என் மலர்
சினிமா செய்திகள்
ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தை லிங்குசாமி இயக்குகிறார்.
பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் லிங்குசாமி தற்போது பிரபல நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

நேற்று துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை வெற்றி தயாரிப்பாளர் N.சுபாஷ் சந்திர போஸ் (திருப்பதி பிரதர்ஸ்) கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.
ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஆதி பின்னிஷெட்டி, நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ்
பிரம்மாண்டமான முறையில் அதிக பொருட்செலவில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தமிழக உரிமையை மாஸ்டர் பீஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
கிராமத்து பின்னணியில் பிரம்மாண்டமாக ஆக்சன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களுடன் உருவாகும் புதிய படத்தில் சசிகுமார் நடிக்கிறார்.
இயக்குநரும், நடிகருமான சசிகுமார், டி.இமான் இசையில், அறிமுக இயக்குநர் எம்.ஹேமந்த் குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கான பாடல் பதிவுடன் இன்று பூஜை போடப்பட்டுள்ளது.

பெயரிடப்படாத இந்த புதிய படத்தை கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மன் குமார் புரொடக்சன் 5வது படைப்பாக மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறார்.

படக்குழுவினர்
கிராமத்து பின்னணியில் பிரம்மாண்டமாக ஆக்சன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களுடன் உருவாகும் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள், படப்பிடிப்பு போன்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.
இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள டைரி படத்தின் முன்னோட்டம்.
பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் டைரி. அருள்நிதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார். இவர், டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

அருள்நிதி
உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து டைரி படம் உருவாகியுள்ளது. யோகான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். ராஜா சேதுபதி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து வேலைகள் நடைபெற்று வருகிறது.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படம், காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராவதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய்
ஏற்கனவே நடிகர் விஜய் பிறந்தநாளன்று ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்ட படக்குழு, தற்போது அடுத்த அப்டேட்டை வெளியிட தயாராகி வருகிறதாம். அதன்படி, ‘பீஸ்ட்’ படத்தில் வில்லனாக நடிப்பது யார் என்பது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
ரூ.1 லட்சம் அபராதத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 2 வாரத்தில் செலுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிமன்றம், நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.

விஜய்
மேலும் ரூ.1 லட்சம் அபராதத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 2 வாரத்தில் செலுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகி உள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் வருகிற ஜூலை 22-ந் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது.
ஆர்யா - பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகி உள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. இப்படத்தில் பசுபதி, ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா, கலையரசன், சந்தோஷ் பிரதாப், துஷாரா விஜயன், சஞ்சனா நட்ராஜன் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். பாக்ஸிங் விளையாட்டை மையமாக வைத்து இப்படம் தயாராகி இருக்கிறது.

ஆர்யா
இந்நிலையில், ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. நடிகர் சூர்யா இப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டார். பாக்ஸிங் காட்சிகள் நிறைந்துள்ள இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு, சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. ஆர்யா பாக்ஸராக நடித்துள்ள இப்படம், வருகிற ஜூலை 22-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
#SarpattaParambarai Official Trailer 🥊https://t.co/XJXLqksD48#SarpattaParambaraiONPrime@arya_offl@beemji@K9Studioz@officialneelam@muraligdop@Music_Santhosh@EditorSelva@anbariv@officialdushara@KalaiActor@urkumaresanpro@pro_gunapic.twitter.com/8BiuDAHtIF
— Maalai Malar News (@maalaimalar) July 13, 2021
சக்ரி டொலேட்டி இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘பில்லா 2’ படத்தை அஜித் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் ‘பில்லா’வும் ஒன்று. கடந்த 2007-ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, பில்லா 2-ம் பாகமும் எடுக்கப்பட்டது. ஆனால் இது முதல் பாகம் அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.

பில்லா 2 படத்தின் போஸ்டர்
இருப்பினும் அஜித்தின் மாஸான பஞ்ச் வசனங்கள் மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் பிரம்மிப்பூட்டும் பின்னணி இசை ஆகியவை மிகவும் பிரபலமானதால் இப்படத்தை ரசிகர்கள் இன்றளவும் கொண்டாடி வருகின்றனர். சக்ரி டொலேட்டி இயக்கி இருந்த இப்படம் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 13-ந் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகிறது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில், அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க உள்ளாராம்.
தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் தற்போது `மஹா' என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்துள்ளார். இது அவரது 50-வது படம். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

தனுஷ், ஹன்சிகா
இப்படத்தை தொடர்ந்து, மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தில் மூன்று ஹீரோயின்களாம், அதில் ஒருவராக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை ஹன்சிகா ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் வெளியான மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் நடிப்பில் உருவாகும் வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது, இன்னும் ஒரு சண்டைக் காட்சி மட்டுமே எஞ்சி உள்ளது.
நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
வலிமை படத்தின் முக்கியமான சண்டைக் காட்சியை கடந்த ஏப்ரல் மாதம் ஐரோப்பாவில் படமாக்க திட்டமிட்டிருந்தனர். அந்த சமயத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வந்ததால், திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்த முடியாமல் போனது.

அஜித்
இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், இந்த மாத இறுதியில், வலிமை படக்குழு ஐரோப்பா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். இதையடுத்து வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.
அவன் இவன் படத்திற்குப் பிறகு ஆர்யா - விஷால் இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந்த் சங்கர், அடுத்ததாக இயக்கும் படம் எனிமி. இப்படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளார். இவர்களுடன் மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

எனிமி படக்குழுவினருடன் விஷால் எடுத்த செல்பி புகைப்படம்
இந்நிலையில், எனிமி படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார். அதன்படி, எனிமி படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விரைவில் இப்படத்தின் டீசர் வெளியிடப்படும் எனவும் விஷால் கூறியுள்ளார். மேலும் கடைசி நாள் படப்பிடிப்பின் போது எடுத்த செல்பி புகைப்படத்தை, நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் தெலுங்கில் பிசியான நடிகையாக வலம்வரும் காஜல் அகர்வால், அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால், திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, கமலுடன் இந்தியன் 2, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன.
இதுதவிர, ‘ரவுடி பேபி’ எனும் புதிய தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால், ஒரு சிறுமிக்கு அம்மாவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரவுடி பேபியான அந்த சிறுமியையும், காஜல் அகர்வாலையும் மையப்படுத்தி தான் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

காஜல் அகர்வால்
ஏற்கனவே நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகள் அம்மா வேடத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது நடிகை காஜல் அகர்வாலும் அவ்வாறு நடிக்க சம்மதித்து இருப்பது திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
ரவுடி பேபி படத்தை பல முன்னணி இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜா சரவணன் இயக்க உள்ளார். அவர் இயக்கும் முதல் படம் இதுவாகும். மேலும் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், லட்சுமி ராய் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தலைவி படத்தின் ரிலீஸ் குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், நடிகை கங்கனா அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இப்படம் தயாராகி இருக்கிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனாவும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், நடிகை கங்கனா அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: “தலைவி படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம். நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு தலைவி படத்தை வெளியிடுவோம்” என தெரிவித்துள்ளார்.






