை வலிமை மோஷன் போஸ்டருக்கு யூடியூபில் 5.8 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது. 
    கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் பிரியா பவானி சங்கர், அடுத்ததாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் ஜெயம் ரவி. இவர் தற்போது மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, அகமத் இயக்கும் ‘ஜன கன மன’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பூலோகம் பட இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ஜெயம் ரவி. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    பிரியா பவானி சங்கர்
    பிரியா பவானி சங்கர்

    இந்நிலையில், இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகை பிரியா பவானி சங்கர், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.
    மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு தனது இசையில் பாட வாய்ப்பளித்த இசையமைப்பாளர் டி.இமானுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
    தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் கைவசம் ரஜினியின் அண்ணாத்த, சூர்யாவின் 40-வது படம், விஜய் சேதுபதியின் லாபம், அரவிந்த் சாமியின் வணங்காமுடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல், மை டியர் பூதம் போன்ற படங்கள் உள்ளன.

    இந்நிலையில், இசையமைப்பாளர் இமான், கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஆதித்யா சுரேஷிற்கு, தனது படத்தில் பாட வாய்ப்பு அளித்துள்ளார். இவருடன் இணைந்து சஹானா என்ற சிறுமியும் அப்பாடலை பாடி உள்ளார். ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில், இவர்களை பாட வைத்துள்ளதாக இமான் தெரிவித்துள்ளார். 

    டி.இமான்
    டி.இமான்

    மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பளித்த இமானுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே திருமூர்த்தி என்கிற மாற்றுத்திறனாளி இளைஞருக்கு தனது இசையில் வெளியான சீறு என்ற படத்தில் மதுவந்தியே என்ற பாடலை பாட இமான், வாய்ப்பு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சூர்யா, ரீமேக் படம் மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளராக களமிறங்க உள்ளார்.
    சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. 

    தற்போது ‘சூரரைப்போற்று' படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதன் இந்தி பதிப்பையும் சுதா கொங்கராவே இயக்குகிறார். இதில் சூர்யா கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். சூரரைப்போற்று இந்தி ரீமேக்கை சூர்யா தனது 2டி பட நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் இந்தி படம் இதுவாகும்.

    சூர்யா

    இதுகுறித்து சூர்யா கூறும்போது, ‘சூரரைப்போற்று’ திரைப்படத்துக்கு கிடைத்த அன்பும் பாராட்டும் இதுவரை பார்த்திராதது. இந்த கதையை நான் முதன்முதலில் கேட்டதில் இருந்தே இது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனென்றால் அதன் ஆன்மா அப்படிப்பட்டது. பிறருக்கு உத்வேகத்தை தரும் கேப்டன் கோபிநாத்தின் கதையை இந்தியில், அபண்டன்ஷியா நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது" என்றார்.
    தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், காதல் தோல்வி குறித்து தெரிவித்துள்ளார்.
    மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இதையடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான ‘கொடி’ படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த இவர், தற்போது ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.  

    அனுபமா பரமேஸ்வரன்
    அனுபமா பரமேஸ்வரன்

    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனுபமா, சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், நிஜ வாழ்க்கையில் நீங்கள் யாரையாவது காதலித்து இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து அனுபமா பரமேஸ்வரன் கூறும்போது, “நான் ஒருவரை காதலித்து இருக்கிறேன். ஆனால் அந்த காதல் ரொம்ப காலம் நீடிக்கவில்லை. அது தோல்வி அடைந்து விட்டது. இப்போது நான் யாரையும் காதலிக்கவில்லை’’ என்றார். 
    இயக்குனரும், பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன், அஜித்தின் வலிமை படத்தில் பணியாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

    இன்று வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து வெளியான அப்டேட்டுகளால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    விக்னேஷ் சிவன்
    விக்னேஷ் சிவன்

    இந்நிலையில், வலிமை படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பணியாற்றி உள்ளது தெரியவந்துள்ளது. அவர் இப்படத்தில் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மாஸ்டர் படத்தில் விஜய்க்கு பாடல் எழுதிய விக்னேஷ் சிவன், தற்போது வலிமை படத்தில் அஜித்துக்காக பாடல் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    அஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகி உள்ள படம் வலிமை, இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. எச்.வினோத் இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். 

    இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. இதனை தற்போது ஐதராபாத்தில் படமாக்கி வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு வலிமை படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டதற்கு பின், இப்படம் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளியாகவில்லை. 

    வலிமை அப்டேட்டுக்காக ஓராண்டுக்கு மேலாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, இன்று வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வெளியான இந்த மோஷன் போஸ்டருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

    வலிமை டைட்டில் லுக்
    வலிமை டைட்டில் லுக் போஸ்டர்

    அஜித்தின் மாஸான லுக் மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் மெர்சலான தீம் மியூசிக் என அஜித் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த மோஷன் போஸ்டரில் வலிமை படம் இந்தாண்டு வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


    நடிகர், இயக்குனர், டான்ஸ் மாஸ்டர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கும் பிரபுதேவா, தற்போது அரைடஜன் படங்களை கைவசம் வைத்துள்ளாராம்.
    பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் பிரபுதேவா, தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள யங் மங் சங், பொன் மாணிக்கவேல், பஹீரா போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில், அவர் அடுத்தடுத்து நடிக்க உள்ள 4 புதிய படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ‘பிளாஷ்பேக்’, ‘மை டியர் பூதம்’, பெயரிடப்படாத 2 படங்களில் பிரபுதேவா நடிக்கிறார். இந்த நான்கு படங்களையும் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார்.

    இவற்றுள் பிளாஷ்பேக் படத்தை டான் சாண்டி இயக்குகிறார். இவர் மகாபலிபுரம், கொரில்லா போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர். இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரெஜினா நடித்துள்ளார். 

    கல்யாண், ராகவன், டான் சாண்டி, அமல் கே.ஜோபி
    கல்யாண், ராகவன், டான் சாண்டி, அமல் கே.ஜோபி

    அடுத்ததாக இயக்குனர் சற்குணத்திடம் பல படங்களில் துணை இயக்குனராக பணியாற்றி ‘மஞ்ச பை’ படம் மூலம் இயக்குனராக முத்திரை பதித்த ராகவன், இயக்கும் ‘மை டியர் பூதம்’ படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்கிறார். இதுதவிர குலேபகாவலி இயக்குனர் கல்யாணுடன் ஒரு படத்திலும், அறிமுக இயக்குனர் அமல் கே.ஜோபி இயக்கும் புதிய படத்திலும் நடிக்க பிரபுதேவா ஒப்பந்தமாகி உள்ளார். 
    ×