என் மலர்tooltip icon

    சினிமா

    நாரப்பா படத்தில் வெங்கடேஷ்
    X
    நாரப்பா படத்தில் வெங்கடேஷ்

    தெலுங்கு அசுரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

    தமிழில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி வெற்றிபெற்ற அசுரன் திரைப்படம், தெலுங்கில் ‘நாரப்பா’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.
    பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அசுரன். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் படைத்தது.

    அசுரன் படம் தெலுங்கில் ‘நாரப்பா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் தனுஷ் வேடத்தில் வெங்கடேஷும், மஞ்சு வாரியர் வேடத்தில் பிரியாமணியும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்த சமயத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை.

    வெங்கடேஷ்
    நாரப்பா படத்தில் வெங்கடேஷ்

    இந்நிலையில், இப்படம் நேரடியாக ஓடிடி-யில் ஜூலை 20 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    Next Story
    ×