என் மலர்
சினிமா செய்திகள்
நடிகர் விஜய் சேதுபதி கைவசம் லாபம், காத்துவாக்குல ரெண்டு காதல், கடைசி விவசாயி, விக்ரம் போன்ற படங்கள் உள்ளன.
இந்தியில் சமந்தா, பிரியாமணி, மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் நடித்து ஓ.டி.டி தளத்தில் வெளியான ‘தி பேமிலிமேன் 2’ வெப்தொடர் சர்ச்சையை கிளப்பியது. அதில் சமந்தா ஏற்று நடித்த போராளி கதாபாத்திரத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் தொடரை தடை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.
விரைவில் இந்த தொடரின் மூன்றாம் பாகம் தயாராக உள்ளது. இதில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவின. சர்ச்சை தொடரில் நடிக்க விஜய் சேதுபதி எப்படி சம்மதித்தார் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு நடிகர் விஜய்சேதுபதி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் சேதுபதி
அவர் கூறும்போது, “நான் ஷாகித் கபூருடன் இணைந்து புதிய வெப் தொடரில் நடிக்கிறேன். மனோஜ் பாஜ்பாயுடன் சேர்ந்து எந்த தொடரிலும் நடிக்கவில்லை. ஆனாலும் அவருடன் நடிக்க ஆர்வம் உள்ளது’’ என்றார். இதன்மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய் சேதுபதி.
அவர் நடித்துள்ள லாபம், கடைசி விவசாயி போன்ற படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
நடிகர் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்த காதல் கோட்டை திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் காதல் கோட்டை. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தேவயானி நடித்திருந்தார். காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை அகத்தியன் இயக்கி இருந்தார்.

250 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓட்டிய இப்படத்தின் திரைக்கதைக்காக இயக்குனர் அகத்தியனுக்கு தேசிய விருது கிடைத்தது.

படக்குழுவினர்
இந்நிலையில் காதல் கோட்டை படம் 25 ஆம் ஆண்டு நிறைவு செய்துள்ளதை அடுத்து அஜித்தைத் தவிர மற்ற கலைஞர்கள் எல்லோரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
ரஜினி நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படத்தில் வில்லனாக நடித்த நடிகர் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி. இவர் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். இவர் மும்பையில் அல்டாமவுண்ட் சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

தற்போது அக்குடியிருப்பில் வசித்து வரும் சிலருக்கு கொரொனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. எனவே அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சுனில் ஷெட்டி
நடிகர் சுனில் ஷெட்டி மற்றும் அவரது குடும்பத்தினரும் நலமுடன் இருப்பதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘அண்ணாத்த’. கொரோனா அச்சத்திற்கு நடுவிலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது.

இதையடுத்து நடிகர் ரஜினி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சிகிச்சைக்கு பிறகு சென்னை திரும்பி இருக்கும் ரஜினி, தற்போது அண்ணாத்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்புக்காக நாளை மறுநாள் (ஜூலை 14) மேற்கு வங்கம் செல்ல இருக்கிறார்.

அங்கு நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. அதன்பின் அண்ணாத்த திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்க இருக்கிறார் ரஜினி. இப்படம் தீபாவளியை முன்னிட்டு 4.11.2021 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடித்த இரண்டு வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஒருவர் அடுத்ததாக சித்தார்த் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.
தனுஷ் நடித்த ’மாரி’ ’மாரி 2’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலாஜி மோகன். இவர் மீண்டும் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது சித்தார்த் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


சித்தார்த் - பாலாஜி மோகன்
ஏற்கனவே பாலாஜி மோகன் இயக்கத்தில் ’காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தில் சித்தார்த் நடித்திருக்கிறார். இவர்கள் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தமிழில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி வெற்றிபெற்ற அசுரன் திரைப்படம், தெலுங்கில் ‘நாரப்பா’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.
பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அசுரன். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் படைத்தது.

அசுரன் படம் தெலுங்கில் ‘நாரப்பா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் தனுஷ் வேடத்தில் வெங்கடேஷும், மஞ்சு வாரியர் வேடத்தில் பிரியாமணியும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்த சமயத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை.

நாரப்பா படத்தில் வெங்கடேஷ்
இந்நிலையில், இப்படம் நேரடியாக ஓடிடி-யில் ஜூலை 20 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, பெட்ரோல் விலையை கிண்டல் செய்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தென்னிந்திய சினிமாவில் 19 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. தமிழில் இவர் கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் திரிஷா சைக்கிளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி இருப்பதால் அதை கிண்டல் செய்யும் விதமாக சைக்கிள் புகைப்படத்தை அவர் வெளியிட்டு இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சைக்கிள் ஓட்டும் திரிஷா
ஆனால் திரிஷா, இதுதான் என்னுடைய புதிய சைக்கிள். நல்ல மூடுக்கு ஒரு ரைட் போதும், என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 80களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
80களில் தமிழ் சினிமாவில் நாயகிகளாக வலம் வந்து கொண்டிருந்த நடிகைகள் தற்போது ஒன்று கூடி மகிழ்ச்சியாக வார இறுதியை கழித்ததாக நடிகை ராதிகா சரத்குமார் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.


இந்த வார இறுதியில் 80களின் தோழிகளுடன் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் ஏகப்பட்ட மலரும் நினைவுகள் மற்றும் சந்தோசங்கள் என்றும் ராதிகா சரத்குமார் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அம்பிகா, ராதா, சுகாசினி, குஷ்பு, பூர்ணிமா ஜெயராமன் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் உள்ளனர்.
ஒரு நாள் கூத்து படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை நிவேதா பெத்துராஜ், கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்.
’ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் அதன்பிறகு ’டிக் டிக் டிக்’ ’சங்கத்தமிழன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் நடித்துள்ள ’பொன்மாணிக்கவேல்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

கார் ஓட்டுவதில் அதிக விருப்பம் கொண்ட நிவேதா, தனது சமூக வலைத்தளத்தில் கார் ஓட்டியது குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை ஏற்கனவே வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டும் பயிற்சியில் லெவல் 1 - ஐ முடித்து இருக்கிறார். இதற்கான சான்றிதழை நிவேதா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனக்கு குழந்தை பிறந்து இருப்பதை மகிழ்ச்சியாக தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவருடைய மனைவியின் பெயர் ஆர்த்தி. இவர்களுக்கு ஆராதனா என்ற மகள் இருக்கிறார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 12) சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு மகன் பிறந்திருக்கிறார். இதனை முன்னிட்டு பலரும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். டுவிட்டர் தளத்தில் #KuttySK என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.
தனக்கு மகன் பிறந்திருப்பது தொடர்பாக சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக... என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த் துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்" என்று பதிவு செய்து இருக்கிறார்.
18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி🙏 அம்மாவும் குழந்தையும் நலம்🙏👍❤️😊 pic.twitter.com/oETC9bh6dQ
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 12, 2021
ஆதிராஜன் இயக்கத்தில் பிரஜன், சினாமிகா நடிப்பில் உருவாக உள்ள ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தின் முன்னோட்டம்.
தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் கன்னடம் மலையாளம் மராட்டி என பன்மொழி படங்களுக்கு இசையமைத்து, உலகத் திரைப்பட வரலாற்றிலேயே மிக அதிக படங்களுக்கு இசையமைத்தவர் என்ற சாதனையை தக்க வைத்திருக்கும் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் புதிய படம் "நினைவெல்லாம் நீயடா".
லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் இந்த படத்தை, சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார். கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். கதாநாயகியாக ஒரு முன்னணி நடிகை நடிக்க இருக்கிறார். மற்றொரு நாயகியாக புதுமுகம் சினாமிகா அறிமுகமாகிறார்.

பிரஜன்
முக்கிய வேடத்தில் பிக்பாஸ் புகழ் கேப்ரில்லா நடிக்கிறார். மேலும் மனோபாலா, காளி வெங்கட், மயில்சாமி, செல்முருகன், மதுமிதா, ரஞ்சன்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தொகுப்பை பிரபாகர் கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை தளபதி தினேஷ் அமைக்கிறார். பாடல்களை பழநிபாரதி சினேகன் ஆகியோர் எழுதுகின்றனர். நடன கட்சிகளை பிருந்தா, தீனா அமைக்கின்றனர்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் வருகிற ஜூலை 22-ந் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது.
ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘சார்பட்டா பரம்பரை’. இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் பசுபதி, ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா, கலையரசன், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சார்பட்டா பரம்பரை படக்குழு வெளியிட்ட போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை இயக்குனர் பா.இரஞ்சித் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி சார்பட்டா பரம்பரை படத்தின் டிரெய்லர் நாளை பிற்பகல் 12 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை 22-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.






